Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வௌியாகியது உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், இங்கே பார்வையிடலாம்!

Featured Replies

2018ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளை WWW.DOENETS.LK என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம்.

இந்த இணைப்பை அழுத்துவதன் ஊடாக தங்களுடைய பரிட்சைப் பெறுபேறுகளை இணையத்தளத்தில் பார்வையிடலாம் https://www.doenets.lk/result/alresult.jsf

https://www.ibctamil.com/srilanka/80/111573

  • தொடங்கியவர்

வெளியாகின உயர்தர பரீட்சை முடிவுகள் 

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

பரீட்சை முடிவுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோன்றிய நிலையில்,  16 இலட்சத்து 7 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை, 119 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/47199

 

167,907 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி!

இன்று வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளின் படி இவ்வருட உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 321,469 பேரில் 167,907 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதில் 119 பேரின் பெறுபேறுகள் வெளியீடு தற்காலிகஇடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/111574?ref=recommended3

 

உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு – 67 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு அவை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளின் அடிப்படையில் 67 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும்  உயிரியல் விஞ்ஞானத்துறையில் கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலத்தைச் சேர்ந்த மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அதேபோல் வர்த்தக துறையில் குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி மாணவன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அத்தோடு கலைத்துறையில் பாணந்துறை லைஸியம் சர்வதேச கல்லுாரியைச் சேர்ந்த மாணவனும், பொறியியல் தொழில்நுட்ப துறையில் கொழும்பு ஆனந்தா கல்லுாரியைச் சேர்ந்த மாணவனும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் துறையில் கம்புறுப்பிட்டிய நாரந்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி முதலிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த அதேவேளை, 119 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

http://athavannews.com/உயர்தப்-பரீட்சையின்-பெறு/

  • தொடங்கியவர்
உ/த பெறுபேற்றில், முதல் மூன்றிடங்களை பெற்றவர்களின் விவரம்

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதல் மூன்றிடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்கள்..

உயிரியல் விஞ்ஞானப் பிரிவு

1. முதலாமிடம் – கலனி சமுதிரா ராஜபக்‌ஷ - கம்பஹா ரத்னவெலி மகளிர் பாடசாலை

2. இரண்டாமிடம் - ரவிந்து ஷஷிக இலன்கம்கே - கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி

3.மூன்றாமிடம் – மொஹமட் ஹக்கீம் கரீம் - மாத்தளை சாஹிரா கல்லூரி

பௌதிக விஞ்ஞானப் பிரிவு

1. முதலாமிடம் - சத்துனி விஜேகுணவர்தன - கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயம்.

2. இரண்டாமிடம் - சமிந்து சுறான் லியனகே - காலி ரிச்சட் கல்லூரி

3. மூன்றாமிடம் - தெவிந்து விஜேசேகர - கொழும்பு ரோயல் கல்லூரி

வர்த்தகப் பிரிவு

1. முதலாமிடம் - கசுன் விக்ரமரத்ன - குருணாகல் மலியதேவ வித்தியாலயம்

2. இரண்டாமிடம் – உச்சினி அயத்மா ரணவீர - கம்பஹா ரத்னாவலீ மகளிர் பாடசாலை

3. மூன்றாமிடம் - மலிதி ஜயரத்ன - கொழும்பு மியுசியஸ் கல்லூரி

கலைப் பிரிவு

1. முதலாமிடம் - சேனதி அல்விஸ் - பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலை

2. இரண்டாமிடம் - சித்துமினி எதிரிசிங்க - குருணாகல் மலியதேவ வித்தியாலயம்

3. மூன்றாமிடம் - இஷானி உமேஷா பிட்டிகல - கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலை

பொறியியல் தொழில்நுட்பலியல் பிரிவு

1. முதலாமிடம் - யசாஸ் பத்திரன – கொழும்பு ஆனந்தா கல்லூரி
2. இரண்டாமிடம் - தரிந்து ஹேஷான் – கொழும்பு ஆனந்தா கல்லூரி

