Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிநவீன ஏவுகணையுடன் பசுபிக்கில் அமெரிக்க போர்க்கப்பல்- சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சி

Featured Replies

பசுபிக்கின் இராணுவசமநிலையை அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றியமைக்க கூடிய நவீன ஏவுகணையொன்றுடன் அமெரிக்காவின் போர்க்கப்பலொன்று பசுபிக்கில் நடமாடுகின்றது என ஆய்வார்கள் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கப்பிரியலி கிவ்வொட்ஸ் என்ற போர்க்கப்பல் அமெரிக்க கடற்படையின் அதிநவீன ஏவுகணையுடனும் தாக்குதலிற்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானத்துடனும் கடந்த மாதம் சான்டியாகோவிலிருந்து புறப்பட்டுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

புதிய ஏவுகணை ராடர்களின் கண்களில் மண்ணை தூவக்கூடியது எதிரிகளின் பாதுகாப்பு நிலைகளை தவிர்த்து செல்லக்கூடிய திறன் உடையது என அமெரிக்காவின் ஆயுததயாரிப்பு நிறுவனமான ராய்தியோன் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட புதிய ஏவுகணை 100 மைல்களிற்கு அப்பால் செல்லக்கூடியது,ஹெலிக்கொப்டர்களில் பொருத்தி இதனை பயன்படுத்துவதால் கப்பல்கள் தங்கள் ராடர்களிற்கு அப்பால் உள்ள இலக்குகளையும் குறிவைக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளில்லாமல் இயங்ககூடிய ஹெலிக்கொப்டர்களில் இவற்றை பொருத்தி பயன்படுத்தலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

uss-gabrielle-giffords-exlarge-169.jpeg

இந்த வகை ஆவணங்களை அமெரிக்கா பயன்படுத்த ஆரம்பித்துள்ளதை உறுதி செய்துள்ள கடற்படை அதிகாரியொருவர் அமெரிக்க கடற்படையின் தாக்குதல் வல்லமையை இது அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

பசுபிக்கில் சீனாவின் படைபலத்தை எதிர்கொண்டு மோதி தப்பிக்ககூடிய படைபலத்தை அமெரிக்காவின் பென்டகன் உருவாக்கிவருகின்றது என  பாதுகாப்பு ஆய்வாளர் திமோதி ஹெத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா குறிப்பிட்ட வகை ஏவுகணையை கப்பலில் நிறுவியுள்ளமை முக்கியமான செய்தியை தெரிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு ஆய்வாளர் கார்ல் ஸ்கூஸ்டர் மேற்கு பசுவிக்கில் தற்போது சீனா செலுத்திவரும் ஆதிக்கத்தை இது இறுதியில் முறியடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

பசுவிக்கில் சீனாவே தற்போது குறூஸ் ஏவுகணைகளில் அதிக பலம் பொருந்தியதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பசுபிக்கில் காணப்படும் சமநிலையை சரிசெய்வதற்கான அமெரிக்காவின் முதல் முயற்சியிது எதிர்காலத்தில் மேலும் பல நடவடிக்கைகள் இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆயுதங்கள் சீனாவிற்கு மாத்திரமல்ல ஆசியா பசுவிக்கிலுள்ள அமெரிக்காவின் நேசநாடுகளிற்கும் ஒரு செய்தியை தெரிவிக்கின்றன என ஆய்வாளர் ஹெத் தெரிவித்துள்ளார்.

தென்சீனா கடற்பரப்பில் தீவுகளிற்கான உரிமை மற்றும் கனியவளங்களிற்கான உரிமை கோரல்கள் காரணமாக சீனாவிற்கும் சிங்கப்பூர் வியட்நாம் போன்ற நாடுகளிற்கும் இடையில் முறுகல்நிலை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

வோசிங்டன் பசுவிக்கில் தன்னை சீனாவை விட நம்பகதன்மை மிக்க சகாவாக முன்னிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தென்சீனா கடற்பரப்பில் அமெரிக்கா தன்னை நம்பகதன்மை மிக்க சகாவாக முன்னிறுத்தி வருகின்றது,தொடர்ச்சியாக கடல்சார் களில் ஈடுபடும்  நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்கா சுதந்திரமான இந்தோ பசுவிக்கிற்கான தனது அர்ப்பணிப்பு என தெரிவித்து வருகின்றது.

இதேவேளை அப்பகுதியில் அமெரிக்காவின் பிரசன்னம் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என சீனா தெரிவித்து வருகின்றது.

https://www.virakesari.lk/article/64588

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

குறிப்பிட்ட புதிய ஏவுகணை 100 மைல்களிற்கு அப்பால் செல்லக்கூடியது,ஹெலிக்கொப்டர்களில் பொருத்தி இதனை பயன்படுத்துவதால் கப்பல்கள் தங்கள் ராடர்களிற்கு அப்பால் உள்ள இலக்குகளையும் குறிவைக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அந்த நவீன  புதிய, ஏவுகணை செலுத்தும் முறையை பார்த்து... பிரமித்து விட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்

US இன் military doctrine இப்பொது Network Centric Warfare இல் இருந்து Networked Warfare ஆக மாறிக்கொண்டிருக்கிறது.

