Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமி எங்களுக்கு வேண்டும்!! கூறுவது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்குக்கில் அகப்பட்ட பொதுமக்களை உயிரைத் துச்சமென மதித்து களத்தில் இறங்கி காப்பாற்றிய படையினருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. படையினர் தொடர்பாக மக்கள் தற்போது பெரும் மனமாற்றத்தில் இருப்பதாகவும் படையினர் தமது பிரதேசத்தில் தொடர்ந்து கடமை புரிய வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்

à®à®®à®¿ à®à®à¯à®à®³à¯à®à¯à®à¯ வà¯à®£à¯à®à¯à®®à¯!! à®à¯à®±à¯à®µà®¤à¯ யாரà¯?

ஆமி எங்களுக்கு வேண்டும்!! கூறுவது யார்?கூறவைப்பது யார்?

வன்னியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்குக்கில் அகப்பட்ட பொதுமக்களை உயிரைத் துச்சமென மதித்து களத்தில் இறங்கி காப்பாற்றிய படையினருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

படையினர் தொடர்பாக மக்கள் தற்போது பெரும் மனமாற்றத்தில் இருப்பதாகவும் படையினர் தமது பிரதேசத்தில் தொடர்ந்து கடமை புரிய வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

17350-4-32acd4ed8ef2fcc30a1e7e92d83aa5de-1.jpg

17350-5-32acd4ed8ef2fcc30a1e7e92d83aa5de-1.jpg

 

17350-6-32acd4ed8ef2fcc30a1e7e92d83aa5de-1.jpg

 

17350-1-32acd4ed8ef2fcc30a1e7e92d83aa5de-1.jpg

 

17350-3-32acd4ed8ef2fcc30a1e7e92d83aa5de-1.jpg

 

http://www.tamilradar.com/2018/12/ஆமி-எங்களுக்கு-வேண்டும்/

17350-2-32acd4ed8ef2fcc30a1e7e92d83aa5de-1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்.. இதை எழுதிப் போட சிங்கள இராணுவம் மிக அவசியம்.

இயற்கை அனர்த்த இடர்களின் போது.. பொது அமைப்புக்கள்.. இராணுவம்... தொண்டர் அமைப்புக்கள்.. மக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது என்பது.. இராணுவ இருப்பை வலியுறுத்தும் ஒரு விடயமே அல்ல. இராணுவம்.. வரும்.. சேவை வழங்கும்... பின் அது போய் விடும். குந்தி இருக்கனும் என்று எங்கும் எந்த மக்களும் கோருவதில்லை.

ஆனால்.. சொறீலங்காவில்.. எப்படா தமிழனுக்கு இடர் வரும்.. உதவி செய்வது போல்.. நடித்து.. நாடகம் ஆடி.. தமிழர் மண்ணையும் உரிமைகளையும்.. பறிக்கலாம் என்று செயற்படுவதே சிங்கள அரசுகளின் முக்கிய நோக்காக இருக்கிறது. 👈

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி இருக்கட்டும் கொழும்பான்,

நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

உண்மையாகவே இராணுவம் தமிழர்மீது பாசம் வைத்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால், 2009 வரை குறைந்தது 2 லட்சம் தமிழர்களைக் கொன்றவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? அல்லது, தமிழர்கள் எவருமே இராணுவத்தால் கொல்லப்படவில்லையென்று நினைக்கிறீர்களா?

மட்டக்களப்பில் இரு பொலிஸ்காரர்களைக் கொன்றுவிட்டு, நாட்டின் பாதுகாப்பு அச்சுருத்தலுக்குள்ளாகிவிட்டது, ஆகவே மகிந்த மீண்டும் வரவேண்டும், இராணுவம் விலக்கிக் கொள்ளப்படக் கூடாது என்று கூவும் கூப்பாட்டிற்கும் இங்கே நீங்கள் இணைத்துள்ள செய்திக்குமிடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

