Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களில் விசேட சோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Srilanka-Police.jpg

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களில் விசேட சோதனை

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா புளியங்குளம், ஓமந்தை, நொச்சிமோட்டை மற்றும் இரட்டை பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வீதி தடைகளை ஏற்படுத்தி இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாற நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 15 கிலோ பெறுமதியான கேரளா கஞ்சாவை கடத்திய குற்றத்திற்காக அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அனுமதிபத்திரம் இன்றி கடத்தப்பட்ட தளபாடங்கள் செய்ய பயன்படும் மரக் குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கேரள கஞ்சா மற்றும் மரக் குற்றிகள் கடத்தப்பட்ட மூன்று பேருந்துகளையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/யாழில்-இருந்து-கொழும்பு-2/

எப்பிடியோ ஒரு காரணத்தை கண்டுபிடிச்சு தமிழரை இம்சை செய்ய தொடங்கிட்டான்.

வடக்கில் நான்கு இடத்தில் இராணுவச் சோதனை; மக்கள் பாதிப்பு!

Nothern-Check-Point-Peoples-Problem-1-76

வடக்கில் ஏ-9 வீதியை மையப்படுத்தி போதைப் பொருள் கடத்தலை காரணமாகக்காட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் சோதனை நடவடிக்கைகளால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை ஆகிய பகுதிகளில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

பேருந்துகளும் பயணிகளும் முழுமையாக சோதனையிடப்பட்டு வருவதுடன் கடந்த ஒரு வாரகாலமாக போர்க் காலத்துடன் ஒப்பிடும் வகையில் பேருந்துகளில் செல்லும் பயணிகள் முழுமையாக இறக்கிவிடப்பட்டு அவர்களது பயணப்பொதிகள் சோதனையிடப்படுகின்றன. இதனால் பல்வேறு இடைஞ்சல்களுக்கு மத்தியில் பொது மக்கள் தமது பயணத்தைத் தொடர்கின்றனர்.

வன்னிப் பகுதியில் மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிக்கு அடுத்தபடியாக புதூர் சந்தியில் 15 கிலோமீற்றர் இடைவெளியில் மற்றொரு சோதனை சாவடி உள்ளது. அதற்கு அடுத்ததாக 15கிலோமீற்றர் தூர இடைவெளியில் ஓமந்தையிலும் ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு பொதுமக்கள் இறக்கிவிடப்பட்டு வரிசையில் நிறுத்திவைக்கப்பட்டு சோதனை இடம்பெறுகிறது.

குறித்த நடவடிக்கையால் ஒரு சோதனைச் சாவடியில் 15 நிமிடத்திற்கும் அதிகமான தாமதம் ஏற்படுகின்றது. கடமையில் இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் அதிகமான பேருந்துகள் வருகை தரும்போது நீண்டநேரம் எடுப்பதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது.

குறித்த சோதனைகளின் மூலம் சில பேருந்துகளில் இருந்து கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுவந்தாலும் பொதுமக்கள் கடுமையாக அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.Nothern-Check-Point-Peoples-Problem.jpg

Nothern-Check-Point-Peoples-Problem-1-76

Nothern-Check-Point-Peoples-Problem-2-76

https://newuthayan.com/வடக்கில்-நான்கு-இடத்தில்/

கோட்டாபயவின் ஆட்சியில் வடக்கில் போடப்படும் வீதித்தடைகள் தமிழர் மீதான கட்டுப்பாடுகளே!

"வடக்கில் தற்போது வீதிகளில் மீண்டும் தடைகள் போடப்பட்டுள்ளன. இராணுவம் நின்றாலும், இல்லை என்றாலும் அந்தத் தடைகள் உள்ளன. அவை வேகக் கட்டுப்பாடுகள் அல்ல. தமிழர்கள் மீதான கட்டுப்பாடு. கோட்டாபயவின் அராஜக ஆட்சியில் தமிழர்களை இராணுவத்தினர் கட்டுப்படுத்துகின்றார்கள் என்பதுக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.

