Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்

Featured Replies

எமது மக்கள் நாட்டின் எதிர் காலத்தையும் பாதிக்காமல் செயற்படக்கூடியரையே ஜனாதிபதி யாக தெரிவு செய்ய வேண்டும் மாறாக ஒரு சர்வாதிகாரி யை அல்ல என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்

sambanthan.jpg

திருகோணமலை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் 

அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது 

பலர் எதை தெரிவித்தாலும் எமது மக்களின் பிரச்சினையை தீர்க்க அர்ப்பணிப்புடன் பல தசாப்தங்களாக அயராது செயற்பட்டு வருகிறோம் எதிர் காலத்திலும் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒருவரையே ஜனாதிபதியாக தெரிவுசெய்யவேண்டும் 

தற்போது போட்டியிடுபவர்களில் சஜித் பிரேமதாச ஒருமித்த நாட்டிற்குள் உச்சபச்ச அதிகாரப் பகிர்வுடனான அரசியல் அமைப்பு மாற்றத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார் 

ஆனால் கோத்தாபய முற்றிலும் சிங்கள மக்களின் வாக்கிலே வெல்வேன் என கூறி வருகிறார் இந்த நிலைப்பாடு தமிழ் மக்களின் நீண்டநாள் போராட்டத்திற்கு தீர்வை தராது மட்டும் அல்லாது இந்தநாட்டிற்கும் பொருந்தாதாது

கோத்தாபய கடந்த காலங்களில் ஒரு சர்வாதிகாரி யாக செயற்பட்டு எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படத்திய சர்வாதிகாரி. நாம் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருவது எமது உரிமைக்காக அதனை விடுத்து அவரிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது 

மூதூரில் நடந்த 17 பணியாளர்களின் படுகொலைக்கு யார் பொறுப்பு அதற்கு வழங்கப்பட தீர்வு என்ன இங்கு நடந்த 5 மாணவர்கள் படுகொலை யாரின் காலத்தில் நடந்தது அதற்கு இவர்கள் வழங்கிய தீர்வு என்ன. இந்நிலையில் சின்னப்பொடியனான நாமல கிராமம் தோறும் சென்று வக்கு கேட்கின்றார் 

ஆதலினால் இவ்விடயங்களை கருத்தில் கொண்டு எமது பிரச்சினை களை சுதந்திரமாக பேசவல்ல சஜித்திற்கு 95வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் 

நீங்கள் நிராகரிக்க நினைக்கும் ஒரு வாக்கும் அது கோத்தாவிற்கே சேரும் எனவும் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/68829

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ampanai said:

எமது மக்கள் நாட்டின் எதிர் காலத்தையும் பாதிக்காமல் செயற்படக்கூடியரையே ஜனாதிபதி யாக தெரிவு செய்ய வேண்டும் மாறாக ஒரு சர்வாதிகாரி யை அல்ல என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்

உங்களுக்கென்ன????
ஒவ்வொரு லெக்சனுக்கும் வந்து வீரவசனம் பேசுவியள். எல்லாம் முடிஞ்சாப்பிறகு கொழும்பு விட்டிலை குறட்டை விட்டுக்கொண்டு பிரண்டு பிரண்டு படுக்க வேண்டியதுதான்.

  • தொடங்கியவர்
1 hour ago, ampanai said:

மூதூரில் நடந்த 17 பணியாளர்களின் படுகொலைக்கு யார் பொறுப்பு அதற்கு வழங்கப்பட தீர்வு என்ன இங்கு நடந்த 5 மாணவர்கள் படுகொலை யாரின் காலத்தில் நடந்தது அதற்கு இவர்கள் வழங்கிய தீர்வு என்ன. இந்நிலையில் சின்னப்பொடியனான நாமல கிராமம் தோறும் சென்று வக்கு கேட்கின்றார் 

நீங்கள் அதற்கு என்ன செய்தீர்கள் ???????

"அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எமது போராட்டத்தை பார்வையிடவுள்ளதாக எம்மிடம் தெரிவித்திருக்கின்றார்கள். அதேவேளை சில சர்வதேச ஊடகவியலாளர்களும் எமது ஆயிரம் நாள் போராட்டத்திற்கு வருகை தரவுள்ளனர். எமது போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவினை வழங்குமாறு கோருவதாகவும் இன்று பிற்பகல் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்."

