Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தமிழர்களுக்கு கல்வியே இறுதி ஆயுதம்’

Featured Replies

-க. அகரன்

தமிழர்களுக்கு கல்வி ஒன்று தான் கையில் இருக்கும் இறுதி ஆயுதமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், அதன் மூலம் தான் தமிழர்கள் மீண்டெழ முடியுமெனவும் கூறினார்.

வவுனியா சைவ பிரகாச ஆரம்பப் பாடசாலையின் கற்றல் வள நிலையத்தை இன்று (09) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த இனத்தின் கல்வியில் தான் கை வைக்க வேண்டுமெனவும்  அதனால் தான் தமிழர்களின் இருப்பை உருக்குலைப்பதற்காக, யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், ஓர் இனம் தன்னைப் பாதுகாத்து கொள்ள வேண்டுமானால், முதலில் தன்னுடைய கலாசாரம், மொழியை பேணிக்காக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர்,  இல்லாவிடில் அந்த இனம் அழிந்துவிடுமெனவும் கூறினார்.

எங்கு சென்றாலும் எமக்கு வீடு தாருங்கள்; வாழ்வாதாரம் தாருங்கள் என்று தான் தமது மக்கள் கேட்பதாகவும் அந்த நிலை மாற்றபட்டவேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/தமிழர்களுக்கு-கல்வியே-இறுதி-ஆயுதம்/72-238164

 

Edited by ampanai

  • தொடங்கியவர்

தமிழினம் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது - சிவமோகன்

வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக  சொல்லும்போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்றுகொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

DSC_2743.JPG

வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்றையதினம் கற்றல் வளநிலையத்தை திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் கல்வியில் கை வைக்க வேண்டும். அதனால் தான் தமிழர்களின் இருப்பை உருக்குலைப்பதற்காக எமது கலாசார, விழுமியங்கள், வரலாறுகளை தாங்கி நின்ற பொக்கிசமான யாழ் நூலகம் வன் கொடுமையாளர்காளால் எரிக்கப்பட்டது.

அத்துடன் ஒரு இனம் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டுமானால் அது தன்னுடைய கலாசாரம், மொழியை பேணிக்காக்க வேண்டும் இல்லாவிடில் அந்த இனம் அழிந்ததாகவே முடியும். இன்று வெளிநாட்டு மோகத்தால் தமிழர்கள் தமது  மொழியை தொலைத்து கொண்டிருக்கிறார்கள். கலாசார ரீதியான நிகழ்வுகளை வளர்கும் செயற்பாடுகளை அவர்கள் புலம் பெயர் நாடுகளில் கடைப்பிடித்தாலும் தமது பிள்ளைகள் மூலம் மொழியை தொலைத்து கொண்டிருக்கின்றனர். 

வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக சொல்லும் போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்று கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லீம் பெண்களின் கருத்தரிப்பு வீதங்கள் முறையே  1.2, 1.4, 4.6 ஆக காணப்படுகின்றது.எனவே எமது இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் இப்போதே புரிந்துக்கொள்ள வேண்டும். நாம் மிகவும் குறைந்த வீதத்தில் உள்ள மக்கள்.

போரில் அழிவை சந்தித்த ஜப்பான் நாட்டிடம் உங்களிற்கு என்ன தேவை என்று அமெரிக்கா கேட்ட போது எமக்கு தொழில்நுட்ப கல்வி வேண்டும் என்றே கோரினார்கள். அதனாலே இன்று பொருளாதாரத்தில் அது உலக நாடுகளிற்கு போட்டியாக விளங்குகின்றது.நாமும் அழிவை சந்தித்த இனம் ஆனால் எங்கு சென்றாலும் எமக்கு வீடு தாருங்கள். வாழ்வாதாரம் தாருங்கள் என்று தான் எமது மக்கள் கேட்கிறார்கள். அந்த நிலை மாற்றபட வேண்டும். எம்மை நாம் காப்பாற்றி கொள்ள வேண்டுமானால்  கல்வியை நோக்கி எமது பிள்ளைகளை முன்னிறுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/64419

Edited by ampanai

  • தொடங்கியவர்

’உடரதல்ல தமிழ் வித்தியாலத்தை பாருங்கள்’

துவாரக்‌ஷான்

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட உடரதல்ல தமிழ் வித்தியாலயத்தை முன்னேற்றம் செய்வது குறித்து, கல்வித்துறை அதிகாரிகவும் மலையக அரசியல்வாதிகளும் கவனம் செலுத்தவேண்டும் என, பெற்றோரும் பாடசாலை சமூகமும் கோரிக்கை விடுத்துள்ளது.

