Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜிகாதி மனைவி திரும்ப UK அரசு அனுமதிக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ISIS Women: wish to return to London

IS தீவிரவாதிகளினால், மூளைச்சலவை செய்யப்பட்டு, நன்கு படிக்கக் கூடிய  15 வயது மாணவி சிரியாவுக்கு, ஓடிப் போனார்.

அங்கே ஒரு ஜிகாதியை மணந்து கொண்ட அவர் 2 பிள்ளைகளுக்கு தாயானார். பிறந்த இரண்டு குழந்தைகளும் தகுந்த மருத்துவ வசதி இன்றி இறந்து விட்டதால், இனி பிறக்க இருக்கும் பிள்ளையை சிறந்த மருத்துவ வசதி கொண்ட பிரிட்டனுக்கு வந்து பெற்றுக்  கொள்ள விரும்புகிறார்.

இந்நிலையில் மூன்றாவது பிள்ளைக்கு தாயாக உள்ள நிலையில், IS படைகள் தமது பகுதிகளை இழந்து கொண்டிருக்கும் நிலையில் மிக குறுகிய பகுதியில் சிரிய படைகளினால் சுத்தி வளைக்கப் பட்டு உள்ள நிலையில், அவரது கணவர், சிரிய படைகளிடம் சரணடைந்து விட்டார்.

இந்த 19 வயது பெண், பிறக்க இருக்கும் குழந்தைக்கு மருத்துவ வசதி வேண்டியும், தான்  பிறந்த பிரித்தானியாவுக்கு திரும்பி வர விரும்புகிறார். இலண்டனில் இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர், துருக்கி சென்ற அவர்கள் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தனர்.

அவர் இங்கு பிறந்தவர் ஆயினும், அவரது தாய், தந்தையர் பங்களாதேஸ் நாட்டுக் காரர்கள்.

சிரியாவில் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணி பெண் லண்டன் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவர் இறந்திருக்கலாம் என்று கருதப் பட்ட நிலையில், தீடீரென ஒரு பத்திரிகை பேட்டி மூலம் இவர் உயிருடன் இருப்பதும், இங்கே வர விரும்பும் கோரிக்கையும் எழுந்துள்ளது. இவருடன் போன இரு பெண்கள் நிலை தெரியவில்லை.

ஆனால் இது பிரிட்டனில் மிகப் பெரிய வாதப், பிரதி வாதங்களையும், சட்டப்  பிரச்சினைகளையும் உண்டாக்கி உள்ளது.

அந்த பேட்டியில் இவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவோ, அது தவறு என்று சொல்லவோ இல்லை. இவரது மனதில் என்ன உள்ளது என்று தெரியாத நிலையில், எவ்வாறு வெளியில் விட முடியும் என்கிறார் பாதுகாப்பு அமைச்சர். வந்தால் சிறை தான், வேறு வழி இல்லை என்கிறார் அவர்.

நாட்டின், இஸ்லாமிய உள்துறை அமைச்சரான ஜாவித், தனது அதிகாரம் அனைத்தையும் பயன்படுத்தி அவர் வருவதை தடுப்பேன் என்கிறார். பிரித்தானியாவில் பிறந்தவரை சட்டப்படி தடுக்க முடியாது. ஆயினும், பிரித்தானியாவின் வேறு, கடல்  முடிக்குரிய பகுதியில் வைத்திருக்க முடியும்.

அவரது உறவினர் , நாட்டின் மன நிலை சரியானது தான். அந்த பெண் செய்தது தவறு.... குழந்தைக்காகவாவது அவரை வர அனுமதியுங்கள் என்கிறார். வந்து கல்வியை தொடர வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார்.

பிரிட்டனின் பத்திரிகைகள் சில நஞ்சைக் கக்குகின்றன.

போகும் போதே, நாட்டுக்கு துரோகம் செய்துதானே போனார். பிறகு எதுக்கு இங்கே வர வேண்டும் என்கிறது ஒன்று.

