Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ: விடுதலை புலிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்பியவர் - விரிவான தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ: விடுதலை புலிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்பியவர் - விரிவான தகவல்கள்

கோட்டாபய ராஜபக்ஷ Image captionகோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையின் 7வது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

வரலாற்றில் முதற்தடவையாகவே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியொன்றிலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கையின் யுத்த காலத்தில் அதிகமாக முணுமுணுக்கப்பட்ட பெயர் கோட்டாபய ராஜபக்ஷ. இலங்கையை கடந்து சர்வதேச அளவில் அந்தப் பெயர் உச்சரிக்கப்பட்டது. இலங்கை போரை அரசு சார்பில் முன்னெடுத்தவர் கோட்டாபய.

இப்போது இலங்கை அதிபராக பொறுப்பேற்க இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ யார்? அவரது கடந்த காலம் என்னவாக இருந்திருக்கிறது? இலங்கையில் யுத்த காலத்தில் அவர் பங்கு என்ன? - இந்தக் கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்திலுள்ள ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய எனும் பகுதியில் 1949ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் தேதி அரசியல்வாதியான டி.ஏ.ராஜபகஷ தம்பதியினருக்கு நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ பிறந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் சகோதரனாக கோட்டாபய ராஜபக்ஷ பிறந்தார்.

தனது ஆரம்ப கல்வியை கொழும்பு ஆனந்த கல்லூரியில் கோட்டாபய ராஜபக்ஷ பயின்றுள்ளார்.

ராணுவ வாழ்க்கை

1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி கேடட் அதிகாரியாக இலங்கை ராணுவத்தில் இணைந்து, தனது ராணுவ பயணத்தை கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ஷ 1972ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி இலங்கை ராணுவத்தின் இரண்டாம் நிலை லெப்டினனாக பதவிவுயர்த்தப்பட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை ராணுவத்தின் ஸ்ரீலங்கா சிங்ஹ ரெஜிமென்ட், ரஜரட்ட ரயிபைல்ஸ் ஆகிய படைப்பிரிவுகளில் கடமையாற்றிய அவர், 1983ஆம் ஆண்டு ராணுவத்தின் கஜபா ரெஜிமென்ட்டில் இணைந்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ, தனது 20ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் இலங்கை ராணுவத்திற்காக ஆற்றிய சேவைக்காக அந்த காலப் பகுதியில் ஆட்சி பீடத்தில் இருந்த மூன்று ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன், ரணசிங்க பிரேமதாஸ மற்றும் டி.பி.விஜேதுங்க ஆகியோரிடம் விருதுகளையும் பெற்றுள்ளார்.

1983ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலப் பகுதியில் இலங்கை ராணுவத்தில் முன்னின்று கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தின் பல பிரிவுகளில் கட்டளை தளபதியாகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

இந்த நிலையில், பாதுகாப்புத் துறையில் பல உயரிய பதவிகளை வகித்த அவர், 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

அமெரிக்க பிரஜை உரிமை

இலங்கை ராணுவத்திலிருந்து 1992ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, அந்த காலப் பகுதியிலேயே அமெரிக்காவிற்கு குடியேறி அமெரிக்க பிரஜை உரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிககா என்று இரட்டை பிரஜை உரிமையை பெற்றவராக கோட்டாபய ராஜபக்ஷ திகழ்ந்தார்.

பாதுகாப்பு செயலாளர் பதவி

தனது சகோதரனான மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, அமெரிக்க பிரஜை உரிமையை பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை நோக்கி மீண்டும் வருகைத் தந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ, அந்த ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார்.

உள்நாட்டு யுத்தம் வலுப் பெற்றிருந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படுகின்றார்.

விடுதலைப் புலிகளின் கொலை முயற்சி

பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்யும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது.

கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதியில் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி கோட்டாபய ராஜபக்ஷ பயணித்த வாகன தொடரணி மீது, தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் கோட்டாபய ராஜபக்ஷ உயிர் தப்பியிருந்த பின்னணியில், அந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருந்ததுடன், 14 பேர் காயமடைந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்ய கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரயத்தனத்தை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டது.

யுத்த குற்றச்சாட்டு

ஈழப் போரின் போது, இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களை கொலை செய்ய உத்தரவிட்டதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அத்துடன், வெள்ளை வேனில் பலர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தொடர்பு காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.

கோட்டாபய ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைAFP

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக தமிழ் இளைஞர் ஒருவரும், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்ததாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்திருந்தது.

கனடா பிரஜையான ரோயி சமாதானம் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சித்திரவத்தைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டது.

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் அன்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அமெரிக்கா - கலிபோர்னியா நீதிமன்றத்திலேயே இந்த இரண்டு சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேலும், தனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவின் பெயரில் அமைக்கப்பட்ட அருங்காட்சியக நிதியில் மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் வழக்கொன்றும் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து

இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட முடியாது என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இலங்கை இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்யும் ஆவணத்தை இந்த ஆண்டில் ஆரம்பத்தில் சமர்ப்பித்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ

இதன்படி, அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்யும் வகையில் கோட்டாபய ராஜபக்ஷவினால் விண்ணப்பிக்கப்பட்டிருந்த ஆவணத்திற்கு அமெரிக்கா கடந்த மே மாதம் 3ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்காவிற்கான வெளிநாட்டு பிரஜாவுரிமை சேவை திணைக்களத்தின் முத்திரையுடன் அமெரிக்கா இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும், தேர்தல் காலங்களிலும் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் சர்ச்சைகள் வெளியாகியிருந்தன.

அமெரிக்க பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டதுடன், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று நாட்கள் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே தேர்தல் நடைபெற்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.  

https://www.bbc.com/tamil/sri-lanka-50451207

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்யும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது.

அது தற்கொலை தாக்குதல் அல்ல. கிளைமோர் தாக்குதல். மேலும் அதற்குப் புலிகள் உரிமை கோரி இருக்கவும் இல்லை. அது ஹிந்திய றோவின் தாக்குதல் என்று பேசப்பட்டதும் உண்மை. இருக்கலாம்.

சரத் பொன்சேகா மீதான தாக்குதல் தான் தற்கொலை தாக்குதல் என்று சொல்லப்பட்டது. மீண்டும் புலிகள் அதற்கும் உரிமை கோரி இருக்கவில்லை.

சந்திரிக்கா அம்மையார் மீதான தாக்குதல்..

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் இன்றைய சனாதிபதி.. மைத்திரியை இலக்கு வைத்த தாக்குல் என்று தென்னிலங்கையில் பல தாக்குதல் சிங்கள கடும்போக்கு பேரினவாத ஆட்சியாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டே உள்ளன.

அவற்றிற்கு எல்லாம் புலிகள் தான் காரணம் என்றும் அறுதிஇட்டுக் கூறிவிட முடியாது. 

உந்த பிபிசி ஊடகவியலாளர்கள் ஆக தரம்கெட்டு போயிட்டீனம்.  

பிபிசிட மூன்றாம்தர ஊடகவியலாளர்கள் தெரிவு செய்ற ஆட்களும் கேக்கிற கேள்வியும் போடுற செய்திகளும் கேவலமாக இருக்கு.

ஹிந்தியனுக்கு துதிபாடுறதுல உந்த பிபிசி ஊடகவியலாளர்கள் காலத்தை கழிக்கீனம்.
ஹிந்தியன்ட கையால் வரதரை பேட்டி கண்டிச்சீனம்.
பிறகு ராம் என்ற ஒராளை பேட்டி கண்டிச்சீனம்.
இப்ப புலிகளை இழுத்து கோத்தாவை தமிழருக்கு எதிரா சிண்டுமுடிஞ்சு இண்டியன் பின்னால வருவாரோ என்டு நூல் விட்டு பாக்கீனம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Rajesh said:

உந்த பிபிசி ஊடகவியலாளர்கள் ஆக தரம்கெட்டு போயிட்டீனம்.  

