Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும் – வடக்கு பட்டதாரிகள் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும் – வடக்கு பட்டதாரிகள் கோரிக்கை!

In இலங்கை     July 26, 2019 1:47 pm GMT     0 Comments     1238     by : Litharsan

வேலையற்ற-பட்டதாரிகள்.jpg

அரசாங்கம், பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளில் அரச நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் இன்று பதிவுகளை மேற்கொண்டனர்.

வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு அரச நியமனம் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நியமனத்தில் உள்வாங்கப்படாத பட்டதாரிகளே இன்று தமது விபரங்களை பதிவு செய்துகொண்டுள்ளனர்.

அந்தவகையில், யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய உள்ளவாரி, வெளிவாரி மற்றும் எச்.என்.டி.ஏ.பட்டதாரிகள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அதேநேரம் இன்று பதிவுகளை மேற்கொள்ளாத பட்டதாரிகள் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கேட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அரச நியமனத்தில் 2017ஆம் ஆண்டு 6ஆம் மாதத்திற்குப் பின்னரான உள்வாரிப் பட்டதாரிகள், எச்.என்.டீ.ஏ. பட்டதாரிகள் மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் பலருக்கு நியமனம் வழங்கப்படவில்லை.

அரசின் இத்தகைய செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பை பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தமது பதிவுகளை மீளவும் மேற்கொண்ட பட்டதாரிகள் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடாத்தியிருத்தனர்.

இதன்போது பட்டதாரிகளிடத்தே பாரபட்சம் காட்டாமல் பட்டம் பெற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கேட்டுள்ளனர்.

http://athavannews.com/பாரபட்சம்-காட்டாமல்-வேலை/

 

 

ஒரு அரசுதான் மட்டும்தான் பட்டாதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது இல்லை.
தனியார் துறை மற்றும் தனி நபர் முயற்சி மற்றும் புதுமை வழிகளில் படித்தவர்கள் ஈடுபடலாம். 

அரசிற்கு எங்கிருந்து பணம் வருகின்றது? குறிப்பாக வரிப்பணத்தில் இருந்து.
வரிப்பணம் எங்கிருந்து வருகின்றது ? பல வழிகள், அதில் ஒன்று உழைப்பவர்கள் செலுத்தும் வரி.  தனியார் துறை வளர்ச்சியே அரச திறைசேரியை நிரப்பும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

ஒரு அரசுதான் மட்டும்தான் பட்டாதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது இல்லை.
தனியார் துறை மற்றும் தனி நபர் முயற்சி மற்றும் புதுமை வழிகளில் படித்தவர்கள் ஈடுபடலாம். 

அரசிற்கு எங்கிருந்து பணம் வருகின்றது? குறிப்பாக வரிப்பணத்தில் இருந்து.
வரிப்பணம் எங்கிருந்து வருகின்றது ? பல வழிகள், அதில் ஒன்று உழைப்பவர்கள் செலுத்தும் வரி.  தனியார் துறை வளர்ச்சியே அரச திறைசேரியை நிரப்பும். 

இலங்கை அரசுக்கு கிடைக்கும் வரி சர்வதேச கடனின் வட்டிக்கு தான் போதுமானது. அரசிற்கு மேலதிக பணம் மேலதிக கடன்களகவும் நாட்டின் வளங்களையும் நிலங்களையும் விற்பதிலும் இருந்தே வருகிறது.

இந்த உதவாக்கரை பட்டதாரிகள் தமது மோட்டார் சைக்கிள்களை விற்று கிடைக்கும் பணத்தில் பெட்டிக்கடை போட்டால் தமக்கும் வேலை பெற்று மற்றவர்களுக்கும் வேலை கொடுக்க முடியும்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு

HNDA, மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் பட்டதாரி பயிலுனர் நியமனத்தினுள் புறக்கணிக்கபட்டமையை கண்டித்தும்,பாக பிரிப்பினையை கைவிட்டு அனைத்து பட்டதாரிகளுக்கும் இவ் ஓருடத்துள் நியமனம் வழங்க வலியுறுத்தியும் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமல் தலமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு போன்றவற்றின் ஒழுங்குபடுத்தலில் (27.07.2019) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

67405802_681446735691988_650286129969574

அத்தோடு இன்றயதினம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சில் 29.07.2019 அன்று இப் பிரச்சனை சம்பந்தமாக மகஜர் ஒன்றும் கையளிப்பதற்காக பட்டதாரிகளது கையெழுத்தும் பெறப்பட்டுள் மை குறிப்பிடத்தக்து.

