Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ddd.jpg

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

இதற்கமைய, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாசார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி மறுசீரமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி தொழிற்துறை அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவம் மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சராக பவித்ரா வன்னிஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் தொலைத்தொடர்பு, உயர்கல்வி மற்றும் புத்தாக்கல் அமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக ஜனக பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மஹாவலி கமத் தொழில், நீர்பாசனத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக டளஸ் அலகபெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் மேம்பாடு, தொழில் வழங்கல் மேம்பாட்டு அமைச்சராக விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள், காணி மற்றும் காணி விவகார அமைச்சராக எஸ்.எம்.சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருந்தோட்ட மற்றும் ஏற்றுமதி வேளாண்மை அமைச்சராக டொக்டர் ரமேஷ் பதிரன நியமிக்கப்பட்டுள்ளார்.

http://athavannews.com/மஹிந்த-ராஜபக்ஷ-தலைமையிலா/

###########    ###########    #############   ############# 

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.jpg

புதிய அமைச்சரவையில் தொண்டமானிற்கு திகாவின் அமைச்சு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

இதன்போது சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக திகாம்பரம் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புதிய-அமைச்சரவையில்-தொண்/

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF.jpg

மஹிந்தவின் புதிய அமைச்சரவையில் டக்ளஸிற்கும் அமைச்சுப் பதவி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

இதன்போது கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டு சில தினங்கள் மாத்திரமே அவர் அமைச்சராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மஹிந்தவின்-புதிய-அமைச்சர/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரு தமிழ் அமைச்சர்கள்... நியமிக்கப் பட் ட நிலையில்,
இதுவரை... ஒரு முஸ்லீம் அமைச்சர்களும்... நியமிக்கப் படவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்களம்  ஏதோ... ஒரு   முடிவில் உள்ளது போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாசார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

1 நகர அபிவிருத்தி, வீட்டு வசதி - குபேர மூலை , வருமானம் உண்டு .👌

2 சட்ட அமைச்சு - றங் கிளீனர் & சைரன் வைத்த பரோடா கார் கிடைக்கும் . 😄

3 தோட்ட உட்கட்டமைப்பு - கூட்டுறவு , தொழில் சங்கம் , வழியா அடித்தால் உண்டு.

4 வெளியுறவு -  உலகம் சுற்றும் வாலிபன் ஆனால் பைசா தேறாது. 😢

5 கடல்தொழில் - தலைவலியை உண்டு பண்ணும் &  நீரியல் - றால் பண்ணை , ஏற்றுமதியில் கொமிசன் உண்டு .

6 சுகாதாரம் - றோக்குத்தர்மார் & தனி ஒருவன் பாணியில் அடித்தால் வருமானம் உண்டு.

7 தொலை தொடர்பு - 3g /4g உரிமம், ரயலாக், ஏர் ரெல் போன்ற நிறுவனங்களிடம் கொமிசன் அடித்தால் உண்டு.

8 மாகாண சபை/உள்ளூராட்சி - ஒதுக்கப்படும் நிதியில் அடித்தால் உண்டு. 😄

9 தொழில் , உணவு பாதுகாப்பு - தொழில் முனைவோரிடம் கமிசன் மற்றும் மசாலா தூள் பொக்கெற்கள், பாண் விசுகொத்து வகையில் வருமானம் உண்டு.👍

10 கல்வி விளையாட்டு - கை காசு போட வேண்டி வரும் .😢

11 கப்பல், நெடுஞ்சாலை - அட்சய பாத்திரம் அள்ள அள்ள குறையாது. 👍

12 சிறிய நடுத்தர தொழில் அபிவிருத்தி - ரப்பர் ஸ்ராம்ப் & சைரன் வைத்த பரடா கார் கிடைக்கும்.

13 போக்குவரத்து , எரிசக்தி - சிறிய அளவில் கீர்த்தி உண்டு .

14 வனஜீவரசி, காணி : சிங்கம்புலி யானை கொடுத்தால் உண்டு ஆனால் காணி விவகாரம் கோடிகள் கை மாறும்.👍

15 பெருந்தோட்டம் - தேத்தூள்  ஏற்றுமதி , ஊழியர் சேம நல நிதி வகையில் வருமானம் .

டிஸ்கி :

mqdefault.jpg

 ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் வரிசைபடுத்தி உள்ளேன் .. கள உறவுகள் நீங்களும் வரிசைபடுத்தலாமே..? ☺️

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை பொறுப்பேற்பு - 2 தமிழர்களுக்கு இடம்; முஸ்லிம்கள் இல்லை

பிரதமர் பதவியேற்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளது.

சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை.

