Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயக மக்களிற்கான புனர்வாழ்வு நிதிசேகரிப்பு - ஆய்வுப் போட்டி!

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்!

வெறும் அரட்டைகளோடு நின்றுவிடாது, தாயகத்திற்கு நாம் ஏதாவது நன்மைகளும் செய்யவேண்டும் எனும் நல்ல நோக்கத்துடன் யாழ்கள உறவு ஒருவர் உருவாக்கிய சிந்தனைக்கு அமைய தமிழர் புனர்வாழ்வு நிதிசேகரிப்பு சம்மந்தமான போட்டி நிகழ்ச்சி ஒன்று விரைவில் யாழ் களத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

போட்டியில் நீங்கள் தனியாகவோ அல்லது சோடிகளாகவோ பங்குபற்ற முடியும். ஆகக்குறைந்தது 15 சோடி போட்டியாளர்களாவது (தனித்தனியாக 30) தமிழர் புனர்வாழ்வு நிதி சேகரிப்பு சம்மந்தமான ஆய்வு போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. போட்டி பின்வரும் மூன்று பகுதிகளாக நடைபெறும்.

1. ஆய்வுக்கட்டுரையின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தல் (இதை வாசித்த பின் நடுவர்களினால் ஆய்வு செய்பவர்களிற்கு தொடர்ந்து முழுமையான ஆய்வை சரியான முறையில் செய்வதற்கு தேவையான ஆலோசனைகள், Feedback வழங்கப்படும்.) - சுமார் இரண்டு கிழமைகள் கால அவகாசம் வழங்கப்படும்.

2. ஆய்வுக்கட்டுரையை முழுமையாக சமர்ப்பித்தல் (சிறந்த முதல் 06 ஆய்வுகள் நடுவர்களினால் இங்கு நேரடிப் போட்டியில் பங்குபற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும்) - சுமார் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படும்.

3. ஒன்லைனில் நேரடியான போட்டி (சிறந்த முதல் 06 ஆய்வு கட்டுரைகளை எழுதிய தனிநபர் அல்லது சோடிகள் கலந்து, நடுவர்களின் கேள்விகளிற்கு ஒன்லைனில் நேரடியாக பதிலளிக்க வேண்டும் - யாழ் களத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நினைவுப் போட்டி போல், ஆனால், இங்கு நடுவர்களினால் கேட்கப்படும் கேள்விகள் போட்டியாளர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரை சம்மந்தமாகவே இருக்கும். இங்கு தமிழர் புனர்வாழ்வு நிதிசேகரிப்பு சம்மந்தமான ஆய்வுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் ஆய்வுகள் நடுவர்களினால் தெரிவு செய்யப்படும்.) - சுமார் இரண்டு மணித்தியாலங்கள் ஒன்லைனில் நேரடியாக நடைபெறும்.

முதல் கட்டமாக களத்திற்கு அடிக்கடி வருகைதரும் சில கள உறவுகளின் பெயரை எழுந்தமானமாக இங்கு போட்டியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைத்து பட்டியலிடுகின்றோம். பலரின் பெயர் இங்கு தவறவிடப்பட்டிருக்கக்கூடும். ஆனால், அனைவரும் இதில் பங்குகொண்டு போட்டியை ஊக்குவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மணிவாசகன்

கந்தப்பு

அனிதா

பிரியசகி

விசால்

யாழ்வினோ

நேசன்

இன்னுமொருவன்

வானவில்

வாசகன்

ஈழவன்

சினேகிதி

சும்மா

வல்வைமைந்தன்

பொன்னி

யமுனா

தூயவன்

வன்னிமைந்தன்

புத்தன்

ரசிகை

தூயா

சித்தன்

லீசன்

மூக்கி

அரவிந்தன்

மாதுகா

ஆதி

குளக்காடான்

வடிவேலு007

வடிவேலு

சுண்டல்

ஜெனனி

புளூபேர்ட்

கறுப்பி

வி.சிவா

நிதர்சன்

வெண்ணிலா

தமிழ்தங்கை

இறைவன்

டன்

மறுத்தான்

போட்டிபற்றிய மேலதிக தகவல்கள் தொடர்ந்து அறிவிக்கப்படும். மேலும், போட்டி சம்மந்தமான உங்கள் சந்தேகங்களை இங்கே கேட்டு அறிந்து கொள்ளவும். போட்டி சம்மந்தமாக நீங்கள் ஏதாவது ஆலோசனைகளை கூறவிரும்பினாலும் அவற்றை இங்கே கூறவும்.

போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் ஆய்வு, களத்தில் பின்னர் விமர்சனம் செய்யப்பட்டு விவாதிக்கப்படும்.

நன்றி!

குறிப்பு: யாழ்களத்தில் போட்டி அனைவரும் பார்க்கத்தக்க வகையில் வேறு ஒரு பக்கத்தில் நடாத்தப்படும். போட்டியில் நடுவர்களாக பங்குபற்ற விரும்புபவர்கள் தனிமடலில் நமக்கு அறியத்தரவும்.

தேவையற்ற அரட்டையை தயவுசெய்து இங்கே தவிர்க்கவும், நன்றி!

வெளிநாடுகளில் சிறந்த சிந்தனைகள், ஐடியாக்கள் மில்லியன் டொலர்கள் பணம் கொடுக்கப்பட்டு வாங்கப்படுகின்றது, விற்பனை செய்யப்படுகின்றது. புதிய, புதிய சிந்தனைகள் பெரிய, பெரிய வெற்றிகளை எம் தமிழீழ தேசம் காண்பதற்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

உங்கள் அறிவுக் கூர்மையான சிந்தனைகள் தாயகத்தில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களிற்கு மறுவாழ்வு கொடுத்து, தமிழீழ விடுதலையை விரைவுபடுத்த உதவும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்!

Edited by கலைஞன்

  • Replies 68
  • Views 10.7k
  • Created
  • Last Reply

மாப்பி எனக்கு விளங்கவில்லை நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கோ?எதை பற்றிய அறிக்கை?

  • தொடங்கியவர்

தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் புனர்வாழ்விற்கு வெளிநாடுகளில் நிதி சேகரிப்பது சிறீ லங்கா பேரினவாத அரசாங்கத்தின் விசமத்தனமான பிரச்சாரங்கள் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல உலகநாடுகளில் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு தடைசெய்யப்படுகின்றது அல்லது கடினமாக்கப்படுகின்றது.

தாயக மக்களிற்கான நிதி சேகரிப்புக்கள் சர்வதேசத்தின் பல சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே, இந்தப் போட்டியின் நோக்கம் இந்த சவால்களை எவ்வாறு வெற்றி கொள்ளலாம் என ஆராய்ந்து தாயகத்தில் உள்ள மக்களின் புனர்வாழ்விற்கு நிதிசேகரிப்பதற்கான சிறந்த வழிகளை அல்லது மாற்றீடுகளை கண்டுபிடிப்பதாகும்.

நிதி சேகரிப்பதற்கு இப்படிச் செய்யலாம், அப்படிச் செய்யலாம் என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான சிந்தனைகள் வரக்கூடும். இவற்றின் நன்மை, தீமைகளை, நெளிவு, சுழிவுகளை ஆராய்ந்து, இறுதியில், போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று ஆய்வுக்கட்டுரைகளை விமர்சனம் செய்து கருத்தாடல் செய்வதே போட்டியின் நோக்கமாகும்.

போட்டி விதிமுறைகள் மற்றும் மேலதிக விபரங்கள் விரைவில் வெளிவிடப்படும். யாழ் கள உறவுளை போட்டியில் கலந்து கொள்ள ஊக்குவிக்கும் வகையிலும், போட்டிக்கு யாழ் கள உறவுகளின் ஆதரவினைப் பெறுவதற்காகவும் போட்டிக்கான முன்னோடி கருத்தாடல் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிடம் நிதி சேகரிக்க ஐடியா தரவேண்டும்?

தமிழர்களிடம் நிதி சேகரிப்பது எப்படி என்றா?

அல்லது எல்லா வெளிநாட்டினரிடமும் நிதி சேகரிப்பது எப்படி என்றா?

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்

இந்த போட்டிக்கான சிந்தனையை உருவாக்கிய யாழ் கள உறவு பின்வருமாறு கூறுகின்றார்...