Networked Warfare என்பது களத்தில் இருக்கும் எல்லாமே ஆகக்குறைந்தது sensor ஆகவும், பெரிய கப்பல்ககள், வானூர்திகள் போன்றவை processing centers ஆகவும், அத்துடன் செய்மதிகள் கூட sensor, processing centers ஆகவும், இவையெல்லாம் எதோ ஓர் விதத்தில் (இலத்திரனியல், ஒளி, ஒலி, லேசர் போன்றவற்றால்) இணைக்கப்பட்டு,  பல அடுக்குகளில் உபரி நிலை வழங்கப்பட்டு, உலகின் எந்த மூலையில் ஓர் censor ஓ  அல்லது processing center ஓ நிலை இழந்தாலும் அவற்றை  உலகின் வேறு எந்த மூலையில் இருக்கும்  censors, processing centers பிரதியீடு செய்யக்கூடியவண்ணம், செய்மதிகளுடன் தொடுக்கப்பட்டு, ஏறத்தாழ Internet எப்படி உபரி நிலை அதை விட பன்மடங்காக, அழிக்கப்படமுடியாத Networked மிலிடர்ட்டி platform ஆக தொழிற்ப்படும்.

இதில் மனித ராணுவமும் censors உம் processing centers.  

இதை US model செய்தும் விட்டது. இப்போது theater-specific ஆக பரிசோதிக்கிறது. 

Edited by Kadancha
correction.

  • தொடங்கியவர்

" செய்மதிகளுடன் தொடுக்கப்பட்டு,"

செய்மதிகளை பிடுங்கிவிட்டால்... இதனால் யார் அதிக உயரத்தில் செய்மதிகளை பறக்கவிடுவது என்ற யுத்தமும் நடந்துகொண்டிருக்கின்றது.

https://www.technologyreview.com/s/613749/satellite-space-wars/

அமெரிக்க இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட ஒரு புதிய பிரிவு Space Army

14 minutes ago, Kadancha said:

ஏறத்தாழ Internet எப்படி உபரி நிலை அதை விட பன்மடங்காக, அழிக்கப்படமுடியாத Networked மிலிடர்ட்டி platform ஆக தொழிற்ப்படும்

ஆனால், இவ்வரசு வைரஸ் போன்று இணையத்தில் தாக்குவதால் நடாத்துகிறார்களோ அவ்வாறு இங்கேயும் நடாத்தலாம்? 

  • கருத்துக்கள உறவுகள்

இவைஎல்லாத்துக்கும் electromagnetic bomb எனும் ஆயுதம் பூமியில் இந்த ஆயுதம் இப்போதைக்கு அதிகமா பயன்படுத்தினால் நீங்களும் நானும் பழையபடி ஓலைசுவடிகளில் இருந்துதான் தொடங்கணும் அனைத்து தரவுகளும் இல்லாமல் அல்லாடுவம் ஏற்கனவே செயற்க்கை மூளை என்று ai க்கு புகுத்தி விட்டு கும்மியடிக்கிரம் சிலவேளை பூமியின் அடியிலும் சுவீடன் போன்ற நாடுகளில் பனி மட்டும் கொட்டும் பனி பாலைவனம்களிலும் உள்ள சர்வர்கள் தப்பி பிழைத்தால் நாங்கள் மாட்டுவண்டியில் மறுபடியும் பயணம் செய்வதில் இருந்து தப்பிப்பம்  இல்லாட்டி பழையபடி வாழும் வேலும் தான் ஆயுதம் மனித இனத்துக்கு கொல்லுபட ஆயுதமாகும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பெருமாள் said:

இவைஎல்லாத்துக்கும் electromagnetic bomb எனும் ஆயுதம் பூமியில் இந்த ஆயுதம் இப்போதைக்கு அதிகமா பயன்படுத்தினால் நீங்களும் நானும் பழையபடி ஓலைசுவடிகளில் இருந்துதான் தொடங்கணும் அனைத்து தரவுகளும் இல்லாமல் அல்லாடுவம் ஏற்கனவே செயற்க்கை மூளை என்று ai க்கு புகுத்தி விட்டு கும்மியடிக்கிரம் சிலவேளை பூமியின் அடியிலும் சுவீடன் போன்ற நாடுகளில் பனி மட்டும் கொட்டும் பனி பாலைவனம்களிலும் உள்ள சர்வர்கள் தப்பி பிழைத்தால் நாங்கள் மாட்டுவண்டியில் மறுபடியும் பயணம் செய்வதில் இருந்து தப்பிப்பம்  இல்லாட்டி பழையபடி வாழும் வேலும் தான் ஆயுதம் மனித இனத்துக்கு கொல்லுபட ஆயுதமாகும் .

அறிவு கூடினால் அழியத்தானே வேணும்.

  • தொடங்கியவர்

செவ்வாய்க்கிரத்திற்கு சென்று  'அசூல்'  அடிக்க நம்மவர்கள் தயார் . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.