இலங்கை அமைச்சரவை

துறை அமைச்சர்
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை, நகர அபிவிருத்தி, நீர்பாசனம், வீட்டு வசதி மற்றும் புத்த சாசனம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
நீதிமன்றம், மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு நிமல் சிறிபால டி சில்வா
சமூக வலுவூட்டல், உட்கட்டமைப்பு வசதிகள் ஆறுமுகன் தொண்டமான்
வெளிநாட்டு தொடர்புகள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு, திறன் அபிவிருத்தி தினேஷ் குணவர்தன
மகளிர், சிறுவர் விவகாரம், சமூக பாதுகாப்பு, சுகாதாரம், சுதேச மருத்துவம் பவித்ரா வன்னியாராச்சி
கடல் தொழில் மற்றும் நீரியல் வளம் டக்ளஸ் தேவானந்தா
தகவல், தொலைத்தொடர்பு, உயர்கல்வி மற்றும் புதிய உற்பத்திகள் அபிவிருத்தி பந்துல குணவர்தன
அரச நிர்வாக, உள்விவகாரம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் ஜனக்க பண்டார தென்னக்கோன்
விவசாயம், பெருந்தோட்டம், மகாவலி கிராமிய அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகாரம் சமல் ராஜபக்ஷ
வீதி, பெருந்தெருக்கல், துறைமுகம் மற்றும் கடற்சார் விவகாரம் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் டளஸ் அழகபெரும
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முமைத்துவம் விமல் வீரவங்ச
பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி , மின்வலு மஹிந்த அமரவீர
காணி, காணி மறுசீரமைப்பு, சுற்றாடல், வனஜீவராசிகள் எஸ்.எம்.சந்திரசேன
பெருந்தோட்ட கைத்தொழில், ஏற்றுமதி விவசாயம் ரமேஷ் பத்திரண

சுற்றுலாத்துறை, விமான சேவைகள், முதலீட்டு ஊக்குவிப்பு

https://www.bbc.com/tamil/sri-lanka-50514076

பிரசன்ன ரணதுங்க

டக்கிளசுக்கு வாழ்த்துகள். மிக மோசமாக பாதிக்கப்பட்ட சமூகமாகவும் சவால்களை சந்திக்கும் சமூகமாகவும் இருக்கும் தமிழ் மீனவ சமூகமும் இவரால் பயன் பெற்றால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரன்??

9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

14 வனஜீவரசி, காணி : சிங்கம்புலி யானை கொடுத்தால் உண்டு ஆனால் காணி விவகாரம் கோடிகள் கை மாறும்.👍

இந்த அமைச்சால் தான் தமிழர் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு செய்யப்பட்டு வந்தது. ரணில் - சஜித் அரசில் இருந்து இது மாறுபடுமா இல்லை தொடருமா.... 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ampanai said:

இந்த அமைச்சால் தான் தமிழர் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு செய்யப்பட்டு வந்தது. ரணில் - சஜித் அரசில் இருந்து இது மாறுபடுமா இல்லை தொடருமா.... 

நான் தமிழக உறவு தோழர் .. இங்குள்ள கணக்குகளின்படி வருமானம் வரும் துறையை வரிசைப்படுத்தி எழுதினேன்..  எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை தொடரும் என்றே தோன்றுகிறது.. 😢

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளது.

சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை.

இலங்கை அமைச்சரவை

துறை அமைச்சர்
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை, நகர அபிவிருத்தி, நீர்பாசனம், வீட்டு வசதி மற்றும் புத்த சாசனம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
நீதிமன்றம், மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு நிமல் சிறிபால டி சில்வா
சமூக வலுவூட்டல், உட்கட்டமைப்பு வசதிகள் ஆறுமுகன் தொண்டமான்
வெளிநாட்டு தொடர்புகள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு, திறன் அபிவிருத்தி தினேஷ் குணவர்தன
மகளிர், சிறுவர் விவகாரம், சமூக பாதுகாப்பு, சுகாதாரம், சுதேச மருத்துவம் பவித்ரா வன்னியாராச்சி
கடல் தொழில் மற்றும் நீரியல் வளம் டக்ளஸ் தேவானந்தா
தகவல், தொலைத்தொடர்பு, உயர்கல்வி மற்றும் புதிய உற்பத்திகள் அபிவிருத்தி பந்துல குணவர்தன
அரச நிர்வாக, உள்விவகாரம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் ஜனக்க பண்டார தென்னக்கோன்
விவசாயம், பெருந்தோட்டம், மகாவலி கிராமிய அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகாரம் சமல் ராஜபக்ஷ
வீதி, பெருந்தெருக்கல், துறைமுகம் மற்றும் கடற்சார் விவகாரம் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் டளஸ் அழகபெரும
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முமைத்துவம் விமல் வீரவங்ச
பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி , மின்வலு மஹிந்த அமரவீர
காணி, காணி மறுசீரமைப்பு, சுற்றாடல், வனஜீவராசிகள் எஸ்.எம்.சந்திரசேன
பெருந்தோட்ட கைத்தொழில், ஏற்றுமதி விவசாயம் ரமேஷ் பத்திரண
சுற்றுலாத்துறை, விமான சேவைகள், முதலீட்டு ஊக்குவிப்பு