கிளிநொச்சி, பள்ளிக்குடாவில் நேற்று நடைபெற்ற முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இப்போது நாங்கள் ஒரு இக்கட்டான நிலைமைக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கின்றோம். யாழ்ப்பாணத்தில், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் என்ற பதம் அங்கு பாவிக்கப்படவில்லை. மாவட்ட சபைக் கூட்டமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ச ஒன்றையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய முடிவின் மூலமே நினைப்பதைச் சாதிக்க முனைகிறார் என்று தெரிகின்றது.

அவர் செய்பவை குறித்து நாங்கள் நன்றாக யோசிக்க வேண்டியுள்ளது. அரசமைப்புச் சொல்கின்றது தமிழுக்கு அந்தஸ்து உள்ளது என்று. இங்கே அவர்கள் சொல்கின்றார்கள் சுதந்திர தினமன்று சிங்களத்தில்தான் தேசிய கீதம் என்று. பின்னர் ஏன் எங்களை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? எங்களை எங்களுடைய பாட்டுக்கு விட்டு விடலாமே.

எங்களுக்கான உரிமைகளை வழங்கி எங்களை சரிசமமாக உங்களால் மதிக்க முடியாது என்றால், ஏன் உங்கள் பிரதிநிதிகளை இங்கே போடுகிறீர்கள். இது உங்கள் அராஜக ஆட்சியை வெளிப்படையாகக் காட்டுகின்றது.

அப்படித்தான் நாங்கள் யோசிக்க வேண்டும். மிகத் துணிவாக சிங்களம் மாத்திரம்தான் என்று அறிவிக்கின்ற துணிச்சல் அவர்களுக்கு இருக்கின்றது.

நீங்கள் சிங்கப்பூருக்குப் போனாலும், ஜப்பானுக்குப் போனாலும் அங்கெல்லாம் தமிழ் இருக்கின்றது. ஒரு சிறிய நாடாக இருந்தாலும், தமிழ் கலாசாரத்தைப் பேணுவதற்கு ஓர் இடம் அங்கு உண்டு. ஆனால், இவர்கள் பௌத்த தர்மம் பற்றிப் பேசிப் பேசி, அந்தப் பௌத்தம் என்ன சொல்கிறதோ, அதற்கு எதிரான செயற்பாடுகளை மற்றொரு இன மக்கள் மீது பயன்படுத்துகின்றார்கள். தங்களுடைய அசுரத்தனத்தைக் காட்டுகின்றார்கள்.

இப்போது நாங்கள் வீதிகளால் செல்லும்போது மீண்டும் எத்தனையோ வீதித் தடைகள் உள்ளன. எதற்காக அந்த வீதித் தடைகள் என்று எனக்குத் தெரியவில்லை.

அந்த வீதித் தடைகளில் இராணுவம் நிற்பதும் உண்டு, சும்மா தடைகளைப் போட்டு வைத்திருப்பதும் உண்டு. இது வேகக் கட்டுப்பாடல்ல, தமிழர்களுக்கான கட்டுப்பாடு. அவர்கள் தமிழர்களைக் கட்டுப்படுத்துகின்றார்கள்.

நீ இப்படித்தான் இருக்கலாம், இப்படித்தான் செல்லலாம் என்று எங்களைக் கட்டுப்படுத்துகின்றார்கள். இன்னும் சில நாள்களில் அப்படிப்பட்ட அரசின் பிரதிநிதிகள் என்று சிலர் எம் மத்தியில் வருவார்கள்.

மக்கள் மத்தியில் படிவங்களுடன் வருவார்கள். அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம், ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புத் தருகின்றோம், உணவு தருகின்றோம் என்பார்கள். அந்தப் படிவங்களை நிரப்பியே உங்களுடைய வாழ்க்கை முடிந்து விடும். கட்டாயம் வருவார்கள், ஆனால், மக்கள் துணிய வேண்டும். அவர்களை எதிர்க்க வேண்டும், ஏற்கனவே தருவோம் என்று கூறியதைத் தாருங்கள் என்று அவர்கள் முன் கேட்க வேண்டும்.

எங்களிடமே முதன்மை, எங்களுடைய அரசியல் உரிமை எங்களுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதுதான்.

