Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீதிமன்றத்தில் சரணடைந்தார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத்தில் சரணடைந்தார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன

 

Vice-Admiral-Ravindra-Wijegunaratne-300xசிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல்  ரவீந்திர விஜேகுணவர்த்தன, கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் சரணடைந்துள்ளார்.

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், அட்மிரல்  ரவீந்திர விஜேகுணவர்த்தனவைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறு முன்னதாக கோட்டே நீதிவான், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

நேற்று, அவருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை விடுத்திருந்த நிலையில், அந்த விசாரணைக்கு முன்னிலையாகாத, அட்மிரல்  ரவீந்திர விஜேகுணவர்த்தன இன்று நீதிமன்றில் முன்னிலையாகி சரணடைந்தார்.

http://www.puthinappalakai.net/2018/11/28/news/34944

இந்த படுகொலைகாரனுக்கு என்ன தண்டனை கிடைக்குது என்டு பொறுத்திருந்து பாப்பம்!

  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் 5 வரை விசாரணை மறியலில் வைக்கப்பட்டு உள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக்கு வந்திருப்பதோ இக்கொலைகளை உத்தரவிட்டவர்கள். ஆகவே, இவரைப் பொறுத்தவரை, எதுவுமே நடக்கப்போவதில்லை. நீதித்துறையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கும் இனக்கொலையாளிகள் நிச்சயம் இவரைப் பாதுகாப்பார்கள் என்பது திண்ணம். 

மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் எதிரியாக இருந்தாலும்கூட, சரத் பொன்சேக்கா அவர்களைக் காட்டிக்கொடுக்கவில்லை. வெள்ளைக்கொடி விவகாரத்தில் முன்னர் கோத்தா தொடர்பு பட்டிருந்ததாகக் கூறிய சரத், பின்னர் குத்துக்கரணம் அடித்து, தான் அப்படிக் கூறவில்லை என்று புலம்பியதும் நடந்தது. 

அதுபோல மகிந்தவோ கோத்தாவோ சரத் பொன்சேக்காவைக் காட்டிக் கொடுக்கவில்லை. ஆகவே, சிங்களம் சேர்ந்தே தப்பித்துக்கொள்ளும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

அதுபோல மகிந்தவோ கோத்தாவோ சரத் பொன்சேக்காவைக் காட்டிக் கொடுக்கவில்லை. ஆகவே, சிங்களம் சேர்ந்தே தப்பித்துக்கொள்ளும். 

தமிழருக்கு எதிராக இன்றும் ஒரு பிரேரணை வந்தால் சேர்ந்தே வாக்களிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா...

குத்தவாளியை மறைஞ்சு இருக்க உதவின அதிகாரியே விளக்க மறியல் எண்டால், 11 பேரையும் கொலை செய்த ஆளுக்கு தூக்குத்தானே....

சிங்கள நீதி துறை அந்த மாதிரி.!!!!...

?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அடேங்கப்பா...

குத்தவாளியை மறைஞ்சு இருக்க உதவின அதிகாரியே விளக்க மறியல் எண்டால், 11 பேரையும் கொலை செய்த ஆளுக்கு தூக்குத்தானே....

சிங்கள நீதி துறை அந்த மாதிரி.!!!!...

?

இதில் வேடிக்கை என்னவென்றால், குற்றவாளியை மறைத்துவைத்து, வெளிநாடு தப்பிச் செல்ல உதவியதற்காகத்தான் இவருக்கு பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நேவி சம்பத்தை இயக்கியது கோட்டாபய . அவருக்கு என்ன செய்யப்பொகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

டெய்லி மிரர் பத்திரிகை, பல வெளிநாட்டு தூதுவர்கள் பார்ப்பதால், சுஜ தணிக்கை செய்து, செய்திகளை இருட்டடிப்பு செய்கிறது.

இன்று நடந்த பல விடயங்களை அது சொல்லவில்லை. ஆனாலும் island பத்திரிகை முழு தகவல் தந்துள்ளது.

அட்மிரல் விஜயகுணவர்தனே, கடல் படையின் உத்தியோக பூர்வ உடையுடன் தான் நீதிமன்று வந்திருந்தார்.

image_1543412853-76d9d93cf7.jpg

image_1543412918-324fbeb922.jpg

image_1543412933-6d301ae546.jpg

நீதிமன்றம் அவரை சிவில் உடுப்புடன் வருமாறு திருப்பி அனுப்பி விட்டது. சிவில் உடையில் வந்தவரை நீதிமன்றம் விசாரணைக் கைதியாக சிறைக்கு அனுப்பி விட்டது.

