Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைய உறவு இனிய உறவு

Featured Replies

இணைய உறவு இனிய உறவு

jotheka91pl6.jpg

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு

இருபத்தோராம் திகதி

இதே சித்திரை மாதத்தில்

இதோ பசுமையாக அவ்நினைவுகள்

இன்றும் என் நெஞ்சில்;

இனிமையான காலைப்பொழுதில்

இயக்கினேன் கணனியை

இணைந்தேன் அரட்டைக்குள்

இயற்பெயர் வெண்ணிலாவாக

இவளுக்காகவே காத்திருப்பதுபோல்;

இன்முகத்துடன் அரட்டைக்குள்

இளங்கவிக்குயிலாக நீயிருந்தாய்

இதமாக கதைக்க நினைத்து

இதழ்விரித்துக் கேட்டேன்

இருக்கின்றீர்களா நலமா என்று

இதயத்தை தொடுவது போல்

இயம்பினாய் ஆம் நலமே என

இலங்கையில் வசிக்கின்றேன் நான்

இங்கிலாந்தில் வசிக்கின்றாய் நீ

இவ்வாறாக தொடர்ந்த அரட்டையில்

இருநாடுகளில் வாழ்ந்தாலும்

இணைபிரியாது வாழ எண்ணி

இருவரும் கலந்தாலோசித்து

இறுகப் பற்றினோம் நம்நட்பை

இணைந்தோம் ஈ அஞ்சலூடாக

இடைவிடாது கதைத்தோம்

இருபொழுது காலையும் மாலையும்

இன்னல்களைப் பரிமாறினோம்

இன்புடன் அரவணைத்தோம்.

இரட்டை குழந்தைகளாக

இன்றும் இருக்கின்றாய்

இளகிய என் மனதில்

இனிய பாசமான அண்ணாவாக

இணைய அரட்டையில் அன்று

இணைந்த நாம் இன்றும்

இருக்கின்றோம் பாசமாக

இணை பிரியா உறவுகளாக

இதை நினைத்துப் பார்க்கையில்

இறுமாப்படைகிறேன் தினமும்.

இதயத்தில் சலனம் இல்லை

இருந்ததில்லை நமக்குள் சண்டை

இணையத்தில் கண்ட உன்னை

இருவிழிகளால் காண எண்ணி

இன்றைய நம் உறவின்

இனிய மூவாண்டு நிறைவினில்

இறைஞ்சுகிறேன் மனதார

இறைவனிடம் இருகரங்கூப்பி

இனிய உறவாம் அண்ணா தங்கையாக

இனிவரும் ஜென்மத்திலும்

இயல்பாக நாம் இணைந்திட.

நல்லா இருக்குது கவிதை,இங்கு யாழுக்கு வந்தும் நான் பல நல்ல சகோதரக,சகோதரிகளை பெற்றுள்ளேன்.

அழகான கவிதை வெண்ணிலா பழைய களத்திலிருந்து எடுத்து போட்டதற்க்கு நன்றிகள்

இணைய உறவு இனிய உறவு

jotheka91pl6.jpg

கவிதை அழகாக இருக்கிறது

உங்களுக்கு அமைத்த இனிய உறவைப் போல் எல்லோருக்கு அமைய வேண்டும்

அழகிய கவிதை....

நான் படத்தை பார்த்துவிட்டு உங்களின் படமாக்கும் என நினைத்துவிட்டேன், பிறகுதான் தெரிந்தது அது ஜோவின் படம் என்று :lol:

இந்தப்படம் எப்படி இருக்கு? :P

picture32tk9.jpg

ம்ம் முந்தி வாசிச்சிருக்கன். நானும் இப்ப புதுசா திருப்பி "இ" வரிசையில் எழுதிட்டீங்கள் எண்டு வந்து பார்த்தன். .... இந்த "இ" வரிசையில் சொல்லை தேடி களைச்சுப் போகயில்லையா ....... :lol: ;) கவிதை நல்லாயிருக்கு நிலா...... தொடர்ந்து புதுக் கவிதைகளையும் எழுதுங்கள்.... :o

இணைய உறவு இனிய உறவு

இனிய உறவாம் அண்ணா தங்கையாக

இனிவரும் ஜென்மத்திலும்

இயல்பாக நாம் இணைந்திட.

காலம் நேரம் பார்த்துக்கொண்டா

காற்றும் பூவும் காதல் கொள்ளும்

கொஞ்ம் யோசிக்க வெண்டிய முரணாண கருத்துக்கள் :P

ஆனாலும் நல்ல கவிதை :lol:

இங்கிதமாய் கவி படைத்தாய்

இளம் மயிலே வெண்ணிலா

இலகு தமிழ் வரி தொடுத்தாய்

இணை உண்டோ பண்ணிலா

இலை மறைத்த காய் போல

இருந்தாய் நீ நற் கவியே

இயம்புகிறேன் வாழ்த்துகளை

இமயம் போல் இனி எழவே

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் நல்ல உறவுகளைப் பெறுவதென்பது சுலபமான விடயமல்ல. இங்கு கூட கலைஞன் என்பவர் நண்பர்களைப் பெற யாழ் களத்தைப் பாவிக்கலாம் என்று கூறி இருந்தார். உண்மையான நண்பர்களை அப்படிப் பெறுவதென்பது மிக கடினமான காரியம்.

