Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MG_4711-1140x570-720x450.jpg

ரணில் பதவி விலகியதும் இடைக்கால பிரதமராக பதவியேற்கிறார் மஹிந்த?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கம் பதவியேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதற்கமைய இந்த அரசாங்கம் இன்று (புதன்கிழமை) மாலை அல்லது நாளை காலை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, கம்மன்பில, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, நிமால் சிறிபாலடி சில்வா உள்ளிட்டவர்கள் அமைச்சு பதவியை ஏற்கவுள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக நீடித்த இழுபறியின் பின்னர், பிரதமர் பதவியை துறக்க ரணில் விக்கிரமசிங்க நேற்று முடிவு செய்தார். நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து தனது முடிவை தெரிவித்தார்.

ஐ.தே.கவின் இணக்கப்பாட்டுடன் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைப்பது, அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஒப்படைப்பது, மார்ச் வரை தற்போதைய அரசாங்கமே பதவியிலிருக்கும் என்ற மூன்று விடயங்களையும் முன்னிலைப்படுத்தி இரண்டு தரப்பும் ஆலோசித்து வந்தது.

இருந்தபோதும் தற்போதைய அரசாங்கம் தொடர்வதை கோட்டாபய ராஜபக்ஷவும் சஜித் தரப்பும் விரும்பவில்லை.

மக்களின் ஆணையை மதித்து பதவிவிலக வேண்டுமென இரு தரப்பும் கருதின. நாடாளுமன்றத்தை கலைப்பதை ஐ.தே.க. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லை. தமது நாடாளுமன்ற ஓய்வூதியம் கிடைக்காமல் போய்விடுமென அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இறுதி வழியான இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதென இரு தரப்பும் இணக்கம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ரணில்-பதவி-விலகியதும்-இட/

4 hours ago, தமிழ் சிறி said:

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கம் பதவியேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மகிந்த இடைக்கால பிரதமராக வர மாட்டார். வரும் பாராளுமன்ற தேர்தலின் பின் அவர் பிரதமராவார்.

இப்பொழுது இடைக்கால பிரதமருக்கு தினேஷ் குணவர்தனவின் பெயரை விமல் வீரவன்சவும் கம்மன்பிலவும் பரிந்துரை செய்துள்ளார்கள்.

மகிந்தவை பிரதமராக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

 

Edited by Lara

மகிந்தவே பிரதமராக நாளை பதவியேற்பார் என கூறுகிறார்கள்.

நாளை 1 மணிக்கு பதவியேற்பாராம். 

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமராகிறார், ரணில் விக்ரமசிங்க பதவி விலகல்

Ranil Wickremesingheபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார்.

தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக்கவுள்ளார்.

இந்த நிலையில், தனது தீர்மானம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றுவதன் ஊடாக தெளிவூட்டவுள்ளார்.

இதனிடையே, இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவு செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிபிசி தமிழிடம் தெரிவிக்கின்றார்.

இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவி விலகல் கடிதத்தை இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை அதை அவர் கையளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த ராஜபக்ஷ எப்போது பதவியேற்பு?

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததை அடுத்து, நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெரும்பாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நாளை பதவி பிரமாணம் செய்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இடைகால அரசாங்கத்தில் 16 அமைச்சர்கள் அங்கம் வகிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறுகின்றார்.

இந்த இடைகால அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதி வரை நடைமுறையில் இருப்பதற்கான சந்தர்ப்பம் அரசியலமைப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 8ஆவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தலில் பெற்றிருந்தார்.

இதன்படி, இலங்கையில் ஆளும் அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி வசமும், ஜனாதிபதி பதவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமும் காணப்படுகின்றமையினால் நாட்டை சரியான முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த விடயங்களை கருத்திற் கொண்டே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இரண்டு கட்சிகள் நாட்டை ஆட்சி செய்கின்றமையினால், எதிர்காலத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும் என்ற விடயத்தை கருத்திற் கொண்டு சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக விதம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றைய தினம் அறிக்கை மூலம் அறிவித்திருந்தார்.

