Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் வெள்ளத்தில் மிதக்க சுமந்திரன் ஹெலியில் திரிகிறார்’: பத்ரமுல்லே சீலரத்ன தேரர் கிளிநொச்சியில் சர்ச்சைப் பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வெள்ளத்தில் மிதக்க சுமந்திரன் ஹெலியில் திரிகிறார்’: பத்ரமுல்லே சீலரத்ன தேரர் கிளிநொச்சியில் சர்ச்சைப் பேச்சு!

By admin -
2-1-1-696x491.jpg

“உங்களின் வாக்குகளினால் நாடாளுமன்றம் சென்ற சுமந்திரன் உலங்கு வானூர்தியிலேயே பயணிக்கிறார். அவர் உத்தியோகபூர்வமற்ற பிரதமராக செயற்படுகிறார். மலையகத்தில் தொண்டமான் போன்றோரின் பிள்ளைகளும், இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் இங்குள்ள இந்த பிள்ளைகள் ஏழைகளாகவே வாழ்கின்றனர்“ என தெரிவித்துள்ளார் பத்ரமுல்லே சீலரத்ன தேரர்.

கிளிநொச்சிக்கு இன்று வெள்ளிக்கிழமை (04) விஜயம் செய்த பத்ரமுல்லே சீலரத்ன தேரர் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தார். அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அவர் மேலும் உரையாற்றும் போது-

“இந்நாட்டில் நிலவிய 30 வருடகால யுத்தத்தில் தமிழ், சிங்கள இளைஞர்கள் தங்கள் அவயவங்களையும் உயிர்களையும், இழந்துள்ளனர். யுத்தத்தினால் நாட்டை வெற்றி கொள்ள முடியாது. மக்களின் அறியாமையை ஒரு தரப்பினர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

உங்களின் பெறுமதியான வாக்குகளினால் நாடாளுமன்றம் சென்ற சுமந்திரன் இன்று உலங்கு வானூர்தியிலேயே பயணிக்கிறார். அவர் உத்தியோகபூர்வமற்ற பிரதமராக செயற்படுகிறார். சுமந்திரனின் வார்த்தையைக் கேட்டு சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து தவிக்கிறார். ஆனால் அவர்கள் சுகபோகமாக வாழ்கின்றனர். இந்த நாட்டில் இனவாதத்தைக் கக்குபவர்கள் இவர்களே. சிங்களவர்களான நாங்கள் தமிழர்களுடன் இனவாதத்தைக் வெளிப்படுத்தவில்லை.

மலையகத்தில் தொண்டமான் போன்றோரின் பிள்ளைகளும், இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் இங்குள்ள இந்த பிள்ளைகள் ஏழைகளாகவே வாழ்கின்றனர்.

இந்த வெள்ளப் பாதிப்பு, சுனாமியை விடவும் ஆபத்தானது. மக்களின் குடியிருப்புக்கள் சகலதும் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் உங்கள் வாக்குகளினால் தெரிவாகி நாடாளுமன்றம் சென்று எதிர்க்கட்சி ஆசனங்களைப் பெற்றவர்கள் உங்களின் குறைகள் குறித்து கரிசனை கொண்டார்களா? அவர்கள் அதிகார ஆசையில், தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே மீண்டும் தேர்தல் காலத்தில் இவர்கள் உங்களை நாடி வரும் போது, அவர்களை விரட்டியடியுங்கள்” எனத் தெரிவித்தார்.1-1-300x168.jpg

மஹிந்த ராஜபக்சவுடன் நெருக்கமாக அடையாளப்படுத்தப்பட்ட பத்ரமுல்லே சீலரத்ன தேரர், ஜனசெத முன்னணியின் தலைவராக செயற்பட்டு வருகிறார். பொதுஜன பெரமுன தூசு தட்டப்படுவதற்கு முன்னதாக, மஹிந்த ராஜபக்ச கூட்டு எதிரணியாக செயற்பட்ட சமயத்தில் தமது அமைப்பின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்குமாறு இவர் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.pagetamil.com/30997/?fbclid=IwAR2EA8o-s_dXMfPFqJD_QMCC-mtec0qhcGiNv1xalLGjJw2geA9h0gWboDY

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, பெருமாள் said:

உங்களின் பெறுமதியான வாக்குகளினால் நாடாளுமன்றம் சென்ற சுமந்திரன் இன்று உலங்கு வானூர்தியிலேயே பயணிக்கிறார். அவர் உத்தியோகபூர்வமற்ற பிரதமராக செயற்படுகிறார். சுமந்திரனின் வார்த்தையைக் கேட்டு சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து தவிக்கிறார். ஆனால் அவர்கள் சுகபோகமாக வாழ்கின்றனர். இந்த நாட்டில் இனவாதத்தைக் கக்குபவர்கள் இவர்களே. சிங்களவர்களான நாங்கள் தமிழர்களுடன் இனவாதத்தைக் வெளிப்படுத்தவில்லை.

மலையகத்தில் தொண்டமான் போன்றோரின் பிள்ளைகளும், இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் இங்குள்ள இந்த பிள்ளைகள் ஏழைகளாகவே வாழ்கின்றனர்.

இதை காரணம் காட்டி நாங்கள் அமிர்தலிங்கம் சம்பந்தன் மாவை சுமந்திரன் ஆக்களை திட்டினால் இஞ்சை ஒரு குறூப்பு  அறிவார்ந்தமாய் கதைக்கோணும் எண்டு எங்களுக்கு புத்திமதி உரைக்கும். ஆனால் நாங்கள் சொன்னதை..... சிங்களமும் இனவாத பிக்குகளும் சொன்னால் ஒண்டும் தெரியாதமாதிரி அந்த குறூப்பு தலையை குத்திக்கொண்டு போகுங்கள்.

2 hours ago, பெருமாள் said:

பத்ரமுல்லே சீலரத்ன தேரர்

இவரின் மனிதாபிமானத்தை பாராட்டும் அதேவேளை கபடத்தனமான அரசியல் கருத்துக்களை இரசிக்க முடியாது.
இவர் முதலில் இலங்கையிலுள்ள சிங்கள-பௌத்த இனமதவெறி குழுக்களை கட்டுப்படுத்த முயன்றுவிட்டு பின்னர் அரசியல் கதைக்கட்டும்.    

 

  • கருத்துக்கள உறவுகள்

49380440_2274497529454402_26370741211915

49351338_2274497522787736_39064635037995

49535918_2274497532787735_41195506181991

தமிழ் மக்களின் விவசாய நிலங்களை இராணுவம் அபகரித்து அதில்  நிலை கொண்டுள்ளது. அதை பற்றி பிக்கு  ஒரு வார்த்தை   கூட சொல்ல மாட்டார். தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்தல் , சிங்களவர்கள் நல்லது செய்கிறார்கள் என்ற மாயையை தமிழ் மக்கள் மீது உண்டாக்க இப்படியான சிறு உதவிகளை செய்வதோடு சில நஞ்சுகளையும் கக்கி விட்டு செல்வதாகவே எனக்கு தோன்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.