Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு நாட்களில் நெருக்கடி நிலைக்குத் தீர்வு – ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாட்களில் நெருக்கடி நிலைக்குத் தீர்வு – ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்குக் கொண்டுவரப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்களுடன் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக மனோகணேசன் குறிப்பிட்டார்.

இதன்போது, ஜனாதிபதியுடன் இரண்டு விடயங்கள் பேசப்பட்டதாகவும், இரண்டாவது விடயம் தொடர்பில் தற்போது குறிப்பிட முடியாது என்று அவர் தெரிவித்தார்.

எனினும் முதலாவது விடயமாக, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப சூழலை எதிர்வரும் இரண்டு நாட்களில் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாகவும், ஜனாதிபதி அதற்குரிய வாக்குறுதிகளை வழங்கியதாகவும் மனோகணேசன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் 2 அல்லது 3 நாட்களில் நாட்டின் குழப்ப சூழ்நிலைக்கான தீர்வினை ஜனாதிபதி வழங்குவார் என கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இரண்டு-நாட்களில்-நெருக்க/

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி... ராஜினாமா பண்ணப் போகிறார் போலை இருக்கு.
அவளைத் தொடுவானேன் அவதி படுவானேன்... என்ற நிலையில்  மைத்திரி  இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி... ராஜினாமா பண்ணப் போகிறார் போலை இருக்கு.
அவளைத் தொடுவானேன் அவதி படுவானேன்... என்ற நிலையில்  மைத்திரி  இருக்கிறார்.

என்ன அவளைத் தொட்டா தொட்டில் ஆடணும்

இல்லாவிட்டால் தொடப்படாது என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி... ராஜினாமா பண்ணப் போகிறார் போலை இருக்கு.
அவளைத் தொடுவானேன் அவதி படுவானேன்... என்ற நிலையில்  மைத்திரி  இருக்கிறார்.

இராணுவத்திடம் ஆட்சியைக் கையளிக்கும்...சாத்தியங்களும் இல்லாமல்...இல்லை!

அண்மைய சீனாவின் கருத்தையும்...கணக்கில் எடுக்கவும்!

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி தனது பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்வதாக இருந்தால் வண்ணத்துப்பூச்சிகளுடன் சேர்ந்து தான் பறக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புங்கையூரன் said:

இராணுவத்திடம் ஆட்சியைக் கையளிக்கும்...சாத்தியங்களும் இல்லாமல்...இல்லை!

அண்மைய சீனாவின் கருத்தையும்...கணக்கில் எடுக்கவும்!

மகிந்தவுக்கு இராணுவ தரப்பில் மிகுந்த செல்வாக்கு இருப்பதாக கேள்விப்பட்டேன். உண்மையாக இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

மகிந்தவுக்கு இராணுவ தரப்பில் மிகுந்த செல்வாக்கு இருப்பதாக கேள்விப்பட்டேன். உண்மையாக இருக்குமோ?

எதுவும் நடக்கலாம் என்ற நிலை தான் இப்போது உள்ளது!

சீனா....மிகவும் அதிகமாகவே ....சிங்களத்தில் முதலிட்டு விட்டது!

அவற்றை இலகுவில் இழந்து விட விரும்பாது!

அத்துடன்....மேற்குலகம் எதிர்பார்த்த...சமாதான முன்னெடுப்புகள்...ஒரு அங்குலம் கூட...முன்னோக்கி நகர்ந்த மாதிரி இல்லை!

இந்தியா எதிர்பார்த்த....சந்தையும்...அதற்குக் கிடைப்பதாக இல்லை!

இராணுவத்தை....தேவைக்கு அதிகமாகவே...சிங்களம் வளர்த்து விட்டது!

இனி...விலை கொடுக்க வேண்டிய காலத்தை நோக்கி இலங்கை நகர்கின்றது!

எங்கடையள் ...ஜின்னா...மாதிரிச் சந்தர்ப்பங்களைப் பயன் படுத்திக் கொள்ளலாம்!

ஆனால்.....செய்வார்களா.....அல்லது சில்லறைகளுக்கு விலை போய் விடுவார்களா...என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, புங்கையூரன் said:

ஈழத்தமிழினத்திற்கு ஜின்னாவுக்கு வந்த சந்தர்ப்பங்கள் மாதிரி பல வந்து போயிருக்கின்றது. 

வீரவசனங்கள் பேசி காலத்தை கடத்தி ஒரு இனத்தையே நடுத்தெருவில் விட்டு விட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.