பிரசன்ன ரணதுங்க

https://www.bbc.com/tamil/sri-lanka-50514076?ocid=socialflow_facebook&fbclid=IwAR0ykWC8EfEZFO2CExIcH18cuHhEEXYNHP98aWYD30XZlbNgpmnGvggAxVA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1 நகர அபிவிருத்தி, வீட்டு வசதி - குபேர மூலை , வருமானம் உண்டு .👌

மாவை சேனாதி ராசாவுக்கு .... கொடுத்திருக்கலாம். 😛

2 சட்ட அமைச்சு - றங் கிளீனர் & சைரன் வைத்த பரோடா கார் கிடைக்கும் . 😄

சுமந்திரனுக்கு... கிடைக்க வேண்டிய பதவி, நழுவி  போச்சு.  :grin:

3 தோட்ட உட்கட்டமைப்பு - கூட்டுறவு , தொழில் சங்கம் , வழியா அடித்தால் உண்டு.

கிளி நொச்சியில்... சாராய கடை இல்லை.  இனி....  எமது மக்களுக்கு,  வேண்டும் என்று, 
பாராளுமன்றத்தில்  பேசிய ஸ்ரீதரனுக்கு தான்  இந்தப் பதவி பொருத்தமாக இருக்கும். 😮

4 வெளியுறவு -  உலகம் சுற்றும் வாலிபன் ஆனால் பைசா தேறாது. 😢

உங்களுடைய...  முதல்வர் பழனிச்சாமி,  🇺🇸அமெரிக்காவுக்கு..  🛩️  போக முதலே... 
கோட்டு , சூட்டு  போட்டுக் கொண்டு..  :120_speaking_head:  ஐக்கிய நாடுகள் சபை வரை...  
போனவர்கள் தான்...   🇺🇳 சம்பந்தன் , சுமந்திரன், மாவை.... கோஸ்ட்டிகள்.  

tw_warning: அதுக்குப் பிறகு...  அந்த  இழவுகளில்  இருந்து, மீள  முடியாமல் தவிக்கின்றோம்.  tw_warning:

சும்மா... இருய்யா... பிலிப்சு....  🔨

டிஸ்கி: கனக்க எழுத வேண்டி இருந்தது, இந்தக் கிலிசு கேடுகளை.. எழுதினால்...
எனக்கு... "விசர்"  வந்து விடும்.  :grin:

Edited by தமிழ் சிறி

20 hours ago, தமிழ் சிறி said:

சுகாதார மற்றும் சுதேச மருத்துவம் மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சராக பவித்ரா வன்னிஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சர் - பவித்ரா வன்னியராச்சி!

இலங்கையின் முதல் பெண் பிரதமரான சிரிமாவோ பண்டாரநாயகேவின் விருப்பத்துக்கு இணங்க 1990-ல் அரசியலுக்குள் நுழைந்தவர் பவித்ரா தேவி.

பவித்ரா வன்னியராச்சி

மகிந்த ராஜபக்சே தலைமையிலான 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவைக்கு இலங்கையில், நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே. புதிய அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சராக பவித்ரா தேவி வன்னியராச்சி பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கு பெண்கள், குழந்தைகள் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்புத்துறை, சுகாதாரம் மற்றும் மண்சார்ந்த மருத்துவத்துறை ஆகிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் முதல் பெண் பிரதமரான சிரிமாவோ பண்டாரநாயகேவின் விருப்பத்துக்கு இணங்க 1990-ல் அரசியலுக்குள் நுழைந்தவர் பவித்ரா தேவி. இலங்கை விடுதலைக் கட்சியின் மகளிர் அணித்தலைவராக இருந்தவர். பின்னர், 1993-ல் சபரகுமாவா மாகாண உறுப்பினராகவும் 1994-ல் ரத்னபுரா மாவட்டத்துக்கான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

இலங்கை பவித்ரா வன்னியராச்சி
 
இலங்கை பவித்ரா வன்னியராச்சி

அடிப்படையில் வழக்கறிஞரான பவித்ரா இலங்கை உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 2000-ம் வருடம் தொடங்கி இலங்கை அமைச்சரவையின் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துவந்தார். இன அழிப்புப் போர் காலகட்டத்தில் அப்போது அதிபராக இருந்த மகிந்தாவின் கீழ் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருந்தவர் பவித்ரா.

``விடுதலைப்புலிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே மறைமுக ஆதரவு அளித்துவந்தார், பிரபாகரனிடம் இலங்கையின் ஒருபகுதியைக் கொடுத்துவிட்டார்’’ எனத் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தவர் பவித்ரா.

https://www.vikatan.com/government-and-politics/international/pavithra-wanniarachi-the-only-woman-minister-in-rajapakse-cabinet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.