Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு – மட்டக்களப்பிற்கு புதிய விமான சேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு – மட்டக்களப்பிற்கு புதிய விமான சேவை

bati5-720x450.jpeg

மட்டக்களப்பு வவுனதீவு விமான நிலையத்தில் செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

இவ்விமான சேவை கொழும்பு – மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இந்த விமான சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், செரன்டிப் ஏயார்வைஸ் நிறுவன தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விமான சேவை திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

bati4.jpeg

bati.jpeg

bati3.jpeg

bati2.jpeg

http://athavannews.com/கொழும்பு-மட்டக்களப்பிற/

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

கொழும்பு – மட்டக்களப்பிற்கு புகிய தினங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

...

bati.jpeg

இதென்னடாப்பா கூத்து..? இதுக்குப் பேரு, விமானமா..?

நான் ஏதோ 'ஆட்டோ' வந்து நிக்குதென நினைச்சேனப்பு..! 🙄

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ராசவன்னியன் said:

இதென்னடாப்பா கூத்து..? இதுக்குப் பேரு, விமானமா..?

நான் ஏதோ 'ஆட்டோ' வந்து நிக்குதென நினைச்சேனப்பு..! 🙄

உள்ளூர் விமான சேவையென்று ஏதோ ஒன்றை ஆரம்பிச்சு வச்சிருக்கிறாங்கள் ஓடும் பிறகும் ஓடமும் ஓர் நாள் என்ற பழமொழிதான் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இதென்னடாப்பா கூத்து..? இதுக்குப் பேரு, விமானமா..?

நான் ஏதோ 'ஆட்டோ' வந்து நிக்குதென நினைச்சேனப்பு..! 🙄

வானத்தில் பறந்துதானே போகப்போகின்றது!  கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவும் அவர் தோழர்களும் பயணம் செய்யும் ஆட்டோவாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, ராசவன்னியன் said:

இதென்னடாப்பா கூத்து..? இதுக்குப் பேரு, விமானமா..?

நான் ஏதோ 'ஆட்டோ' வந்து நிக்குதென நினைச்சேனப்பு..! 🙄

விமானமோ? ஆட்டோவோ? இதன் அங்குரார்ப்பண நிகழ்வை நினைக்கத்தான் யோசனையாக உள்ளது! இலங்கையில் இரட்டைக்கோபுர வீடுகட்டும் என் திட்டத்தில் இடிவிழுந்தது வன்னியரே.!!😲

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

வானத்தில் பறந்துதானே போகப்போகின்றது!  கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவும் அவர் தோழர்களும் பயணம் செய்யும் ஆட்டோவாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்!

நீங்கள் ஆட்டோ என்று சொன்னாலும் கொழும்பில ஆட்டோதான் கிங் ஆட்டோகாரன் தான் ஹீறோ :)

9 hours ago, ராசவன்னியன் said:

இதென்னடாப்பா கூத்து..? இதுக்குப் பேரு, விமானமா..?

நான் ஏதோ 'ஆட்டோ' வந்து நிக்குதென நினைச்சேனப்பு..! 🙄

பாகிஸ்தானால் சுட்டுத் தள்ளப்பட்ட  Mig-21 ஆட்டோவைவிட,  படத்தில் இருக்கும் உறுதியான ஆட்டோ விமானம் எவ்வளவோ மேல் 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.

கன்கார்ட், ஏர்பஸ் 380 யை விட அதிக சொகுசு விமானம் தான் இந்த 'உறுதியான' ஆட்டோ விமானம்.

நினைத்தால், வீட்டின் மொட்டை மாடியில் அல்லது வாசலின் முன்னேயே இறக்கலாம். ஓடுதளமே தேவை இல்லை..! 😋

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.