பிபிசிட மூன்றாம்தர ஊடகவியலாளர்கள் தெரிவு செய்ற ஆட்களும் கேக்கிற கேள்வியும் போடுற செய்திகளும் கேவலமாக இருக்கு.

ஹிந்தியனுக்கு துதிபாடுறதுல உந்த பிபிசி ஊடகவியலாளர்கள் காலத்தை கழிக்கீனம்.
ஹிந்தியன்ட கையால் வரதரை பேட்டி கண்டிச்சீனம்.
பிறகு ராம் என்ற ஒராளை பேட்டி கண்டிச்சீனம்.
இப்ப புலிகளை இழுத்து கோத்தாவை தமிழருக்கு எதிரா சிண்டுமுடிஞ்சு இண்டியன் பின்னால வருவாரோ என்டு நூல் விட்டு பாக்கீனம்.

 

இது பிபிசி தமிழின் வேலை தான்.

பிபிசி ஆங்கிலம் கூட இப்படி செய்யவில்லை.

அவர்கள் கோத்தாவின் மனித உரிமை மீறல்களை ஞாபகப்படுத்தி இருப்பதோடு.. தமிழ் மக்கள் அவரை நிராகரித்திருப்பதற்கு முதன்மை அளித்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மேலும் போர் சம்பந்தப்பட்ட காணொளி.. அதில் ஐநா பணியாளர்களின் செய்தியையும் இணைத்துள்ளனர்.

ஆனால்.. 

பிபிசி தமிழ் ஹிந்திய றோ கைக்கூலிகளின் கைக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கிறது கடந்த பத்தாண்டுகளாக.. என்று சொல்லலாம்.

முன்னர் ஈழத்தமிழர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிருந்த உண்மைத் தன்மை.. இப்போ பிபிசி தமிழிடம் இல்லை.

இதனை பிரதான பிபிசி நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால்.. இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடும்.

பிபிசி பிரதான ஆங்கிலச் செய்தி இப்படி உள்ளது..

https://www.bbc.co.uk/news/world-asia-50449677

Analysts say Mr Rajapaksa was the clear victor in Sinhalese majority areas while Mr Premadasa scored better in the Tamil-dominated north.

He is popular among Sinhalese-dominated parts of the island, but is disliked by Tamils because of his alleged links to human rights abuses carried out during the final stages of the civil war.

He was in power when thousands of people - particularly Tamils - went missing in what have been described as enforced disappearances between 2005 and 2015.

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இனி bbc தமிழ் என்பதை விட bbc ரோ தமிழ் என்று போடுவது நல்லது இனி அவர்களின் இணைப்பை இங்கு இணைக்கும் போது அதே பெயருடன் இணைக்கலாமா என்று யோசிக்கிறன் .

On 11/17/2019 at 1:42 PM, nedukkalapoovan said:

பிபிசி ஆங்கிலம் கூட இப்படி செய்யவில்லை.

அவர்கள் கோத்தாவின் மனித உரிமை மீறல்களை ஞாபகப்படுத்தி இருப்பதோடு.. தமிழ் மக்கள் அவரை நிராகரித்திருப்பதற்கு முதன்மை அளித்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மேலும் போர் சம்பந்தப்பட்ட காணொளி.. அதில் ஐநா பணியாளர்களின் செய்தியையும் இணைத்துள்ளனர்.

சிங்களவர்கள் BBC க்கு எதிராக petition ஆரம்பித்து கையொப்பம் திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். 

https://www.change.org/p/director-general-of-bbc-stop-bbc-fake-news-about-sri-lankan-tamil-genocide-their-material-is-encouraging-hatred

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.