Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன, மத பேதமின்றி ஒரே குடையின் கீழான ஆட்சியை உருவாக்குவேன் -: யாழில் சஜித்

Featured Replies

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை வெளிநாட்டு உதவிகளைப் பெற்று அபிவிருத்தியில் உச்சமடைந்த மாகாணங்களாக மாற்றுவேன் எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் இன மத பேதம் இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் வாழும் அமைப்பை உருவாக்குவேன் எனத் தெரிவித்தார்.

sajith_jaffna.jpg

ஐக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் தலைமையில் நல்லூர் சங்கிலியன் புங்காவில்  இடம்பெற்றபோதே அவர் இததைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

யாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் பொருத்தவரையில் இங்கு பிரச்சனைகள் தேவைகள் பல இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அதனூடாக அபிவிருத்தியில் முதன்நிலை மாவட்டமாக இந்த மாவட்டத்தை உருவாக்குவேன்.

ஏழ்மையினை நீக்குவதற்காக சமுர்த்தி வேலைத் திட்டமொன்று நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. இதனோடு இணைந்ததாக ஐனசவித் திட்டத்தையும் வழங்கி ஏழ்மையை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.

இந்த நாட்டில் 44 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு இரண்டு இலவச சீருடையும் ஒரு பாதணியும் அதே போல பகல் போசனமும் இலவசமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளேன்.

மேலும் பாலர் பாடசாலையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்வேன். இப்பொழுது பணம் செலுத்தி தான் பாலர் பாடசாலையின் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது. பாலர் பாடசாலையின் ஆசரியருக்கு அரச சம்பளம் வழங்கப்படும். அதே போன்று உப ஆசிரியருக்கும் அரச சம்பளம் வழங்கப்படும். பாலர் பாடசாலைகளுக்கு வசேடமாக மண்டபங்களும் நிர்மாணிக்கப்படும். 

பாலர் பாடசாலைக் கல்வியை இலவசக் கல்வித் திட்டத்தோடு இணைத்து செல்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்வேன்.

மேலும் விவசாயத் துறையைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். குறிப்பாக நெல், சேனைப் பயிர்ச்செய்கை கட்டியெழுப்புவதற்கும் தேயிலை இறப்பர் தென்னை என இவை அனைத்திற்கும் தேவையான பசளையை இலவசமாக வழங்குவேன்.

யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் தொழில் நுட்பக் கல்லூரி உருவாக்கப்படும். அதே போன்று ஒரு தொழில் நுட்ப மையம், தொழில் நுட்ப புங்கா என்பனவும் உருவாக்கப்படும் இந்த தொழில் நுட்பக் கல்லூரியின் மூலமாக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற முடியும். அதனைப் போன்று தான் தகவல் தொழில் நுட்பம் ஆங்கில அறிவு என்பவற்றையும் இலவசமாக வழங்கக்க கூடிய அமைப்பாக இதனை மாற்றி அமைத்து இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

இந்த மாவட்டத்திலுள்ள சிறுகைத்தொழிலாளர்களுக்கும் பாரிய கைத்தொழில் திட்டங்களை மேற்கொள்பவர்களுக்கும் சலுகை அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். அதே போன்று யுத்தத்தின் காரணமாக தமது அவயங்களை இழந்த விசேட தேவையுடையவர்களுக்கு விசேட வேலைத் திட்டத்தை முன்னெடுப்போம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் உள்ளது. வடக்கு கிழக்கிற்கு வேறாக வெளிநாட்டு உதவித் திட்டங்களைக் கொண்டு வந்து அபிவிருத்தியில் உச்ச கட்டத்தில் திகழும் மாகாணங்களாக இந்த வடகிழக்கு மாகாணங்களை மாற்றியமைப்போம்.

எனது கொள்கைப் பிரகடனம் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை உங்களது அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் ஊடாக ஒவ்வொரு வீடுகளுக்கும் வந்து சேரும். அந்தப் புத்தகத்திலே எதிர்காலத்தில் என்னென்ன விடயங்களை இந்த நாட்டிலே நாங்கள் நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என்பது உள்ளடங்கப்பட்டிருக்கிறது.

யுத்தத்தின் பிறகு எவருமே சர்வதேச மாநாடு ஒன்றை வடக்கு கிழக்கு மாகாணங்களிலே இதுவரை நடாத்த முடியாமல் போனது. ஆகவே என்னுடைய அரசாங்கத்திலே அந்த மாநாடுகளை வடகிழக்கு மாகாணங்களிலே நடாத்துவோம்.

அதே போன்று ஒருமித்த நாட்டில் இனமத கட்சி என்ற பேதமில்லாமல் அனைவரும் தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் கீழ் வாழக் கூடிய அமைப்பை எதிர்கால அரசாங்கத்தில் நான் நிச்சயமாக உருவாக்குவேன்.

