Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யு.எஸ் பல்கலையில் துப்பாக்கிச் சூடு - பலர் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_42807603_virg_black_map203.gif

அமெரிக்க வேர்ஜினியா (Virginia) மாநிலத்தில் உள்ள campus of Virginia Tech university இல் நடத்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்து பலர் காயமைந்துள்ளனர். அண்மைய ஆண்டுகளில் அமெரிக்க மற்றும் கனடியப் பல்கலைக்கழகங்களில் நடந்த துப்பாக்கி வன்முறைகளில் மாணவர்கள் பலர் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது..!

Deadly shooting at US university

At least 20 people have been killed and more injured after a gunman went on the rampage at the campus of Virginia Tech university in Virginia, US.

http://news.bbc.co.uk/1/hi/world/americas/6560685.stm

Edited by nedukkalapoovan

பல்கலைக்கலவரமா ?

துப்பாக்கி வைத்திருக்க எல்லோருக்கும் அனுமதி அளித்தால் இப்படித்தான், மாணவர்களும் துப்பாக்கியுடன் பாடசாலைக்குச் செல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கல்லூரி வகுப்பறையில் 32 பேர் சுட்டுக்கொலை; கொலையாளியும் சுட்டுக் கொல்லப்பட்டான்

பிளாக்ஸ்பர்க், ஏப்.17-

அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாவில் `வெர்ஜினியா தொழில் நுட்ப பல்கலைக்கழகம்' உள்ளது. இது வாஷிங்டனில் இருந்து 390 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. 2,600 ஏக்கர் பரப்பளவில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இங்கு 26 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்த பல்கலைக்கழக வகுப்பறையில் நேற்று காலை 7-15 மணிக்கு ஒரு மர்ம ஆசாமி நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதனால் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள். இந்த துப்பாக்கிச்சூட்டில் 31 பேர் பலியானார்கள். இதில் 21 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதே நேரத்தில் மாணவர்கள் விடுதியில் இன்னொரு ஆசாமி துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். இந்த இரு சம்பவங்களும் 2 மணி நேரம் நீடித்தது.

மாணவர்களை வகுப்பறையில் சுட்டுக்கொன்ற மர்ம ஆசாமி பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டான். அவன் தன்னை தானே சுட்டுக்கொன்றானா அல்லது அவனை அமெரிக்க போலீசார் சுட்டுக்கொன்றார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை.

மாணவர் விடுதியில் துப்பாக்கியால் சுட்டவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொடூர சம்பவம் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது

இந்த சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி புஷ் கடும் கண்டனத்தையும், பலியானவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மூலம் - மாலைமலர்

அமேரிக்காவின் வெர்ஜினிய டெக் பல்கலைகலகத்தில் 33 அப்பாவி மாணவர்கள் துப்பாக்கி எந்திய ஒரு ஆடவனால் கொடுரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

முதல் துப்பாக்கி சுடு காலை 7:15, இதில் குறைந்தது இரண்டு மாணாக்கள் மட்டுமே சுடப்பட்டதாகவும்,

இரண்டாவது மோதல் 2 மணி நேரம் கழித்து 9:15 மணியளவில் நடந்துள்ளதாகவும், இதில் குறைந்தது 45 மாணவர்கள் சுடப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுல்லது.

(கவனிக்க, மொத்த போலிஸ் கூட்டமும் அங்கே குழுமிய பிந்தான் இரண்டாவது மோதல் அரங்கேரியுள்ளது)

இதுவரை நடந்த பல்கலைகலக துப்பாக்கிச் சுட்டு வரலாரிலே முதலிடம் பிடிக்கும் இந்த செய்தி மிகவும் துக்கமான செய்தியாக அன்னாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆகக்கடைசி தகவலின்படி,

அந்த ஆடவன் ஆசியாவை சேர்ந்தவனாகவும், கடந்த ஆகஸ்டு மாதம் 7 திகதிதான் அமேரிக்காவினுல் நுலைந்ததாகவும் தெரிவிக்காப்பட்டுள்ளது.

மிகவும் இளவதுடையவனாகவும், சம்பவத்தின் பொழுது அவனும் தன்னைதானே சுட்டுகொண்டு, தற்கொலை செய்துகொண்டான் என்றும் கூறப்படுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இதே தினம் 1999ம் ஆண்டு அமெரிக்காவின் கொலம்பைன் என்ற இடத்திலும் இதே நாள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பல மாணவர்கள் கொல்லப்பட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க வரலாற்றுப் பதிவாகியுள்ள இந்த துன்பகர நிகழ்வு குறித்துப் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சாட்சி ஒருவர் துப்பாக்கிதாரி ஆசியர் போன்று தென்பட்டதாக சொல்லியுள்ளார்.

One student, Erin Sheehan, described him as "a little bit under six feet tall, young looking, Asian, dressed sort of strangely, almost like a boy scout, very short-sleeved light, tan shirt and some sort of ammo vest with black over it".

