Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலை மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை - விக்கி பாசாங்கு செய்வதாகவும் கூட்டமைப்பு சாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலை மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை - விக்கி பாசாங்கு செய்வதாகவும் கூட்டமைப்பு சாடல்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமாஅதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடயங்களை சரியாக அறியாது அல்லது விளங்காமை போன்று பாசாங்கு செய்வதாகவும் சாடியுள்ளது.

 

இதுதொடாபில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்கலைக் கழக நிர்வாகத்தின் கோரிக்கையின் பெயரில் பல்கலைக் கழகத்தில் நடாத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்ட இரண்டு மாணவத் தலைவர்களும் குற்றம் சாட்டப்படாமல் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகிறது. பல காலமாக அவர்களின் அறையில் இருந்த படங்களையும், ஆவணங்களையும் காரணம் காட்டி மாணவர்கள் கைது செய்யப்பட்டதனை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

மாணவர்கள் கைது செய்யப்பட்டவுடன் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. 

சேனாதிராஜாவும் , நானும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் ஆகியோர் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று மாணவர்களுடன் உரையாடி அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுடன் உரையாடி விடுவிக்க கோரியபோது பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தாமல் விடுவிக்க முடியாது. எனத் தெரிவித்தனர். அதன்படி நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் மே16 வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரு மாணவர்களிற்கும் எதிராக பொலிஸார் நான்கு சட்டங்களின் அடிப்படையில் பொலிஸார் தகவல் கொடுத்துள்ளனர்.

இதிலொன்று பயங்கரவாத தடைச் சட்டம். இரண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள். மூன்றாவது சிவில் அரசியல் உரிமைகளிற்கான சர்வதேச பட்டய சட்டம். நான்கவதே 2019 ஏப்பிரல் 22 ஆம் திகதி அமுல் படுத்தப்பட்ட அவசரகாலச் சட்ட விதிகள். ஆகிய சட்டங்களை மேற்கோள் காட்டி நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய காரணத்தினால் இவர்களை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றிற்கு கிடையாத காரணத்தினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த இரு மாணவர்கள் சார்பிலும் சட்டத்தரணி கே.சயந்தனும் பல்கலைக் கழகம் சார்பில் குருபரன், சுகாஸ் ஆகிய சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். இதேநேரம் குறித்த மாணவர்களை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபரின் இணக்கத்தை பெறவேண்டும் என்பதன் அடிப்படையில் அந்த இணக்கத்தை சட்டமா அதிபரிடம் இருந்து பெறுவதற்கான ஏற்பாடுகளிலும் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

இதேநேரம் குறித்த விடயம் தொடரபில் வடக்கு மாகாணத்தின் முன்னால் முதலமைச்சரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமாகிய சி.வி.விக்னேஸ்வரனும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதிலே வடக்கில் இராணுவம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியதாக தவறான கூற்றை வெளிப்படுத்தியுள்ளார். 

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எவரும் இராணுவம் தொடர்ந்தும் வடக்கில் நிலைகொள்ள வேண்டும் எனக் கோரவில்லை. அப்படியான தவறான கூற்று வந்திருந்தால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பல்ல. மாறாக இவ்வாறான கோரிக்கையை விடுத்த ஒரேயொரு நபர் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான அனந்தி சசிதரன் மட்டுமே ஆகும்.

இந்த நிலையில் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் மீது மற்றுமோர் குற்றச் சாட்டையும் முன்வைத்துள்ளார். அதாவது அவசரகாலச் சட்டத்தை பாராளுமன்றில் எதிர்க்காமல் விட்டுவிட்டு கைது செய்தவர்களை விடுமாறு பொலிஸ் நிலையம் சென்றதாகவே அந்தக்குற்றச்சாட்டு உள்ளது.

மேலே கூறப்பட்டதன் பிரகாரம் இந்த இரு மாணவர்களும் அவசர கால விதியின் கீழ் மட்டும் கைது செய்யப்படவில்லை. அதற்கு அப்பாலும் மூன்று சட்டங்களை மேற்கோள் காட்டியுள்ளனர். அதில் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சட்ட விதிகளும் அடங்கும். இந்தச் சட்டங்களின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பலர் விக்கினேஸ்வரன் மேல்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த சமயங்களில் பலர் குற்றவாளிகளாக கானப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டனர். ஆனால் அவசரகாலச் சட்டத்தை கூட்டமைப்பு எமிர்க்கவில்லை எனக் காரணம்காட்டி தன்னை புனிதவானாக காட்ட முனைவது பொருத்தமற்றது.

