Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலியாவின் உளுரு மலை ஏற்றத்திற்கு தடை - கடைசி நாளில் மலையேற குவிந்த கூட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
உளுரூபடத்தின் காப்புரிமை Lisa Maree Williams / getty images Image caption உளுருவில் மலையேற்றம் தடை செய்யப்படவுள்ளதால் அங்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

ஆஸ்திரேலியாவில் ஏயர்ஸ் ராக் என பரவலாக அறியப்பட்ட உளுரு எனும் ஒரு குன்று சனிக்கிழமை முதல் வெளியாட்கள் செல்லவே தடை செய்யபட்ட இடமாக மாறிவிடும்.

நீண்ட காலமாக இந்த மலைக் குன்றின் மீது ஏற வேண்டாம் என அனான்கு பூர்வகுடி இன மக்கள் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த மலையை புனிதமாக கருதி பாதுகாத்தும் வந்தனர்.

கடந்த 2017ம் ஆண்டு, உளுரு பகுதிக்கு வருகை தந்தவர்களில் 16% சுற்றுலா பயணிகள் மட்டுமே மலையேற்றத்தில் ஈடுபட்டனர். ஆனால் தடை அறிவிக்கப்பட்ட பிறகு சமீபத்திய வாரங்களில் ஏராளமானோர் மலை ஏற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளிகிழமை மலை பகுதியில் கடும் புயல் தாக்கியதால், பல மணி நேரம் காத்திருந்து, அலுவலர்கள் மலையேற பாதுகாப்பான சூழல் நிலவுகிறது என உறுதி செய்தவுடன் நூற்றுக்கணக்கானோர் தாமதமாக மலையேறத் துவங்கினர்.

Uluruபடத்தின் காப்புரிமை Supplied Image caption மலை ஏற தடை அறிவிப்பதற்கு முன்பு கடைசியாக மலை ஏற ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

மலையேற்றம் தடை செய்யப்பட காரணம்

உளுரு மலை தளத்தின் ஆன்மிக முக்கியத்துவம், பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் காரணங்களுக்காக 2017ம் ஆண்டு உளுரு-கட்டா ஜுடா தேசிய பூங்கா வாரியம் மலையேற்றத்தை தடை செய்ய ஏகமனதாக வாக்களித்தனர்.

அனான்கு இனத்தை சேர்ந்த ஒருவர் ''உளுரு மிகவும் புனிதமான இடம். அது எங்கள் தேவாலயம் போன்றது," என பிபிசியிடம் கூறினார்.

உலகெங்கிலும் உள்ளவர்கள் இங்கு வந்து மலை ஏறுகிறார்கள். அவர்களுக்கு மலையின் மேல் மரியாதை இல்லை என ரமேத் தாமஸ் கூறினார்.

ULURU-KATA TJUTA NATIONAL PARK, AUSTRALIAபடத்தின் காப்புரிமை Mark Kolbe / getty images

தளத்தின் புனிதத்தன்மை அறிந்து சில சுற்றுலா பயணிகள் மலை ஏற வேண்டாம் என கருதி மலையின் அடிவாரத்தில் இருந்து திரும்பி சென்றுள்ளனர்.

இது ஒரு மலை. இதை ஏறியே ஆக வேண்டும் என கடந்த வாரம் மலை ஏறிய ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @olgordon

இந்த மலை பலருக்கு நல்ல நினைவுகளை அளித்திருக்கும். ஆனால் மலையேற்றத்தை தடை செய்வது பூர்வகுடி மக்களின் பல வருட துயரத்தை நீக்கும்.

கடந்த வாரம் உளுருவின் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து விடுதிகளும் நிரம்பின. பல சுற்றுலா பயணிகள் அனுமதி இன்றி பல இடங்களில் தங்குகின்றனர் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இந்த மலையேற்ற தடை, தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை ஒருபோதும் பாதிக்காது என சுற்றுலாத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Anangu man Uluruபடத்தின் காப்புரிமை AFP Image caption அனான்கு பூர்வகுடி மக்கள் நீண்ட காலமாக மலை ஏற்றத்திற்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துவந்தனர்.

கடந்த 1950ஆம் ஆண்டு, மலையேற்றத்தின்போது விபத்து ஏற்பட்டு, வெப்பம் தொடர்பான பிரச்சனைகளால் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 2018ல் ஜப்பானை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் மிகவும் நீளமான பாறை ஒன்றை என்ற முயன்றபோது உயிரிழந்தார்.

உளுரு மலை 348 மீட்டர் உயரம் கொண்டது, மிகவும் சறுக்கிவிடுகின்ற தன்மை கொண்டது.