 

நீங்கள் எவ்வளவு காலத்துக்கு இதையே சொல்லி சொல்லி மக்களை ஏமாத்தப்போகிறீர்கள். இனவாதிகள் இரண்டு பக்கமும் இருக்கிறார்கள். இருந்தாலும் ராஜபக்ஷே பக்கம்தான் மோசமான இனவாதிகள் இருக்கிறார்கள். ரணில் எதாவது தீர்வு திடடத்தை கொண்டு வந்தால் இவர்கள் தடுத்து விடுவார்கள்.

ராஜபக்ஷே தீர்வை கொண்டுவர தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஆதரவு தரவில்லை எண்டு கூறுகிறார்கள். ரணிலுக்கு சந்தர்ப்பம் கொடுத்ததுபோல இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் என்ன? யுத்தம் முடிந்தபின்னர் இவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் என்ன? இதட்கு முன்னர் இவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவர்கள் தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. இது எனது தனிப்படட அபிப்பிராயம். இல்லாவிட்ட்தால் இதட்கு ஒரு முடிவு varum எண்டு நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு வருடங்களுக்கு முன்னர் வரைந்த படம்

D66528-DC-BC96-406-E-AC38-7-A19-C942-C48

15 hours ago, ampanai said:

நீங்கள் அதற்கு என்ன செய்தீர்கள் ???????

அவரை ஏன் கேட்கிறீர்கள்? 

Sampanthan refused to answer calls as LTTE political heads faced final moments

https://www.tamilguardian.com/content/sampanthan-refused-answer-calls-ltte-political-heads-faced-final-moments

இதை வாசித்தால் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

17 hours ago, ampanai said:

நீங்கள் நிராகரிக்க நினைக்கும் ஒரு வாக்கும் அது கோத்தாவிற்கே சேரும்

இது உண்மை. இதை கருத்தில் கொண்டு மக்கள் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும்.

17 hours ago, ampanai said:

இந்நிலையில் சின்னப்பொடியனான நாமல கிராமம் தோறும் சென்று வாக்கு கேட்கின்றார் 

நாமல் சின்னப்பெடியனாக இருந்தாலும் வடக்கு கிழக்கில் ஆதரவை திரட்டி வருகிறார்.

யாழ்ப்பாணத்திலேயே இப்படி நிலை.

EIhcpHdU0AEKVYA?format=jpg&name=medium

EIhcpHgU4AAbBbq?format=jpg&name=medium

  • தொடங்கியவர்

முதல் முறையாக தமிழில் உரையாற்றிய கோத்தபாய ..!

 

 

சம்பந்தரும் சுமந்திரனும் சிங்களத்தில் பேச வேண்டும்  🙂 

  • தொடங்கியவர்

யாழில் தேரேறி வலம்வந்தார் சஜித்

 

16 minutes ago, ampanai said:

 

 

வாக்குகளுக்காக அவர்கள் தமிழ் கதைப்பார்கள். “நாளை நமதே இந்த நாளும் நமதே” என்ற பாடலை மாற்றி “நாளை நமதே இந்த நாடும் நமதே” என கூறி வாக்கு கேட்கும் மகிந்த. 😀

  • தொடங்கியவர்

பிரேமதாசவின் காலத்திலும் வெள்ளை வேன் இருந்தது ; மஸ்தான் எம்பி

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் கூட வெள்ளை வேனும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68903

49 minutes ago, ampanai said:

பிரேமதாசவின் காலத்திலும் வெள்ளை வேன் இருந்தது ; மஸ்தான் எம்பி

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் கூட வெள்ளை வேனும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68903

நீங்கள் கோத்தா வெல்ல வேண்டும் என விரும்புவதால் கோத்தா ஆதரவாளர்களின் செய்திகளை இணைத்து வருகிறீர்கள்.

வெள்ளை வான் முன்பே இருந்தது, கறுப்பு, பச்சை வான்களும் இருந்தன, 86,87 இல் ஆட்களை கடத்திய Morris Minor காரும் இருந்தது என முன்பு கோத்தாவே கூறியிருந்தார்.

ஆனால் மகிந்த & கோ காலத்தில் வெள்ளை வான் பயன்பாடு எவ்வாறு இருந்தது, அதனால் தமிழர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பது பலருக்கும் தெரிந்தது.

இத்தேர்தலில் ரணசிங்க பிரேமதாசா போட்டியிடவில்லை. சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார்.

கீழேயுள்ள வீடியோவை இன்னொரு திரியில் நுணாவிலானும் இணைத்திருந்தார். இப்படியானவரை தான் வெல்ல வைக்க முயல்கிறீர்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.