Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்; இந்திய பிரதமரிடம் எடுத்துரைக்கவுள்ளோம் - மாவை.சேனாதிராசா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்; இந்திய பிரதமரிடம் எடுத்துரைக்கவுள்ளோம் - மாவை.சேனாதிராசா

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இந்திய பிரதமரிடம் எடுத்துரைக்கவுள்ளோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சோ.மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தருகின்ற இந்தியப் பிரதமர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சந்திக்கின்றார். இந்தச் சந்திப்பில் எத்தகைய விடையத்தை கலந்துரையாடவுள்ளீர்கள் எனக்கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிணை மேற்கொண்டு குறுகிய நேரப் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாளை இலங்கை வருகின்றார். மூன்று மணித்தியாலங்கள் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன,  பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு இந்தியாவின் பிரதமராக இரண்டாவது தடவையாக பதவியேற்று முதற்தடவையாக இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

sanathi.jpg

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாதத் தலைக்குதலானது இலங்கை்கு மட்டுமல்ல அயல் நாடான இந்தியாவிற்கும் அது அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. இத் தாக்குதலின் பின்னரான சூழல் அனைத்து இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் அது மட்டுமன்றி அரசியலிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலானது இந்தியாவின் பாதுகாப்பிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான நிலையில் நாளை வரும்  பிரதமர் மோடியுடன் நீண்டகாலமாகவே இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடையத்தில் தீர்க்கமான முடிவினை எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் குறிப்பாக இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவருகின்ற தாக்குதல்கள் அடக்குமுறைகள்தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம். இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வினை பெற்றுக்கொள்வதன் மூலம் தான் இந்த நாட்டில் சர்வதேச பயங்கரவாதத்தத் தாக்குதல்கள் இடம்பெறாது தடுக்கமுடியும் என்ற விடையத்தினை நாம் சுட்டிக்காட்டுவோம்.

நீண்டகாலமாகவே இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் இனப்பிரச்சினைக்கான தீர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டநிலையில் தற்போது அவை கைவிடப்பட்டதாகவே உள்ளது. இந்தநிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலேயே எமது பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறும் என தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/57785

 

  • கருத்துக்கள உறவுகள்

senthil-goundamani-best-comedy-s.jpg

அப்படியே காது கொடுத்து கேட்டுட்டாலும். இலங்கை அரசிடம் வலியுறுத்துவம் எண்டு தேஞ்சி போன ரெக்கார்டு ..

7 hours ago, கிருபன் said:

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இந்திய பிரதமரிடம் எடுத்துரைக்கவுள்ளோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சோ.மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

மாவை கோஷ்டி தங்களின் எசமானர்களிடம் வாலை ஆட்டியபடி அரைத்த மாவை மீண்டும் அரைக்கப் போகுது!

  • கருத்துக்கள உறவுகள்

இவரும்,இவரது சகோதரரும் தமிழ்நாட்டுக்கு போய் ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்திருக்கினம்...என்னவாயிருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரா காந்தி,மனமோகன் சிங்,நரசிம்ம ராவ்,ராஜீவ் காந்தி எல்லோரிடமும் கதைத்து தீர்வு எடுத்திட்டினம் ,இப்ப இவரிடம் கதைத்து final touch up கொடுக்கப்போயினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

இவரும்,இவரது சகோதரரும் தமிழ்நாட்டுக்கு போய் ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்திருக்கினம்...என்னவாயிருக்கும்?

ஏதும் பிஸ்னஸ் அலுவலாய் இருக்கும்.....

Quote

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்; இந்திய பிரதமரிடம் எடுத்துரைக்கவுள்ளோம் - மாவை.சேனாதிராசா

ஊத்தையிலும் ஊத்தையான அரசியல்வாதி.......தூ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.