  • 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை அரசியலமைப்பின் பிரகாரம் நடத்த முடியும்.
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி, நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த சந்தர்ப்பத்தை வழங்க முடியும்.
  • பிரதமர் தலைமையிலான அரசாங்கம் சுய விருப்பின் பேரில் விலகி, பொதுத் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் வரை இடைகால அமைச்சரவையொன்றை நடத்தி செல்ல ஜனாதிபதிக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

இந்த நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதி வரை இடைகால அரசாங்கம் ஒன்றை நடத்தி செல்லும் வகையில், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சந்தர்ப்பத்தை வழங்கி, ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு ரணில் உரை

இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களாக ஜனநாயகம், மனித சுதந்திரம், கருத்துகளை வெளியிடக் கூடிய தகவல் அறியும் உரிமை மற்றும் அனைவரையும் சமமாக மதிக்கும், நல்லிணக்கத்தை உருவாக்க தாம் நடவடிக்கை எடுத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக அனைத்து திணைக்களங்களையும் அரசியலில் இருந்து விடுவித்ததுடன், ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும், நியாயமாகவும் நடைபெற்றமை அதன் ஒரு பிரதிபலனாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாங்கள் ஆற்றிய அந்தப் பணிகளுக்கான சரியான தீர்மானத்தை எதிர்காலமே பெற்றுக்கொடுக்கும் என கூறியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று சந்தித்து கலந்துரையாடி நாடாளுமன்றத்தின் எதிர்கால பணிகள் தொடர்பில் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இருக்கின்ற போதிலும் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையை கருத்திற் கொண்டு, அவர்களின் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக தாம் பதவி விலகத் தீர்மானித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50488510

31 minutes ago, ஏராளன் said:

இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவி விலகல் கடிதத்தை இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை அதை அவர் கையளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததை அடுத்து, நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டார்.

ரணில் பதவி விலகுவதாக கூறி விட்டார். கடிதத்தை நாளை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார். அதை தொடர்ந்து நாளையே மகிந்த பிரதமராக பதவியேற்பார்.

இது ரணிலின் statement.

EJ0E89aVAAAjX5A?format=jpg&name=large

தமிழ் மொழிபெயர்ப்பு.

EJ0dRJrXUAEoyq3?format=jpg&name=900x900

மகிந்த பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

EJ4Z-ZKU8AAAnhE?format=jpg&name=large

EJ4xQuvUYAAYTP3?format=jpg&name=large

Edited by Lara

மகிந்தவின் பதவியேற்பு நிகழ்வில் மைத்திரி, ரணில்.

EJ4fa_dUEAAQuuc?format=jpg&name=small

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Lara said:

மகிந்தவின் பதவியேற்பு நிகழ்வில் மைத்திரி, ரணில்.

EJ4fa_dUEAAQuuc?format=jpg&name=small

 தமிழர்களை கொன்றொழித்து.. தமிழர் நிலங்களை சிங்கள பெளத்த மயமாக்கி.. இனப்படுகொலையாளர்களையும்.. போர்க்குற்றவாளிகளையும்... நீதியின் புருசர்களாக்கி.. சிங்களவர்களை ஆளத்தகுதி உள்ளவர்களாக்கி.. தாம் செய்ய வேண்டியதை செய்த பெருமிதம்.. குள்ளநரி ரணிலிடமும்.. மைத்திரியிடமும் அப்படியே தெரிகிறது.

இந்தச் சிங்கள இனவாதத் தலைமைகளால் மட்டுமன்றி.. சொந்த அரசியல்வாதிகளாலும் வஞ்சிக்கப்பட்ட இனமாக நாதியற்று நிற்கிறது.. தமிழினம். 

இதையும் கடந்து அது தலைநிமிர வேண்டும்.. அதற்கு தமிழ் இன.. மொழி.. மண் உணர்வுள்ள மக்கள் தொடர்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டும். வாக்குகளால்.. தற்போது பேசியது போல்.. அதற்கும் அப்பால் சென்று. 

 

 

EJ414hsU4AAumyj?format=jpg&name=large

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்

 

z_p06-The-full

இடைக்கால அரசின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பதவியேற்றார்.

சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

http://www.dailyceylon.com/192758/

 

 

EJ5LiJqXkAA9W46?format=jpg&name=900x900

ரணிலின் சதித்திட்டங்கள் அரங்கேறுகின்றது!

EJ5SXGoXsAIQYkJ?format=png&name=small

பெரிய பேயை விட சிறிய பேய்க்கு வாக்களிக்க வேண்டும், சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிய தமிழர் அனைவரும் சதிக்காரர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

1 hour ago, Lara said:

 

இம்ரான் கான் கோத்தபாயவிற்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த போது அவரை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று மகிந்தவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த போது அவரையும் பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.