வேண்டுமானால், சட்டத்தினை மாத்தி, தாய், தந்தையரின், பங்களாதேஷுக்கு அனுப்ப வேண்டும் என ஒன்று எழுதுகிறது. பத்திரிகையில் பின்னூட்டம் எழுதுபவர்கள், வயித்தில் இருப்பது பிள்ளை தானோ அல்லது வெடிகுண்டோ என்று சோதித்தே உள்ளே விடுவதனால் விடுங்கள் என்கிறார்கள்.
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டைக் குடியுரிமை இல்லாத ஒருவரை தன் ஒரேயொரு நாட்டுக்குத் திரும்பி வர தடை போட சர்வதேச சட்டம் விடாது. ஆனால், வந்தவுடன் பிடித்து நீண்ட காலம் சிறையில் போட வேண்டும் என்பதே என் கருத்து. இந்தப் பெண் பயங்கரவாதத்தை நாடிப் போய், படுகொலைகலைத் தான் செய்யாவிட்டாலும், செய்த ஒரு குழுவுடன் இருந்து, இப்போது தனக்கும் குழந்தைக்கும் நல்ல மருத்துவ வசதி வேண்டும் என்பதற்காக மட்டும் பிரிட்டன் வர முனைகிறது. இந்த hypocrisy ஐ ஏற்றுக் கொள்ளும் எந்த நாடும் தனி நபரும் இந்த உலகில் இருப்பதாக நான் நம்பவில்லை! அவர் இப்போது இருக்கும் அகதி முகாமே அவருக்கு சிறந்த உறைவிடம்! 

5 hours ago, Justin said:

ISIS ஈராக்கில் சண்டை இடும்போது, அவர்கள் போராளிகள் என்ற நிலையில் இருந்தது பிரிட்டன்.

பிரிட்டனினதும் அதன் நேச நாடுகளினதும் நலன்களுக்கு எதிராக அவர்கள் மாறியபோது, அவர்கள் முழுதாக பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டனர்.

மேற்படி பெண், பிரிட்டனின் பார்வையில் - போராளியா அல்லது பயங்கரவாதியா என்று தெரியவில்லை.

இதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

1 minute ago, thulasie said:

நாடுகளின் அரசியல் பார்வையில் போராளிகளா,பயங்கரவாதிகளா  என்பது அவர்கள் நலனிற்கேற்ப மாறுபடலாம். ஆனால் மனித நீதியின் பார்வையில்  மதவெறியனாகி மதத்துக்காக வன்முறையில் இறங்குபவன்  பயங்கரவாதிதான். அதன்படி தற்போதய உலகில் முதலாவது இடத்தில்  முஸ்லீம் பயங்கரவாதிகளும்,பிராந்திய ரீதியில் இந்து பயங்கரவாதிகளும் உள்ளனர். 

41 minutes ago, tulpen said:

இந்து பயங்கரவாதிகள் என்று என்னதான் சொன்னாலும், நமது அன்றைய நாடு இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அவர்களை இந்தியா போஷிக்கிறது.

மியன்மாரில் பவுத்த பயங்கரவாதிகள் எப்படித்தான், பிற இன மக்களைக் கொன்று குவித்தாலும், அவர்களை அந்த அரசு பவுத்த பயங்கரவாதிகள் என்று ஒருபோதும் சொல்வதில்லை.

தமிழினத்திற்கு, பவுத்த இராணுவத்தால் என்னதான் கொடுமை இழைக்கப்பட்டாலும், அவர்களை பயங்கரவாதிகள் என்றோ போர்க்குற்றம் செய்தவர்கள் என்றோ  ஒருபோதும் கருதுவதில்லை.

முஸ்லீம் பயங்கரவாதிகள் என்னதான் குற்றம் செய்தாலும், அவர்களை முஸ்லீம் பயங்கரவாதிகள் என்று ஒருபோதும் எந்த ஒரு முஸ்லீம் நாடும் சொல்வதில்லை. 

மதத்திற்காக வன்முறையில் இறங்கினாலோ, அல்லது மதமற்ற கொள்கையில் இருந்துகொண்டு வன்முறையில் இறங்கினாலும், அதை ஆதரிக்க அல்லது எதிர்க்க நாடுகள் இருக்கும்போது, ஒருவரை பயங்கரவாதி என்றும், உரிமைப் போராளி என்றும் சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.

இது அவரவர் நலன் சார்ந்ததாக இருக்கிறது.