தமிழர்கள் மத்தியில் நடத்தப்படும் வழமையான நிதித்திரட்டல் அணுகுமுறைகள் - உண்டியல், வானொலி தொலைக்காட்சி மூலமான வேண்டுகோள்கள் - appeals, தென்னிந்திய சினிமா சம்பந்தப்பட்ட பிரபலங்களை வைத்து ஒழுங்கு செய்யப்படும் நிகழ்ச்சிகள் - எதிர்காலத் தேவைகளிற்கு போதுமானதாக இருக்காது.

அத்துடன் அவற்றின் வினைத்திறன் மட்டுப்படுத்தப்பட்டது, மேலும் அதன் எல்லையை நாம் ஏற்கனவே தொட்டுவிட்டோம் என்றே சொல்லாம்.

மேற்சொன்ன காரணங்களால் தமிழர்களின் கருணை நன்கொடைகளையும், அவர்களை சினிமா பாட்டு நிகழ்ச்சி மூலம் மகிழ்வித்தும் போதிய நிதியை திரட்டி விட முடியாது.

Funds have to be unlocked-extracted through other means from diaspora.

அடுத்து தமிழர்களின் பொருளாதார வளம் எல்லா வழிகளிலும் முயற்சித்தாலும் கூட மட்டுப்படுத்தப்பட்டது என்றரீதியில், தமிழர்கள் அல்லாதவர்களிடம் இருந்து நிதியை எப்படி திரட்ட முடியும்?

நல்ல முயற்சி..இந்த கட்டுரை உண்மையில் வேறு சில காரணங்கலுக்காக எதிர்பார்க்கபடுகின்றதோ? :lol: முடிந்த அளவு நாங்களும் பங்குபெற காத்திருக்கின்றோம்...மேலதிகம

  • தொடங்கியவர்

போட்டி விதிகள், நிபந்தனைகள் தயார் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. விரைவில் போட்டி ஆரம்பிக்கப்படும். ஆனால், முதலில் போட்டியில் யாழ் கள உறவுகள் பங்குபற்ற முன்வரவேண்டும். அண்மையில் நடைபெற்ற குற்றவாளிக்கூண்டில் உலகத்தமிழர் விவாத அரங்கில் ஆக சுமார் 28 கள உறவுகள் மாத்திரமே தமது கருத்துக்களை கூறியிருந்தார்கள். போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்கள் கூடுதலாக இருந்தாலே போட்டியும் உற்சாகமாக இருக்கும். போட்டி வைப்பதன் நோக்கத்தில் நாம் வெற்றியடைய முடியும்.

உங்கள் கேள்விகளை தனிமடலிலும் தாராளமாக கேட்க முடியும்.

மேலும், அண்மையில் யாழ் களத்தின் அகவை ஒன்பது பிறந்த தினத்தையொட்டி நடத்தப்பட்ட விவாத அரங்கில், விவாத அரங்கு ஆரம்பிக்கப்பட்டதும் இது தேவையா? இப்படி விவாதம் செய்ய வேண்டுமா? நீதிபதிகள் யார்? அவர்களிற்கு என்ன தகுதிகள் உள்ளது? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கப்பட்டும், தமக்கு இதுபற்றி முன்னமே அறிவிக்கப்படவில்லை எனவும் பல கள உறவுகள் முறைப்பாடு செய்து இருந்தனர். குற்றம் சாட்டியிருந்தனர்.

எனவே, உங்கள் ஆலோசனைகளை, அபிப்பிராயங்களை, கேள்விகளை, சந்தேகங்களை இப்பொழுதே கேட்டுவிடுங்கள். இப்போது மெளனமாக இருந்துவிட்டு, போட்டி தொடங்கியதும் கள உறவுகள் ஒப்பாரிகள் வைத்து, களத்தில் குழப்பங்கள் விளைவிப்பதில் அர்த்தம் இல்லை.

நன்றி!