யாழ் மாவட்டத்திலே 15 பிரதேச செயலகங்கள் இருக்கிறது. 435 கிராம சேவகர் பிரீவுகள் இருக்கிறது. ஆயிரத்து 611 கிராமங்கள் இருக்கிறது. இதை உள்ளடக்கிய அனைத்து மக்களுக்கும் நிச்சயமாக அபிவிருத்தி செய்வேன். இந்த யாழ் மாவட்டத்தை அபிவிருத்தியில் உச்ச கட்டத்தில் திகழும் மாவட்டமாக நிச்சயமாக நான் மாற்றியமைப்பேன் என்றார்.

https://www.virakesari.lk/article/68550

Edited by ampanai

  • தொடங்கியவர்

"யாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் பொருத்தவரையில் இங்கு பிரச்சனைகள் தேவைகள் பல இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அதனூடாக அபிவிருத்தியில் முதன்நிலை மாவட்டமாக இந்த மாவட்டத்தை உருவாக்குவேன். "

ஒரு மாகாண இல்லை மாநில சுய ஆட்சியை வழங்கினால் மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்.

ஏற்கனவே நாடு பொருளாதார சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் பல பல இலவசங்களை வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வரும் என கூறமாட்டார்கள். காரணம், வெற்றியின் பின்னர் மக்களை மறக்க வைத்துவிடுவார்கள். 

13 hours ago, ampanai said:

ஒரு மாகாண இல்லை மாநில சுய ஆட்சியை வழங்கினால் மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்.

எவ்வாறு மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்?

13 hours ago, ampanai said:

ஏற்கனவே நாடு பொருளாதார சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் பல பல இலவசங்களை வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வரும் என கூறமாட்டார்கள். காரணம், வெற்றியின் பின்னர் மக்களை மறக்க வைத்துவிடுவார்கள். 

அது தான் வெளிநாட்டு உதவிகளை பெற்று என கூறியுள்ளாரே.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

4-D07-CF0-A-D85-C-4715-A575-7457-C33091-

  • தொடங்கியவர்
7 hours ago, Lara said:

எவ்வாறு மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்?

தமிழ் நாடு போன்று 🙂

தமக்கென சில கொள்கைகளை வகுத்து தாமே ஆளும் பொறிமுறை இருந்தால் எமது மக்கள் தாமே தம்மை வளர்த்துக்கொள்ளுவார்கள். 

7 hours ago, Lara said:

அது தான் வெளிநாட்டு உதவிகளை பெற்று என கூறியுள்ளாரே.

இவ்வளவு நாளும் உள்நாட்டு பணத்திலா ஏதாவது செய்கிறார்கள்? வெளிநாட்டு பணத்தில் தான் 'வளர்ச்சி' என்ற  திட்டம் மட்டுமே உள்ளது. ஆனால், பின்னர் சிங்கள தேசத்தையே அபிவிருத்தி செய்கிறார்கள். 

4 hours ago, ampanai said:

தமிழ் நாடு போன்று 🙂

தமக்கென சில கொள்கைகளை வகுத்து தாமே ஆளும் பொறிமுறை இருந்தால் எமது மக்கள் தாமே தம்மை வளர்த்துக்கொள்ளுவார்கள். 

தமிழ்நாடும் மத்திய அரசின் கட்டுப்பாட்டினுள் தான் உள்ளது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தமக்கு சொத்து சேர்க்கும் அளவுக்கு மக்கள் மேல் அக்கறையில்லை. தமிழ்நாட்டு மக்கள் தம்மைத்தாமே வளர்த்துக்கொள்ளும் நிலையில் தமிழகம் இல்லை.

அது போக,

சஜித் தேர்தலுக்கு முன் கூறும் அனைத்தையும் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வந்தால் செயற்படுத்துவார் என்றில்லை. ஆனாலும் சிலவற்றை கூறியுள்ளார். ஐக்கியம் என்ற சொல்லுக்கான சிங்கள சொற்பிரச்சினையை தவிர்த்து இதை வாசியுங்கள்.

மக்களுக்கு அதிகாரம்.

நாம் எம் தாய் நாட்டின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியற் சுதந்திரம் என்பவற்றை பாதுகாப்போம். அரச முடிவெடுப்பை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவோம். பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்படும். அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாகவும் வினைத்திறனுள்ளதாகவும் மாறும். வீணடிப்புகள் குறைக்கப்படும். இந்த சீர்திருத்தங்கள் சட்டத்திலும் நடைமுறையிலும் மட்டுமல்லாமல், அனைத்து இலங்கையர்களிடையேயும் உண்மையான ஒற்றுமை உருவாகுவதை உறுதி செய்யும்.

இதுபோன்று, மாகாணங்களின் அதிகாரங்கள், செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை ஜனாதிபதிகளாகிய ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் கீழ் முன்வைக்கப்பட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும். மையத்தில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதற்கும், மையமும் மாகாணங்களும் தங்களது திறன்களின் அடிப்படையில் அந்தந்த அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்காக மாகாண சபைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இரண்டாவது சபை - செனட் சபை - ஒன்று உருவாக்கப்படும்.