அவசரகால பிரகடனத்தை கூட்டமைப்பு மட்டுமல்ல எவருமே எதிர்க்கவில்லை. ஆனால் அவசர காலம் வேறு அதன்கீழ் செய்யப்படும் அவசரகால சட்ட விதிகள் வேறு. அவசரகால பிரகடனத்தின் பின்பு கொண்டு வந்த அவசரகால விதியில் சில மோசமான விதிகள் இருப்பதனை நாம் சுட்டிக்காட்டி அவற்றை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளோம். 

அதனை உரிய இடத்தில் சவாலுக்கு உட்படுத்துவோம். இங்கே அவசரகால விதிகள் இல்லாதிருப்பினும் இந்த மாணவர்கள் ஏனைய மூன்று விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்க கூடும். எனவே விடயங்களை சரியாக அறியாது அல்லது விளங்காமை போன்று பாசாங்கு செய்து விக்கினேஸ்வரன் அறிக்கை வெளியிட்டமை துரதிஸ்டவசமான செயல்பாடாகும்.

 

http://www.virakesari.lk/article/55303

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவசர காலச் சட்டம் இல்லாமல்.. இந்தச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாதோ..??!

உலகில் வளர்ந்த சனநாயக நாடுகளில்.. அவசர காலச் சட்டம் என்பது மிக அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால்.. சொறீலங்காவில்.. கல்லெறிந்தாலும் உடனடியாக அவசரகாலச் சட்டமும் இராணுவம் வீதிக்கு வந்து விடுகிறது.

பிரித்தானியாவிலும்.. தொடர் குண்டு வெடிப்புக்கள்.. கத்தி வாள் வெட்டுக்கள்.. வாகனங்களால் மோதித் தாக்குதல்கள் என்று இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அங்கு அவசரகாலச் சட்டமோ.. இராணுவமோ இறக்கப்படவில்லை.

மாறாக.. பொலிஸ் மற்றும் விசேட ஆயுதப் பயிற்சி பெற்ற பொலிஸ்.. மற்றும் உளவுத்துறை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில்.. இந்த மத அடிப்படைவாதிகளிடம்.. பெரிய ஆயுதங்கள் கிடையா. குண்டு வெடிப்புக்கள்.. மற்றும் கத்திக் குத்துக்கள்.. வாகன மோதல்களையே செய்ய முடியும். அவற்றை தடுக்க அவசரகாலச் சட்டம் அவசியமில்லை. ஏன் இராணுவம் கூட அவசியமில்லை.

ஒழுங்கான பொலிஸூம்.. நல்ல உளவுத்துறையும்.. மக்களின் விழிப்புணர்வும் ஒன்று சேர்ந்தால் போதும்.

ஆனால்.. சொறீலங்கா அரசு... இதில்.. அவசரகாலச் சட்டம்.. பயங்கரவாதச் சட்டம்.. இராணுவம்.. முப்படைகள்.. என்று.. பயன்படுத்துவதும்.. வடக்குக் கிழக்கில் அதன் இராணுவ நெருக்குவாரங்களை மற்றைய பகுதிகளை விட அதிகம் பயன்படுத்துவதும்.. இவர்களின் நோக்கங்களை சந்தேகிக்கச் செய்கிறது மட்டுமன்றி.. தமிழ் மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு ஏன் கூத்தமைப்பு ஒத்துழைக்க வேண்டும்..??! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு அவசரகால சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு கைதுசெய்தவர்களை காட்டுமிராண்டிகளின் காலத்து முறைப்படி விசாரணைசெய்யவும் விளக்கமறியலை காலவரையறையறையின்றி நீட்டிக்கொள்ளவும்  அதை  ஆயுதமாக பயன்படுத்துகிறது. 
ஐ.நா வின்உதவிக்கான வேண்டுதலை வேண்டாம் என்று தட்டிக்கழித்ததும் அதே காரணம்தான்.

"பல்கலைக் கழக நிர்வாகத்தின் கோரிக்கையின் பெயரில் பல்கலைக் கழகத்தில் நடாத்தப்பட்ட சோதனை" ஏன் என்பது புரியவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாளும் இருக்கிறபடியால ஏதோ அறிக்கையாவது விட்டினம்!
இப்பிடியான விடயங்களில் வழக்கமா தூங்கிடுவாங்களே?!

சுமந்திரன் தன்றை எடுபிடி அரசியலை செய்ய விக்கி அய்யாவின் செயற்பாடுகள் இடஞ்சலா இருக்குப் போல! அதான் சுமந்திரன் குத்தி முறியிறார்!

அதுசரி, கேப்பாபிலவு இதோ விடுபடப்போகுது என்று சுமந்திரன் ரீல்விட்டு 2 மாதம் ஆகப்போதாம்! என்ன நடக்கிது அந்த விஷயத்தில!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.