Edited by கலைஞன்

வானவில் தயார் போட்டிக்கு

முன் வச்ச கால பின் வச்சதில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதாரணத்துக்கு தமிழர்களிடம் பணம் திரட்டுதல் தொடர்பான ஒரு ஐடியா:

கருப்பொருள்: எமது மக்கள் தாம் தமது தொழில் மற்றும் பல விடயங்களில் வெற்றிபெறவேண்டுமென்று (வெளிநாடு போதல், வியாபாரத்தில் வெற்றி, பிள்ளை வேண்டும் என, ஆண் பிள்ளை வேண்டும் என இப்படிப் பல) கடவுளிடம் நேர்த்திக்கடன் வைப்பார்கள். அவ்வாறு அவர்கள் நினைத்தது நடந்தால் கட்டாயம் யாருக்கு நேர்த்திக்கடன் வைத்தார்களோ அந்தக் கடவுளின் கோயிலுக்கு கட்டாயம் சென்று அந்த காசை கொடுப்பார்கள். இந்த வகையில் பணம் புகலிடத்திலும் தாயகத்திலும் உள்ள கோயில்களுக்கு குவிந்து கொண்டிருக்கின்றது.

(அட போங்கப்பா, புதுவருடத்தில் அன்று ஒரு கோயிலில் இராச கோபுரம் கட்டுவதற்கு நிதி சேகரித்துக் கொண்டிருந்தார்கள். அதில் டாப் டென் கொன்றிபியூட்டர்களின் பெயரை மைக்கில் வாசித்தார்கள் அவர்கள் கொடுத்தது எவ்வளவு தெரியுமா? ஒவ்வொருவரும் 10,001 டொலர்கள்.)

செயல்வடிவம்: செய்யவேண்டியது இது தான். அதாவது, நாங்கள் எங்களின் டெலிபோன் பில்லை டெலிபோன் கொம்பனியிலும் சென்று கட்டலாம் அல்லது ஒரு பாங்கு விலும் சென்று கட்டலாம். ஏன் ஒரு போசுடு ஆபீசிலும் போய்க் கட்டலாம். அதே போல இத்தகைய நேர்த்திக்கடன் வைத்த காசுகளை தமிழர் புனர் வாழ்வு நிதியில் சேர்ப்பித்தால் அது உரியகடவுளர்களிடம் சேர்க்கப்படும் என்று மக்களுக்கு அறிவிக்கவேண்டும் (ஓமோம், நாங்கள் அறிவித்ததும் அவர்கள் நம்பிவிடுவார்கள் என்று நீங்கள் சொல்வது விளங்குகிறது.)

இந்த விடயத்தை செயல்படுத்த ஒரே வழி அந்தக் காளியாத்தாவை விட்டு இவர்களின் கனவில் சொல்லுவது தான். அது நடக்காது என்ற படியால் மக்களுக்கு மனதில் தைக்கும் படியாக இதை ஒரு பிரச்சாரமாக வினயமாக செய்யவேண்டும்.

இந்த ஐடியாவின் நன்மை தீமைகளை விவாதிக்க வாருங்கள்.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏங்க யாரையும் காணும் ? :unsure::unsure:

  • தொடங்கியவர்

இவ்வாறான பிரச்சனை வரக்கூடும் எனும் காரணத்தினாலேயே, போட்டியை சட்டென்று தொடங்கும் முன் யாழ் கள உறவுகளின் ஆதரவை கேட்டு மேற்கண்ட கருத்தாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை நான்கு யாழ் கள உறவுகள் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்வந்துள்ளார்கள் போல இருக்கின்றது. குறிப்பிட்டளவு போட்டியாளர்கள் முதலில் போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவுக்கும்வரை நாம் மேற்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. அனைத்து யாழ் கள உறவுகளினதும் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்! நன்றி!

இதுவரை இந்த போட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கீழ்வரும் யாழ்கள உறவுகளிற்கு மிக்க நன்றிகள்!

யமுனா

தூயா

வானவில்

பண்டிதர்

குறுக்காலபோவான்

தமிழ்தங்கை

  • தொடங்கியவர்

போட்டியில் நடுவர்களாக யாரையாவது நீங்கள் சிபாரிசு செய்ய விரும்பினால் காரணத்துடன் இங்கே அறியத்தரவும்...

திருவாளர்கள் பண்டிதர், கிருபன்ஸ், நெடுக்காலபோவான் போன்றோரிடம் இவ்வாறான ஆய்வுகளை சரிபார்த்து, ஒழுங்கமைக்கும் திறமை உள்ளதாக கருதுகின்றோம். எனவே, இவர்களை நடுவர்களாக கலந்துகொள்ளுமாறு கேட்கமுடியும்....

உங்கள் அபிப்பிராயங்களையும் அறியத்தரவும்.. நன்றி!

