Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு: "சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு: "சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்"

கோட்டாபயபடத்தின் காப்புரிமைUDAYASHANTHA GUNASEAKRA

சிங்கள பெளத்த பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேசியுள்ளார்.

அனுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விகாரையில் திங்கள்கிழமை நடந்த விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், தாம் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயவின் சகோதரருமான மஹிந்தவின் பிறந்தநாள் இன்று என்பதால் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆகியுள்ள கோட்டாபய தமது பதவியேற்பின்போது ஆற்றிய உரையில்,

தமிழர்களின் வாக்குகளையும் தான் எதிர்பார்த்த போதிலும், தான் எதிர்பார்த்தளவு தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று கூறினார்.இனிவரும் காலங்களிலாவது தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழர்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தனது முதலாவது திட்டம் எனவும் அவர் கூறினார்.சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற, லஞ்ச ஊழல் அற்ற ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.அத்துடன் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு வெளிநாடுகளிடம் கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.

கோட்டாபயபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய

யார் இந்த கோட்டாபய ராஜபக்ஷ?

இலங்கையின் யுத்த காலத்தில் அதிகமாக முணுமுணுக்கப்பட்ட பெயர் கோட்டாபய ராஜபக்ஷ. இலங்கையை கடந்து சர்வதேச அளவில் அந்தப் பெயர் உச்சரிக்கப்பட்டது. இலங்கை போரை அரசு சார்பில் முன்னெடுத்தவர் கோட்டாபய.

இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்திலுள்ள ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய எனும் பகுதியில் 1949ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் தேதி அரசியல்வாதியான டி.ஏ.ராஜபகஷ தம்பதியினருக்கு நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ பிறந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் சகோதரனாக கோட்டாபய ராஜபக்ஷ பிறந்தார்.

1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி கேடட் அதிகாரியாக இலங்கை ராணுவத்தில் இணைந்து, தனது ராணுவ பயணத்தை கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ஷ 1972ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி இலங்கை ராணுவத்தின் இரண்டாம் நிலை லெப்டினனாக பதவிவுயர்த்தப்பட்டுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் ஸ்ரீலங்கா சிங்ஹ ரெஜிமென்ட், ரஜரட்ட ரயிபைல்ஸ் ஆகிய படைப்பிரிவுகளில் கடமையாற்றிய அவர், 1983ஆம் ஆண்டு ராணுவத்தின் கஜபா ரெஜிமென்ட்டில் இணைந்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ, தனது 20ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் இலங்கை ராணுவத்திற்காக ஆற்றிய சேவைக்காக அந்த காலப் பகுதியில் ஆட்சி பீடத்தில் இருந்த மூன்று ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன், ரணசிங்க பிரேமதாஸ மற்றும் டி.பி.விஜேதுங்க ஆகியோரிடம் விருதுகளையும் பெற்றுள்ளார்.

ராஜபக்‌ஷ்

1983ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலப் பகுதியில் இலங்கை ராணுவத்தில் முன்னின்று கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தின் பல பிரிவுகளில் கட்டளை தளபதியாகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

இந்த நிலையில், பாதுகாப்புத் துறையில் பல உயரிய பதவிகளை வகித்த அவர், 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலங்கை ராணுவத்திலிருந்து 1992ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, அந்த காலப் பகுதியிலேயே அமெரிக்காவிற்கு குடியேறி அமெரிக்க பிரஜை உரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிககா என்று இரட்டை பிரஜை உரிமையை பெற்றவராக கோட்டாபய ராஜபக்ஷ திகழ்ந்தார்.

தனது சகோதரனான மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, அமெரிக்க பிரஜை உரிமையை பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை நோக்கி மீண்டும் வருகைத் தந்தார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ, அந்த ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார்.

உள்நாட்டு யுத்தம் வலுப் பெற்றிருந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படுகின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50456226

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா தன்னை எப்போதுமே சிங்கள பெளத்த இனத்தின் தலைவன்.. மன்னன் என்ற கற்பிதத்தோடு காண்பிக்க விரும்புபவர். அது மகிந்த குடும்பத்தின் நினைப்பும் கூட.

இந்தப் போர்க்குற்றவாளிக்கு.. இனப்படுகொலையாளுக்கு தமிழ் மக்கள் எந்த வகையிலும் முண்டுகொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மகிந்தவையே பார்த்த தமிழ் மக்களுக்கு... இவரை சமாளிப்பது கடினம் அல்ல.

