Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்தாளர்,ஓவியர் மல்லிகை சி.குமார் மறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

74-B30-C5-C-D781-4675-A561-1-D69-F67-B6-

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை சி. குமார்...... ஆழ்ந்த இரங்கல்கள்.......!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.. 

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் பெயர் நிலைக்கட்டும்.🙏

ஓவியங்கள் சில/பலவற்றை இங்கு காட்சிப்படுத்த முடியுமா ? 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

ஓவியங்கள் சில/பலவற்றை இங்கு காட்சிப்படுத்த முடியுமா ? 

கிடைக்கவில்லை Kapithan. ஆனால் அவர் ஓவியம் வரையும் ஒரு படம் இருக்கிறது

D4633976-E7-A2-4-F7-A-B112-A61-EFE6-AF60

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

அன்னாரின் பெயர் நிலைக்கட்டும்.🙏

ஓவியங்கள் சில/பலவற்றை இங்கு காட்சிப்படுத்த முடியுமா ? 

 

23 minutes ago, Kavi arunasalam said:

கிடைக்கவில்லை Kapithan. ஆனால் அவர் ஓவியம் வரையும் ஒரு படம் இருக்கிறது

D4633976-E7-A2-4-F7-A-B112-A61-EFE6-AF60

கீழே....  மல்லிகை சி.குமார்  என்ற  பதிவை, இளையத்தில் கண்டேன். இருவரும் ஒருவரா? என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. தெரிந்தவர்கள் கூறினால் நல்லது.

 

//////scan0023.jpg

மல்லிகை சி. குமார்

"டீச்சர் இன்னிக்கும் அந்த மானைப் பார்த்திட்டு வந்தீங்களா?"

அந்த சிறுமி தன் மழலைக் குரலில் என்னைப் பார்த்து கேட்க,

"ஆமா பார்த்திட்டு தான் வந்தேன். உன்னப் போல அந்த மானும் என்னை விழிச்சி விழிச்சு பார்திச்சு" - என்றேன் நான்.

"அப்ப எங்களுக்கும் அந்த மானப் பார்க்க ஆசையா இருக்கு டீச்சர்..."

"ஆமா... டீச்சர், எங்களையும் கூட்டிக் கொண்டு போய் அந்த மானக் காட்டுங்களே..." - மாணவர்களின் ஏகோபித்த குரல்கள்.

"சரி.... சரி.... எல்லாரும் அமைதியா இருங்க. உங்க எல்லாத்தையும் மானைப் பார்க்கக் கூட்டிக் கிட்டுப் போறேன்" என்று ஆறுதலாக சொன்னேன்.

"எப்ப டீச்சர் கூட்டிக்கிட்டுப் போவீங்க?" ஒருத்தி ஆசையாகக் கேட்டாள்.

மானைப் பார்க்க வேண்டும் என்ற அவர்களின் ஆசையும் ஆர்வமும் என்னை நெம்பி எடுப்பது போல இருந்தது. அவர்களின் ஆசையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உந்துதல் என்னுள் எழுந்தது.

"ந்தாப் பாருங்க இன்றைக்குப் பின்னேரம் மழை இல்லாவிட்டால் உங்களை மான் பார்க்கக் கூட்டிக்கிட்டுப் போறேன்" என்றேன்.

"ஹய்ய்யா.... அப்படின்னா மழ வராது" எல்லாரும் கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்தனர்.

"டீச்சர் அப்படினா நாங்க அந்தி வரைக்கும் இங்கேயே இருக்கணுமா?" - ஒரு சிறுமி சந்தேகத்தோடு கேட்டாள்.

"இல்ல மத்தியானம் உங்களை எல்லாம் கூட்டிக்கிட்டுப் போக உங்க வீட்டிலிருந்து யாராவது வருவார்கள் தானே... அவுங்களோடு நீங்க வீட்டுக்குப் பொயிட்டு பின் நேரம் மூன்று மணிக்கு திரும்பவும் இங்க வாங்க. அதன்பிறகு நாம மான் பார்க்கப் போவோம். அந்தி நேரத்திலும் மான் அங்க வரும். உங்களைக் கூட்டிக்கிட்டுப் போகவரும் உங்க வீட்டுக்காரர்களிடம் நான் விபரமாகச் சொல்லுறேன்" என்றேன் நான்.