3. மூன்றாமிடம் - சேஷான் ரங்கன விஜேகோன் - நிக்கவரெட்டிய மஹாசேன் கல்லூரி

தொழில்நுட்பவியல் பிரிவு

1. முதலாமிடம் - சந்துனி கொடிப்பிலி - கம்புருப்பிட்டிய நாரன்தெனிய மத்திய மகா வித்தியாலயம்

2. இரண்டாமிடம் - ரிஸா மொஹமட் - சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம்

3. மூன்றாமிடம் - விசிந்து திலேன்க லக்மால் - ஹோமாகம மஹிந்த ராஜபக்‌ஷ வித்தியாலயம்

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/உ-த-பெறுபேற்றில்-முதல்-மூன்றிடங்களை-பெற்றவர்களின்-விவரம்/150-227249

Edited by Rajesh

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Rajesh said:

வெளியாகின உயர்தர பரீட்சை முடிவுகள் 

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

பரீட்சை முடிவுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோன்றிய நிலையில்,  16 இலட்சத்து 7 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை, 119 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/47199

அதில் வீரகேசரி செய்திதான்.... தலையை சுத்துது. 😲
பரீட்சை எழுதியவர்கள்     3 லட்சம்.  
பல்கலைக் கழகத்திற்கு  தெரிவானவர்கள்...     16 லட்சம்  மாணவர்களாம். 

  • தொடங்கியவர்

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞானத்தில் மாவட்டத்தில் முதலிடம்!

சற்று முன்னர் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி பௌதீக விஞ்ஞானத்தில் யாழ் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் சண்முகதாசன் சஞ்ஜித்.

தேசியரீதியில் ஆறாமிடத்தையும், மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/111577

 

வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாணவி முதலிடம்

17365-3-0d6a09a6cbd41118ee23941897888231-720x450.jpg

கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீச்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியவர்களில் வணிகப்பிரிவில், மட்டக்களப்பு மாணவி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு- வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி நவனீதன் கிருஷிகா 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் இவர் தேசிய ரீதியில் 124 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2.20614z புள்ளிகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

நேற்று நள்ளிரவு கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீச்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

பெறுபேறுகளின் அடிப்படையில்  67 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

http://athavannews.com/வணிகப்-பிரிவில்-மட்டக்கள/

 

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் – வடக்கில் மூவர் முதலிடம்

கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீச்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் தமிழ் மொழி முலம் பரீட்சைக்கு தோற்றியவர்களில், வடக்கு மாகாணத்தில் பௌதீக விஞ்ஞான துறையில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரி மாணவன் சன்முகநாதன் சஞ்சித் யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அத்தோடு அவர் தேசிய ரீதியில் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளார்.

அத்தோடு கலைப்பிரிவில் சாவகச்சேரி இந்துக்கல்லுாரி மாணவி சிங்கராசா நிலக்ஷனா  முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி-முருகானந்தா கல்லுாரி மாணவி கந்தையா ஜனனி வணிகப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

17365-5-0d6a09a6cbd41118ee23941897888231

 

17365-1-0d6a09a6cbd41118ee23941897888231

 

http://athavannews.com/உயர்தப்பரீட்சை-பெறுபெறு/

Edited by Rajesh

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கின் முன்னணி உயர்தரப் பெறுபேறுகள்- ஒரே பார்வையில் :

December 30, 2018

stu.jpg?resize=800%2C421

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞானத்தில் மாவட்டத்தில் முதலிடம்!

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி பௌதீக விஞ்ஞானத்தில் யாழ் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் சண்முகதாசன் சஞ்ஜித். இவர் தேசியரீதியில் ஆறாமிடத்தையும், மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலை மாணவி வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.  நவனீதன் கிருஷிகா என்ற மாணவி தமிழ் மொழி மூலம் வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி 3 A பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவர் தேசிய ரீதியில் 124ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2.20614 இஸட் புள்ளியைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்!

தற்போது உயர் தரப் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.இந்தாண்டு நடந்த கல்விப் பொது தராதர உயர் தரப்பரீட்சைப் பெறுபேறுகள்   இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள பெறுபேற்றின்படி கிளிநொச்சி மாவட்டம் கிளி. முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையினைப் பெற்றுள்ளார்.