நானும் போட்டியில் கலந்துகொள்ளத் தயார்.

போட்டி எப்போது ஆரம்பமாகும் ?

  • தொடங்கியவர்

இதுவரை இந்த போட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கீழ்வரும் யாழ்கள உறவுகளிற்கு மிக்க நன்றிகள்!

யமுனா

தூயா

வானவில்

பண்டிதர்

குறுக்காலபோவான்

தமிழ்தங்கை

லிசான்

அனிதா

குறிப்பிட்டளவு போட்டியாளர்கள் தமிழர் புனர்வாழ்வு நிதிசேகரிப்பு ஆய்வுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தமது ஆதரவை தெரிவித்து முன்வந்தவுடன் போட்டி ஆரம்பமாகும். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கலந்து கொள்ள விருப்பம். ஆனால் நேரடிப் போட்டி என்பதினால் சிலவேளை தவிர்க்கமுடியாத காரணங்களினால், போட்டி நடக்கும் நேரத்தில் யாழுக்கு வர சந்தர்ப்பம் கிடைக்காது விட்டால் ?

  • தொடங்கியவர்

அவ்வாறாயின், நீங்கள் தனிநபராக கலந்துகொள்ளாது, இன்னொருவருடன் சோடியாகச் சேர்ந்து தமிழர் புனர்வாழ்வு நிதிசேகரிப்பு ஆய்வுப் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

மேலும், நேரடிப்போட்டிக்கான நேரம் அனைத்து நடுவர்களினதும், போட்டியாளர்களினதும் செளகரியத்தை பொறுத்து பெரும்பானோர் கலந்துகொள்ள தக்கவகையில் தேர்வுசெய்யப்படும்.

நீங்கள் அரவிந்தன் அல்லது புத்தன் அல்லது கானாபிரபாவுடன் கூட்டுச் சேர்ந்து இதில் கலந்துகொள்ளமுடியுமா?

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன். அவர்களுக்கு நேரம் கிடைத்தால், யாழுக்கு வர சந்தர்ப்பம் கிடைத்தால் உதவுவார்கள் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளின் உற்சாகத்திற்கு பாராட்டுக்கள்.எனக்கு போட்டியில் கலந்து கொள்ள நேரம் கிடைக்காது.நேரம் கிடைக்கும் போது உற்சாகப்படுத்துகி;றேன்.

  • தொடங்கியவர்

இதுவரை இந்த போட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கீழ்வரும் யாழ்கள உறவுகளிற்கு மிக்க நன்றிகள்!

யமுனா

தூயா

வானவில்

பண்டிதர்

குறுக்காலபோவான்

தமிழ்தங்கை

லிசான்

அனிதா

கந்தப்பு

ஈழப்பிரியன்

குறிப்பிட்டளவு போட்டியாளர்கள் தமிழர் புனர்வாழ்வு நிதிசேகரிப்பு ஆய்வுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தமது ஆதரவை தெரிவித்து முன்வந்தவுடன் போட்டி ஆரம்பமாகும். போட்டிக்கு உங்கள் ஆதரவையும் தெரிவித்து போட்டி விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கு அனைவரும் உதவவும். நன்றி!

  • தொடங்கியவர்

இதுவரை இந்த போட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கீழ்வரும் யாழ்கள உறவுகளிற்கு மிக்க நன்றிகள்!

யமுனா

தூயா

வானவில்

பண்டிதர்

குறுக்காலபோவான்

தமிழ்தங்கை

லிசான்

அனிதா

கந்தப்பு

ஈழப்பிரியன்

பிரியசகி

குறிப்பிட்டளவு போட்டியாளர்கள் தமிழர் புனர்வாழ்வு நிதிசேகரிப்பு ஆய்வுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தமது ஆதரவை தெரிவித்து முன்வந்தவுடன் போட்டி ஆரம்பமாகும். போட்டிக்கு உங்கள் ஆதரவையும் தெரிவித்து போட்டி விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கு அனைவரும் உதவவும். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

முயற்றிக்கு பாராட்டுகள்.

போட்டி நடக்கும் நேரம் வசதியாக இருப்பின் வருவது நிச்சயம்.

போட்டி நடக்கும் நாள் எப்போது?