image_1a330b9896.jpg

குறித்த பாடசாலையில், 130 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் 1902ஆம் ஆண்டு, தோட்ட உரக்களஞ்சியசாலையாகப் பயன்படுத்திய அறையிலேயே, மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தரம் 1-5 வரை வகுப்புகள் காணப்பட்டாலும், எந்தவொரு அடிப்படை வசதிகளும் இன்றியே மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் குறித்தப் பாடசாலையின் பின்புறத்தில், சுவர்கள் வெடித்து, ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பாடசாலையை தரம் உயர்த்தி, பாடசாலைகள் கட்டடங்கள் அமைப்பதற்கு, அப்போது கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வே.இராதாகிருஷ்ணனிடம் கோரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, இது தொடர்பாக, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/மலையகம்/உடரதல்ல-தமிழ்-வித்தியாலத்தை-பாருங்கள்/76-238272

 

13 வகுப்பறை கட்டங்கள் தேவை

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு 13 வகுப்பறைக் கட்டடங்கள் தேவையென, பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

image_7cb7f157f8.jpg

இறுதிப் போரின் போது, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முற்றாக அழிவடைந்து, போரின் பின்னர் 2012ஆம் ஆண்டு எதுவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் நிர்மாணிக்கப்பட்டது.

தற்போதுவரை 13 வகுப்பறைக்குரிய கட்டடங்கள் தேவையாகவுள்ளன. ஆனால் தற்போது தற்காலிக கொட்டகைகளிலும் தகரகொட்டகைகளிலும் எட்டு வகுப்பறைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இரத தொழில்நுட்பப் பாடங்களுக்குரிய செயற்பாடுகள், ஆலமர நிழலிலும் ஓலைக்கொட்டகையிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

http://www.tamilmirror.lk/வன்னி/13-வகுப்பறை-கட்டங்கள்-தேவை/72-238227

 

  • தொடங்கியவர்

Awarding of scholarships to 142 students from Maskeliya area to continue with higher education by the Nadarajah Foundation, facilitated by IMHO USA.

70007550_10162141582105262_3913895476553

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 1 நபரà¯, à®à®°à¯

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 11 பà¯à®°à¯, பலர௠à®à®®à®°à¯à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®©à®°à¯

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகிற்கு அறிவியலை தேடித் தேடி இன்று வாழும் எமக்கு அறிவியலை தந்த விஞ்ஞானிகள் அநேகர் பள்ளி படிப்பு போகாதவர்கள்  கல்லூரியை எட்டியும் பார்க்காதவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நாலு எழத்து படிச்சிட்டம் என்று மமதை கொண்ட கூட்டத்தல் ஈழத்து தமிழ் இனம் அழிந்து உண்மை 

On 9/9/2019 at 4:22 PM, ampanai said:

தமிழர்களுக்கு கல்வி ஒன்று தான் கையில் இருக்கும் இறுதி ஆயுதமெனத்

ம்ம்ம். அணு ஆயுதம் மாதிரி!

  • தொடங்கியவர்

பாடசாலை அலுவலகத்திற்கு விசமிகளால் தீ வைப்பு ; ஆவணங்கள் எரிந்து நாசம்

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகத்திற்கு  விசமிகளால் தீ வைக்கப்பட்டு அனைத்து  ஆவணங்களும் எரிக்கப்பட்டுள்ளன.

IMG_6625.JPG

குறித்த சம்பவம் இன்று(13-09-2019) அதிகாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலை  6.30 க.பொ.த சதாரண தர மாணவர்களுக்கு இடம்பெறுகின்ற விசேட வகுப்புக்கு மாணவர்கள் பாடசாலைக்கு சென்ற போது அதிபர் அலுவலகத்திற்குள்லிருந்து புகை வெளியேறுவதனை அவதானித்துள்ளனர். 

இதனையடுத்து மாணவர்கள் உடனடியாக வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என   ஒன்றுசேர்ந்து தீயை அணைத்து  பாதுகாக்க கூடிய  ஆவணங்கள் மற்றும் பொருட்களை பாதுகாத்துள்ளனர்.

அதிபர் அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளது. எனவே கதவினை உடைத்து  உள்ளே சென்ற விசமிகள் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்திருக்கலாம் என  பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மண்ணெண்ணை மணம் வீசுவதோடு தீப்பெட்டி ஒன்றும்  அலுவலகத்திற்குள் காணப்பட்டுள்ளது.

இந்த தீ காரணமாக பாடசாலை மாணவர்களின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், பரீட்சை பெறுபேறுகள் ஆவணங்கள், ஆசியர்கள் தனிப்பட்ட விடயங்கள் அடங்கிய கோவைகள், மாணவர்களின் வரவு பத்திரங்கள் என அனைத்து ஆவணங்களும் எரிந்து அழிந்துள்ளன. ஆனால் பாடசாலையின் கணக்கு நடவடிக்கைகள் அடங்கிய   ஆவணங்கள் கொண்ட அலுமாரி ஒன்று காப்பற்றப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் இதயசிவதாஸ் தெரிவித்தார்.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், கரைச்சிக் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.

