Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதம் – உயர் நீதிமன்றம் செல்வோம்”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதம் – உயர் நீதிமன்றம் செல்வோம்”

November 10, 2018

sumanthiran-mp.jpg?resize=640%2C480

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்றையதினம்  பாராளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடுகள் மிகத் தெளிவாக காணப்படுகின்றது எனவும் அதனை தவறாக அர்த்தப்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைப்பதனை உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையகமும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நாலரை ஆண்டுகளைக் கடப்பதற்கு முன்னர் அதனை ஜனாதிபதி கலைக்க முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்பதை 19 ஆவது திருத்தம் தெளிவாகக் கூறுகின்றது. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பான உத்தரவை தாம் நீதிமன்றத்தில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு சிறிது கால அவகாசம் தேவை எனத் தெரிவித்துள்ள சுமந்திரன் பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடியாமல் அல்லாடும் தரப்புகளுக்கு இந்தக் கால அவகாசம் ஒரு வாய்ப்பாக அமைந்து வீடும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/102799/

  • கருத்துக்கள உறவுகள்

ஜதேக யே சும்மா இருக்க , சும், ஏன் சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி துள்ளிக் குதிக்கிறார்?

இவர் பங்களிப்புடன் தயாரான புதிய அரசியல்மைப்பு நகல் நவம்பர் 7 ம் திகதி பாராளுமன்றில் தாக்கலாக இருந்த நிலையில் சிங்களம் தனது வழக்கமான தமிழர் முதுகில் கடைசி நேரத்தில் குத்திவிட்டது என தமிழகத்தின் வைக்கோவிற்கு புரிந்தது இவருக்கு ஏன் புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

LLB.png

பொதுவாக லோயர்மார் இரண்டு தொழில் செய்வினம் ஒன்று "அரசியல் "மற்றது "சட்டம் " இரண்டில் ஒன்று வாய்ப்பு இல்லாத போது "தொழில் முறை சட்டத்தரணி" கை கொடுக்கும் ?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றக் கலைப்பு சரியா, பிழையா- உயர் நீதிமன்றத்தின் கருத்தை சுயாதீனத் தேர்தகள் ஆணைக்குழு அறியவுள்ளது

தீர்மானத்தை தெரிந்த பின்னரே தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலனை எனவும் தெரிவிப்பு
 
 
main photo
 
இலங்கை நாடாளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைவானதா என்பது குறித்து இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இலங்கை உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கோரவுள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு முடிவு செய்துள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. மஹிந்த ராஜபக்ச தரப்பு பொரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மைத்திரிபால சிறிசேன இலங்கை அரச வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளமை அரசியல் யாப்பு விதிகளை மீறும் செயல் என குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிகின்றது. 
 
அதேவேளை, மாகாணசபைத் தேர்தல்கள் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட வேண்டிய நிலையில் எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலுக்குரிய ஏற்பாடுகளை செய்வது என்பது குறித்தும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

 

இது சட்டப் பிரச்சினை என்றும் இது தொடர்பாகவும் உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிவதுடன், அரசியல் கட்சிகளின் தலைவர்களோடும் கலந்துரையாட வேண்டும் எனவும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை, நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் முடிவுறாத நிலையில் மைத்திரிபால சிறிசேன எவ்வாறு நாடாளுமன்றத்தைக் கலைத்தார் என ஐக்கியதேசியக் கட்சி உடனடியாகவே கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்பு விதிகளுக்கு அமைவானதுதான் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எனினும் அரசியல் யாப்பின் 70 ஆவது சரத்தில் உறுப்புரையின் முதலாவது பந்தியில் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை மைத்திரிபால சிறிசேன மீறியுள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிய முற்படுகின்றமை மைத்திரி - மஹிந்த ஆகியோரின் நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் இலங்கை நீதித்துறையின் சுயாதீனத் தன்மை தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகளின் சட்டத்தரணிகளே கேள்விக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டால் தேர்தல் நடத்தப்படும் திகதியை அரசியல் கட்சித் தலைவர்களுடன் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரே கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி தேர்தல் நடைபெறும் என அரச வர்த்தமானியில் அறிவித்துள்ளமை குறித்தும் கொழும்பில் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும் ஜனாதிபதி தொடர்ந்தும் அதிகாரத்துடன் செயற்படுவதால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல் நடைபெறும் திகதியை ஜனாதிபதி தீர்மானிக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறுகின்றது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=480&fbclid=IwAR1G6vRnFlQlbD1YLZ3Iz9O8RuDtyISLZZCyf8YiaJ04niBoUYDmXdI733Q

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

ஜதேக யே சும்மா இருக்க , சும், ஏன் சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி துள்ளிக் குதிக்கிறார்?

இவர் பங்களிப்புடன் தயாரான புதிய அரசியல்மைப்பு நகல் நவம்பர் 7 ம் திகதி பாராளுமன்றில் தாக்கலாக இருந்த நிலையில் சிங்களம் தனது வழக்கமான தமிழர் முதுகில் கடைசி நேரத்தில் குத்திவிட்டது என தமிழகத்தின் வைக்கோவிற்கு புரிந்தது இவருக்கு ஏன் புரியவில்லை?

அடுத்த தேர்தல் என்றால் மக்களிடம் எப்படி முகம் கொடுப்பது.

ஏற்கனவே மக்களுக்கு பயந்து இரண்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு வேறை.

கூட்டமைப்பு பாடு ரொம்ப பரிதாபம்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன தான் சொல்லப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பாராளுமன்றத்தையேகலைக்கும் சக்தி நமது கைகளாலேயே நிகழ்ந்தது, அந்தக் கைகளைை பலப்படுத்துங்கள் அப்பதான் சர்வேசத்தாேடு பேரம்பேசி ஐநாவில் பாேர்க்குற்ற விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் எல்லாவற்றையும் நீர்த்துப்பாேகச்செய்கிறாேம், ஒன்றுபட்ட நாட்டு்க்குள் சேர்ந்து வாழ்வாேம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.