  • தொடங்கியவர்

இதுவரை இந்த போட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கீழ்வரும் யாழ்கள உறவுகளிற்கு மிக்க நன்றிகள்!

யமுனா

தூயா

வானவில்

பண்டிதர்

குறுக்காலபோவான்

தமிழ்தங்கை

லிசான்

அனிதா

கந்தப்பு

ஈழப்பிரியன்

பிரியசகி

கறுப்பி

குறிப்பிட்டளவு போட்டியாளர்கள் தமிழர் புனர்வாழ்வு நிதிசேகரிப்பு ஆய்வுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தமது ஆதரவை தெரிவித்து முன்வந்தவுடன் போட்டி ஆரம்பமாகும். போட்டிக்கு உங்கள் ஆதரவையும் தெரிவித்து போட்டி விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கு அனைவரும் உதவவும். நன்றி!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

குறைந்த போட்டியாளர்கள் பங்குபற்றுவதால், போட்டி அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு, விரைவில் யாழ் கள உறுப்பினர்களிடையே இந்த போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதை அனைவருக்கும் அறியத் தருகின்றேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி!

மாப்பி இந்த போட்டி எப்ப கனகாலமா இருக்கு பிறகு எனக்கு பரீட்சை தொடங்கினா நான் வரமாட்டேன் பிறகு கோபிக்ககூடாது

உலகின் அனைத்துத் தேவைகளையும் போல, தமிழீழத்திற்கும் குறுகிய கால தேவகைள் நீண்டகால தேவைகள் என உள்ளன. குறுகிய காலத் தேவைகள் தான் தற்போது பூதாகரமாய்த் தோன்றுவதாலும் எமது குறுகியகாலத் தேவையானது, எமது தாயகத்தின் விடுதலையை எமது எதிரியிடம் இருந்து வென்றெடுத்தல் என்ற உடனடிப் பிரச்சினையில் குவிகின்றது என்பதனாலும் இது பற்றி மட்டுமே இங்கு கருத்திடுகின்றேன்.

இன்று உலகின் பலம் பொருந்திய சக்திகள் எல்லாம் கூட்டுச் சேர்ந்து சிங்களத்திற்கு முண்டு கொடுக்கின்ற நிலையில், எமது பூதாகரமான எதிரிக்கு எதிரான எமது நடவடிக்கைகளிற்கு உலகளாவிய அளவில் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. எமது பணத்தை எமது போராட்டத்திற்கு நாங்கள் வழங்குவதே குற்றம் என்று ஆகியுள்ளது. இந்நிலை மாறும் வரை எமது போராட்டத்திற்கான நிதியை தமிழரல்லாதோரிடம் இருந்து நேரடியாகப் பெறுதல் நடைமுறைச் சாத்தியமற்றது. அதற்காக வேற்றுச் சமூகத்திடம் இருந்து எமது போராட்டத்திற்குப் பங்களிப்புப் பெற முடியாது என்பது இல்லை. எனினும் வேற்றுச் சமூகம் தொடர்பில் எனது கருத்துக்களைக்; கூறுவதற்கு முன்னர், எமது சமூகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சில கருத்துக்களை முன் வைக்கின்றேன்.

முதலாவதாக, எமது சமூகத்தில் இன்னமும் ஒரு சிலரே வீடுவீடாகச் சென்று மக்களிடம் இருந்து வளங்களை ஒருங்கமைக்க வேண்டிய தேவை நிலவுகிறது. இதிலும், ஒரு வீட்டிற்கு ஒரு முறை சென்றால் மட்டும் போதாது என்ற நிலை. முற்கூட்டியே சந்திப்பிற்கான நேரத்தை நிச்சயித்தல் என்பது, இந்த விடயத்தைப் பொறுத்தவரை, பல்வேறு காரணங்களால் நடைமுறைச் சாத்தியமற்று உள்ளதால் கதவில் சென்று தட்டித் தான் வீட்டில் ஆட்கள் உள்ளார்களா எனத் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது. பல சமயங்களில் ஆட்கள் வீட்டில் இல்லாததால் பிறிதொரு முறை அதே வீட்டிற்குச் செல்ல வேண்டி ஏற்படுகின்றது. மேலும், ஆட்கள் வீட்டில் நிற்பினும் கூட ||எழுதுவதற்கு|| ஒரு நாள் ||கொடுப்பதற்கு|| ஒரு நாள் என்று அலைச்சல்கள். இந்நிலையில் திறக்கக் கூடிய பல கதவுகளும் கூட ஆளணி பற்றாக் குறையினால் தட்டப்படாது உள்ளன.

