Sign in to follow this  
கிருபன்

இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை ; மஹிந்த

Recommended Posts

இலங்கையில்  எவ்வித போர்  குற்றங்களும் இடம் பெறவில்லை ; மஹிந்த

(இராஜதுரை ஹஷான்)

அடிப்படைவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து முப்படையினரின் சேவையினாலேயே நாடு  பாதுகாக்கப்பட்டுள்ளது. எமது நாட்டு இராணுவத்தை  நாம் முதலில் எவ்விடத்திலும் விட்டுக்கொடுக்காமல் இனியாவது பெருமைப்படுத்த அரசாங்கம்  பழகிக் கொள்ள வேண்டும் என  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த  ராஜபக்ஷ தெரிவித்தார்.

Mahindha.jpg

இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ  வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

பல உயிரிழப்புக்களுடன்  வெற்றிக் கொண்ட  பயங்கரவாதம் 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில்  நாம் பிறிதொரு   அடிப்படைவாத  தீவிரவாதத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.   சர்வதேசத்துடன் தொடர்புடைய தேசிய  தீவிரவாதத்தின்  தாக்குதலே  அண்மையில் இடம்பெற்றது. 2008ஆம் ஆண்டு  மும்பை  நகரில்   குண்டு தாக்குதல்  நடத்தியது  இந்நிய  பிரஜை  அல்ல   ஆனால்  கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தில்  தற்கொலை குண்டுதாக்குதலை    நடத்தியவர்கள்  இலங்கை   பிரஜைகள்    என்பது  ஒரு கட்டத்தில் வருந்தத்தக்கது.

விடுதலை புலிகளினால்  நடத்தப்பட்ட ஒரு  தாக்குதலினால்  கொல்லப்பட்ட உயிர்களை விட அதிகமான  உயிரிழப்புக்கள் ஒரு  தற்கொலை குண்டுதாரியினால் சம்பவிக்கப்பட்டது.   தொடர்ந்து அரசாங்கத்தின் தாக்குதலுக்கும் பழி சொல்லுக்கும் உள்ளாகிய இராணுவமே  இன்று  இந்த  நாட்டை பாதுகாத்துள்ளது.     அனைத்து  மக்களும் இராணுவத்தினரை போற்றி  மதிக்க வேண்டும் நிலையில்  நாம் அனைவரும் இன்று  உள்ளோம்.

இலங்கையில்  எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை என்று  10 வருட கால     வெற்றியினை  கொண்டாடும் இத்தருணத்தில் தைரியமாக குறிப்பிட  முடியும்.  யுத்தத்தை வெற்றிக் கொள்ளும் விதமாகவே சர்வதேச  போர் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பிரபல்யமாக நாடுகளில் பின்பற்றப்பட்ட  போர் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே   யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. 

 நாட்டுக்காக  போராடிய  இராணுவத்தினர்  தொடர்ந்தும்  மதிக்கப்பட வேண்டும்.  அரசியல் கொள்கைகள் மாற்றமடையும் போது   இராணுவத்தினரை ஒருபோதும்  வேறுப்படுத்தி அரசியல் தேவைகளுக்காக  பயன்படுத்திக் கொள்ள கூடாது.   இராணுவத்தினரது   தேவையினை    தற்போதே  அரசாங்கம் முழுமையாக  புரிந்துள்ளது  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/56290

Share this post


Link to post
Share on other sites

போர்க்குற்றங்களின் நாயகனே போர்க்குற்றங்கள் நடந்ததாக ஒத்துக்கொண்டால்,  முப்படைகளின் தளபதி என்கிற வகையில் அவரல்லவா முதலில் சிறைக்குச் செல்ல வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

கள்வன் களவெடுத்தேன் என்று சொல்வதும் இல்லை.. கொலைஞன் கொலைசெய்தேன் என்றும் சொல்வதில்லை. 

இவர் தானும் இந்தச் சந்தில ஒரு சிந்து பாடிடுவம்.. சுத்தவான் ஆகிடுவம் என்று பார்க்கிறார்.

அப்பு நீவீரும் உம் குலாத்தினரும் செய்த மானுடப் படுகொலைப் பாவம்.. உங்களை சும்மா விடாது.

இன்னும் நிறைய துன்பங்களை சந்தித்தே ஆக வேண்டி இருக்கும்... உங்களின் சாவு வரை. 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, கிருபன் said:

இலங்கையில்  எவ்வித போர்  குற்றங்களும் இடம் பெறவில்லை ; மஹிந்த

சிங்கள-பௌத்தர்கள் மகா பொய்யர்கள் மகா பொய்வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெசாக் காலத்தில் நிரூபிக்கின்றனர்!

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, கிருபன் said:

யுத்தத்தை வெற்றிக் கொள்ளும் விதமாகவே சர்வதேச  போர் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பிரபல்யமாக நாடுகளில் பின்பற்றப்பட்ட  போர் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே   யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. 

