Jump to content

தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரித்தானியாவில் கைது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kktg.jpg

தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரித்தானியாவில் கைது?

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் போர்குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினோத் பெரேரா மற்றும் பல்லியகுரு ஆகிய இருவர் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நாளை(திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதன்போது பிரியங்க பெர்னாண்டோ கைது செய்யப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாளைய தினம் வழக்கில் ஆஜராகாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான காணொளிகளை சனல் 4 தொலைகாட்சி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமிழர்களுக்கு-மரண-அச்சுற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம், இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை லண்டனில் உள்ள இலங்கைத் தூதரக்ம் கொண்டாடியபோது, அதன்முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரும்பான்மைத் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுக்கும் வகையில் சைகை செய்து வெருட்டியதற்காக, தனியார் முறைப்பாடு ஒன்றின்மூலமாக இவன்மேல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

மயூரன் சதானந்தன், பல்லிய குருகே வினோத் பிரியந்த பெரேரா மற்றும் கோகுலகிரிஷ்ணன் நாரயணசாமி ஆகிய மூவர் தாக்கல் செய்துள்ள இவ்வழக்கின் இவனை இன்று ஆஜராகும்படி கேட்கப்பட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கும்படி இவனது சிறிலங்கா விலாசத்திற்கும், லண்டன் சிறிலங்கா உயர்ஸ்தானிகரத்திற்கும், இலங்கை வெளிநாட்டாலுவல்கள் அமைச்சிற்கும் இதுவரை விடுக்கப்பட்ட சம்மன்களுக்கு இவனோ அல்லது இவனைப் பிரதிநிதித்துவம் செய்யும் எவருமோ பதிலளிக்கவில்லை. ஆனால், முறைப்பாட்டளர்கள் சார்பில் வாதாடும் வழக்கரிஞர்கள், இவனது பிரசன்னம் இல்லாவிட்டாலும்கூட, வழக்கைத் தொடர்ந்தும் நடத்தும் வகையிலேயே இவ்வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். பிறநாட்டில் வதியும் ஒரு ராணுவ அதிகாரிமீது தொடுக்கப்பட்ட ஒரு சில வழக்குகளில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பூரண ராணுவச் சீருடையில் இருந்த இவன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி பலதடவைகள் தனது ஆட்காட்டு விரலினால் கழுத்தை அறுப்பதுபோன்று பாவனைசெய்ததுடன், தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களை பயமுருத்தும் வகையில் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை வெளிப்படுத்தும் பல ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து, இவனது ராஜதந்திர உரிமைகளை ரத்துச் செய்யும்படி பல இங்கிலாந்து சட்டவாளர்கள் குரல் எழுப்பியிருந்தமை குறிப்பிடத் தக்கது. 

தொடர்ச்சியான அழுத்தங்களை அடுத்து, சிறிலங்கா அரசு இவனை மீளவும் இலங்கைக்கு அழைத்திருந்தது. இவனது கழுத்தறுக்கும் சைகையினை அடுத்து, இவனுக்குச் சார்பாக, இவனை ஒரு போர் நாயகனாக போற்றிப் பல சிங்களவர்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்ததையடுத்து, இவனுக்கெதிராக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை என்று சிங்கள ராணுவம் அறிவித்திருந்தது.

பிரிகேடியர் தரத்திலிருந்த இவன், 2008 ஆம் ஆண்டில் மணலாற்றிலிருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கியதோடு, இக்காலத்தில் முலைத்தீவிற்கு மிகவும் அண்மையாகப் போரிட்ட படைப்பிரிவின் கட்டளை அதிகாரியென்பதுடன், பல வைத்தியசாலைகள் மற்றும் யுத்த சூனிய வலயங்கள் மீது கடுமையான செல்வீச்சுத் தாக்குதல்களையும், பல்குழல் பீரங்கித் தாக்குதல்களையும் இவனது படைப்பிரிவு மேற்கொண்டிருந்தது. இப்படையணியின் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்தவன்.

இவனது ராணுவ நடவடிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் கீழே உள்ள இணைப்பில் உள்ளன. 


http://www.jdslanka.org/images/documents/brigadier_api_fernando_final_jds_itjpsl.pdf

Link to comment
Share on other sites

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் உறுதியான செய்தி வெளியாகவில்லை

//Brigadier Priyanka Fernando of SL army found guilty of two of three offences under Public Order Act (sections 5 and 4a). That his actions were threatening, caused harassment, and that he intended them to be so. Magistrates court issues an arrest warrant for Fernando...//

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் முக்கியத்துவம் கருதி, தனிச் செய்தியாக இணைத்துள்ளேன்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.