ஆனால்.. உலகத் தமிழினம்.. ஒற்றிணைந்து.. ஒத்த குரலில்.. இந்தப் போர்க்குற்றவாளியை தண்டிக்க சர்வதேசத்தை தொடர்ந்து.. கோருவது மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்கு வழிவகுக்கும். 

தமிழ் , முஸ்லிம் மக்களிடம் ஜனாதிபதி கோத்தாபய தனது முதலவாது உரையில் விசேட வேண்டுகோள் !

மன்னர் ஆட்சிக்கு பெயர்போன பௌத்தர்களின் புனித பூமியாக கருதப்படும் அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய பௌத்த விஹாரை  வளாகத்தில், இன்று முற்பகல் 11.48 மணிக்கு நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.

gotabaya.jpg

இதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ,

ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரமே நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

இந்த வெற்றியில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களும் பங்குதாரர்களாக வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன்.ஆனால் நினைத்தது போன்று எமக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

எனினும் நாட்டின் ஜனாதிபதியாக முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன்.

நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.

மேலும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த விடயங்கள் உட்பட தேர்தல் வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றுவேன்.

எனது வெற்றிக்காக கடுமையாக உழைத்த எதிர்க் கட்சித் தலைவரும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்பதுதோடு அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் கட்சியை உருவாக்கி இந்நிலைக்கு கொண்டுசென்ற கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

எனது வெற்றிக்காக கைகோர்த்த அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் என அனைவருக்கு நன்றியை கூறிக்கொள்கின்றேன்.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நான் பாதுகாப்பேன். பயங்கரவாதம், தீவிரவாதத்துக்கு எனது ஆட்சியில் இடமில்லை.

பாதுகாப்பு அமைச்சராக நானே செயற்படுவேன். நிறைவேற்று அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவேன்.

எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு ஊழல் மோசடி குற்றச் செயல்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், போதைப்பொருள் கடத்தல்கள், பாதாள குழுக்களின் செயற்பாடுகள் எதுவும் இடம்பெற இடமளிக்கமாட்டேன்.

நான் எனது நாட்டை அன்பு செய்கின்றேன். அதனால் எனது ஆட்சியின் எந்தவொரு ஊழல் மோசடிகளும் இடம்பெறாது.

https://www.virakesari.lk/article/69176

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ஏராளன் said:

சிங்கள பெளத்த பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேசியுள்ளார்.

வெற்றியீட்டிய பின்னரான ஆரம்ப உரையே இன/மதவாதமாக இருக்கின்றது.
தமிழ்மக்கள்  கோத்தபாயவிற்கும் வாக்களித்து இனவாதம் பார்க்காமல் மதவாதம் பார்க்காமல் சிங்கள பௌத்த சுஜித்திற்கும் பெரும்பானமையாக வாக்களித்துளார்கள்.
தமிழர்கள் இனவாதம் பார்த்திருந்தால் சிவாஜிலிங்கத்திற்கல்லவா வாக்களித்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொன்னாலும் பேராசைக்கார குடும்பம் இது. பணத்தை அள்ளிக்கொட்டி, இனவாதத்தையும், மதவாதத்தையும் பேசி, குண்டுகளையும் காட்டி ஜனாதிபதியாகாமல் இருந்திருந்தால் இவர் அங்கும் இல்லை இங்கும் இல்லை என ரொம்ப பட்டிருப்பார். எப்படியும் சிங்கள பவுத்தத்துக்கு மட்டுமே தான் ஜனாதிபதியாக இருக்க முயற்சிப்பார். இருந்தாலும் அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே செயற்படுவார். நாள்ச் செல்லச் செல்ல ஒவ்வொன்றாக வெளிவரலாம், வராமலும் போகலாம். தர்மம் ஒருநாள் பழிவாங்கியே தீரும். எதற்கும் முசோலினியின் இறுதி வாழ்க்கையை கோட்டாபய  கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

 

கோட்டாபயவின் இலங்கை பிரஜாவுரிமையை கேள்விக்குட்படுத்தி வழக்கு போட்ட Prof. Chandraguptha Thenuwara கட்டுநாயக்க ஊடாக  வெளியேறினார்

 

හංසයාට ඡන්දය දී එදින රාත්‍රියේ ශ්‍රී ලංකාවෙන් පිටත් වීමී. ඵය මගේ අයිතියක් බව දැන්වීමට කැමැත්තෙමි. අදාළ කලා කටයුතු අවසන් කර නැවත අත් නොහල මව් බිමට එම්.

Vote for swan and left Sri Lanka that night. I would like to know that it's my right. Completed the relevant work and do not give up again to the mother land.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.