இதையடுத்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/64735

  • தொடங்கியவர்

வீதி சீரின்மையால் பாடசாலை செல்வதில் பாரிய சிரமம்

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு கல்வி வலயத்துக்கு உட்பட்ட குமுழமுனை கிராமத்தில் உள்ள குமுழமுனை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் வீதி சீரின்மையால் பாடசாலை செல்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின்  தண்ணீரூற்று, குமுழமுனை ஊடாக அளம்பில் செல்லும் சுமார் 20 கிலோமீற்றர் ரையிலான வீதியில் குறிப்பிட்ட சில பகுதிகளே செப்பனிடப்பட்டுள்ள நிலையில் ஏனைய வீதிகள் குன்றும் குழியுமாக இன்றும் காணப்படுகின்றன. தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடம் இது தொடர்பில் தெரியப்படுத்தியும் இதுவரை இந்த வீதி செப்பனிடப்படவில்லை என, மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, குறித்த வீதியால் முறிப்பில் இருந்தும் தங்கபுரம் கிராமங்களில் இருந்தும் குமுழமுனை மகா வித்தியாலயத்துக்கு மாணவர்கள் பாடசாலை சென்றுவருவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

அத்துடன், குமுழமுனை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் 60 சதவீதமான ஆசிரியர்கள் வெளி பிரதேசங்களில் இருந்தே வருகை தருவதாகவும் அதிலும் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அதிகளவில் காணப்படுகின்றார்கள் இவர்கள் குறித்த வீதியால் பயணிப்பதில் பல்வேறு சிரமங்கள் எதிர்கொள்கின்றார்கள்.

குறித்த வீதி இதுவரை திருத்தப்படாத காரணத்தால் குமுழமுனை மகாவித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை பேருந்து சேவையினைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பஸ் சேவை ஒன்றினை வழங்க பல்வேறு தரப்பினரிடமும் பாடசாலை நிர்வாகம் கோரிக்கை முன்வைத்த நிலையில் வீதிப் பிரச்சினையை அவர்கள் காரணம் காட்டிவருகின்றார்கள். என, குமுழமுனை மகா வித்தியாலய அதிபர் ஜெயவீரசிங்கம் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/வன்னி/வீதி-சீரின்மையால்-பாடசாலை-செல்வதில்-பாரிய-சிரமம்/72-238449

  • தொடங்கியவர்

செலமர்வு

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் இலங்கை பூராவும் வருடந்தோறும் நடாத்தி வரும் க.பொ.த சாதாரணதர  மாணவர்களுக்கான கணித, விஞ்ஞான பாட கருத்தரங்கு, இன்று  கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு நடைபெற்றது.

 

image_1dff53110c.jpg

நாடு பூராவும் வருடந்தோறும் நடத்தப்பட்டு வரும் க.பொ.த சாதாரணதர  மாணவர்களுக்கான கணித, விஞ்ஞான பாட கருத்தரங்கு தொடர் , 15 மாவட்டங்கள், 77 நிலையங்கள், 220 பாடசாலைகள், 10,500 மாணவர்கள் எனும் பாரிய இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

2010ஆம் ஆண்டு மிகச்சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை  இக் கருத்தரங்கை சிறப்புற நடத்தி வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/வன்னி/செலமர்வு/72-238782

 

வலயக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

-க. அகரன்

தமது பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்து, வவுனியா மகாகச்சகொடி, மருதமடு, அலகல்லை போன்ற பகுதிகளில் வசிக்கும் பெற்றோர்கள் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தை இன்றயதினம் காலை  முற்றுகையிட்டிருந்தனர்.

image_3b84f351b6.jpg

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், தமது பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாகுறை நீண்ட காலமாக நிலவி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி தரம் வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்படுகின்றது. ஆசிரியர் நியமனங்களின் போது அனைத்து வசதிகளும் காணப்படுகின்ற தேசிய பாடசாலைகளுக்கே முக்கியத்துவம் அழிக்கபடுகின்றது. அப்படியாயின் எமது பிள்ளைகள்  எந்தவகையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும். 