"ஹய்யா... நாம எல்லாம் மான் பார்க்கப் போறோம்.." அவர்களிடம்தான் எவ்வளவு குதுகளிப்பு!

"டீச்சரம்மா... இன்னிக்கு இவுங்களுக்கெல்லாம் கடலைதான் சாப்பாடு... இப்ப நேரம் சரி... எல்லாருக்கும் சாப்பாட்டை கொடுத்திடுவோமா? என்று சமையல்கார ஆயா வந்து என்னிடம் சொல்லவும், சிறுவர்களுக்கு உணவு கொடுப்பதில் மும்முரமானோம். அவர்கள் வரிசையாக ஒழுங்காகப் போய் தங்கள் கைகளை சுத்தம் செய்துவிட்டு வந்து தங்கள் கதிரைகளில் அமர்ந்தார்கள். ஆயா எல்லாச் சிறுவர்களுக்கும் உணவைப் பரிமாறினாள்.

சிறுவர் முன்பள்ளியும் சிறுவர் அபிவிருத்தி நிலையமும் ஒரே இடத்தில் இருப்பதால்... சிறுவர் அபிவிருத்தி நிலைய ஆயாவும் வந்து உதவி செய்தாள்.

சிறுவர்களுக்கு உணவு, பால் என்பன கொடுப்பதோடு மற்றும் சுத்தம் செய்வதெல்லாம் இந்த ஆயாக்களின் பொறுப்பாக இருப்பதால் நான் போய் என் ஓய்வு அறையில் அமர்ந்தேன்.

மேக மலை....

இயற்கை சூழ்ந்த மலையடிவார இடம். பசுந் தேயிலைக் குன்றுகள். அதையடுத்து காடும் மலைகளுமான தொடர்கள். தேயிலைத் தோட்டத்தையடுத்து அடர்ந்த காடுகள் இருப்பதால்... அக்காடுகளிலிருந்து மான், பன்றி, மரை, குரங்கு.... ஏன் சிறுத்தைகள்கூட தேயிலைத் தோட்டத்திற்குள் நுழையும்.

நான் இந்த மேகமலை எஸ்டேட்டில் உள்ள சிறுவர் முன்பள்ளிக்கு ஆசிரியையாக வந்து மூன்று மாதங்களாகி விட்டன. தினமும் டயகம டவுனிலிருந்துதான் இங்கு வருகின்றேன். டயகம டவுனிலிருந்து மேற்கு திசையில் சிறிது தூரத்திற்கு அப்பால் உள்ள தமிழக் கொல்லை என்ற இடம்தான் என் சொந்த இடம். என் அப்பா ஒரு அங்காடி வியாபாரி, ஆற்றங்கரை ஓரமாக எங்களுக்கு வீடும் சிறிது நிலமும் இருந்தது. ஆற்றை ஒட்டியே அந்த சிறு விவசாய நிலமும் இருப்பதால்...

மழை காலத்தில் ஆறு பெருக்கெடுத்தால் பயிரெல்லாம் தேசமாகி விடும். போனமுறை லீக்ஸ் போட்டிருந்தோம். புரண்டு வந்த வெள்ளத்தில் எதுவுமே மிஞ்சவில்லை. இதில் அப்பாவைவிட அம்மாவுக்குத்தான் கவலை அதிகம். ஏனென்றால் அந்த நிலத்தில் எல்லா வேலையும் செய்வது அம்மாதான். என் படிப்பும் அந்த நிலம் போலத்தான். குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் வறுமை வெள்ளத்தால் எனக்கு படிப்பும் ஒழுங்காக வரவில்லை. இலவசமாக சீருடை, பாட நூல்கள் கிடைத்தாலும் கொப்பிகள் வாங்குவதற்கும், டியூசன் வகுப்புகளுக்குப் போவதற்கும் கஷ்டப்படுவேன். எனக்கு கீழ் இரண்டு தங்கச்சிமார்களும் ஒரு தம்பியும் இருக்கிறார்கள். அப்பாவின் தொழிலிலும் ஒரு விருத்தியில்லை.