50 minutes ago, thulasie said:

ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் விடுதலைக்காக போரிட்ட ஈழத்தமிழர்களிர் மிகப்பெரும்பான்மையினர் இந்துக்களாக இருந்த போதும் இந்து மத  இந்தியர்கள் அதை ஆரம்பத்தில் இருந்தே எம்மை ஆதரிப்பது போல் நடித்துக் கொண்டு  ஈழத்தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு எதிராக எல்லா உதவியும் பெளத்த சிங்கள அரசுக்கு செய்தனர்.ஏனெனில் அவர்கள் நிறுவ விரும்புவது சமத்துவமான இந்து மதத்தை அல்ல.பார்ப்பன மேலாதிக்கத்தையும் வருணாசிரமத்தையும்  ஏற்றுக்கொண்ட இந்து அடிமைகளைத்தான். ஈழத்தமிழரை இந்துக்களாக பார்ததைவிட கீழ்ஜாதியினராகவே இந்தி ஆளும் வர்க்கத்தினர் பார்ததார்கள். 

ஈழத்தமிழர்கள் கிறிஸதவர்களாக இருந்து பக்கத்தில் இந்தியா போல ஒரு கிறிஸதவ நாடு இருந்திருந்தால் நிச்சயமாக எம்மை மதத்துக்காகவேனும் ஆதரித்து எமது நியாயபூர்வ உரிமைகளை பெற்றுத்  தந்திருப்பார்கள். ஆனால் இந்து மதத்தில் அவர்கள் கடவுளை விட தமது பார்பன மேலாண்மையை அதிகம் இரும்புவதால் அவர்கள் பூசை செய்யும்  கடவுளுக்கு கூட பயப்பட மாட்டார்கள். (ஏனென்றால் கடவுள் என்று ஒன்று இல்லை என்ற உண்மை அவர்களுக்கு தான் எம்மை விட  நன்றாக தெரியும்) 

Edited by tulpen

1 hour ago, tulpen said:

ஏனெனில் அவர்கள் நிறுவ விரும்புவது சமத்துவமான இந்து மதத்தை அல்ல.பார்ப்பன மேலாதிக்கத்தையும் வருணாசிரமத்தையும்  ஏற்றுக்கொண்ட இந்து அடிமைகளைத்தான். ஈழத்தமிழரை இந்துக்களாக பார்ததைவிட கீழ்ஜாதியினராகவே இந்தி ஆளும் வர்க்கத்தினர் பார்ததார்கள். 

இந்து மதம் சமத்துவமான மதம் அல்ல என்று விளங்குகிறது - உங்கள் கருத்தைப் பார்க்கும்போது.

ஆக, நீங்கள் மதத்தை மாற்றுவது நல்லது என்று நினைக்கிறேன்.

2 minutes ago, thulasie said:

இந்து மதம் சமத்துவமான மதம் அல்ல என்று விளங்குகிறது - உங்கள் கருத்தைப் பார்க்கும்போது.

ஆக, நீங்கள் மதத்தை மாற்றுவது நல்லது என்று நினைக்கிறேன்.

Thank you for your advice.

1 hour ago, tulpen said:

ஈழத்தமிழர்கள் கிறிஸதவர்களாக இருந்து பக்கத்தில் இந்தியா போல ஒரு கிறிஸதவ நாடு இருந்திருந்தால் நிச்சயமாக எம்மை மதத்துக்காகவேனும் ஆதரித்து எமது நியாயபூர்வ உரிமைகளை பெற்றுத்  தந்திருப்பார்கள். 

இந்துப் பெரும்பான்மையைக் கொண்ட இந்தியா, ஈழப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்ற காரணத்தால், அவர்களை இப்போது பிராந்திய இந்துப் பயங்கரவாதிகள் என்று சொல்கிறீர்கள்.

ஒரு பேச்சுக்கு. கிறிஸ்தவர்களை இந்தியா பெரும்பான்மையைக் கொண்ட நாடாக இருந்து, ஈழத்தமிழர்களுக்கு உதவாமல் இருந்திருந்தால், அவர்களை கிறிஸ்தவப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவீர்களா?

எந்த மதம் பெரும்பான்மையாக கொண்டிருந்தாலும், அது தனது நலன் நாடித்தான் சிந்திக்கும்.

3 minutes ago, thulasie said:

மத அடிப்படையில் சிந்திப்பதையோ மத அடிப்படையில் ஆதரிப்பதையொ சரி என்று நான் கூறவில்லை. இந்து மதத்தில் அவர்கள் நம்பும் கடவுளை விட வருணாசிரமத்தில் தான் அதிக நம்பிக்கை வ்வைத்துள்ளார்கள் என்பதை விளக்குவதற்கான. உதாரணமாகவே அதைக குறிப்பிட்டிருந்தேன். முஸ்லிம் பயங்கரவாதிகள் மற்றைய மதத்தவர்களுக்கு எதிராக ஆயுத வன்முறை செய்கிறார்கள் என்றால் இந்துப் பயங்கரவாதிகள் மற்றைய மதத்தினரை விட தனது இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் மீது தான் அதிக சமூக வன்முறைகளைச் செய்கிறார்கள். 

