Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே தீர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே தீர்வு :

February 24, 2019

நாடுகடந்த தமிழீழ அரசு கோப்புப் படம்

இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே இலங்கை தமிழ் மக்களின் துயரைத் துடைப்பதற்கான தீர்வாக அமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதம அமைச்சரான விசுவநாதன் ருத்ரகுமாரன் வலியுறுத்தியுள்ளார் என இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

rudrakumaran.jpg?zoom=3&resize=335%2C204

“இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோளை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் முன் வைக்கிறோம். இலங்கை அரசின் திட்டமிட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அந்த அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் சொல்லமுடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். வடக்கு பிராந்தியத்தில் வீட்டுக்குவீடு ராணுவம் நிற்கிறது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே இலங்கை தமிழ் மக்களின் துயரைத் துடைப்பதற்கான தீர்வாக அமையும். இலங்கையில் இருஅரசுகள் என்ற தீர்வுக்கு இந்தியா ஆதரவளித்தால் உலக நாடுகளின் ஆதரவும் கிடைக்கும். ஈழத்தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசியல் கட்சிகளும் இந்த கோரிக் கைக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்காக தமிழீழத்திலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தி அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும்.

இலங்கை அரசு செய்த இனப்படுகொலைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டம் ஓரிரு நாட்களில் கூடவிருக்கும்வேளையில் அதில் அங்கம் வகிக்கும் இந்தியா, ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க குரல் கொடுக்க வேண் டும். இந்தியாவில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களுக்கு பிறப்புரிமை அடிப் படையில் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசியல் கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும்.” என அமெரிக்காவில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக சென்னையில் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாக அந்நாளிதழ் விவரிக்கிறது…

 

http://globaltamilnews.net/2019/114323/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உறையில் இரு வாள்கள் இருப்பதெப்படி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

ஒரு உறையில் இரு வாள்கள் இருப்பதெப்படி?

தமிழர்கள் முழு இலங்கையையும் தமிழீழம் என்று சொல்லி போராடியிருக்கவில்லையே!

சிங்களவர்கள்தான் முழு இலங்கைத் தீவும் தமக்கு சொந்தமென புத்தர் சிலைகளை நிறுவியும் சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுத்தும் வருகின்றார்கள். முஸ்லிம்களையும் சிங்களவர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்க, முஸ்லிம்களும் வடக்கில் காணிகளைப் பிடித்து தமது இருப்பைத் தக்கவைக்கமுயல்கின்றார்கள். இதுவும் தமிழ் மக்களை முஸ்லிம்களுடன் நெருங்கி வர உதவவில்லை.

ஆனால் நாடு கடந்த அரசு என்று உருத்திரகுமாரன் நடாத்தும் அமைப்பு ஒரு ஆணியையும் புடுங்காது. தாங்கள் இப்பவும் இருக்கின்றோம் என்பதற்காக இடையிடையே அறிக்கை விடுவதுதான் அவர்களது அரசியல் வேலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, கிருபன் said:

தமிழர்கள் முழு இலங்கையையும் தமிழீழம் என்று சொல்லி போராடியிருக்கவில்லையே!

சிங்களவர்கள்தான் முழு இலங்கைத் தீவும் தமக்கு சொந்தமென புத்தர் சிலைகளை நிறுவியும் சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுத்தும் வருகின்றார்கள். முஸ்லிம்களையும் சிங்களவர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்க, முஸ்லிம்களும் வடக்கில் காணிகளைப் பிடித்து தமது இருப்பைத் தக்கவைக்கமுயல்கின்றார்கள். இதுவும் தமிழ் மக்களை முஸ்லிம்களுடன் நெருங்கி வர உதவவில்லை.

ஆனால் நாடு கடந்த அரசு என்று உருத்திரகுமாரன் நடாத்தும் அமைப்பு ஒரு ஆணியையும் புடுங்காது. தாங்கள் இப்பவும் இருக்கின்றோம் என்பதற்காக இடையிடையே அறிக்கை விடுவதுதான் அவர்களது அரசியல் வேலை.

உந்த நாடுகடந்த அரசின்ரை ஜேர்மன் ஏம்பிமாரை கோயில்வளியை காணுறனான். அவையும் அவையின்ரை எழுப்பமும் சொல்லி வேலையில்லை. அதிலையும் ஒரு நா.க.அரசு எம்பியின்ரை மோளுக்கு கலியாண பேச்சுக்கால் நடந்ததாம்.மாப்பிளை கொஞ்சம் அதுதான் சாதி குறைவெண்டு வேண்டாம் எண்டிட்டினமாம். வெளியிலை சொல்லிப்போடாதேங்கோ...பிறகு நான் கோயில் குளத்துக்கு போனபாடில்லை..😎

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

ஒரு உறையில் இரு வாள்கள் இருப்பதெப்படி?

வங்க தேசம் , பாகிஸ்த்தான் , இந்தியா போல பிரிஞ்சு போன மாதிரிதான் ஆனாலும் பிரிஞ்சாலும் தமிழர்களால் தற்போது இருப்பவர்களால் தமீழீழத்தை ஆள முடியாது / ஆட்சி செய்ய முடியாது அது பிரபாகரன் என்பவரால் மட்டுமே அவரது படைக்கட்டமைப்பின் மூலமே முடிந்திருருக்கும் மற்றபடி எவராலும்முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

அமெரிக்காவில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக சென்னையில் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாக அந்நாளிதழ் விவரிக்கிறது…

உருத்திரகுமார் போர் முடிந்து இன்றுவரை ஒரு ஆணியும் புடுங்கவில்லை இனியும் புடுங்க போவதில்லை பொத்திக்கொண்டு இருப்பது உத்தமம் .

18 hours ago, கிருபன் said:

இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே தீர்வு :

இதை ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா சொல்லிப் பிரயோசனம் இல்லை! 

இவரின் கருத்தினை நாம் பெரிது படுத்த தேவையில்லை .....ஆனால் எங்களின் இலக்கு இன்னும் அடைய முடியவில்லை .....நாமே சிங்களத்திக்கு துணை போகின்றோம் ?  70 வருடங்களுக்கு பின்னர் இப்பதான் தமிழர் தலைமை ஒற்றையாட்சிக்கு சம்மதம் சொல்லி யுள்ளது என்று ரணில் கூறும் அளவுக்கு சுமந்திரன் எங்களை வேரறுத்துள்ளார் ....இதன் தாக்கம் எவ்வளவு பாரதூரமானது  .... நாம் சிந்திக்க வேண்டும் .....இதனை இப்பவே நறுக்க வேண்டும் ...முதலில் அதனை செய்யுங்கள் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.