எப்படியோ ஓஃஎல் வரைக்கும் படித்தேன். தகுந்த தகுதி இல்லாததினால் மேற்கொண்டு படிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எப்படியோ அப்பாவுக்குத் தெரிந்த ஒரு மெடத்தின் மூலம் பாலர் முன்பள்ளியில் எனக்கு இந்த வேலை கிடைத்தது. இதுவும் சுளையாக கிடைக்கும் மாத சம்பளமில்லை. இந்த முன்பள்ளியில் எத்தனை பிள்ளைகளின் பெற்றோர்களும் மாதாமாதம் மனசு வச்சிக் கொடுக்கும் ஒரு சிறு தொகைதான் எனக்குச் சம்பளம். ஆனால் இந்தத் தோட்டத்தைப் பொறுத்தவரை நான் ஒரு டீச்சர். அனைவரும் என்னை டீச்சர் என்றுதான் அழைக்கிறார்கள். அது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இங்கு வேலைக்கு வந்தப்பிறகு தோட்ட நிர்வாகத்தின் மூலம் - ஒரு தொண்டர் நிறுவனம் நடத்திய பயிற்சி முகாமுக்கும் போய் வந்தேன்.

சனி, ஞாயிறு தவிர.... ஏனைய நாட்களில் நான் காலை எட்டு மணிக்கு முன் டயகம டவுனுக்கு வந்துவிட வேண்டும் டவுனிலிருந்து மேக மலைக்கு போகும் மினி பஸ் எட்டு மணிக்கெல்லாம் புறப்பட்டு விடும். காலை நேரத்தில் சன்னல் ஓரமாக அமர்ந்து பயணிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

நான் பாடசாலையில் படிக்கும்போதே சுமாராக ஓவியம் தீட்டுவேன். படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தப் போது கூட ஓவியத்தில் ஈடுபாடாகத்தான் இருந்தேன். இப்பொழுது கூட இந்த சிறுவர்களுக்கு ஏற்ற ஓவியங்களை வரைந்து இங்கே மாட்டி வைத்திருக்கின்றேன். புதிதாக நான் இங்கே வரைந்து வைத்திருப்பது அதோ அந்த கூட்டமான புள்ளி மான்கள் படம்தான். என் மாணவர்கள் இதை பெரிதாக ரசித்தார்கள்.

நான் ஒவ்வொரு நாளும் அந்த மினி பஸ்ஸில் டயகம நகரிலிருந்து மேகமலைக்கு வரும்போது சில நாட்களில் அந்த பஸ் சந்திரகாமம் பாடசாலையோடு நின்றுவிடும். அப்படிப்பட்ட நாட்களில் நான் சந்திரகாம தோட்டத்திலிருந்து மேகமலைக்கு நடந்துதான் போவேன். சந்திரகாமத்திற்கும் மேகமலைக்குமிடையே வனப்பகுதி. நன்றாக வெயில் அடித்தாலும் பாதை ஈரப்பசையாக நிழல் கட்டித்தான் இருக்கும்.