இச்சம்பவம் தொடர்பில் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகம் மீதே தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். காரணம் இந்த பலிகளுக்குக் காரணமான இரு துப்பாக்கிச் சூட்டும் சம்பவங்களுக்கும் இடையில் இரண்டு மணி நேர வேறுபாடுகள் இருந்தும் நிர்வாகம் மாணவர்களை அலேட் செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது..!

_42808585_shoot_sat_map416.gif

http://news.bbc.co.uk/1/hi/world/americas/6562259.stm

சம்பவம் நடந்த இடங்கள்..!

அமெரிக்க துப்பாக்கி சூடு-பலியான பேராசிரியர் சென்னையை சேர்ந்தவர் ஏப்ரல்

loganathan.jpg

அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான பொறியியல் பேராசிரியர் ஜி.வி.லோகநாதன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

விர்ஜீனியா டெக் பல்கலைகக்கழகத்தின் சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் லோகநாதன். சென்னையில் பிறந்தவரான லோகநாதன், கான்பூர் ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்தவர்.

கடந்த 2006ம் ஆண்டு, சிறந்த ஆசிரியருக்கான, டபிள்யு.இ.ைவன் விருதினையும் அவர் பெற்றுள்ளார்.

விர்ஜீனீயா டெக் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு, அங்கு படித்து வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் நிலை குறித்த தகவல்களை அறிய கீழ்க்காணும் இ-மெயில் முகவரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

ciso@vt.edu

kbtseck@vt.edu

isa@vt.edu

http://thatstamil.oneindia.in/news/2007/04...loganathan.html

அமெரிக்க வேர்ஜினிய தொழிநுட்ப கல்லூரியில் மர்ப நபர் துப்பாக்கி பிரயோகம் 33 பேர் பலி.

அமெரிக்க வேர்ஜினியா தொழினுட்ப கல்லுரியில் இனந்தெரியாத மர்மநபரொருவர் வகுப்பறையினுள் புகுந்து மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 33 பேர் பலியானதுடன் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்..

தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவரான லோகநாதன் என்பவரும் இத்துப்பாக்கி சூட்டில் பலியாகியதுடன் இந்திய வம்சாவழி மாணவரொருவரை காணவில்லையன தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி பிரயோகம் செய்த மர்மநபர் சீனாவை சேர்ந்த கல்லூரி மாணவரென தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கி பிரயோகம் மே ற்கொண்ட இந்நபர் தொழினுட்ப கல்லூரியின் விடுதியிலும் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளார். தகவலறிந்து சம்பவ ஸ்தளத்திற்கு விரைந்த பொலிஸார் மர்ப நபரை சுற்றி வழைத்து பிடிக்க முயன்றனர். எனினும் அந்நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்..

இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக அமெரிக்க ஜானாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இறந்தவர்களின் குடும்பங்களிற்கு தமது ஆழ்ந்த இரக்கங்களையும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

-Tamilwin-

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பல்கலை.யில் துப்பாக்கிச் சூடு: 32 மாணவர்கள் பலி-இந்திய மாணவியும் சாவு?

ஏப்ரல் 17, 2007

பிளாக்ஸ்பெர்க் (விர்ஜீனியா): அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்குள் (Virginia Tech University) புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 32 பேர் பரிதாபமாக பலியாயினர். இதில் இந்திய பேராசிரியரான லோகநாதன் என்பவரும் அடக்கம்.

அதே போல துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவியான மீனாள் பஞ்சால் என்பவரும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.

இத்தனை பேரை சுட்டுக் கொன்ற அந்த மர்ம நபரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள பிளாக்ஸ்பெர்க் நகரில் உள்ளது விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகம். இங்கு அமெரிக்க நேரப்படி நேற்று காலை 7.15 மணிக்கு, வெஸ்ட் ஆம்ப்ளர் ஜான்ஸ்டன் ஹால் என்ற மாணவர் தங்கும் விடுதி மற்றும் வகுப்பறைகள் உள்ள பகுதியில் ஒரு மர்ம நபர் நுழைந்தார்.

அப்போது வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் போலத் தோன்றிய அந்த நபர் நல்ல உயரமாக இருந்தார். ஜெர்மன் மொழி வகுப்பறைக்குச் சென்ற அந்த நபர் தன்னிடமிருந்த கைத் துப்பாக்கியால் முதலில் ஒரு ஆசிரியரையும், மாணவரையும் சுட்டுக் கொன்றார். பின்னர் வகுப்பறையில் இருந்தவர்களை சரமாரியாக சுட ஆரம்பித்தார்.

இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பீதியடைந்து அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர். ஆனால் வகுப்பறையை விட்டு யாரும் வெளியேறி விட முடியாதபடி வகுப்பறைக் கதவை சங்கிலியால் மூடி விட்டார் அந்த கொலைகார ஆசாமி.