அவர் போட்டிருந்த உத்தியோக பூர்வ உடைக்கு மரியாதை கொடுக்கப் பட்டுள்ளது

image_1543413668-96df977291.jpg

தான் கைதாகுவேன் என நம்பி இருக்கவில்லை. இவர் கொடுத்த அழுத்தத்தினாலேயே, கோத்தபாய வேண்டுதலில், விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவினை, போலீஸ் மா அதிபர், தூக்கி அடித்திருந்தார் என்றும், ஜனாதிபதிக்கு தெரிய வந்ததும், அதனை ரத்து செய்து விட்டார் எனவும் நீதிமன்றுக்கு சொல்லப் பட்டுள்ளது.

தூக்கி அடிக்கப் பட்ட அந்த அதிகாரிக்கும், குடும்பத்துக்கும், இவரால் கொலை அச்சறுத்தல் விடுக்கப் பட்டிருந்தது எனவும் நீதிமன்றுக்கு சொல்லப் பட்டுள்ளது.

திரும்பி வரும் போது... கைது ஆகலாம் என்ற பயத்தில்.... தன்னை மீடியா படம் பிடிக்காமல் தடுக்குமாறு, சிவில் உடுப்பில் இருந்த கடல் படை வீரர்களை மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்து உள்ளார்.

நீதிமன்றம் கைது உத்தரவினை பிறப்பித்தது அவரை வெளியே கொண்டு வந்த போது... படம் பிடிக்க முனைந்த பத்திரிகையாளர்களை தள்ளி உள்ளனர். அவர்களில் ஒருவர், பத்திரிகையாளர்களை தாக்கி உள்ளார்.

அங்கே நின்ற உயர் போலீஸ் அதிகாரி அந்த நபரைக் உடனடியாக கைது செய்து உள்ளார்.

ஆக படுபாதகன் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் இன்றிரவு.

article_image

 

 

 

 

கைதான பாஸ்..ம்...... கைதான சிவில் உடை கோலயாவும்.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=195210

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கைதான பாஸ்..ம்...... கைதான சிவில் டை கோயாவும்.

ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் பாதுகாப்பு படைகளின் பிரதானி!

admiral-raveendra-wijegunawardana-1-720x450.jpg

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் நேற்று கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிவரை அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) அவர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 2008, 2009 காலப்பகுதியில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://athavannews.com/வெலிக்கடை-சிறைச்சாலைக்க/

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Rajesh said:

இந்த படுகொலைகாரனுக்கு என்ன தண்டனை கிடைக்குது என்டு பொறுத்திருந்து பாப்பம்!

 

10 hours ago, ஈழப்பிரியன் said:

ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

 

சிங்களம் படம் காட்டுகிறது.

எல்லா மேற்கு நாடு பன்னாடைகளும், படத்தை ரசிப்பது போல் நடிப்பார்கள்.

அவருக்கும் எடை குறைய வேண்டிய தேவை இருக்கிறது.

எடை குறைந்ததும். படமும் நின்றுவிடும், படம் ரசித்த களைப்பில் மேற்கு நாடு பன்னாடைகளும் கைதட்டி சிங்களத்தை மெய்ச்சுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

image_1543434614-c01c590aee.jpg

Nisantha de Silva - CID Inspector

image_1543434587-4074b43563.jpg

கைதுக்கு பின்னால் இருந்த பெரும் பின்னணி.

இந்த மனிதர் பெரும் கிராதகர் போலவே நடந்து இருக்கிறார்.

இவர் கைதானது 11 இளைஞர்கள் கடத்தல், கொலை தொடர்பில் இல்லை. மாறாக தனது உத்தியோக நிலையினைப் பாவித்து, சாடசிகளை, விசாரணை அதிகாரிகளை தாக்கியும், பயமுறுத்தியும், இந்த வழக்கு விசாரணைக்கு குந்தகமாக நடப்பதால், இவர் வெளியில் இருந்தால் இந்த விசாரணை ஒழுங்காக நடைபெற முடியாது என நீதிமன்றுக்கு சிஐடி பொலிஸார் சமர்ப்பித்த, பிணை வழங்க முடியாத, சாட்சிகள், விசாரணை பாதுகாப்பு சட்டத்தின் கீழான மனுவின் பிரகாரம், இவர் கைதாகி, டிசம்பர் 14 வெள்ளி வரை விளக்க மறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். (டிசம்பர் 4 அல்ல).

விசாரணை அதிகாரி நிசாந்த புலிகளுடன் தொடர்புள்ளவர் எனவும், புலிகளின் அழுத்தம் காரணமாகவே இந்த விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் இவர், ஜனாதிபதி தலைமையில் நவம்பர் 13 அன்று  கூடிய பாதுகாப்பு கவுன்சில் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து போலீஸ் மா அதிபரை (பூஜித ) போனில்  தொடர்பு கொண்ட இவர், புலிகளுடன் தொடர்புள்ள ஒருவரை இன்னும் இந்த விசாரணையில் எப்படி வைத்திருக்க முடியும். உடனே மாத்துங்கள் என்று அழுத்தம் பிரயோகித்துள்ளார்.