உங்கள் போன்ற சிலருக்காவது நல்ல சகோதரர்கள் இணைய வழி கிடைக்கப் பெற்றதானது உங்களின் அணுகுமுறைகள் மிகவும் உறுதியானவையாக நம்பிக்கை வாய்ந்தவையாக அமைந்துள்ளதையே காட்டுகிறது. இப்படியான அணுகுமுறைகள் மட்டுமே சில அபூர்வமான உறவுகளை பிறப்பிக்கும். அதற்கு இணையம் மட்டுமே காரணமல்ல..! மனங்களே காரணம்..!

பலர் இணையத்தில் உறவாடி விட்டு சந்தர்ப்பம் கிடைத்ததும் சுயநலம் பூர்த்தியானதும் இணைய உறவாடலை மூடிமறைத்து ஓடி ஒளித்துவிடும் நிகழ்வுகளே அதிகம்..! அவர்கள் இணையத்தில் ஆட்களைத் தேடுபவர்களாக இருக்கலாம்.. ஆனால் உண்மையான உறவாடல்களோடு சில உள்ளங்கள் இன்னும் உலகில் உள்ளன என்பதை உங்கள் கவிதை உண்மை என்றால் இன்றும் சொல்கிறது..!

உறவாடிய நினைவுகளை கூட கொல்ல நினைக்கும் மனிதர்கள் மத்தியில் நினைவுகளை உறவாடலை கவிதையாக தந்ததற்குப் பாராட்டுக்கள்.. நல்ல இதயங்கள் என்றும் சகோதரங்களாக இணைந்திருக்க இறைவனையும் வேண்டுவோமாக....!

கலைஞன் போன்றோரின் கனவுகள் நனவாக இது வழிகோலட்டும்..! :P :lol:

  • தொடங்கியவர்

நல்லா இருக்குது கவிதை,இங்கு யாழுக்கு வந்தும் நான் பல நல்ல சகோதரக,சகோதரிகளை பெற்றுள்ளேன்.

அப்படியா? கேட்க சந்தோஷமாக இருக்கின்றது. என்றும் அவ்வுறவுகளுடன் நிலைத்திருக்க வாழ்த்துகின்றேன்

அழகான கவிதை வெண்ணிலா பழைய களத்திலிருந்து எடுத்து போட்டதற்க்கு நன்றிகள்

பழைய களமும் சென்று படித்திருக்கின்றீங்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கு. நன்றி.

கவிதை அழகாக இருக்கிறது

உங்களுக்கு அமைத்த இனிய உறவைப் போல் எல்லோருக்கு அமைய வேண்டும்

உங்களுக்கும் அமைய வாழ்த்துக்கள் சகி :P

அழகிய கவிதை....

நான் படத்தை பார்த்துவிட்டு உங்களின் படமாக்கும் என நினைத்துவிட்டேன், பிறகுதான் தெரிந்தது அது ஜோவின் படம் என்று :(

இந்தப்படம் எப்படி இருக்கு? :P

என் படமா? சிரிப்பாக இருக்கு. ஆமா நீங்க இணைத்த படத்துக்கு என்ன? புரியமுடியவில்லையே. :lol:

ம்ம் முந்தி வாசிச்சிருக்கன். நானும் இப்ப புதுசா திருப்பி "இ" வரிசையில் எழுதிட்டீங்கள் எண்டு வந்து பார்த்தன். .... இந்த "இ" வரிசையில் சொல்லை தேடி களைச்சுப் போகயில்லையா ....... :o ;) கவிதை நல்லாயிருக்கு நிலா...... தொடர்ந்து புதுக் கவிதைகளையும் எழுதுங்கள்.... :lol:

ஓ..!!! ம்ம் எழுதுவம் எழுதுவம். எங்கை ரைம் தான் கொஞ்சம் காணாமல் இருக்கு. :P

கொஞ்ம் யோசிக்க வெண்டிய முரணாண கருத்துக்கள் :P

ஆனாலும் நல்ல கவிதை :)

குட்டித்தம்பி நீங்கள் கவிதையையும் என் கையெழுத்து வசனத்தையும் ஏன் முடிச்சுப்போட்டு பார்க்கிறீங்க?