நாம் வீதி கேட்கவில்லை, வீடு கேட்கவில்லை, ஆனால் எமது பிள்ளைகளுக்கு பெறுமதியான கல்வி வேண்டும் அதனையே கேட்கிறோம்,  எனவேமிக விரைவாக எமது பாடசாலைகளிற்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுப்பதுடன், வவுனியா மாவட்டத்திலிருந்து தேசிய கல்வியற்கல்லூரிகளிற்குதெரிவு செய்யபட்டு வெளியேறும் சிங்கள ஆசிரியர்களை வவுனியாவில் அமைந்துள்ள சிங்கள பாடசாலைகளிற்கே நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பாக வவுனியா வலயக்கல்வி அதிகாரி மு.இராதாகிருஸ்ணனிடம் கலந்துரையாடிய அவர்கள், மழையையும் பொருட்படுத்தாது வலயகல்வி பணிமனை முன்பாக நீண்ட நேரம் குழுமியிருந்தனர்.      

இது தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணனிடம் கேட்டபோது, அவர்களது கோரிக்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சு,  மாகாண கல்வி திணைக்களத்துக்கு தெரியப்படுத்தவுள்ளேன். அத்துடன், மிகவிரைவில் தற்காலிகமாக அவர்களிற்கு எதாவது தீர்வினை வழங்கமுடியுமா என்பது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, அவர்  தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/வன்னி/வலயக்-கல்வி-அலுவலகத்தை-முற்றுகையிட்ட-பெற்றோர்கள்/72-238777

  • தொடங்கியவர்

இலஞ்சம் பெற்ற யாழ். பிரபல பாடசாலை அதிபர் கைது

யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெற்றுக்கொண்டமைக்கான போதிய ஆதாரங்களுடன் குறித்த அதிபர் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Arresting.jpg

 

இந்த விடயம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் அனுமதிக்காக 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்கான உரிய ஆதாரத்துடன் அதிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

https://www.virakesari.lk/article/65215

  • தொடங்கியவர்

செப்டெம்பர் 21 சனிக்கிழமை,

-சுப்பிரமணிம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கல்லாறு, ஊரியான் மற்றும் மயில்வாகனபுரம் ஆகிய பகுதிகளில்  சிறுவர்களை சட்டவிரோத மணல் அகழ்வுகள்  மற்றும் கசிப்பு விற்பனை போன்ற தொழில்களுக்கு பயன்படுத்தி  வருவதாக, பிரதேச மக்களும் பொது அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்துக்குட்பட்ட கல்லாறு  ஊரியான் மற்றும் மயில்வாகனபுரம் கிராமங்களில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பொது அமைப்புகள், இந்தப் பிரதேசங்களில்  பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டிய சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை விடுத்து  சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் காடுகளில் மரங்களை வெட்டுதல் கசிபபு உற்பத்தி விற்பனை ஆகிய ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளன.

இவ்வாறு சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொள்ளாது?  அவர்களுக்கு உழைப்பு என்ற ஆசையைக்காட்டி குறைந்த வேதனங்களுடன் அவர்;களுடைய உழைப்பு சுரண்டப்படுவதுடன், ஆபத்தான தொழில்களுக்கும் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள்,  இவ்வாறு சிறுவர்களின் எதிர்காலம்குறித்து உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

http://www.tamilmirror.lk/வன்னி/சிறுவர்களைக்-கொண்டு-சட்டவிரோத-செயற்பாடுகள்-முன்னெடுப்பு/72-238988

  • கருத்துக்கள உறவுகள்
On 9/11/2019 at 4:09 AM, பெருமாள் said:

ஆனால் நாலு எழத்து படிச்சிட்டம் என்று மமதை கொண்ட கூட்டத்தல் ஈழத்து தமிழ் இனம் அழிந்து உண்மை 

இது இப்பவரைக்கும் இருக்கு 

அண்மையில் விவாதம் நடந்தது பாராளுமனறத்தில் அதாவது ரவூம் ஹக்கீம் வடமாகாணத்துக்கு 1000 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கியதாகவும் அதில் பாரிய இன விகிதாசாரமும் முறைகேடுகளும் நடந்ததாக அவர்கள் கல்வியால் வெல்லாமல் காசாலும் அரசியலாலும் வென்று சென்று கொண்டிருக்கிறார்கள்.

இவனுகள் மட்டும் அரசியல் செய்வதற்க்காக அறிக்கை மட்டும் விட்டு தமிழர்களை தின்று கொண்டிருக்கிரார்கள் படிச்ச பட்டதாரிகள் 2014 ம் ஆண்டு பட்டம் முடித்தவர்கள் இப்பதான் வேலை பெற்று இருக்கிறார்கள் பல போராட்டட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என இப்படி இருக்கு அதுவும் கிடைக்காது தேர்தல் வந்ததால் எல்லாம் ஓர் நாடக அரசியலால் நடந்து செல்கிறது 

 படிச்சவன் அரசியலுக்கு வந்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது . படிச்சவன் கூட ஜால்ரா அடிக்கிறான் படிக்காத அரசியல் வாதிகளுக்கு  காலக்கொடுமையடா 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.