ஆரம்பத்தில், உலகம் வடிவமின்றி இருந்தபோது இந்த வெற்றிடத்திலிருந்து மூதாதையர்கள் தோன்றி நிலம் முழுவதும் பயணித்து, அனைத்து உயிரினங்களையும் வடிவங்களையும் உருவாக்கினார்கள் என அனான்கு மக்கள் நம்புகின்றனர்.https://www.bbc.com/tamil/global-50183478

  • கருத்துக்கள உறவுகள்

ULURU-KATA TJUTA NATIONAL PARK, AUSTRALIA

 

Anangu man Uluru

நான்... ரசித்த மலைகள் மூன்று.
இந்த அவுஸ்திரேலிய மலை,  இமய மலை  &  கீரி மலை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ULURU-KATA TJUTA NATIONAL PARK, AUSTRALIA

 

Anangu man Uluru

நான்... ரசித்த மலைகள் மூன்று.
இந்த அவுஸ்திரேலிய மலை,  இமய மலை  &  கீரி மலை.

சிறியர் இவையெல்லாம் வரைபடத்தில் நிக்கும் மலைகள், வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மலை உண்டு. அதுதான் சுதுமலை.......!   😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

ULURU-KATA TJUTA NATIONAL PARK, AUSTRALIA

நான்... ரசித்த மலைகள் மூன்று.
இந்த அவுஸ்திரேலிய மலை,  இமய மலை  &  கீரி மலை.

10 minutes ago, suvy said:

சிறியர் இவையெல்லாம் வரைபடத்தில் நிக்கும் மலைகள், வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மலை உண்டு. அதுதான் சுதுமலை.......!   😁

நான் ரசிச்ச மலையெண்டால் அது கம்பர்மலை தான்.....😀

 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

சிறியர் இவையெல்லாம் வரைபடத்தில் நிக்கும் மலைகள், வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மலை உண்டு. அதுதான் சுதுமலை.......!   😁

Bildergebnis für சுதுமலை பிரகடனம்

 

Bildergebnis für சுதுமலை பிரகடனம்

ஓம்.... சுவியர், தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனின்,   
அந்த நினைவுகளை.... என்றுமே மறக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நான் ரசிச்ச மலையெண்டால் அது கம்பர்மலை தான்.....😀

 

முழுமையான சூரியனின் அழகை....முதன் முதலில் பண்ணைப் பாலத்தில் தான் கண்டேன்....!

இரண்டாவது தடவை.....உளுறு...மலையின் மீதிருந்து தான் கண்டேன்!

இனிமேல் தான்.....கம்பர் மலையிலிருந்து ...காண வேண்டும்!

 

இன்ஷா அல்லா.......!

94d611ec71a00fc31394183aa03b52f0.jpg

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

நான் ரசிச்ச மலையெண்டால் அது கம்பர்மலை தான்.....😀

இது, என்னப்பா...... புது, மலையாக  இருக்கு?
அந்த... கம்பர் மலையின் படத்தை,  ஒருக்கா... காட்டுங்கோ... 😍

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புங்கையூரன் said:

முழுமையான சூரியனின் அழகை....முதன் முதலில் பண்ணைப் பாலத்தில் தான் கண்டேன்....!இரண்டாவது தடவை.....உளுறு...மலையின் மீதிருந்து தான் கண்டேன்!இனிமேல் தான்.....கம்பர் மலையிலிருந்து ...காண வேண்டும்!

இன்ஷா அல்லா.......!

புங்கை... ஏன்? இந்த சொல்லை  பாவித்தீர்கள் 🤢
டக்கெண்டு போய்....  வாயை... கழுவி விட்டு, 
"ஓம்  நமசிவாய"  என்று, மூன்று தரம் சொல்லுங்கள்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

வாய் தவறி நமச்சிவாய சொன்னால் ... நமச்சிவாய சொன்னால் .. சூரியன் உதிக்குமா எண்டு...இடி வந்து சனம் விளக்கம் எல்லோ கேட்குது..! இன்சா அல்லா எண்டால் ... ஒருத்தரும் சத்தம் போடாயினம்!

13 hours ago, பிழம்பு said:

ஆஸ்திரேலியாவில் ஏயர்ஸ் ராக் என பரவலாக அறியப்பட்ட உளுரு எனும் ஒரு குன்று சனிக்கிழமை முதல் வெளியாட்கள் செல்லவே தடை செய்யபட்ட இடமாக மாறிவிடும்.

 

நீண்ட காலமாக இந்த மலைக் குன்றின் மீது ஏற வேண்டாம் என அனான்கு பூர்வகுடி இன மக்கள் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த மலையை புனிதமாக கருதி பாதுகாத்தும் வந்தனர்.

இந்த மலைக்கு நான் எனது நண்பருடன் சில வருடங்களுக்கு முன்னர் சென்றிருந்தேன். அது ஒரு கோடைக்காலம், தகிக்கும் வெயில் என்பதால் சுற்றுலாப்பயணிகள் குறைவாக இருந்தது.