அந்த நபரிடமிருந்து தப்பிப்பதற்காக பல மாணவர்கள் வகுப்பறை ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். வகுப்பறையில் 20 பேர் வரை இருந்ததாகவும், அத்தனை பேரையும் அந்த மர்ம நபர் சுட்டதாகவும் குண்டுக் காயம் அடைந்த டெரிக் ஓ டெல் என்ற மாணவர் கூறினார்.

மொத்தம் இரு இடங்களில் அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். வெஸ்ட் ஆம்ப்ளர் ஜான்ஸ்டன் ஹால் பகுதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நோரிஸ் ஹால் என்ற இடத்திற்குச் சென்று அங்கும் துப்பாக்கியால் சுட்டார் அந்த மர்ம நபர்.

இதில் அந்த வகுப்பறையில் சுற்றுச்சூழல் பொறியியல் குறித்து பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் ஜி.வி.லோகநாதன் என்பவர் மீதும் குண்டு பாய்ந்தது. அதில் அவரும் அந்த இடத்திலேய பலியானார்.

லோகநாதன் பலியாகிவிட்டதை அவருடன் பணியாற்றும் பேராசிரியர் ராமன் குமார் என்பவர் உறுதி செய்தார்.

2 மணி நேர இடைவெளிக்குள் இரு இடங்களிலும் தனது கொலை வெறி ஆட்டத்தை நடத்தியுள்ளார் அந்த நபர்.

இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் 32 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 32 பேரின் உயிரை வாங்கிய அந்த மர்ம நபர் மோரிஸ் ஹால் பகுதியில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதார்.

முதல் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோதே மாணவர்களை சரியான முறையில் எச்சரித்து உஷார் படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தம் 12 ரவுண்டுகள் அந்த நபர் சுட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அதிபர் ஜார்ஜ் புஷ் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கல்வி நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடப்பது வெகு சகஜமானது. யார் வேண்டுமானாலும் கைத் துப்பாக்கி வைத்திருக்க அந்த நாட்டு சட்டத்தில் படு தாராளம் காட்டப்பட்டிருப்பதால் துப்பாக்கி இல்லாமல் யாரையும் அங்கு பார்க்க முடியாது.

அதிகரித்து வரும் துப்பாக்கிகளின் பெருக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது அங்கு சகஜமாகி விட்டது.

கடந்த 1966ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் 25 வயது மாணவர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 13 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 1999ம் ஆண்டு கொலராடோவில் உள்ள கொலம்பியன் உயர் நிலைப் பள்ளியில், 2 மாணவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 12 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இரு மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் துப்பாக்கிச் சூட்டில் இறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 20 கோடி துப்பாக்கிகள் அங்கு தனிநபர்களிடம் புழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 பேர் உயிரிழந்துள்ள விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகதத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாம். 2600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் மொத்தம் 100 கட்டடங்கள் உள்ளன. 26 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 700 பேர் இங்கு படிக்கிறார்கள். 50 இந்தியர்களும் ஆசிரியர்களாக உள்ளனர்.

அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர் பற்றி விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக மாணவி ஷீஹான் என்பவர் கூறுகையில்,

துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் இளைஞர் தான். கருப்பு நிற சட்டை அணிந்து இருந்தார். மிக அமைதியாக இருந்தார்.

காலை 7.15 மணியளவில் ஜெர்மன் மொழி வகுப்பறைக்குள்ளே நுழைந்த அந்த நபர் திடீெரன துப்பாக்கியால் மாணவர்களை நோக்கி சராமரியாக சூட்டார். அலறியடித்துக் கொண்டு துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிப்பதற்காக வகுப்பறைத ஜன்னல் வழியாக குதித்து தப்பித்தோம்.

இப்படி குதித்தபோது பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2007/04/17/us.html

Edited by கறுப்பி

தினம் தினம் எத்தனை ஆயிரம் மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்கனுக்கும் அதன் மக்களுக்கும் உயிரின்

பெறுமதி என்னண்டு தெரியாது பாருங்கோ.அதனால இப்படியான சில சம்பவங்கள் அவயளுக்கு தேவைப்படுகுது :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

லோகநாதன் உடல் அமெரிக்காவிலேயே அடக்கம்

ஏப்ரல் 18, 2007

கோவை: அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் லோகநாதனின் உடல் பல்கலைக்கழக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்படவுள்ளது.

விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் பேராசிரியர் லோகநாதன் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர். 51 வயதாகும் லோகநாதனின் பெற்றோர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் புதூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

லோகநாதனின் உடலை கரட்டடிபாளையத்திற்குக் கொண்டு வர அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். இருப்பினும், தனக்கு ஏதாவது நேர்ந்தால் உடலை பல்கலைக்கழக வளாகத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என லோகநாதன் கூறியுள்ளதாக அவரது மனைவி உஷா தெரிவித்ததால், அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.

லோகநாதனின் விருப்பப்படி அவரது உடல் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்படவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக லோகநாதனின் பெற்றோர், 3 சகோதரர்கள், நான்கு உறவினர்கள் நியூயார்க் செல்லவுள்ளனர். அனேகமாக இன்று மாலை அவர்கள் செல்லலாம் எனத் தெரிகிறது.

