Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்!

Featured Replies

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்.

 

20191206_140407.jpg

 

தாக்குதல் இடம்பெற்ற கால கட்டத்தில் நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் இருந்தமையும் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனமைக்கான காரணங்களில் ஒன்றாகும்.  

இந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தையும் நிறுத்தி நான் மக்களின் உயிரை காத்திருப்பேன் என்றும் அவர் கூறினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது.

இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலில் அவரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்படி விடயங்களை சாட்சியமாக பதிவு செய்தார்.  

நான்கு மணி நேரம் பதிவு செய்யப்ப்ட்ட அவரின் சாட்சியத்தில் இரு மணிநேர இரகசிய சாட்சியமும் உள்ளடங்கியிருந்தது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி அகியோர் முன்னிலையில் இன்று 2.00 மணி முதல்  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சாட்சியமளித்தார்.

இதன்போது பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில்  ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா தலைமையில்  கிம்ஹானி கமகே,  துதிக பெரேரா,  சமத் பெர்ணான்டோ,  சந்துன் நாகஹவத்த,  பிரேமால் ரத்வத்த,  வருண சேனாதீர ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/70585

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ரஞ்சித்துக்கும் , சிங்கள ரஞ்சித்துக்கும் பிரச்சனைகள் வித்தியாசமானவை  என்பதை இரு ரஞ்சித்துக்களும் அறிவார்களா?

  • தொடங்கியவர்

வாக்குமூலம் வழங்கினார் கார்டினல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் வாக்மூலம் வழங்கியுள்ளார்.

இன்று மூன்று மணித்தியாலங்கள் கார்டினல் வாக்குமூலம் வழங்கியுள்ளதோடு, நேற்று அவர் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வககமலம-வழஙகனர-கரடனல/175-242166

43 minutes ago, ampanai said:

இன்று மூன்று மணித்தியாலங்கள் கார்டினல் வாக்குமூலம் வழங்கியுள்ளதோடு, நேற்று அவர் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

மணித்தியாலத்துக்கு எவ்வளவு கூலி தாராங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

தமிழ் ரஞ்சித்துக்கும் , சிங்கள ரஞ்சித்துக்கும் பிரச்சனைகள் வித்தியாசமானவை  என்பதை இரு ரஞ்சித்துக்களும் அறிவார்களா?

யார் தமிழ் ரஞ்சித் அண்ணை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

யார் தமிழ் ரஞ்சித் அண்ணை?

தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பிரச்ச்னையை சிங்களகிறிஸ்தவ மதகுரு அறிவாரா? என்ற கேள்வியை தான் அப்படி எழுதினேன்

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, putthan said:

தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பிரச்ச்னையை சிங்களகிறிஸ்தவ மதகுரு அறிவாரா? என்ற கேள்வியை தான் அப்படி எழுதினேன்

ஓ......அந்த அர்த்தத்திலா?? சரி சரி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பிரச்ச்னையை சிங்களகிறிஸ்தவ மதகுரு அறிவாரா? என்ற கேள்வியை தான் அப்படி எழுதினேன்

யாராவது  கிறிஸ்தவர்களிடம் தான் கேட்கவேண்டும். இவர் எதை பற்றி இந்த ஏழு மணித்தியாலம் பேசி இருக்கிறார்? இந்த தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரச்சினை பற்றியா? மாறி மாறி குண்டு வைத்திருப்பார்களோ ? சும்மா இருந்த சோனிகளை மாட்டி விட்டுவிட்டார்களோ? எல்லாம் அல்லாவுக்கு தான் தெரியும்.

Edited by Jude

  • தொடங்கியவர்

ஈழ விடுதலையின் போது , நாவாலி உட்பட தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழ மண்ணில்  கொல்லப்படும்பொழுது இவர் அமைதிகாத்தார். அதன் மூலம் சிங்கள இனவழிப்பாளர்களுக்கு துணை போனார். அவர் அன்றும் உயிர்களுக்காக குரல் கொடுத்திருந்தால் அவரின் சாட்சியங்கள் இன்றும் உண்மையாக இருந்திருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2019 at 5:32 PM, Jude said:

யாராவது  கிறிஸ்தவர்களிடம் தான் கேட்கவேண்டும்.

 

10 minutes ago, ampanai said:

ஈழ விடுதலையின் போது , நாவாலி உட்பட தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழ மண்ணில்  கொல்லப்படும்பொழுது இவர் அமைதிகாத்தார். அதன் மூலம் சிங்கள இனவழிப்பாளர்களுக்கு துணை போனார்.

நன்றி கிறீஸ்தவரே, முன்வந்து உண்மையை சொன்னதுக்கு. நாவாலி உட்பட தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழ மண்ணில்  கொல்லப்படும்பொழுது இவர் அமைதிகாத்தார் என்ற உள்வீட்டு உண்மையை வெளியே கொண்டுவந்ததற்கு நன்றி. அப்போதும் இவர் கார்டினலாகவா இருந்தார்? நான் நினைத்தேன் அந்த நாட்களில் இவர் இளைய வயதினராக எங்கோ கூட்டிப்பெருக்கிக்கொண்டு இருந்திருப்பார் என்று. நீங்கள் எழுதித்தான் தெரிகிறது இவர் நீண்டகாலம் இந்த பதவியில் இருக்கிறார் என்று. எல்லாம் அல்லாவுக்கு தான் தெரியும்.

இவரை வட கிழக்கு கத்தோலிக்க மக்கள் தங்களது கர்தினாலாக ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் சிங்கள மக்களுக்குத்தான் கர்தினால். வட கிழக்கு தமிழ் கத்தோலிக்கர்கள் தங்களுக்கு தனியான பிரிவை கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இது வெளியில் தெரியாவிடடாலும் நீறு பூத்த நெருப்பாக இது கனன்றுகொண்டு இருக்கிறது.

நீங்கள் நன்றாக கவனித்தீர்களானால் இது விளங்கும். காத்தோலிக்கர்களின் முக்கியமான மடுமாதா  திருவிழாவில் இவர் ஒரு நாளுமே கலந்துகொள்ளவில்லை. போப்பாண்டவர் இலங்கை வந்தபோது இவரையும் அழைத்துக்கொண்டு மடுவுக்குப்போனார் பிரச்சினையை தீர்க்க. இருந்தாலும் இது இன்னும் தீர்க்கப்படவில்லை.

இவர் தன்னை ஒரு சிங்கள கத்தோலிக்கராகவே அடையாளப்படுத்துபவர். அதனால் தமிழ் கத்தோலிக்கர்கள் அவரை ஏற்றுக்கொள்வதில்லை.

ஏப்ரில் குண்டு தாக்குதலுக்கு பின்னர் இவர் எல்லா இடமும் சென்றார் , ஏன் ஒரு பவுத்த பிக்கு உண்ணாவிரதமிருந்து இடத்துக்கும்  சென்றார். ஆனாலும் மடடகளப்பு   கிறிஸ்தவ   தேவாலயத்துக்கு  செல்லவில்லை. அநேக பத்திரிகைகளில் இதை சுட்டிக்காடிய பின்னர்தான் அங்கு ஓடிப்போனார். இருந்தாலும் தனக்கு கிடைத்த கோடிக்கணக்கான  பணத்தில் அவர்களுக்கு சொல்லும்படியாக ஏதும் கொடுக்கவுமில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.