அரசியல் உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும். அதே நேரத்தில், அபிவிருத்தியையும் சமாந்தரமாக நாங்கள் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் எங்களுடைய வேலைப்பாடுகள் நடக்கின்றன. அபிவிருத்தி இல்லாமல் இருந்தால், நாங்கள் எங்களுடைய கல்வியையோ, விளையாட்டையோ, ஒரு நிலைக்குக் கொண்டுவர முடியாது.

இன்றும் கூட நாங்கள் ஒன்பதாவது இடத்தில்தான் இருக்கின்றோம். வேறு நாடுகளைப் பார்த்தால் போர் நடைபெற்றால், போர் நடைபெற்ற பிரதேசங்களில் உள்ள மக்களைப் பற்றிச் சிந்தித்தார்கள், அவர்களுடைய கல்வி, பொருளாதாரத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால், எங்களுடைய நிலை அவ்வாறு அல்ல. எல்லா விதத்திலும், வடக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்திலேயே இருக்கின்றது.

அது கல்வியோ, சுகாதாரமோ, விளையாட்டோ எதுவாக இருந்தாலும் ஒன்பதாவது மாகாணமாகவே எமது மாகாணம் இருக்கின்றது.

தமிழர்களுக்கென ஓர் ஆயுத பலம் இருந்தது. அந்தப் பலத்தை கள்ளங்கபடமாக மௌனிக்கச் செய்து, முறித்தெறிந்துவிட்டு, மீண்டும் தங்களுடைய அராஜக ஆட்சியை தமிழர்கள் மீது செலுத்த முனைகின்றார்கள். இதுதான் உண்மை. இதை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்" - என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/136387

On 1/27/2020 at 10:57 AM, தமிழ் சிறி said:

போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தெற்கில நடக்கிற பல சமூக விரோத, போதைப்பொருள் கடத்தல், பாதாளலோக கோஷ்டி செயற்பாடுகளை நிறுத்த ஒரு சோதனையும் இல்லாதது சொறிலங்கா அரசின் தமிழின விரோத போக்கை காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, போல் said:

நீங்கள் சிங்கப்பூருக்குப் போனாலும், ஜப்பானுக்குப் போனாலும் அங்கெல்லாம் தமிழ் இருக்கின்றது. ஒரு சிறிய நாடாக இருந்தாலும், தமிழ் கலாசாரத்தைப் பேணுவதற்கு ஓர் இடம் அங்கு உண்டு.

அப்படியானால் சரவணபவன் என்ன செய்திருக்க வேண்டும் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரியை அழைத்த போது, அவரிடம் சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் தமிழ் இருக்கின்றது, தமிழ் கலாசாரத்தைப் பேணுவதற்கு அங்கே இடம் இருக்கிறது ஆனால் இலங்கையில் தான் தமிழ் இல்லை என்பதை தெரியபடுத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

12 hours ago, விளங்க நினைப்பவன் said:

அப்படியானால் சரவணபவன் என்ன செய்திருக்க வேண்டும் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரியை அழைத்த போது, அவரிடம் சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் தமிழ் இருக்கின்றது, தமிழ் கலாசாரத்தைப் பேணுவதற்கு அங்கே இடம் இருக்கிறது ஆனால் இலங்கையில் தான் தமிழ் இல்லை என்பதை தெரியபடுத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

சரவணபவனுக்கு உந்த விஷயங்கள் தெரியுமோ தெரியல்ல! ஆள் அந்தமாதிரி ஆள்.

நேற்று பாராளுமன்றத்தில் டக்கு ஐயா பேசும்போது அப்படி ஒன்றும் இல்லை என்றும் , தானும் அந்தவழியாகவே கண்ணை திறந்து கொண்டு போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்। இங்குள்ள படங்களை பார்க்கும்போது இது வெளிப்படையாகவே தெரிகின்றது। டக்கு ஐயாவுக்கு கண்ணில ஏதும் பிரச்சினையோ தெரியவில்லை। அடுத்த தேர்தல் வரப்போகுது। மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.