திருகோணமலை  நிலாவெளி கைலேஸ்வராக் கல்லூரி மாணவன் எம்.டிலக்சன் பொறியியல் தொழிலுநுட்பப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்

திருகோணமலை மாவட்டத்தில் தி/நிலாவெளி கைலேஸ்வராக் கல்லூரி மாணவன் எம்.டிலக்சன் பொறியியல் தொழிலுநுட்பப்பிரிவில் மாவட்ட நிலையில் முதலிடம் பெற்றுள்ளார்.  அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் உயர்தர கணித பிரிவில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவி முகம்மத் பர்ஹாத் பெற்றுள்ளார். இவர் மாவட்டத்தில் 1ஆம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 20ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்

கிளிநொச்சியின் முன்னணி பெறுபேறுகள் கிராமபுறம் வசமானது. சாதனை படைத்த மாணவிகள்!

கிளிநொச்சி கணிதப் பிரிவு மாவட்ட முதல் நிலை புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி ஜெ.மகிழினி (பரந்தன்) பெற்றுள்ளார்.  அத்துடன் விஞ்ஞானப் பிரிவில்   முதல் நிலையை  பளை மத்திய கல்லூரி மாணவி  க.அபிசிகா( முரசு மோட்டை)  பெற்றுள்ளார்.

இதேவேளை கலைப்பிரிவில் சுதானந்தன் திகழினி மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார். இவர் கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய மாணவி ஆவார்.

உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு – 67 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு அவை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளின் அடிப்படையில் 67 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும்  உயிரியல் விஞ்ஞானத்துறையில் கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலத்தைச் சேர்ந்த மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அதேபோல் வர்த்தக துறையில் குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி மாணவன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அத்தோடு கலைத்துறையில் பாணந்துறை லைஸியம் சர்வதேச கல்லுாரியைச் சேர்ந்த மாணவனும், பொறியியல் தொழில்நுட்ப துறையில் கொழும்பு ஆனந்தா கல்லுாரியைச் சேர்ந்த மாணவனும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் துறையில் கம்புறுப்பிட்டிய நாரந்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி முதலிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த அதேவேளை, 119 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

http://globaltamilnews.net/2018/108313/

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு – 67 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி

வீரகேசரி.. சொல்லுது 1 லட்சத்துக்கு 67 ஆயிரம் என்று. குளோபல் தமிழ் நியூஸ் சொல்லுது.. 67 ஆயிரம் என்று.

சொறீலங்காவில்.. வேதனை விளையாட்டாகிப் போன உந்த உயர்தரப் பரீட்சை என்ற போட்டிப் பரீட்சையின் சமூகத்தாக்கம்.. குறிப்பாக இளையோரில் ஏற்படுத்தும்.. அதன் சமூகத்தாக்கம்.. உணராமல்.. ஆளுக்கொரு தொகை எழுதும்.. இந்த ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மையை என்னென்பது..???!

சொறீலங்காவில்.. உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறுபவர்களில்.. சில பத்தாயிரம் பேர் மட்டுமே.. பல்கலைக்கழகம் நுழைய முடியும் என்ற துர்ப்பாக்கிய நிலை தொடரும் நிலையில்.. இந்தத் தொகையும்.. அதனால் பாதிக்கப்படும் மாணவர்களின் நிலையும் குறித்த அக்கறை இன்றி ஊடகங்கள் இன்னும் செயற்படுவது.. அவற்றின் சமூகப் பொறுப்புணரா கேடுகெட்ட நிலை என்பதை அப்படியே இனங்காட்டுகிறது.

சமூக அக்கறையுள்ள.. யாழும் அதுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது. 👈

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக ஒரு அறிக்கையை விடாவிட்டால் இப்படியான குழப்பங்கள் வரும்தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக ஒரு அறிக்கையை விடாவிட்டால் இப்படியான குழப்பங்கள் வரும்தானே. 

 அறிக்கை கிடைக்கும் வரை.. ஊடகங்கள் இந்தத் தொகைகளைக் குறிப்பிடுவதை தவிர்க்கலாம் தானே. ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை தான் இந்தக் குழப்பத்துக்கே காரணம். 👈

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.