Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிநீர் வழங்குங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிநீர் வழங்குங்கள்

March 28, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

karainagar.jpg?resize=567%2C429

எமக்கு வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிக்க குடிநீர் வழங்குங்கள் என காரைநகர் மக்கள் இரைஞ்சி கேட்டுள்ளனர்.

யாழில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெப்ப நிலை காரணமாக வரட்சி காரணமாக தீவக பகுதிகளில் கடுமையான வரட்சி நிலவி வருகின்றது. நீர் நிலைகளில் நீர் வற்றியுள்ளன. காரைநகர் பகுதிகளில் குடிநீரை பெறுவதற்கு மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்நிலையிலேயே மக்கள் தமக்கு குடிநீரினை வழங்குமாறு மன்றாடி கேட்டுள்ளனர். அது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

நாங்கள் உயிர் வாழ்வதற்கு குடிநீரை தாருங்கள். அபிவிருத்தியை விட்டு குடிக்க குடிநீர் வழங்க ஏற்பாடுகளை செய்யுங்கள். இதுவரை காலமும் குடிநீரினை பிரதேச சபை , காரைநகர் அபிவிருத்தி சபை , எப்.ரி. எனும் அமைப்பு ஆகியன குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டன.

வலி.தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியுடன் , பெரியவிளான் பகுதியில் இருந்தே குடிநீர் பெறப்பட்டு எமக்கு விநியோகிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் இருந்து பெருமளவான நன்னீர் உறிஞ்சி எடுக்கப்படுவதனால் அப்பகுதி நன்னீர் நிலைகள் உவர் நீராக மாறி வருவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து அங்கிருந்து நீர் எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. அதனாலையே குடிநீரினை பெற முடியாத நிலையில் உள்ளோம் என காரைநகர் பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை குடிநீர் தடைப்பட்டது தொடர்பில் வலி.தென் மேற்கு பிரதேச சபையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதில் , காரைநகர் பிரதேச சபை தவிசாளர் , செயலாளர் , வலி.தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் , சண்டிலிப்பாய் உதவி பிரதேச செயலாளர் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதன் போது , அளவுக்கு அதிகமாக நீர் உறிஞ்ச படுவதனால் , எமது பிரதேச நன்னீர் நிலைகள் உவர் நீராக மாறி வருகின்றது. அதனாலையே எமது பிரதேசத்தில் இருந்து நீரினை உறிஞ்சுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். காரைநகர் மக்களுக்கு குடிநீர் பெற வேறு வழிகள் இல்லை , வளங்கள் இல்லை எனில் எமது பிரதேசத்தில் இருந்து குடிநீரை பெறுவதற்கு மனிதாபிமான ரீதியில் அதற்கு சம்மதிக்க முடியும் என வலி.தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2019/117065/

  • கருத்துக்கள உறவுகள்

மழையும் போதிய அளவு பெய்வதில்லை, பெய்யும் மழையையும் விரைவாக கடலில் கலக்காமல் தரைக்கு கீழே செல்ல வைப்பதில்லை. குளங் குட்டைகளில் நீரை சேமிப்பதில்லை.
வீடு, வளவுகளில் வெள்ளம் வந்தவுடன் உடனடியாக கடலுக்கு தண்ணீரை திறந்து விடுவது. இரண்டு நாட்கள் பொறுத்தால் வெள்ளம் தானே வடிந்து விடும்.
இப்ப குடிக்க தண்ணி இல்லை என்று புலம்புவது.
நீண்ட கால நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு நன்னீர் தேக்கங்கள் உருவாகா விட்டால் மக்கள் வாழ முடியா நிலை ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

மழையும் போதிய அளவு பெய்வதில்லை, பெய்யும் மழையையும் விரைவாக கடலில் கலக்காமல் தரைக்கு கீழே செல்ல வைப்பதில்லை. குளங் குட்டைகளில் நீரை சேமிப்பதில்லை.
வீடு, வளவுகளில் வெள்ளம் வந்தவுடன் உடனடியாக கடலுக்கு தண்ணீரை திறந்து விடுவது. இரண்டு நாட்கள் பொறுத்தால் வெள்ளம் தானே வடிந்து விடும்.
இப்ப குடிக்க தண்ணி இல்லை என்று புலம்புவது.
நீண்ட கால நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு நன்னீர் தேக்கங்கள் உருவாகா விட்டால் மக்கள் வாழ முடியா நிலை ஏற்படும்.

யாழ் நகரில் பல கோவில்களில் குளங்கள் இருக்கின்றன் அதை பலர் குப்பைகளை போட்டு முடிவிடுகிறார்கள் ...அதை பக்தர்களும் துப்பரவு செய்வதில்லை கோவில் நிர்வாகங்களும் அக்கறை காட்டுவதில்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, putthan said:

யாழ் நகரில் பல கோவில்களில் குளங்கள் இருக்கின்றன் அதை பலர் குப்பைகளை போட்டு முடிவிடுகிறார்கள் ...அதை பக்தர்களும் துப்பரவு செய்வதில்லை கோவில் நிர்வாகங்களும் அக்கறை காட்டுவதில்லை...

