Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டை காக்கவே முடிவெடுத்தேன் - மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை காக்கவே முடிவெடுத்தேன்  - மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாமல் போன நாட்டை காப்பாற்றுவதற்காகவே ஜனாதிபதி எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

நாங்கள் கடந்த ஒக்டோபர்  26 ஆம் திகதி தற்காலிக அரசாங்கம் ஒன்றினை அமைப்பதாகவே தெரிவித்திருந்தோம். இந்த அரசாங்கத்தின் மூலம் தொடர்ந்தும் ஆட்சியை கொண்டு செல்வதற்கான எதிர்பார்ப்பு எமக்கு இருக்கவில்லை. 

கூட்டு எதிர்கட்சியின் ஒரு சில உறுப்பினர்களே இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது முழு நாட்டுக்கும் தெரிந்த விடயம். ஏனெனில் இது தற்காலிக அரசாங்கமாகும். எங்களது நோக்கம் என்னவெனில் மக்கள் ஆணையின் மூலமாக தேர்தல் ஒன்றினை நடத்தி புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதாகும். 

நான் பிரதமராக சத்திய பிரமாணம் செய்துகொண்ட நாள் முதல் இதனை தெரிவித்து வருகின்றேன். என்றாலும் எதிர் தரப்பினர், அவர்களின் ஒரே எதிர்பார்ப்பாக இருப்பது தேர்தல் ஒன்றுக்கு செல்லாது பழைய அரசாங்கத்தையே தொடர்ந்து கொண்டு செல்வது என்பதே அவர்களின் நோக்கம். அதுதான் பிரச்சினையாக உள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 18 மாதங்களே இருக்கும் நிலையில் எதற்காக அரசாங்கம் ஒன்றை பொறுப்பெடுத்தீர்கள் என சிலர் என்னிடம் கேட்கின்றனர். 

ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களும் நான் அவசரப் பட்டதாக தெரிவித்ததை அறிந்தேன். இன்னமும் 18 மாதங்கள் பொறுத்திருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கலாம், நாங்கள் தற்போது அரசாங்கத்தை அமைத்திருப்பது தொடர்ந்து இந்த ஆட்சியை கொண்டு செல்வதற்கு அல்ல. பொதுத் தேர்தலை நடத்துவதற்காகும். ஜனாதிபதியும் மக்கள் முன் உரையாற்றும் போது நாட்டினை கொண்டு செல்ல  இயலாத கட்டத்தில் என்னிடம் வழங்கியதாக குறிப்பிட்டார். அதனால் இவ்வாறான ஒரு நிலையில் எனக்கு நாட்டினை பொறுப்புத் தரும் போது அந்த பொறுப்பினை ஏற்காது இருக்க முடியுமா. இது அரச அதிகாரம் தொடர்பான பிரச்சினை அல்ல. எமது தேசத்தின்  தலையெழுத்து தொடர்பான பிரச்சினையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

46777676_563963414065281_746722751660058

46655031_559556344457490_221353753918308

46721349_437995436732838_821145311027973

46784641_2100014606979203_52126249404019

 

 

http://www.virakesari.lk/article/45158

எனக்கு தேவை அறியவேண்டிய விசயம் இப்போது ஒன்றுதான்.

காங்கேசன்துறையில் இருந்து அரச படைகள் முற்று ழுழுதாக வெளியேற்றப்பட்டு சிவில் நிர்வாகம் திறனுடன் இயங்குமா? காங்கேசன்துறை புத்துயிர் பெற்று இயல்பு வாழ்க்கை மீளுமா. காங்கேசன்துறையில் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வழி ஏற்படுமா? இதனை எந்த அரசியல்வாதி/கள் அரசங்கம் செய்வார்கள்/யும்? இவர்களுக்கு நான் ஆதரவு அளிக்கின்றேன்.

காங்கேசன்துறையை கட்டி காக்க யார் முன்வருகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கலைஞன் said:

காங்கேசன்துறையில் இருந்து அரச படைகள் முற்று ழுழுதாக வெளியேற்றப்பட்டு சிவில் நிர்வாகம் திறனுடன் இயங்குமா?

நாடு முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் வரும் என்று வேறுகதை.
நீங்கள் காங்கேசன்துறைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்.

நாடு முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டில் வந்தாலும் அரச படைகள் தென்பகுதி, இலங்கையின் மற்றைய பெரும்பாலான பகுதிகளை காங்கேசன்துறை போல் முப்பது வருடங்களுக்கு மேல் பிடித்து வைத்து சீரழிக்கப்போவது இல்லை. காங்கேசன்துறை எமது ஊர் உயிர்பெறவேண்டும் இதுவே எனது கவலை இப்போது.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன், ஒவ்வொரு தமிழ் கிராமமும்  இராணுவம்  வெளியேறி தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமென தான் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.