16 minutes ago, tulpen said:

முஸ்லிம் பயங்கரவாதிகள் மற்றைய மதத்தவர்களுக்கு எதிராக ஆயுத வன்முறை செய்கிறார்கள் என்றால் இந்துப் பயங்கரவாதிகள் மற்றைய மதத்தினரை விட தனது இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் மீது தான் அதிக சமூக வன்முறைகளைச் செய்கிறார்கள். 

நீங்கள் சொல்வது உண்மை.

முஸ்லீம் பயங்கரவாதிகள், பிற மத மக்களுக்குத்தான் ஆயுத வன்முறை செய்கிறார்கள்.

பவுத்த பயங்கரவாதிகள் கூட, பிற மத மக்களுத்தான் ஆயுத வன்முறை செய்கிறார்கள்.

கிறிஸ்தவ பயங்கரவாதிகள் கூட, பிற மத மக்களுக்குத்தான் ஆயுத வன்முறை செய்கிறார்கள்.

 இந்துப் பயங்கரவாதிகள் மற்றைய மதத்தினரை விட தனது இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் மீது தான் அதிக சமூக வன்முறைகளைச் செய்கிறார்கள். 

 இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் மீது  அதிக சமூக வன்முறைகளைச் செய்யும், இந்துப் பயங்கரவாதிகளின் கொடுமைகளில் இருந்து விடுபட, முஸ்லீம் , கிறிஸ்தவ அல்லது பவுத்த மதத்தில்  சேர்ந்து, உங்களுக்கு ஏற்படும் சமூக வன்முறைகளை இல்லாதொழிக்கலாம்.

ஏதாவதொன்றை தெரிவு செய்யுங்கள். 
 
Edited by thulasie

1 minute ago, thulasie said:

நீங்கள் சொல்வது உண்மை.

முஸ்லீம் பயங்கரவாதிகள், பிற மத மக்களுக்குத்தான் ஆயுத வன்முறை செய்கிறார்கள்.

பவுத்த பயங்கரவாதிகள் கூட, பிற மத மக்களுத்தான் ஆயுத வன்முறை செய்கிறார்கள்.

கிறிஸ்தவ பயங்கரவாதிகள் கூட, பிற மத மக்களுக்குத்தான் ஆயுத வன்முறை செய்கிறார்கள்.

 இந்துப் பயங்கரவாதிகள் மற்றைய மதத்தினரை விட தனது இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் மீது தான் அதிக சமூக வன்முறைகளைச் செய்கிறார்கள். 

 இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் மீது  அதிக சமூக வன்முறைகளைச் செய்யும், இந்துப் பயங்கரவாதிகளின் கொடுமைகளில் இருந்து, விடுபட, முஸ்லீம் , கிறிஸ்தவ அல்லது பவுத்த மதத்தில்  சேர்ந்து, உங்களுக்கு ஏற்படும் சமூக வன்முறைகளை இல்லாதொழிக்கலாம்.

ஏதாவதொன்றை தெரிவு செய்யுங்கள். 
 
என்ன multiple choice  பரீட்சை வைக்கின்றீர்களா?  கட்டாயம் நீங்கள் கூறிய தெரிவில் ஒன்றைத்தான் நான் தெரிவு செய்ய வேண்டுமா? 

6 minutes ago, tulpen said:

என்ன multiple choice  பரீட்சை வைக்கின்றீர்களா?  கட்டாயம் நீங்கள் கூறிய தெரிவில் ஒன்றைத்தான் நான் தெரிவு செய்ய வேண்டுமா? 

அது உங்கள் தெரிவு.

இந்துப் பயங்கரவாதிகள், இந்து மதத்தை ஏற்ற இந்துக்களையே சமூக வன்முறைக்கு உட்படுத்துகிறார்கள் என்று நீங்கள்தான் சாட்சி சொன்னீர்கள்.

அதை நிவர்த்திக்க பரிகாரம் சொன்னேன்.

அவ்வளவுதான்.