லோகநாதனின் தந்தை வாசுதேவன் ஒரு ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரி ஆவார். தாயார் கண்ணம்மாள். இவர்கள் யாருக்குமே பாஸ்போர்ட் இல்லை. எனவே தத்கல் முறையில் உடனடியாக பாஸ்போர்ட் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக தமிழக அரசின் உதவியை நாடியுள்ளனர்.

லோகநாதன், உஷா தம்பதியினருக்கு உமா, அபிராமி என இரு மகள்கள். 21 வயதாகும் உமா, விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில், பயோ மெடிக்கல் என்ஜீனியரிங் படித்து வருகிறார். அபிராமி, பிளாக்ஸ்ப்பெர்க் நகரில் பள்ளிக் கூடத்தில் படித்து வருகிறார்.

அடுத்த ஆண்டு உமாவின் படிப்பு முடிகிறது. அதன் பின்னர் இந்தியாவுக்கு வந்து செட்டிலாகும் எண்ணத்தில் இருந்தாராம் லோகநாதன்.

லோகநாதன் படிப்பில் மட்டுமல்ல செஸ், குவிஸ் ஆகியவற்றிலும் மிகச் சிறந்து விளங்கியுள்ளார். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் படித்த காலத்தில் கல்லூரியிலேயே மிகச் சிறந்த மாணவராக திகழ்நதுள்ளார்.

படிப்பு, செஸ், குவிஸ் ஆகியவற்றில் பல விருதுகளையும், பரிசுகளையும் வென்றுள்ளார். தனது மகளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசையாக இருந்துள்ளார் லோகநாதன். ஆனால் அவரது அந்த ஆசையே கடைசி ஆசையாக, நிராசையாக போய் விட்டது.

http://thatstamil.oneindia.in/news/2007/04...loganathan.html

பல்கலைகழக மாணவர்களையும், ஆசிரியர்களையும் சுட்டுக்கொன்ற தெங்கொரியா மாணவன் Cho Seung-Hui இவர்தான்! :lol:

இவரைப் பார்க்கும் போது உங்களுக்கு கொலைகாரன் போல தெரிகின்றதா? :D

newshootpicch4.jpg

படம்: New York Times, நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா: கொலையாளி தென் கொரிய மாணவர்: காதல் தோல்வியால் வெறியாட்டம்!

விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் 32 பேரின் உயிரைப் பறித்த நபர் தென் கொரியாவைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்கள்:

கொலையாளியின் பெயர் சோ சியூங் ஹூ (23). கடந்த 1992ம் ஆண்டு விர்ஜீனியா மாநிலம் சென்டர்வில்லி நகருக்கு குடி பெயர்ந்தார். அவருடன் அவரது பெற்றோரும் உடன் தங்கியுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்து வந்தார் சோ. க்ரீன் கார்டு ஹோல்டரான சோ, காதல் தோல்வி காரணமாக இந்த கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அவரது காதலி, திடீரென சோவை கைவிட்டுள்ளார். இதனால் அவரிடம் பேசுவதற்காக விடுதிக்குச் சென்றுள்ளார். காதலியின் அறைக் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் காதலி அங்கு இல்லை. அவரது தோழிதான் இருந்தார்.

அவரிடம் காதலி எங்கே என்று சோ கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி சரியாக பதில் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சோ, அந்தப் பெண்ணை சுட்டுக் கொன்றார். இதுதான் முதல் கொலை. அதைப் பார்த்து விட்டு ஓடி வந்த இன்னொரு மாணவரையும் சோ சுட்டுக் கொன்றார்.

பின்னர் அங்கிருந்து வெறி பிடித்தவர் போல காதலியைத் தேடி அலைந்துள்ளார். இறுதியில் நோரிஸ் ஹால் கட்டடத்தில் உள்ள வகுப்பறையில் அவர் இருப்பதாக தெரிந்து அங்கு சென்றார்.

அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்கள், மாணவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சோவின் பெற்றோரிடமும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்களின் முகவரியைக் கொடுக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

இதற்கிடையே, கொலையாளி தென் கொரியாவைச் சேர்ந்தவர் என்பதால் அமெரிக்காவில் தென் கொரியர்களுக்கு எதிராக வன்முறை வெடிக்கலாம் என அந்நாட்டு அரசு அச்சம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரிய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள தென்கொரிய அமைப்புகள் மற்றும் அமெரிக்க அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்.

- சூரியன்

பல்கலைகழக மாணவர்களையும், ஆசிரியர்களையும் சுட்டுக்கொன்ற தெங்கொரியா மாணவன் Cho Seung-Hui இவர்தான்! :lol:

இவரைப் பார்க்கும் போது உங்களுக்கு கொலைகாரன் போல தெரிகின்றதா? :D

படம்: New York Times, நன்றி!