இதே சட்டங்களைப் பயன்படுத்தி இலங்கையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக தலைவிரித்தாடும் சிங்கள-பௌத்த பயங்கரவாதம் zero-casualities  உடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • பாவக்காய் ஏற்கனவே கைச்சல்கறி.இதுக்கை அருமந்த மீனை போட்டு கறியை பழுதாக்க போறியள்.
    • காலத்திற்கு காலம் இனவழிப்பு, அநீதி, தமிழருக்கு எதிரான அடக்குமுறைகள் நடந்த போது, நம் இனம் அழிந்து கொண்டிருந்தபோது எதோ ஒப்புக்கு சப்பாக கூக்குரல் போட்டுவிட்டு அடங்கியிருந்ததாலே அன்றைய இளைஞர் தம் இஉயிரை துச்சமென மதித்து , தங்களுக்கு தெரிந்த  முறையில் போராட வெளிகிட்டார்கள். அரசியல்  தலைவர்களும் விமர்சிப்பதை விடுத்து ராஜாதந்திர முறையில் கைகோத்து உதவி இருந்திருக்கலாம்; மக்களும் காட்டிக்கொடுப்பதை விட்டு சேர்ந்து உழைத்திருக்கலாம். இனிமேல் அந்தப்பிழை நடவாமல் எப்படி நடந்திருந்தால், வெற்றி அடைந்திருக்கலாம் என்கிற படிப்பினையை நமக்கு கற்றுத் தந்து விட்டு போயிருக்கிறார்கள். முடிந்தால் எல்லோரும் உங்களது ஆலோசனையை பின்பற்றி, "நீங்கள் முன்னேறுங்கள், நாங்கள் விடாமல் தட்டிப்பறிப்போம்". எனும் கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து தப்ப முடிந்தால், உங்கள் திட்டம் வெற்றி பெறும். முடிந்தால் எல்லோரையும் ஒரு திட்டத்தில் கூட்டிச் சேர்க்க முயலுங்கள். சிங்களவன் பிரித்தாள்வதில் வல்லவன், நாம் சோரம் போவதைத் தவிர வேறு வழியில் செல்லாதவர்கள். வீரம் பேசி, வாக்கு சேர்த்தவர்கள் சோரம் போனதும் அதற்கு  காரணம் சொன்னதும்ந்தான் வரலாறு. பூனைக்கு யார் மணி கட்டுவது?ஆலோசனை மட்டும் போதாது, நடைமுறைப்படுத்தப் போகும்போது வரும் தடங்கல்களைக் கையாண்டு, இறுதி வரை கொண்ட கொள்கையில் தடம் புரளாமல்,  கொண்டு செல்லக்கூடியவர். அந்தத் தலைவரைத் தவிர வேறொருவரை தேடிப்பிடிக்க முடியுமா? அவர் கொண்ட கொள்கை வெற்றியடையாமல் தோற்றுபோனதற்கும், அவரது போர் வியூகங்கள் காட்டிக்கொடுப்பினால், துரோகங்களினால் பிழைத்துபோய், இழப்புகளில் முடிந்ததே. இழப்புகளை தவிர்ப்பதற்காக, பல பிழையான திட்டமிடல் இல்லாத,  உடனடி முடிவுகளை எடுக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளியது.  விக்கினேஸ்வரன் இன்று கோமாளியாக சித்திரக்கப்படுகிறார், விமர்சிக்கப்படுகிறார். எதையும் செய்ய மாட்டார்கள் விடவும் மாட்டார்கள். இவரல்ல எவர் வந்தாலும்  இதுதான் வரலாறு.  
    • விதண்டாவாதம் கதைக்காதீர்கள் ரதி, சுமந்திரனை நிறுத்தியTNA. ஆனால் அவர் கூறிவது சுமந்திரன் தவிர்ந்த மற்றய TNA வினருக்கு  வாக்களிக்கும்படி. சுமந்திரனை முன்னிறுத்திய TNA யைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட கூறப்படவில்லை 😂😂 சுமந்திரனின் பெயரைக் கூறும்போது அவரது முலுப்பெயரும் ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரன் எனக் கூறப்படுகிறது. ஏன் ? கிறீத்துவர் என்பதைச் சுட்டிக்காட்டவா ? 😏 இவர் போன்று வேறு முன்னாள் ஆயுதப் போராளிகள் பகிரங்கமாக இவ்வாறு கருத்துத் தெரிவிக்கக்கூடிய சூழல் இலங்கையில் நிலவுகிறதா ? 😀 அவ்வாறு கருத்துக் கூற முனைந்தால் அவர்கள் வீடு போய்ச் சேர்வார்களா 😜 இவ்வாறு இவர் பகிரங்கமாகக் கருத்துக் கூறுவதற்குறிய சூழலை இவருக்கு யார் ஏற்படுத்திக் கொடுத்தது ? 🤔 தேர்தலில் சுமந்திரனுக்கு வாக்கு செலுத்துவோர் எல்லோருமே துரோகிகளா ? 😏 சுமந்திரன் வென்றால் அதன் பின்னர்  என்ன கூறுவார்கள் ? ☹️ போராளிகள், முன்னாள் போராளிகள் என்பதற்காக தமிழ் இனத்தைப் பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைக்கும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்க முடியாது. 😡 அவருக்குக் கோபம் இருக்கும்போது கூடவே பொறுப்பும் இருக்கிறது. பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு கோபத்தை மட்டும் வெளிக்காட்ட முடியாது 😡
    • அரியன் முந்தி என்ன பேரிலை வந்து போனவர்? 😋