4 minutes ago, thulasie said:

அது உங்கள் தெரிவு.

இந்துப் பயங்கரவாதிகள், இந்து மதத்தை ஏற்ற இந்துக்களையே சமூக வன்முறைக்கு உட்படுத்துகிறார்கள் என்று நீங்கள்தான் சாட்சி சொன்னீர்கள்.

அதை நிவர்த்திக்க பரிகாரம் சொன்னேன்.

அவ்வளவுதான்.

இது ஒரு கருத்துக்களம் இங்கு நாம்த எல்லோரும் எமது கருத்துக்களை தெரிவிக்கிறோமே தவிர யாரும்  யாரிடமும் பரிகாரம் யாசிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

10 minutes ago, tulpen said:

இது ஒரு கருத்துக்களம் இங்கு நாம்த எல்லோரும் எமது கருத்துக்களை தெரிவிக்கிறோமே தவிர யாரும்  யாரிடமும் பரிகாரம் யாசிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்துப் பயங்கரவாதிகள், இந்து மதத்தை ஏற்ற இந்துக்களையே சமூக வன்முறைக்கு உட்படுத்துகிறார்கள் என்று நீங்கள் ஆதங்கப்பட்டதை, எழுதி இருந்தீர்கள்.

என் பதிலை பரிகாரமாகவோ, அறிவுரையாகவோ, அல்லது பயனற்றதாகவோ ஆக்கிக்கொள்வதை யார் தலையீடு செய்யப்போகிறார்?

எது எப்படியோ, நீங்கள் அறிவுரையாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

***Thank you for your advice***

Edited by thulasie

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்களை கொன்றொழித்தது ஹிட்லர், 

ஷியாக்களை கொன்றொழித்தது சதாம்,

பயங்கர வாதிகளை, பயங்கரவாதிகள் என்ற வட்டத்திற்குள் மட்டும் கொண்டு வரும் வரையில் பயங்கரவாதம் ஒழியாது...

அது வரை இது போல் சாதி மதம் என்று மட்டும் பிதற்றி கொண்டிருக்கலாம்...

6 minutes ago, thulasie said:

இந்துப் பயங்கரவாதிகள், இந்து மதத்தை ஏற்ற இந்துக்களையே சமூக வன்முறைக்கு உட்படுத்துகிறார்கள் என்று நீங்கள் ஆதங்கப்பட்டதை, எழுதி இருந்தீர்கள்.

என் பதிலை பரிகாரமாகவோ, அறிவுரையாகவோ, அல்லது பயனற்றதாகவோ ஆக்கிக்கொள்வதை யார் தலையீடு செய்யப்போகிறார்?

எது எப்படியோ, நீங்கள் அறிவுரையாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

***Thank you for your advice***

என்னை இந்து மதத்தில் இருந்து மதம் மாறுமாறு கூறிய உங்கள் அட்வைஸ்ககு நன்றி கூறினேன். அது சரி இந்துப்பயங்கரவாதிகளை விமர்சித்தால்  உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? அவர்களுக்காகவக்காலத்து வாங்குகின்றீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இவ இனி மேல் திரும்பி வரேலாது...பிரிட்டிஸ் சிட்டிசனை திரும்ப எடுத்தாச்சாம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இவ இனி மேல் திரும்பி வரேலாது...பிரிட்டிஸ் சிட்டிசனை திரும்ப எடுத்தாச்சாம் 

Full Home Office letter

The Home Office letter read: “Dear Mrs Begum. Please find enclosed papers that relate to a decision taken by the Home Secretary to deprive your daughter, Shamima Begum, of her British citizenship.

“In light of the circumstances of your daughter, the notice of the Home Secretary’s decision has been served on file today (19th February), and the order removing her British citizenship has subsequently been made. Copies of each are included with this letter.

“If you are in contact with our daughter, or are able to establish contact with her shortly, I would be very grateful if you could ensure the Home Secretary’s decision is brought to her attention, along with her right of appeal to the Special Immigration Appeals Commission, that arises as a result of the service of the notice of intention to deprive her.

“The relevant appeal forms and guidance notes are also included with this letter in case you do have opportunity to relay these to your daughter.

“If you are aware that your daughter has instructed a lawyer that you would like me to also send the enclosed papers to, then please do let me know and I shall arrange for this to happen.”

https://www.express.co.uk/news/uk/1089584/Shamima-Begum-letter-citizenship-full-home-office-letter-isis-bride-stripped-british

வெள்ளையள் .... செய்தால் இனவெறி என்று சொல்வார்கள்...