ஐம்பது அலகுகள் உள்ள பிரதேசத்தில் வெறும் பதினைந்து அலகுகளை மட்டுமே வைத்துத் திட்டமிடவேண்டிய துர்ப்பாக்கியம் இன்று உள்ளது. இதனால் தான் ஒரே கதவுகள் திருப்பத் திருப்பத் தட்டப் பட்டு களைப்புத் தோன்றுகின்றது. மாற்றுச் சமூகங்களை அணுகுவது பற்றிச் சிந்திப்பதற்கு முன்னர் நமது சமூகம் உச்சப்பயன் பாடு பெற்றுவிட்டதா என ஆராய்வது அவசியம். எனவே, நம்மவர்களாக உணர்ந்து தாமாக குறிப்பிட்ட இடங்களிற்குச் சென்று கொடுக்க வேண்டியதைக் கொடுக்க வைக்கும் வகை நம்மவரை மாற்றல் முடியுமா என்பது தொடர்பில் நாம் சிந்திப்பது தான் காலத்தின் முதல் தேவை. எடுத்த எடுப்பில் இது முடியாத காரியம் என்பது போல் தான் தெரியும். அப்படி இதுவே முடியாது எனின் மற்றைய சமூகங்களை இந்நிலையில் அணுகுவது என்பது நகைப்பிற்குரியது. மேலும் இந்த மாற்றம் நிகழுமேயாயின் நேர விரையங்கள், ஒரு சிலர் சட்ட ரீதியில் பாதிக்கப்படுத்ல் போன்ற துன்ப கரமான நிகழ்வுகளும் திருத்தப்படும்.

இரண்டாவதாக, பங்களிப்பாளர்கள் தாமாக உரிய இடங்களிற்கு நேரம் தப்பாது சென்று பங்களிப்பதனால் செயற்பாட்டாளர்களிற்கு மாற்றுத் திட்டங்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கும். உதாரணமாக, இன்று ஐம்பது அலகுகளில் வெறும் பதினைந்து தான் பங்களிக்கின்றது என்ற நிலையில், இந்தப் பதினைந்தும் தாமாக தமது பங்களிப்பை உரிய இடங்களில் சென்று செய்யுமேயாயின், செயற்பாட்டாளர்கள் எஞ்சியுள்ள முப்பத்தி ஐந்து அலகுகளையும் படிப்படியாக அணுகி, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை முதலீடாக்கி, எதிர்காலத்திற்கான முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

அதாவது, தற்போது பங்களிக்கும் பதினைந்து அலகில் ஏறத்தாள ஐந்து அதிதீவிர பங்காளர்கள். செயற்பாட்டளர்கள் இவர்களது வீட்டிற்கு வருவதற்குப்பதிலாக இவர்களை உரிய இடங்களிற்கு வரச்சொன்னால் உடனே இவர்கள் சம்மதிப்பர். எனவே உடனே எஞ்சிய முப்பத்தைந்தில் அஞ்சை அணுகுவதற்குச் செயற்பாட்டாளர்களிற்கு நேரம் மிஞ்சும். இப்படியே படிப்படியாக இப்போது பங்களிக்கும் பதினைந்தும் உரிய இடங்களிற்குத் தாமாகச் சென்று செய்தால், செயற்பாட்டாளர்கள் எஞ்சிய முப்பத்தைந்தில் பதினைந்தை (ஏறத் தாள ஐம்பது வீதம்) அணுக அவர்களிற்கு நேரம் கிடைக்கும்.

இந்த முப்பத்தி ஐந்தும் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில் இப்பிரிவில் இருந்து வரும் விடயங்கள் உடனடிப்பாவனைக்குப் போகாது எதிர்காலத்திற்கான முதலீடு ஆவதில் எந்தக் கெடுதலும் இல்லை. தற்போது முதலீடுகள் இல்லை என நான் கூற வரவில்லை, முதலீடுகள் விரிவாக்கப்படுவதற்கும் பன்முகப்படுத்தப்படுவதற்கும

Edited by Innumoruvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.