ஏதையோ பறிகொடுத்தவர் போலவும் எதனாலோ பாதிக்கப் பட்டவர் போலவும் தெரிகிறது.

Edited by லிசான்

வேர்ஜீனியாவில் பலியானவர்களில் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த பேராசிரியரும் ஒருவர்

அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தமிழ்நாடு கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜி. எஸ். லோகநாதன்.

இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான இவர் அமெரிக்காவில் சுமார் 30 வருடமாக வாழ்ந்துவருவதாக அவருடைய சகோதரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தமது கூட்டுக் குடும்பத்தை மிகவும் மோசமாக பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மனைவி மற்றும் குழந்தையுடன்

தமது கல்வியறிவை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் நோக்க்குடன் அங்கு சென்ற தமது சகோதரர் இப்படியாக ஒரு கல்வி நிறுவனத்தில் பயங்கரத் தாக்குதலில் கொல்லப்பட்டமை தமக்கு மிகுந்த கவலையை தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகங்களின் வாயிலாக மாத்திரம் தாம் தீவிரவாதத்தைப் பார்த்து வந்ததாகக் கூறிய அவர், தற்போது அதற்கு தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தப் பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த பல மாணவர்களும் கல்வி பயில்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பான அவர்கள் சிலரின் கருத்துக்களையும் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

f_20070417143m_27aeb35.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக்குவதும் பெண்ணே.. அழிப்பதுவும் பெண்ணே.. அழிவதுவும் பெண்ணே...! அந்த மாணவனின் மனதில் காதல் வெறியை வளர்த்த சமூகம் தான் பொறுப்பேற்க வேண்டும்..! :lol::lol:

மனிதர்களின் மனசை புரிஞ்சுக்க தெரியாதுன்னா தயவுசெய்து காதலிச்சு அடுத்தவங்க மனசை வெறுமைக்குள்ள விரக்திக்குள்ள தள்ளாதேங்கா. குறிப்பாக பெண்கள்..! அதைத்தான் சொல்ல முடியும்..! :lol:

Edited by nedukkalapoovan

துவக்குச் சூடு முதற் தடவையாக இடம்பெற்றபோது பல்கலைக்கழகத்தை மூடாதது ஏன்?

]

அமெரிக்காவின் வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 33 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் வரலாற்றிலேயே அதிகளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய சம்பவம் இதுவாகக் கருதப்படுவதுடன், முதல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றவுடன் பல்கலைக்கழகத்தை மூடாதது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது.

எட்டு வருடங்களுக்கு முன்பு கொலம்பைன் உயர்தர பாடசாலையில் 15 பேர் பலியான சம்பவத்தின் பின்னர் தற்போது வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் இரு சம்பவங்களில் 33 பேர் பலியாகியுள்ளனர்.

முதலில் அங்கிருந்த விடுதியினுள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இடம்பெற்று இரு மணித்தியாலங்களின் பின்னர் அங்கிருந்த பிறிதொரு கட்டிடம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் துப்பாக்கிதாரி உட்பட 31 பேர் பலியாகியுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் ஆரம்பித்தவுடன் சில மாணவர்கள் ஜன்னலால் குதித்து தப்பியுள்ளதுடன், சிலர் தங்கள் பக்கம் துப்பாக்கி திரும்புமுன் தப்புவதற்காக இறந்தவர்கள் போல் பாவனை செய்துள்ளனர்.

துப்பாக்கிதாரியின் நோக்கம் என்ன? அவர் தனித்தே இந்நடவடிக்கையை மேற்கொண்டாரா? போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியாத வினாக்களாகவே உள்ளன. இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையா என்பதும் இதுவரை தெளிவாகவில்லை.

முதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் பல்கலைக்கழகம் மூடப்படாதது ஏன் என உறவினர்களும் நண்பர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

வேர்ஜினியா மாநிலம் முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளதுடன், நடைபெறவிருக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இச்சம்பவம் தொடர்பான மேலதிக விடயங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

அதிபர் ஜோர்ஜ்புஸ் தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கின்றார்.

இவரது கட்சியே யாரும் துப்பாக்கிகளை வைத்திருக்கலாம் என்ற சட்டத்தை மீண்டும் மீண்டும்

அமெரிக்காவில் அமுல்படுத்தி வருகின்றது. காரணம் துப்பாக்கி வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவது மட்டுமல்ல அந்த ஆயுத தொழிற்சாலை ஒன்று அதிபர் புஸ்சிற்கும் சொந்தமானது (கார்லா குறுப்). இவர்கள் பணவெறி பிடித்து அலைவதை நிறுத்தினால் தவிர அப்பாவி மக்களின் மரணத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எங்காவது இப்படி அதிரடியாக துப்பாக்கி சூடு நடந்து பலபேர் இறந்தால் மட்டுமே சர்வதேச அளவில் செய்திகள் வெளியாகின்றன தவிர அமெரிக்காலில் தினமும் துப்பாக்கி சூடு சாதரணமாக நடப்பதொன்று. ஆண்டொன்றிற்கு குறைந்த பட்சம் 3400 பேர் வரையில் துப்பாக்கியால் இறக்கின்றார்கள்.