இப்ப உள்ளூர் செயலாளர் (அமைச்சர்) சஜித் ஜாவிட்...

அவ்வளவு தான்...

வெள்ளைகள் செய்ய தயங்கும் வேலைகளை இவர் இலகுவாக செய்வதை அவர்கள் ரசிப்பார்கள்.

இருந்தாலும்... இதுபோல மீடியா கவனம் கூடிய விடயங்களில் இந்த வகை முடிவை எடுக்காவிடில்..... அங்கே போன ஆண், பெண் அனைவருமே... வரலாம் என நினைப்பார்கள். வந்து சிறையில் இருந்தாலும், இங்கே சந்தோசமாக இருக்கலாம் என வருவார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

அவுசிலும் இது தான்நிலைமை...!

கூழுக்கும் ஆசை.....மீசைக்கும் ஆசை என்றால் இது தான் முடிவு......!

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் கொன்றது 900 பேர்... பாலியல் பலாத்காரம் செய்த சிறுமிகள் மட்டும் 50.

யுத்தம் செய்து கலைத்துப் போனவர்களுக்கு.... வயித்துப் பசியையும் போக்க உணவை உன்பது போல, சதைப் பசியையும் போக்க, பெண்களை பலாத்கார செய்ய தமக்கு, இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற தவறான விசயத்தை  பரப்பி.... ஒரு நல்ல மதத்தினை இழிவு செய்திருக்கிறார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

Full Home Office letter

The Home Office letter read: “Dear Mrs Begum. Please find enclosed papers that relate to a decision taken by the Home Secretary to deprive your daughter, Shamima Begum, of her British citizenship.

“In light of the circumstances of your daughter, the notice of the Home Secretary’s decision has been served on file today (19th February), and the order removing her British citizenship has subsequently been made. Copies of each are included with this letter.

“If you are in contact with our daughter, or are able to establish contact with her shortly, I would be very grateful if you could ensure the Home Secretary’s decision is brought to her attention, along with her right of appeal to the Special Immigration Appeals Commission, that arises as a result of the service of the notice of intention to deprive her.

“The relevant appeal forms and guidance notes are also included with this letter in case you do have opportunity to relay these to your daughter.

“If you are aware that your daughter has instructed a lawyer that you would like me to also send the enclosed papers to, then please do let me know and I shall arrange for this to happen.”

https://www.express.co.uk/news/uk/1089584/Shamima-Begum-letter-citizenship-full-home-office-letter-isis-bride-stripped-british

வெள்ளையள் .... செய்தால் இனவெறி என்று சொல்வார்கள்...

இப்ப உள்ளூர் செயலாளர் (அமைச்சர்) சஜித் ஜாவிட்...

அவ்வளவு தான்...

வெள்ளைகள் செய்ய தயங்கும் வேலைகளை இவர் இலகுவாக செய்வதை அவர்கள் ரசிப்பார்கள்.

இருந்தாலும்... இதுபோல மீடியா கவனம் கூடிய விடயங்களில் இந்த வகை முடிவை எடுக்காவிடில்..... அங்கே போன ஆண், பெண் அனைவருமே... வரலாம் என நினைப்பார்கள். வந்து சிறையில் இருந்தாலும், இங்கே சந்தோசமாக இருக்கலாம் என வருவார்கள்.

பிரிட்டிஷ் சட்டம் என்னவோ தெரியாது. ஆனால், இரண்டாவது குடியுரிமை இல்லாத ஒருவரை நாடற்றவராக ஆக்கும் வகையில் குடியுரிமையை ரத்து செய்வது சர்வதேச சட்டத்திற்கு முரணாணது என நினைக்கிறேன். கணவரின்  நெதர்லாந்துக்குத் தான் இனித் தலையிடியோ தெரியாது.

ஆனால் இது மற்றைய கேஸ்களுக்கு ஒரு முன்னோடித் தீர்ப்பாக இருக்கும் வகையில் பிரிட்டனால் இறுதி வரை உறுதி செய்யப் படவேண்டும். இந்தப் பெண் போன்றவர்கள் மீண்டும் சாதாரண மக்களுடன் வந்து கலக்க விடவே கூடாது! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

அவர் இங்கே பிறந்தவர் என்பதால் அவரது குடியுரிமையை புடுங்க முடியாது. இது நீதிமன்று செல்லும். அதை தெரிந்தே மேன்முறையீடு செய்ய முடியும் என்று சொல்லி உள்ளனர். அதுவும் குடிவரவு குழு ஒன்றுக்கு...