பூஜித, சிஐடி க்கு பொறுப்பான  DIG ரவி செனிவிரத்தினவை இது விடயமாக தொடர்பு கொண்ட போது,  20 ஆண்டுகளுக்கு மேலாக சிஐடி யில் இருக்கும் நிசாந்த நேர்மையான அதிகாரி, அவர் பல புலி சமபந்தமான விசாரணைகளை நடத்தி பல கைதுகளை செய்துள்ளார். படைகளின் பிரதம அதிகாரி, இந்த வகையில் தலையீடு செய்து, சாட்சிகள், விசாரணை பாதுகாப்பு சட்டத்தின் கீழான தண்டிக்கப் படக்கூடிய குற்றவியல் தவறினை இழைக்கிறார் என பதில் அளித்திருந்தார்.

எனினும் பூஜித, நிசந்தாவை நீர்கொழும்பு பிரதேசத்துக்கு,  தூக்கி அடிக்கும் உத்தரவினை நவம்பர் 18ம் திகதி விடுத்தார்.

இந்த உத்தரவு வந்த ஒரு மணி நேரத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் தோன்றிய ஜேவிபி mp விஜித ஹேரத்திடம்  இது தொடர்பில் கேட்க்கப்பட்ட  போது, ராஜபக்சேக்களுக்கு இந்த விசாரணை அதிகாரியை  அவசரமாக மாற்றும்  தேவை இருக்கிறது. இந்த விசாரணைகள் தம்மை நெருக்குவதாலேயே, அதனை தடுக்க பின் கதவு மூலம் பதவிக்கு வந்தார்கள் என ஒரே போடாக போட்டு விட்டார். இது சிங்கள நாடு முழுவதும் ஒரு பரபரப்பு செய்தியாகியது.

மறுநாள்  காலை வெளிநாட்டு தூதுவர்கள் இது குறித்த விசாரணைகளை, கவலைகளை தெரியப்படுத்தினர். இது குறித்த விளக்கங்களை கோரினர்.

சர்வதேச கண்டங்கள் மேலெழ, சர்வதேச மன்னிப்புச்சபையும் தனது பங்குக்கு கவலை தெரிவித்து அறிக்கை ஒன்றை விடுத்தது. 

ஜனாதிபதி நவம்பர் 18 மதியம் 1.30 க்கு பூஜிதவை  சந்தித்தார். 

இந்நிலையில், நவம்பர் 19ம் திகதி, ரவி செனிவிரத்தின, போலீஸ் சேவைகள் ஆணைக்குழுவிடம், நிசந்தாவின் ட்ரான்ஸ்பிரினை ரத்து செய்யுமாறு மனு ஒன்றினை தாக்கல் செய்து இருந்தார். 20ம் திகதி நண்பகல் நெருங்கும் வேளை, இது தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு பூஜித கேட்கப் பட்டிருந்தார்.

அரண்டு போன ஜனாதிபதியோ, ட்ரான்ஸபெர் தொடர்பில் தனக்கு சம்பந்தம் இல்லை, அது பூஜித  முடிவு என நிலைப்பாடு எடுக்க, ஜனாதிபதியின் வழிகாட்டுதலிலேயே ட்ரான்ஸபெர் உத்தரவு விடுப்பதாக சொன்ன  பூஜித, தான் பஸ்சின் அடியே சிக்கியவர் போல உணர்ந்தார். 

நிசாந்த விசாரிக்கும் இன்னுமோர் வழக்கு, லசந்த விக்கிரதுங்க கொலை தொடர்பானது. அவுஸ்திரேலியாவில் வாழும், லசந்தாவின் மகள் அகிம்சா, ஜனாதிபதி மைத்திரிக்கு எழுதிய கடிதம் ஒன்று மீடியாவுக்கு 20ம் திகதி அதிகாலை கிடைத்தது. பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய இந்த கடிதத்தில், ராஜபக்சேக்களின் அராஜகங்களை விசாரிப்பேன்  என்று எமது வாக்குகளை கேட்டு, வென்று இன்று அந்த விசாரணைகளை தடுப்பது என்ன நியாயம் என்று கேட்டு இருந்தார்.

அதே தினம் CID யினருக்கு பூஜித  விடம் இருந்து வந்த கடிதம் ஒன்றில், ட்ரான்ஸபெர்  கான்செல் என்று இருந்தது.

இந்த பின்னணியில், வழக்கினை குழப்புகிறார், சாடசிகளை, விசாரணை அதிகாரிகளை (இல்லாத புலிகள் உடன் தொடர்பில் இருப்பதாக) , தனது பதவி நிலையினை வைத்து பயமுறுத்துகிறார். என்ற புகாரிலே படைகளின் பிரதானி கம்பி எண்ணுகிறார். அனேகமாக அவரது பதவி காலியாகி புதியவர் நியமனமாவர். 

http://www.dailymirror.lk/expose/article/United-Backlash-Halts-Transfer-of-Key-CID-Officer-159060.html

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.