தற்போது 32 பேரையும் சுட்டு தன்னை தானேயும் சுட்ட தென்கொரிய மணவனும் துப்பாக்கியை காடையில் சட்டரீதியாக வாங்கி வந்தே சுட்டிருக்கிறான். அவனது பாக்கில் (பையில்) அதற்கான ரீசித்துக்களும் இருந்திருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கப்பல்கலைகழகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பேராசிரியர் யோகநாதன் அவர்களின் தாய் தந்தையர் உட்பட ஒன்பது பேருக்குமான அமெரிக்கா செல்வதற்கான முழுச்செலவினையும் தமிழ் நாடு அரசு பொறுப்பேற்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலை எத்தனையாயிரம் பிள்ளைகளின் உயிரோடு விளையாடுகிறவங்கள் உவங்க..இருந்தாலும் அந்த அப்பாவிப் பிள்ளைகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Edited by Valvai Mainthan

உலகத்திலை எத்தனையாயிரம் பிள்ளைகளின் உயிரோடு விளையாடுகிறவங்கள் உவங்க..இருந்தாலும் அந்த அப்பாவிப் பிள்ளைகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதோ உலக பிரசித்தை பெற்ற புகைப்படம் வியட்னாம் போரின் கொடுமையை உலகிற்க்கு எடுத்துக் காட்டிய புகைப் படம், வியட்னாம் போரின் போது அமெரிக்கர்கள் செய்த அட்டூழியத்தின் பிரதி, அன்று வியட்னாம், ஹிரோஷிமா, நாகசாகி, இன்று ஆப்கான், ஈராக்

KimPhucNapalmSmaller.jpg

யுஎஸ்: வீடியோ அனுப்பிவிட்டு தாக்குதல் நடத்திய சோ சுங்- பரபரப்பு படங்கள்

வாஷிங்டன்: அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 32 பேரை சுட்டு கொன்ற தென்கொரிய மாணவன் சோ சியூங் தாக்குதல் நடத்துவதற்கு முன், தன் புகைப்படத்தையும், வீடியோ மற்றும் கடிதங்களையும் என்பிசி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளான்.

அதில் பல கோணங்களில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார் சோ. சில காட்சிகளில் கத்தி, சுத்தியலுடன் காணப்படுகிறான்.

விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்து வந்தவர் சோ. இவரது பெற்றோர் சலவைத் தொழில் செய்து வருகின்றனர்.

தன்னுடன் படித்து வந்த எமிலி என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார் சோ. ஆனால் சோவின் சைக்கோ கேரக்டர் பிடிக்காததால் எமிலி தனது காதலைத் துண்டித்துக் கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ளார் சோ.

அவர் முதலில் சுட்டுக் கொன்றதே எமிலையைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது கொலை வெறியாட்டத்தை மிக மிக தெளிவாகத் திட்டமிட்டு செய்துள்ளான் சோ.

கொலை வெறியாட்டத்தை நிகழ்த்தத் திட்டமிட்டவுடனேயே துப்பாக்கியுடன் பலவிதங்களில் போஸ் கொடுத்தபடி வீடியோ படங்களை எடுத்துள்ளார். பின்னர் தீவிரவாதிகள் உரை நிகழ்த்துவது போல ஒரு இறுதி உரையையும் நிகழ்த்தியுள்ளார்.

இந்த வீடியோவை என்பிசி தொலைக்காட்சி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளான்.

இதுக்குறித்து என்பிசி செய்தி மேலாளர் ஸ்டீவ் கேபஸ், சோ சியுங் அனுப்பிய கடிதம், படங்கள், வீடியோ ஆகியவை எங்களுக்கு தாக்குதல் நடந்த திங்கட்கிழமை காலை கிடைத்தது. உடனே அதை நாங்கள் எப்.பி.ஐ தலைமையகத்திடம் ஒப்படைத்துவிட்டோம் என்றார்.

எம்எஸ்என்பிசி நிறுவனம் தெரிவிக்கையில், முதலில் வகுப்பறையில் 30 பேரை கொன்றுள்ளான். பின்னர் 2 பேரை ஹாஸ்டல் ஹாலில் கொன்றுள்ளான்.

சோ சியூம் ஹூய், தன்னுடைய புகைப்படம், வீடியோ மற்றும் கடிதங்களை அனுப்பியுள்ளான். 43 படங்களில் 11 படங்கள் துப்பாக்கியுடன் நிற்பது போலவும், 2 கைகளில் துப்பாக்கி பிடித்தபடி கேமரா முன் நிற்பது போலவும் காட்சிகள் உள்ளன. இது தவிர 28 வீடியோ கிளிப்பிங்கும் உள்ளன.