அந்த நேரத்தில் மலையில் ஏறுவதும் தடைசெய்யப்பட்டிருந்தது. குன்றின் அடிவாரத்தைச் சற்றிப்பார்த்தோம். அபோரிஜினர் மூதாதையர் வாழ்ந்த இடங்கள், அவர்கள் வரைந்த சித்திரங்களைக் காணக்கூடியதாக இருந்தது. அதைச்சுற்றிய வீதியில் காரில் வலம் வந்ததும் இனிய அனுபவம். 

அதிகாலைச் சூரிய உதயத்தில் மஞ்சள் சார்ந்த மண்ணிற நிறத்திலும், பொழுது சாயும்போது செந்நிறத்திலும் தோற்றமளித்ததைக் காணக்கிடைத்தது.

இங்கு குறிப்பிட்டது போல அபோரிஜினல் இனத்தவருக்கு இது ஒரு புனிதமான இடம். எனவே இக்குன்றில் ஏறுவதற்குத் தடைசெய்தமை வரவேற்கத்தக்க விடயம். 

நான் அன்று எடுத்த படங்களில் இன்றும் எஞ்சிய ஒரு சில படங்கள் இவை. 😊large.FB_IMG_1572062276369.jpg.f468bf3881b0fc195e725870a433a4d4.jpglarge.FB_IMG_1572062255993.jpg.e2abf45d2d9004aff6356131c5b737e3.jpg

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மல்லிகை வாசம் said:

நான் அன்று எடுத்த படங்களில் இன்றும் எஞ்சிய ஒரு சில படங்கள் இவை. 😊large.FB_IMG_1572062276369.jpg.f468bf3881b0fc195e725870a433a4d4.jpglarge.FB_IMG_1572062255993.jpg.e2abf45d2d9004aff6356131c5b737e3.jpg

ஒரு ஐந்து வீதம் கூட இல்லாத பூர்வீக குடிகளின் நம்பிக்கையை மதித்து.. உலகின் பெரிய கல்லையே விட்டுக் கொடுப்பது தான்... சேர்ந்து வாழ்வது என்பது! போலீன் ஹான்சனால் கூட முடிவை மாற்ற முடியவில்லை! இந்த நேரத்தில் அஸ்கிரிய மஹானாயக்கரும்....ஞானாசார தேரரும் நினைவில் வந்து போகின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இது, என்னப்பா...... புது, மலையாக  இருக்கு?
அந்த... கம்பர் மலையின் படத்தை,  ஒருக்கா... காட்டுங்கோ... 😍

சிறீ அவர்களே நீங்கள் கீரிமலையையின் படத்தைக் காட்டிப் பதிவுசெய்தால், சாமியார் கம்பர்மலையைப் பக்திப் பரவசத்தோடு காட்டிப் பதிவிடுவார்.🤣

3 hours ago, புங்கையூரன் said:

ஒரு ஐந்து வீதம் கூட இல்லாத பூர்வீக குடிகளின் நம்பிக்கையை மதித்து.. உலகின் பெரிய கல்லையே விட்டுக் கொடுப்பது தான்... சேர்ந்து வாழ்வது என்பது! 

உண்மை தான், புங்கை அண்ணா. காலனித்துவ காலத்திலும் பின்னரும் பல இன்னல்களை அபோரிஜினல்கள் சந்தித்திருந்தாலும் இன்றைய அவுஸ்திரேலிய சமூகம் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது என்று தோன்றுகிறது.

மனித நாகரீக வளர்சியில் மிகவும் 'முன்னேறிய' சமூகமும், மிகவும் 'பின்தங்கிய' சமூகமும் ஒரே நாட்டில் அனுசரித்து வாழ்வதென்பது நடைமுறையில் மிகச் சவாலான காரியம். இருந்தாலும் இதை ஒரு மைற்கல்லாகக் கொள்ளலாம்.

மேலும், இங்கு பிறந்த இளைய சமுதாயமும், புதிதாகக் குடியேறுபவர்களும் இந்த 'Original Australian' பற்றி அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். இது அவர்களின் உணர்வுகளை மேலும் புரிந்து கொள்வதோடு, புதிதாகக் குடிபுகுந்த தேசத்துடனான இணைப்பை மேலும் வலுப்படுத்தவும் உதவும். 😊

Edited by மல்லிகை வாசம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, புங்கையூரன் said:

வாய் தவறி நமச்சிவாய சொன்னால் ... நமச்சிவாய சொன்னால் .. சூரியன் உதிக்குமா எண்டு...இடி வந்து சனம் விளக்கம் எல்லோ கேட்குது..! இன்சா அல்லா எண்டால் ... ஒருத்தரும் சத்தம் போடாயினம்!

மெல்லமாய் கதையுங்கோ புங்கையர்!  சைவ/இந்து சமயத்துக்கு யாழ்களத்திலை தடை வந்தாலும் வரும்.🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.