குளங்களையெல்லாம் நாங்கள் சிரமதான முறையிலை பராமரிச்சனாங்கள். இப்ப இருக்கிறவை என்ன செய்யினமாம்? வெளிநாட்டுக்கு போனவனை நக்கலடிக்க மட்டும் தெரியுது. 
எங்களுக்கு மோட்டச்சைக்கிள் ஓடிக்காட்டினம். வாயிலை வருது நல்லாய்.....😡

On 3/28/2019 at 12:50 PM, கிருபன் said:

வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிநீர் வழங்குங்கள்

காரைநகர் மக்கள் குடிநீர் கேட்பது சரி!
அதென்ன வீதியும் வேண்டாம்? அபிவிருத்தியும் வேண்டாம்?

காரைநகர் மக்கள் குடிநீர்  கிடைத்த பின்னர், அவர்களிடமிருந்து அடுத்து வேறென்ன என்ன பிச்சைக்காரப் புத்தி வெளிப்படுமோ தெரியவில்லை!

குறுகிய மனப்பான்மை, குறுகிய சிந்தனை, சுயநலம், பிச்சைக்காரப் புத்தி என்பன இவர்களின் செயற்பாடுகளால் வெளிப்பட்டு நிற்கிறது!

காரைநகர் மக்கள் இவ்வளவு கேவலமானவர்களா என்று நினைக்கத் தோன்றுகிறது!

மக்கள் மரங்களை தாறுமாறாக வெட்டுகிறார்கள்! காணிகளை விற்கும் பலர் விற்க முதல் அதிலுள்ள பெரிய மரங்களை வெட்டி விற்றபின்னர் தான் காணிகளை விற்கின்றனர்! கிடைத்தவரை இலாபமாம்! இவர்களுக்கு சுற்றுச் சூழலைப் பற்றிய அக்கறை இல்லை! எப்படி மழை பெய்யும்?

யாழ் குடாநாட்டிலிருந்த சிறு குட்டைகள், ஏரிகள் பல காணாமல் போய்விட்டன. குப்பைகளை கண்டபடி கொட்டுகின்றனர்! இவர்களுக்கு சுற்றுச் சூழலைப் பற்றிய அக்கறை இல்லை! எப்படி நிலத்தடி நீர் மட்டம் பேணப்படும்?

சுற்றுச் சூழலில் அக்கறை உள்ள ஒருவர் அண்மையில் தனது வெற்றுக்காணியில் மழை நீரை சேகரிக்க ஒரு 30 அடி x 20 அடி x 8 அடி (ஆழம்) குழியை வெட்டி அதுக்கு ஒரு பாதுகாப்பு வேலியும் அமைத்தார். அயலிலுள்ள மக்கள் இதனால் வெள்ளம் ஏற்படப்போகிறது என்று முறையிட்டு தற்போது விசாரணைகள் நடக்கிறது. செய்யவும் மாட்டார்கள் செய்பவர்களை விடவும்மாட்டார்கள்! எப்படி நிலத்தடி நீர் மட்டம் பேணப்படும்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

குளங்களையெல்லாம் நாங்கள் சிரமதான முறையிலை பராமரிச்சனாங்கள். இப்ப இருக்கிறவை என்ன செய்யினமாம்? வெளிநாட்டுக்கு போனவனை நக்கலடிக்க மட்டும் தெரியுது. 
எங்களுக்கு மோட்டச்சைக்கிள் ஓடிக்காட்டினம். வாயிலை வருது நல்லாய்.....😡

‍உண்மை ....பூங்காவன‌த்திற்கு அழங்காரத்திற்கு பாவித்த‌ வாழைமரம்,தென்னை மட்டை இலைகுழை எல்லாம் கோவில் கேணிக்குள்ளும் குளத்திற்க்கும் உள்ள போட்டுவிடுகிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியிலில் அனைவரது கருத்துக்களும் அருமை.

  • கருத்துக்கள உறவுகள்

கிராமங்களில் சின்ன சின்ன கிடங்கு/குண்டுகள் வெள்ளம் நிரம்பி காணப்படும், இப்ப எல்லாத்தையும் நிரவிப்போடுறாங்கள்.
கோவில் குளங்கள் சுற்றுசுவருடன் காணப்படுவதால் பெருமழை பெய்யும் போது மட்டும் நிரம்புகின்றது.
காரைநகரில் வெள்ளத்தை தேக்கும் வகையில் தடுப்பணை கட்டியிருந்தார்கள், வெள்ளம் வீட்டுக்குள் வந்துவிட்டது என்று உடைத்து விட்டார்கள்.
மக்களுக்கு விழிப்புணர்வு செய்து நீரை சேமித்தால் பயன் எல்லோருக்குமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.