மேலும் அதில் 1,800 வார்த்தைகளுக்கு மேல் உள்ள செய்தியில், என்னை இந்த மாதிரியாக ஆளாக்கியதே நீங்கள் தான். இதை தடுக்க எத்தனை வாய்ப்புகள் இருந்தன. ஆனால் தவறவிட்டுவிட்டீர்கள். என்னை ரத்தம் சிந்த வைத்துவிட்டீர்கள். இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளி விட்டீர்கள், நீங்களே பொறுப்பு.

உங்கள் கையில் ரத்த கறை படிந்துள்ளது. அதை துடைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு, நான் பேசாமல் போயிருக்கலாம், இனி என்னால் ஓட முடியாது என கூறியுள்ளான்.

வீடியோவில், ஆத்திரத்துடனும், அமைதியற்றும் காணப்படுகிறான் சோ.

ஆனால், அவன் நடத்திய துப்பாக்கி சூடு சம்பந்தமான எந்த புகைப்படமும் இல்லை. இது விர்ஜினியா பல்கலைக்கழக தபால் அலுவலகத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பின்னர் தான் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளான் என்றார்.

விர்ஜீனியா பல்கலைக் கழக செய்தித் தொடர்பாளர் லாரி ஹின்கர் கூறுகையில்,

சோ பெரும்பாலும் தனிமை விரும்பியாகத் தான் வாழ்ந்துள்ளான். அவரை பற்றி தகவல் அறிவதே பெரும் கஷ்டமாக உள்ளது. அவன் 2 நாடகங்களை எழுதியுள்ளான். அதில் வளர்ப்பு மகன் குறித்த நாடகத்தில் மகன் தந்தையை கொல்வது போன்று எழுதியிருந்தார்.

மற்றொன்றில் சித்தரவதை செய்யும் ஆசிரியரை சுட்டுக் கொல்வது போன்று எழுதியிருந்தது கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வன்முறைகள் இவரது கற்பனையில் தோன்றும் என்றார்.

சோ பயின்ற ஆங்கில துறையைச் சேர்ந்த பேராசிரியர் கரோன் கூறுகையில், அவருடைய எழுத்துகளில் இருந்த குரூரம் குறித்து பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் தகவல் அனுப்பியிருந்தோம் என்றார்.

என்றாவது ஒரு நாள் இவ்வாறு நடக்கும் என எங்களுக்கு தெரியும் என எதிர்ப்பார்த்தோம் என சக மாணவர்கள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் நடந்த இடத்தில் அவரின் பை கிடைத்தது. அதில் ஏராளமான துப்பாக்கி தோட்டாக்களும், அவன் வைத்திருந்த பையில் டைப் செய்யப்பட்ட 8 பக்கமுள்ள பேப்பரை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதில் பணக்கார குழந்தைகளையும், மதத்தையும் எதிர்த்து வசனங்கள் காணப்பட்டதாகவும் முடிவு நெருங்கிவிட்டது, இந்த செயலை செய்தாக வேண்டும் என்ற வார்த்தைகளும் இருந்தன. சொந்த மதம் குறித்து அதிருப்தியும், கிறிஸ்துவ மதத்தைப் பற்றி அநேக குறிப்புகளும் கடிதத்தில் இருந்தது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் அவன் ஒரு சைகோ என்று தெரிகிறது

தாக்குதல் நடத்தும் முன் பல்கலைக்கழக வளாகத்திலிருந்தே இந்தப் படங்களை என்.பி.சி டிவிக்கு சோ அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இந்தப் படங்களைப் பார்த்த என்.பி.சி. நிறுவனத்தினர், இது ஏதோ தவறாக வந்து விட்ட பார்சல் போல என்று முதலில் நினைத்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்த பிறகுதான் தங்ளுக்கு வந்த பார்சல் எவ்வளவு பெரிய பயங்கரத்தை சுமந்துள்ளது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஒப்புதல் வாக்குமூலம் போல இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் அமைந்துள்ளன. ஆனால் என்ன காரணத்திற்காக தான் எப்படிச் செய்தேன் என்பதை சோ தெளிவாக விளக்கவில்லை. இதனால் சோவின் இந்த வெறியாட்டத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை புலனாகவில்லை.

காதல் தோல்வி என்று தான் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

gunman_070419_f1.jpg

gunman_070419_f5.jpg

gunman_070419_f12.jpg

gunman_070419_f11.jpg

gunman_070419_f9.jpg

gunman_070419_f10.jpg

gunman_070419_f6.jpg

gunman_070419_f7.jpg

gunman_070419_f8.jpg

gunman_070419_f2.jpg

செய்தி மற்றும் படங்களின் உபயம்-தற்ஸ்தமிழ்.கொம்

தொலைக்காட்சி சேவைக்கு ஒளிநாடாவை அனுப்பிய வேர்ஜினியா பல்கலைக்கழக கொலையாளி

அமெரிக்க வேர்ஜினியா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட மாணவன் அச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக் காட்சிகள், ஆக்கங்கள் என்பவற்றை உள்ளடக்கிய பொதியொன்றை அமெரிக்க தொலைக்காட்சி சேவையான என்.பி.ஸி. செய்திச் சேவைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இப்பொதி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இரு சம்பவங்களுக்கிடையிலான காலப்பகுதிக்குள் அதாவது இரு மணித்தியால இடைவெளிக்குள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவ

வேர்ஜினிய தொழில்நுட்ப கல்லூரி கொலையாளியின் குணவியல்புகளை ஆராயும் பொலிஸார்

வேர்ஜினிய தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற 32 பேரின் படுகொலைக்கு காரணமான தென்கொரிய மாணவனின் எழுத்தாக்கம் மூலம் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

தென்கொரியாவைச் சேர்ந்த 23 வயதான சோ சியுங் குய் என்னும் துப்பாக்கிதாரி விரக்தியான வன்முறைக் குணவியல்பை கொண்டவர் என்பது அவரது நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவரது ஆக்கங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

அவர் எந்நேரமும் மற்றவர்களிடமிருந்து விலகியே இருப்பார். அவர் ஒரு தனிமை விரும்பி என இவருக்கு கற்பித்த ஆங்கில பேராசிரியர் தெரிவித்துள்ளதுடன் எந்நேரமும் சண் கிளாஸும், தொப்பியும் அணிந்திருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

மாணவர்களும் ஆசிரியர்களும் மிகவும் வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கும் பொலிஸார் அவர் ஏன் இக்காரியத்தை செய்தார் என்பதற்கான தடயங்களுக்காக அவரது எழுத்துக்களை ஆராய்ச்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலின் போது துப்பாக்கிதாரி காகிதத் துண்டொன்றை விட்டுச் சென்றதாக பொலிஸ் தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள அதேவேளை, அது தற்கொலை தொடர்பான காகிதத்துண்டு இல்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரது ஒரு கரத்தில் `இஸ்மாயில் அக்ஸ்' என சிவப்பு மையினால் எழுதப்பட்டிருப்பதாகவும் இதன் அர்த்தம் தெளிவாகவில்லை எனவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிதாரி இரு கைத்துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதுடன் இவை சட்டரீதியாக கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றன. விடுதியின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கும் இவரே காரணமென தெரிவிக்கப்படுவதுடன் இரு சம்பவங்களுக்கும் ஒரே துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதலாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் பல்கலைக்கழகம் மூடப்படாதது தொடர்பாக தற்போதும் மாணவர்களின் கோபம் தணியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தினக்குரல்

வேர்ஜினியா படுகொலை தொடர்பான ஒளிநாடா வெளியீட்டால் பலியானோரின் குடும்பத்தவர் அதிர்ச்சி

* விசாரணைக்கு உதவவில்லையென்றனர் பொலிஸார்

அமெரிக்காவின் வேர்ஜினியா தொழில்நுட்பக் கல்லூரியில் தென்கொரிய மாணவன் 32 பேரை படுகொலை செய்யும் வீடியோ நாடாவை "என்.பி.சி." தொலைக்காட்சி வெளியிட்டமை குறித்துப் பலியானவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி வெளியிட்டுள்ள அதேவேளை, குறிப்பிட்ட ஒளிநாடா விசாரணைக்கு உதவவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நவீன வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொலைக்காட்சியில் வெளியானமை குறித்து வேர்ஜீனியா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

வேர்ஜினியா தொழில்நுட்பக் கல்லூரியும், அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் ஊடகங்களால் இந்த விவகாரத்தில் காட்டப்படும் அதீத அக்கறை குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்மில் பெருமளவானோர் சந்திக்க விரும்பாத வாழ்க்கையை உலகம் முழுவதும் பார்த்துள்ளது எனப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தென் கொரிய மாணவன் சொ-சியுங் குய் படுகொலைகளை மேற்கொண்ட விதத்தினை என்.பி.சி. தொலைக்காட்சி காண்பித்ததால் ஏமாற்றமடைந்துள்ள குடும்பத்தினர் அந்தத் தொலைக்காட்சி சேவையில் தோன்றி கருத்து வெளியிடுவதைத் தவிர்த்துள்ளனர்.

என்.பி.சி. தொலைக்காட்சி தான் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ள அதேவேளை, எதிர்காலத்தில் இதனை காண்பிப்பதை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளது. ஏனைய தொலைக்காட்சி சேவைகளும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஊடகங்கள் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கோரும் சுவரொட்டிகள் பல்கலைக்கழகங்களில் தோன்றியுள்ளன.

என்.பி.சி. நியுசின் தலைவர் வீடியோ ஒளிபரப்பானதை நியாயப்படுத்தியுள்ளார். கொலைகாரனின் மனப் போராட்டத்தை முடிந்தவரை துல்லியமாக வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தென் காரிய மாணவனின் மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளமை தெரிந்த பின்னரும் அவரைக் கண்காணிக்காமலிருந்தமை குறித்து தொழில்நுட்பக் கல்லூரி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளது.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.