Jump to content

பாப்பாண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பாண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை

பாப்பாண்டவரின் நிதி ஆலோசகருக்கு எதிரான பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அவுஸ்ரேலியாவை சேர்ந்த 75 வயதான கார்டினல் ஜோர்ஜ் பெல் என்பவர் பாப்பாண்டவர் பிரான்சிஸ்சின் நிதி ஆலோசகராக பணிபுரிந்து வந்துள்ளார்.

1970 ஆம் ஆண்டுகளில் நீச்சல் குளம் ஒன்றில் வைத்து 40 வயதைக் கடந்த 2 ஆண்களை கார்டினல் ஜோர்ஜ் பெல், தங்களிடம் தவறாக நடந்ததாகவும், முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். 

இதே போன்று 1980 ஆம் ஆண்டுகளில் 3 சிறுவர்கள் முன்பாக ஜோர்ஜ் பெல், தன் முழு உடலையும் நிர்வாணமாக காட்டியவாறு நின்றார் எனவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், மெல்போர்ன் நகரில் ஆர்ச் பிஷப்பாக பணிபுரிந்தபோது, உள்ளூர் மத குருமார் மீது வந்த பாலியல் புகார்களை அவர் சரியான விதத்தில் கையாள வில்லை என தெரிவித்துள்ளனர். 

குறித்த வழக்கு மெல்போர்ன் நீதவான் நீதிமன்றில் தீவிரமாக நடந்து வந்த நிலையில், இரு ஆண்களை துன்புறுத்தியதாக கார்டினல் ஜோர்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

http://www.virakesari.lk/article/51785

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசுவே, வத்திகானுக்கும் சோதனையா?

வேதனை, வேதனை.... 

அந்தப் பாவியை மன்னித்தருளும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே அந்தாளுக்கு எழுவத்தைஞ்சு இதுக்குமேல எழுவது மாதம் சிறையில் இருந்தாலென்ன வீட்டில் இருந்தாலென்ன , அங்கும் அவருக்கு தேவையானதெல்லாம் கிடைக்கும்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதகுருவானாலும் அவரும் மனிதன் தானே. இந்த உலகில் பிழைவிடாத மனிதர் எவருமேயில்லை.

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

மதகுருவானாலும் அவரும் மனிதன் தானே. இந்த உலகில் பிழைவிடாத மனிதர் எவருமேயில்லை.

அப்படியா? நீங்களுமா?  
எனக்கும் பிழை விட்டு விட்டு இன்னும் முப்பது வருடம்.  ஊரை. ஏமாற்ற. ஆசையாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Jude said:

அப்படியா? நீங்களுமா?  
எனக்கும் பிழை விட்டு விட்டு இன்னும் முப்பது வருடம்.  ஊரை. ஏமாற்ற. ஆசையாக இருக்கிறது. 

நான் இங்கு வித்தியாசமாக எதுவுமே கூறவில்லை. மனிதம் பற்றியே கூறினேன்.தண்டனைகள் பற்றி எதுவும் கூறவில்லையே?

மனிதம் என்று வரும் போது தண்டனைகள் யாவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். சிலோன் தமிழ்பிரதேசங்களிலும் ஒரு காலத்தில் சட்டங்கள் ஒழுங்குகள்   சிறப்பாக இருந்தது.பாலியல் பிரச்சனைகள் இருக்கவில்லை.களவுகள் கொள்ளைகள் இருக்கவில்லை.வாள் வெட்டுக்கள் இருக்கவில்லை.காரணம்  தவறுகளுக்கேற்ற தண்டனைகள்.தண்டனை என்பது உலகின் நியதி.
சுதந்திரம் எனும் பெயரில்    இன்றைய சோறு சுகத்திற்காக நாளைய எமது சந்ததியை நடுத்தெருவில் விட்டுக்கொண்டே வருகின்றோம். இப்படியான விடயங்களில் தான் வத்திக்கானும் விழித்தெழுகின்றது.

தண்டனைகளின் அவசியத்தை வத்திக்கானும் உணர்ந்து கொள்வதையிட்டு மிகுந்த சந்தோசம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.