இது முடிந்து, இமிகிரேஷன் கோர்ட், உயர் நீதிமன்று, உச்ச நீதிமன்று என்று போய் வருவத்துக்கு இடையே, காலம் ஓடிவிட, இந்த பெண்ணின் மகன், ஜிகாதியாய் போய்விடுவார்.

நீதிமன்றில் தோல்வி அடையும் நிலை என்றால் (இன்றய சட்டப்படி தோல்விதான் அடையும்), பாராளுமன்று சட்டத்தையே மாத்த முடியும் (supporting the course of enemy of the state and the nation) . சட்டத்துக்கு ஆதரவு தராத MP அடுத்தமுறை மக்களால் தெரிவு செய்யப்பட மாட்டார். 

அந்தளவுக்கு மக்கள் எதிர்ப்பு உள்ளது. இவர் உள்ளே வந்தால், அமைதியாக கொஞ்ச நாள் இருந்து பின்னர், பல பெண்களை கிளப்பி, வேறு எங்கும் IS புதிதாக கிளம்பினால் போகத்தான் செய்வார், பின்னர், அங்கும் தோல்வியாயின் மீண்டும் வருவார், என்கின்றனர்.

ஆகவே இது சாத்தியப்படாது. 

ஜிகாதி கணவர், தூக்கு அல்லது சூட்டு தண்டனையில் இருந்து தப்புவது கடினம்....

சாத்திய  படுமாயின், இயலுமான வரை, மிகவும் இலகுவில் முடியாது என்று ஜிகாதிகாரர்களுக்கு புரிய வைக்கப்படும். உண்மையில் பல பிரிட்டனில் இருந்து போன ஆண் ஜிகாதிகள் , இந்த பெண்ணை வைத்து நூல் விட்டுப் பார்கினறனர்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண்ணின் தாய் இன்னும் பங்களாதேஷ் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். ஆகவே இவருக்கு பங்களாதேஷ் நாட்டு குடியுரிமை கிடைக்க வழி உள்ளது என்கிறது பிரித்தானிய உள்துறை அமைச்சகம்.

பெண்ணோ, தனது கணவர், மதம் மாறிய டச்சுக் காரர். ஆகவே தனக்கும், அவரது பிள்ளைக்கும் டச்சு குடியுரிமை கிடைக்கும் என நம்புவதாக சொல்கிறார்.

ஆயினும், பிரித்தானியாவின் நிலைப்பாட்டினை தான், நெதர்லாந்தும் எடுக்கும் சாத்தியம் உள்ளது.

இதேபோல கடந்த வருடம் நடந்த நிகழ்வில், சிரியா  போன இன்னுமொரு பங்களாதேஷ் வம்சாவளி காரர், பிரிட்டிஷ் குடியுரிமை பறிக்கப் பட்டார். 

அவரை பங்களாதேஷ் ஏற்றுக் கொண்டு, அவர் வந்ததும் தூக்கி உள்ள போட்டு விட்டது. இது பிரித்தானிய ராஜதந்திர வேலை.

அதேபோல் தான் இந்த பெண்ணுக்கும் நடக்க சாத்தியம் உள்ளது.  அட நாம என்ன பண்ணினாலும், மீண்டும் ஜாலியா உள்ள வந்திரலாம் என்கிற எண்ணமே வரக் கூடாது என்பதில் அரசும், அதிகாரிகளும் கவனமாக உள்ளனர். 

குறைந்த பட்சம், தாயும், மகனும் பங்களாதேஷில், தங்கி இருக்கக் கூடிய விசாவாவது வாங்கி கொடுத்து அனுப்பி விடுவார்கள்.

15 வயது சிறு பெண்ணாக செய்த பெரும் தவறு. பொதுவாக பிரித்தானியர்கள் நியாயமாக சிந்திப்பவர்கள். ஆயினும் இந்தப் பெண் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை என்பதே பயம். மேலும், போகும்போது ஜீன்ஸ், டீ ஷர்ட் போட்டிருக்கும் பெண், இப்போது, அணிந்திருக்கும் பர்தா உடை வேறு, அவர்கள் பயத்துக்கு உரம் சேர்க்கிறது.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.