67135457_2429838570439068_56951076722153

https://www.virakesari.lk/article/61315

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Jude said:

 

இந்த உதவாக்கரை பட்டதாரிகள் தமது மோட்டார் சைக்கிள்களை விற்று கிடைக்கும் பணத்தில் பெட்டிக்கடை போட்டால் தமக்கும் வேலை பெற்று மற்றவர்களுக்கும் வேலை கொடுக்க முடியும்.

வன்மையாக கண்டிக்கின்றேன் .....பட்டதாரிகளை உதாவாக்கரை என்று குறிப்பிட்டமைக்கு😄.....அத்துடன் எல்லோரும் பெட்டிக்கடை போட்டால் யார் வாடிக்கையாளர்கள்.....ஏற்கனவே யாழ்ப்பாணத்து விளைநிலங்கள் எல்லாம் கடை தொகுதிகளாக நிரம்பிருக்கின்றது...

Edited by putthan

On 7/26/2019 at 9:31 PM, பரியாரி said:

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளில் அரச நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் இன்று பதிவுகளை மேற்கொண்டனர்.

இந்த பிச்சைகாரப் பட்டதாரிகள் தொல்லை நுளம்புத் தொல்லையைவிட அதிகமாக இருக்கிறது.

பாரபட்சம் பார்க்காமல் அரச வேலை வாய்ப்புக்கு கையேந்தும் இந்த பல்கலைக்கழக உள்வாரி வெளிவாரி பிச்சைகாரப் பட்டதாரிகள் ஏன் பாரபட்சம் பார்த்து க.பொ.த. உயர்தர பட்டதாரிகளையும், க.பொ.த. சாதாரணதர பட்டதாரிகளையும், ஆண்டு 5 புலமைப்பரிசில் பட்டதாரிகளையும், புறக்கணிக்கிறார்கள்?  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

அத்துடன் எல்லோரும் பெட்டிக்கடை போட்டால் யார் வாடிக்கையாளர்கள்.....

எல்லோரும் பெட்டிக்கடை போட்டிருப்பவர்கள் அல்லரே? இன்றைய வேலை வாய்ப்புள்ள பட்டதாரிகள், வேலை வாய்ப்புள்ள பட்டமற்றவர்கள், மாணவர்கள், ஓய்வு பெற்றவர்கள் ... இப்படி பலரும் பெட்டிக்கடை வாடிக்கையாளராவர். மேலும் எல்லா பெட்டிக்கடைகளிலும் எல்லா பொருட்களையும் விற்கும் அளவுக்கு பெட்டிக்கடைகள் பெரியவை அல்ல. ஆகவே பெட்டிக்கடை வைத்து இருப்பவர்களும் தம்மிடம் இல்லாதவற்றை மற்ற பெட்டிக்கடைகளில் வாங்கும் வாடிக்கையாளர் ஆவார்கள்.

4 hours ago, putthan said:

.ஏற்கனவே யாழ்ப்பாணத்து விளைநிலங்கள் எல்லாம் கடை தொகுதிகளாக நிரம்பிருக்கின்றது...

யாழ்ப்பாணத்து விளைநிலங்கள் வேலைவாய்ப்பை தருவதில்லை என்பதற்கு இது ஆதாரம் ஆகிறதல்லவா?

மேலும் பெட்டிக்கடைகள் வேலைவாய்ப்பை பலருக்கும் தரும் என்பதையும் உங்கள் ஆதாரம் நிரூபிக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.