இங்கிதமாய் கவி படைத்தாய்

இளம் மயிலே வெண்ணிலா

இலகு தமிழ் வரி தொடுத்தாய்

இணை உண்டோ பண்ணிலா

இலை மறைத்த காய் போல

இருந்தாய் நீ நற் கவியே

இயம்புகிறேன் வாழ்த்துகளை

இமயம் போல் இனி எழவே

உங்கள் வாழ்த்துக்கவி கண்டு ரொம்ப சந்தோஷமடைகின்றேன். நன்றி ரொம்ப ரொம்ப நன்றி

  • தொடங்கியவர்

இணையத்தில் நல்ல உறவுகளைப் பெறுவதென்பது சுலபமான விடயமல்ல. இங்கு கூட கலைஞன் என்பவர் நண்பர்களைப் பெற யாழ் களத்தைப் பாவிக்கலாம் என்று கூறி இருந்தார். உண்மையான நண்பர்களை அப்படிப் பெறுவதென்பது மிக கடினமான காரியம்.

கடினமான காரியம் தான். ஆனால் களங்கமில்லா அன்பால் எதையும் சாதிக்க முடியும் தானே.

உங்கள் போன்ற சிலருக்காவது நல்ல சகோதரர்கள் இணைய வழி கிடைக்கப் பெற்றதானது உங்களின் அணுகுமுறைகள் மிகவும் உறுதியானவையாக நம்பிக்கை வாய்ந்தவையாக அமைந்துள்ளதையே காட்டுகிறது. இப்படியான அணுகுமுறைகள் மட்டுமே சில அபூர்வமான உறவுகளை பிறப்பிக்கும். அதற்கு இணையம் மட்டுமே காரணமல்ல..! மனங்களே காரணம்..!

உண்மையை சொல்லி இருக்கிறீங்க. நன்றி நெடுக்ஸ். நன்றி

பலர் இணையத்தில் உறவாடி விட்டு சந்தர்ப்பம் கிடைத்ததும் சுயநலம் பூர்த்தியானதும் இணைய உறவாடலை மூடிமறைத்து ஓடி ஒளித்துவிடும் நிகழ்வுகளே அதிகம்..! அவர்கள் இணையத்தில் ஆட்களைத் தேடுபவர்களாக இருக்கலாம்.. ஆனால் உண்மையான உறவாடல்களோடு சில உள்ளங்கள் இன்னும் உலகில் உள்ளன என்பதை உங்கள் கவிதை உண்மை என்றால் இன்றும் சொல்கிறது..!

உண்மையான உறவாடல்களோடு உலகில் நண்பர்கள் ஏன் இல்லை? முதலில் நாம் மற்றவர்களுக்கு உண்மையாக இருப்பின் அவர்களும் நமக்கு உண்மையாக இருப்பார்கள். இதுதான் என் கொள்கை

உறவாடிய நினைவுகளை கூட கொல்ல நினைக்கும் மனிதர்கள் மத்தியில் நினைவுகளை உறவாடலை கவிதையாக தந்ததற்குப் பாராட்டுக்கள்.. நல்ல இதயங்கள் என்றும் சகோதரங்களாக இணைந்திருக்க இறைவனையும் வேண்டுவோமாக....!

நன்றி நெடுக்ஸ். எமக்கான (எனக்கும் என் இணைய சகோதரனுக்கும்) உங்கள் இறைவேண்டுதலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

கலைஞன் போன்றோரின் கனவுகள் நனவாக இது வழிகோலட்டும்..!

கலைஞனின் கனவு நனவாக நானும் பிரார்த்திக்கின்றேன்.

ஹி... அது நான் யாழ் இணையம் பார்ப்பதை எனது கணணியூடாக எடுத்த படம்... :o

...............

அட கடவுளே, அப்ப இப்ப நான் கனவு கண்டுகொண்டிருப்பதாய் எல்லோரும் முடிவே பண்ணீட்டீங்களா? :lol::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை வெண்ணிலா அக்கா

தாம் கூறியது போல் நல்ல மனம் இருந்தால் நல்ல உறவுகள் அமையும்

ஹி... அது நான் யாழ் இணையம் பார்ப்பதை எனது கணணியூடாக எடுத்த படம்... :(

...............

அட கடவுளே, அப்ப இப்ப நான் கனவு கண்டுகொண்டிருப்பதாய் எல்லோரும் முடிவே பண்ணீட்டீங்களா? :( :(

மாப்பிக்கு முனியம்மாவும் குப்பமாவும் பத்தாது எண்டு என்னும் கனவா..............? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை நிலா... பழைய களத்தில வாசிச்ச யாபகம்.

முந்தி நிலாட கவிதைகள் அடிக்கடி வரும்...இப்ப வாறது குறைவு..

தொடர்ந்து எழுதுங்க.. :)

  • தொடங்கியவர்

முந்தி எழுத நேரம் கிடைத்தது. தற்போது கொஞ்சம் படிப்பில் பிசியாகிட்டேன். இருப்பினும் நேரம் கிடைக்கும் போதெலலம் எழுதுவேன் . நன்றி ஜனனி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.