எங்களில் 2 லட்சம் பேரைக் கொன்று, நிரந்தர அடிமைகளாக்கி, எங்கள் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் ஒரு பேரினவாத இயந்திரத்தை தொடர்ந்தும் இருங்கள் அல்லது நீங்களே எங்களின் கடவுள்கள் என்று ஒரு தமிழனால் எழுத முடிகிறதென்றால், அவன் புத்தி பேதலித்துள்ளான் என்றே அர்த்தம். அவனின் கருத்தை வைத்து இன்றுவரை இழக்கப்பட்ட உறவுகளுக்காகவும், ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்துக்காகவும், பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் அழுதுகொண்டிருக்கும் எல்லாத் தமிழர்களையும் கொச்சைப்படுத்த வேண்டாம்.

நீங்கள் இச்செய்தியை இணைத்ததன் நோக்கம் ஒன்றில் நீங்கள் இதை உண்மையென்று நம்புவதால் அல்லது இதற்கான கடுமையான எதிர்வினையை எதிர்பார்த்துத்தான் என்று நான் நினைக்கிறேன். எது சரி ? 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

https://imgur.com/RTLl5mx

https://imgur.com/KzZXqUE

சிங்கே தமிழ்ப்பெண்களுடன் நிற்பவர்கள் ஒரே ராணுவத்தினர்தான். ஒரே காலப்பகுதியில்த்தான், ஆனால் படங்களிலிருக்கும் வித்தியாசம் புரிகிறதா உங்களுக்கு ? 

picture 1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

உலக காட்டுமிராண்டி சிங்கள ராணுவத்தின்  மீது யார் பாசம் வைப்பர்கள்?. இதுவும் தமிழ் இணையத்தளங்களில் வந்ததுதான். நான் இங்கு இணைக்கவிட்டாலும் தமிழர்கள் இதை வாசிக்கத்தான் செய்வார்கள். இதுவும் தமிழர்களார் தான் எழுதப்படுகின்றது. இந்த எழுத்துக்களை பார்த்தால் சிங்களவன் எழுதியுள்ளான் என்று தெரிகின்றது. இது ஒரு செய்திக்காக இணக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமிப் பேரிடர் வந்தபோது முன்னின்று உதவியது தமிழீழ விடுதலைப் புலிகள்படை. அது தங்கள் உயிரைத் துச்சமென மதித்து சிங்கள மக்களையும் காப்பாற்றி உதவியதைக்கண்டு சிங்களர் மத்தியிலும் புலிகளுக்கு செல்வாக்கு ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் புலிகளை வரவேற்று ஆதரிக்க என்றுமே முன்வந்ததில்லை. அத்துடன் புலிகளிள் ஆட்சி இருந்திருந்தால் இத்தனைதூரம் வெள்ளம் உயர்ந்து அழிக்கும் நிலை வந்திராது. சிங்கள அரச ஆட்சியில் அதன் அதிகாரிகளின் அதிகாரத்தில் பாதுகாப்பான அணைகள் கட்டப்படவில்லையென அங்குள்ள மக்களே தெரிவித்துள்ளனர்.  

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோவில் கள்ளியங்காடு என்ற பிரதேசத்தில் ராணுவம் தங்கள் பிரதேசங்களுக்கு வேணும் என்றும் ஆர்ப்பாட்டம் செய்து ராணுவ தளபதியிடம் மகஜர் கையளிக்கப்பட்து வீடியோ தேவைப்படும் இடத்து வழங்கப்படும்.

வடக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ராணுவம் உதவியது அது ஓர் நாட்டின் ராணுவத்தின் கடமை ஒவ்வொர் பிரஜைகளையும், காப்பாற்றுவது ஆனால் போரில் மக்களையும் சேர்த்து கொன்றது ஏற்றுக்கொள்ள முடியாதது.

 

ஆனால் வடக்கில் ராணுவம் இறங்கி உதவி செய்தது கொஞ்ச அரசியல் வாதிகளுக்கு கொஞ்சம் கடுப்பாகிவிட்டது போல தெரிகிறது அவர்கள் அரசியல் வாழ்க்கைக்கு 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.