8 minutes ago, கலைஞன் said:

நாடு முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டில் வந்தாலும் அரச படைகள் தென்பகுதி, இலங்கையின் மற்றைய பெரும்பாலான பகுதிகளை காங்கேசன்துறை போல் முப்பது வருடங்களுக்கு மேல் பிடித்து வைத்து சீரழிக்கப்போவது இல்லை. காங்கேசன்துறை எமது ஊர் உயிர்பெறவேண்டும் இதுவே எனது கவலை இப்போது.

KKS முற்றிலுமாக இராணுவ ஆக்கிரமிப்புக்குள் உட்பட்ட நகரம், அது கண்டிப்பாக விடுவிக்கப்படல் வேண்டும். அதே மாதிரி முப்பது வருடங்களுக்கும் மேலாக சிங்கள ஆக்கிரம்பிப்பாளர்களால் குடியேற்றம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்ட எம் இதயபூமியான மணலாறும் அதையொட்டிய நூற்றுக்கணக்கான எம் சிற்றூர்களும், குளங்களும், காடுகளும், வயல்பிரதேசங்களும், வரலாற்று இடங்களும் விடுவிக்கப்பட்டு உயிர்பெற வேண்டும். வடக்கு கிழக்கு தொடர்பை அறுத்தெறிய உருவாக்கப்பட்ட இந்த சிங்கள குடியேற்றங்களால் பல தலைமுறை மக்கள் தம் சொந்த ஊரை விட்டு, வீடு வாசல்களை விட்டு வன்னியிலும் ஏனைய ஊர்களிலும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

மகிந்த வந்தாலும் சரி, ரணில் தொடர்ந்தாலும் சரி, இவை ஒரு போதும் விடுவிக்கப்படப் போவதில்லை என்பது தான் நிதர்சனம். உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் கடும் அழுத்தங்கள் ஏற்பட்டால் ஒழிய தொடரும் நில அகபரிப்பு நிறுத்தப்படப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இன்னமும் 18 மாதங்கள் பொறுத்திருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கலாம்,

சந்தேகமேயில்லை. அப்பாே சிறையில் இருந்திருப்பீர்கள். எனக்கென்னவாே உங்கள் அரசியலுக்கு நீங்களே அவசரப்பட்டு சாவுமணி அடிக்கிறீர்கள் பாேல் தெரிகிறது

8 hours ago, கிருபன் said:

நாட்டை காக்கவே முடிவெடுத்தேன்  - மஹிந்த

போர்க்குற்றவாளிகளான ராஜபக்ச கும்பல் "கொள்ளையடித்த சொத்துக்களை காப்பது" என்று சொல்வதற்காக "நாட்டை காப்பது" என்று வந்துவிட்ட்து.

7 hours ago, nunavilan said:

கலைஞன், ஒவ்வொரு தமிழ் கிராமமும்  இராணுவம்  வெளியேறி தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமென தான் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.

எமது ஊருக்காக நான் கவலைப்படுகின்றேன். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊர் விடயங்களில் அக்கறையாகவே உள்ளார்கள். காங்கேசன்துறைக்கு வந்த நிலமை நல்லூருக்கு வந்து இருந்தால் இதே கருத்தை கூறுவீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கலைஞன் said:

காங்கேசன்துறையை கட்டி காக்க யார் முன்வருகின்றார்கள்?

 

51 minutes ago, கலைஞன் said:

எமது ஊருக்காக நான் கவலைப்படுகின்றேன். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊர் விடயங்களில் அக்கறையாகவே உள்ளார்கள். காங்கேசன்துறைக்கு வந்த நிலமை நல்லூருக்கு வந்து இருந்தால் இதே கருத்தை கூறுவீர்களா?  

காங்கேசன்துறை எப்போதும் பாதுகாப்பாகவே இருக்கும். சொறி லசிங்களம் செய்யும் பௌதிக புவியியல் அடிப்படையிலான மாற்றகங்ளை தவிர. ஏனெனில் காங்கேசன் துறையை சுற்றி இருப்பது மிகச் செறிந்த தமிழ் பெரும்பான்மை.

குடிஏற்றம் செய்வது மிகக் கடினம். அப்படி செய்தாலும், அது முற்றான இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதால், இராணுவம் அல்லாதவர்கள் இராணுவமே குடியேற்றியது என்று சட்டபூர்வமாக அகற்றலாம். அதாவது, சொறி சிங்களம் இழுபறிப்பட்டு விருப்பமில்லாமல் அதிகாரங்களை தமிழர் கையில் ஒப்ப டைக்கும் பொது.

சுருக்கமாக, காங்கேசன்  துறையில், சொறி  சிங்களம் facts on the ground ஐ ஆக்க முடியாது. அப்படி ஆகினாலும் அது செயற்கையாகவே இருக்கும்.  அதை அகற்றுவது சுலபம்.   

இது காங்கேசன் துறை வாழ் மக்களின் அவலங்களை குறைத்து மதிப்பிட்டுவது அன்று.

இது காங்கேசன்துறையில் வாழ்ந்த மக்களின் சந்ததிக்கு, தமது  சொந்த மண் கேகாசன் துறை என்பதை ஊட்டி வளர்த்தல் ககேசன்துறை வாழ் மக்களின் சந்ததி அழியாது.