தேவையான நிதிகளைத் திரட்டுவதற்கும் அவற்றின் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்துவதற்கும் மாகாணங்களுக்கு தேவையான அதிகாரங்கள் இருக்கும். மாவட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மத்திய அரசின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் போது மையத்தின் முகவர்களாகவும், மாகாண அரசின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் போது மாகாணத்தின் முகவர்களாகவும் செயற்படுவார்கள். அதிகாரப் பகிர்வு அலகுகளைப் பொறுத்தவரை, உடன்பாடுகளுக்கேற்ப தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிகாரப் பகிர்வை மிகவும் அர்த்தமுள்ளதாகவும் செலவு குறைந்ததாகவும் ஆக்குவோம்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 6 people, people smiling, people standing

இது மட்டு நகரில் இன்று நடந்த கூட்டம் 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

Image may contain: 6 people, people smiling, people standing

இது மட்டு நகரில் இன்று நடந்த கூட்டம் 🤣🤣🤣

இன்று மூன்று இடத்தில் கூட்டம் மட்டக்களப்பில் , களுதாவளையில் , கல்முனையில்  எனது வாக்கு சுற்றியிருக்கும் கூட்டத்தினரால் மாறிவிட்டது இப்படி கனபேர் கிழக்கில் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்று மூன்று இடத்தில் கூட்டம் மட்டக்களப்பில் , களுதாவளையில் , கல்முனையில்  எனது வாக்கு சுற்றியிருக்கும் கூட்டத்தினரால் மாறிவிட்டது இப்படி கனபேர் கிழக்கில் 

இது கல்லடியிலாம் ...புல்லாவை தவிர மற்ற முஸ்லீம் தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் நிக்கினம்...காத்தான்குடியை புல்லா குடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரோ🙂 தெரியாது கல்லடியில்  கூட்டம் வைக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

இது கல்லடியிலாம் ...புல்லாவை தவிர மற்ற முஸ்லீம் தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் நிக்கினம்...காத்தான்குடியை புல்லா குடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரோ🙂 தெரியாது கல்லடியில்  கூட்டம் வைக்கினம் 

அதுவும் பாலத்தின் கீழ் உள்ள ஒரு ஹோட்டல் அருகாமையில் மட்டக்களப்பில் கன இடங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் வந்துதான் கூட்டம் வைக்கிறார்கள் சஜித் ஐயாக்கு 

3 hours ago, ரதி said:

இது மட்டு நகரில் இன்று நடந்த கூட்டம் 🤣🤣🤣

 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்று மூன்று இடத்தில் கூட்டம் மட்டக்களப்பில் , களுதாவளையில் , கல்முனையில்  எனது வாக்கு சுற்றியிருக்கும் கூட்டத்தினரால் மாறிவிட்டது இப்படி கனபேர் கிழக்கில் 

ஹக்கீமின் Twitter பக்கத்துக்கு சென்றால் சஜித்துக்கான பிரச்சார கூட்டங்கள் பலவற்றின் படங்களை பார்க்கலாம். முஸ்லிம்கள் சேர்ந்து நின்று அரசிடமிருந்து பலவற்றை பெறுவதில் கைதேர்ந்தவர்கள்.

அதே நேரம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது நடக்கும்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Lara said:

 

ஹக்கீமின் Twitter பக்கத்துக்கு சென்றால் சஜித்துக்கான பிரச்சார கூட்டங்கள் பலவற்றின் படங்களை பார்க்கலாம். முஸ்லிம்கள் சேர்ந்து நின்று அரசிடமிருந்து பலவற்றை பெறுவதில் கைதேர்ந்தவர்கள்.

அதே நேரம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது நடக்கும்.

அதன் பின்னர் முஸ்லிம்களை சிங்களம் அழிக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Lara said:

 

ஹக்கீமின் Twitter பக்கத்துக்கு சென்றால் சஜித்துக்கான பிரச்சார கூட்டங்கள் பலவற்றின் படங்களை பார்க்கலாம். முஸ்லிம்கள் சேர்ந்து நின்று அரசிடமிருந்து பலவற்றை பெறுவதில் கைதேர்ந்தவர்கள்.

அதே நேரம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது நடக்கும்.

முஸ்லிம்களை வைத்து தமிழர்களை, சிங்களம் அழிக்க நினைக்கும்...அதே தமிழர்களை வைத்து முஸ்லிம்களை அடக்க நினைக்கும்..."தக்கன பிழைக்கும்" ...இப்பத்தைய இலங்கை அரசியல் நிலவரத்தின் படி முதலில்  முஸ்லிம்கள் இல்லாமல் போக வேண்டும் என்பதே சிங்களம் விரும்புகின்றது...அதன் பின்னரே தமிழர்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.