இதற்காக, ககேசன் துறையை விடுவிக்கும் முயற்சிகள் எடுக்காமல் இருப்பது என்று அர்த்தம் அல்ல.  

ஆனால், மணலாறு அப்படி அன்று.

மணலாற்றை சுற்றி இருப்பது சிங்கள பெரும்பான்மை, சொறி  சிங்களம் உருவாகும் facts on the ground மணலாற்றை சிங்கள பூமியாகவும், சிற்றி இருக்கும் சிங்கள பெம்பான்மையின் இயற்றகையான குடிப்பரம்பலும் நீட்சியாகவுமே இருக்கும்.

அதை விட முக்கியம், எமது பூர்விக நிலப்பரப்பின் இயற்கையான தொடர்பு துண்டிக்கப்படுவது.

இதனால் பாதிக்கப்படப்போவது ஈழத்தமிழரே.

நீண்ட கால நோக்கிலும், எமது பூர்வீக்கம்  நிலைக்கவும், மணலாற்றை எதோ ஓர் வழியாக தக்க வைப்பது காலத்தின் கட்டாயம்.

இன்னுமொன்றையும் கவனியுங்கள், சிங்களம் ககேசன் துறையை இரணவத்தின் கீழ் வைத்திருந்தாலும், சனத்தொகையை பொறுத்தவரையில்,  அதி உயர் கர்வம் செலுத்துவது மணலாரே.

மேலே சொல்லிய விளக்கம்,  தமிழ் செறிவான பெரும்பான்மை சுற்றி இருக்கும் இடங்கள் எல்லாவற்றிட்ற்கும் பொருந்தும், நல்லூர் உட்பட.   

ஊர் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டு, இடம்பெயர்ந்து அவலப்படுகையில் கவலையடைவது வேறு.

எமது பூர்விகத்தை தக்கவைப்பது வேறு.

மறுவளமாக, உதாரணமாக நல்லூர் அழிந்தால் (அது போத்துகேயரால் அழிக்கப்பட்டது), எமது பூர்வீகம் நிலைக்கும். இதே உதாரணம் காங்கேசன் துறைக்கும் பொருந்தும்.

இது மெய்மையான நிலைமை, உங்கள் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் சொல்லவில்லை.   

1 hour ago, கலைஞன் said:

எமது ஊருக்காக நான் கவலைப்படுகின்றேன். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊர் விடயங்களில் அக்கறையாகவே உள்ளார்கள். காங்கேசன்துறைக்கு வந்த நிலமை நல்லூருக்கு வந்து இருந்தால் இதே கருத்தை கூறுவீர்களா? 

பொதுவாகவே தனது குடும்பம், தனது நண்பர்கள், தனது ஊர், தனது பாடசாலை மீது அக்கறை இருப்பது இயல்பானது. அது தவறும் ஆகாது. அது உயர்வான ஒரு பண்பு. ஆனால் அதில் மட்டுமே அக்கறை இருந்தாலும் ஏனையவற்றை புறக்கணித்தாலும் அது வெறித்தனமாக கருதப்படும்.

அதையும் தாண்டி மற்றவர்களின் உயர்ச்சி, வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு அவற்றை தடுக்க, அழிக்க நினைப்பது பயங்கரவாதம் ஆகும்.

மனிதரின் வளர்ச்சி, முதிர்ச்சி, பக்குவம் எனப்படுவது, தனது குடும்பம், தனது நண்பர்கள், தனது ஊர், தனது பாடசாலை மீதான அக்கறையில் ஆரம்பிக்கும் தனது அக்கறைகளை குறுகிய எல்லைக்குள் இருந்து பரந்துபட்டதாக விரிவு படுத்துவதே ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கலைஞன் said:

எமது ஊருக்காக நான் கவலைப்படுகின்றேன். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊர் விடயங்களில் அக்கறையாகவே உள்ளார்கள். காங்கேசன்துறைக்கு வந்த நிலமை நல்லூருக்கு வந்து இருந்தால் இதே கருத்தை கூறுவீர்களா? 

எல்லா  ஊரும் சுதந்திரம் பெற வேண்டும் என்று தானே முதல் வரியில் கூறி உள்ளேன். இதில் எப்படி காங்கேசந்துறை நல்லூரை விட வேறுபடும்??

நான் காங்கேசன்துறைக்காக குரல் கொடுக்கின்றேன். மணலாறு, இதர ஊர்களுக்காக நீங்கள் குரல் கொடுங்கள். ஒவ்வொருவரும் தத்தம்/உங்களுக்கு பிடித்தமான பிரதேசங்களுக்காக குரல் கொடுத்து அவற்றை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சியுங்கள். காங்கேசன்துறை காங்கேசன்துறை இயல்பு நிலைக்கு வரவேண்டும். இதற்கான முயற்சிகளுக்கு குரல்கொடுப்பதே எனது நோக்கம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.