சாலை ஓரத்தில் அழகான போரஸ்ட் பங்களா. அதிலிருந்து சிறிது தூரம் சென்றால் ஒரு சந்தி. வான மலை என்ற ஆன மலைக்கும் தேசிய கால்நடைப் பண்ணைக்கும் அந்த சந்தியிலிருந்து தான் பாதைகள் பிரிகின்றன. உலக முடிவு (வேல்ட்ஸ் என்ட்) என்ற இடத்திற்கும் இங்கிருந்து போகலாம். நான் நடந்து வரும்போது எத்தனையோ முறை இந்த வன எல்லையில் மான்களைப் பார்த்திருக்கிறேன். நான் இவ்வழியில் வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு மானையாவது பார்க்கத் தவறுவதில்லை. அதேபோல பின்நேரம் நான் மேக மலையிலிருந்து திரும்பும் போதும் மான் என் கண்களுக்கு தென்படும். குறிப்பாகச் சொன்னால் அந்திவேளையில் அந்த ஒற்றை புள்ளிமான்! பெரும்பாலும் அந்தி நேரத்தில் மேக மலையிலிருந்து டவுனுக்குப் போக வாகனங்கள் கிடைக்காது. நான் நடந்துதான் போவேன்.

தனிமையில் நடக்கும்போது மனம் ரம்யமாகவே இருக்கும். "டீச்சரம்மா அந்தி நேரத்தில் இங்கிருந்து நடந்து போறீங்க. சில நேரம் வனப்பகுதியில இருந்து சிறுத்த வந்தாலும் வரும். போன வாரம் நம்ம தோட்டத்து ஆளுங்க சிறுத்தையைக் கண்டிருக்காங்க. நாய்களையும் சிறுத்த கொன்னு போட்டிருக்கு. ஏதுக்கும் பார்த்தே போங்க" ன்னு யார் யாரோ என்னிடம் சொல்லியும் இருக்காங்க. நானும் அந்த அச்சமெல்லாம் தவிர்த்துதான் நடக்கின்றேன். ஆனா இதுவரைக்கும் மான் என் கண்களில் தென்பட்டது போல ஒரு சிறுத்தைகூட என் கண்களில் தென்படவில்லை.

ஏற்கனவே அந்த வனத்தில் உள்ள சிறுத்தைகளில் ஒன்று தேயிலைக் காட்டுக்குள் நடமாடுவதாக பேச்சும் அடிபடுகிறது. அதை பொதுமக்களும் நம்புகிறார்கள். சிறுத்தை மனிதர்களையும் அடித்து விடுமோ என்ற பயம் அவர்களுக்கு. இதனால் இந்த முன்பள்ளியிலுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் மான் பார்க்க தன் பிள்ளைகளை வனப் பகுதிக்கு அனுப்புவார்களா?

மத்தியானம்

சிறுவர்களை வீட்டிற்கு அழைத்துப்போக வந்த பெற்றோர்களிடம் நான் என் திட்டத்தை விளக்கமாகச் சொன்னேன். சில பெற்றோர்கள் மறுப்புத் தெரிவித்து விட்டனர். சிலரோ,

"அதுக்கென்னாங்க டீச்சர் நீங்க எங்க பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போய் மானைக் காட்டுங்க. ஆனா... நீங்கப் போற அந்த நேரத்தில மான் அங்க வந்து மேயுமாங்கிறதுதான் சந்தேகம். நாம நெனைக்கிற நேரமெல்லாம்... நமக்காக மானு அங்க வராது. ஆனா ஒங்க ஆசையை நாங்க கெடுக்கல்ல. எங்க பிள்ளைகளை கூட்டிக்கிட்டுப் போங்க..." என்றனர்.

மாலை மூன்று மணி.

பெற்றோர்கள் அனுமதித்த பிள்ளைகள் எல்லாரும் முன்பள்ளிக்கு வந்து விட்டனர். அவர்களோடு சற்று வயதான ஒருவரும் வந்திருந்தார்.

"டீச்சரம்மா நானும் ஒங்களோட வனப்பகுதிக்கு வர்றேன். காட்டப்பத்தி எனக்கு எல்லாமே தெரியும். அதோட நானும் இந்த ரெண்டு மூணு நாளா போரஸ்ட் பங்களாப் பக்கம் ஒரு மானு மேயிறதைப் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். முன்னயெல்லாம் இந்த தோட்டத்தில உள்ள கொஞ்சப் பேரு மான் வேட்டை, மரை, பன்றி வேட்டைன்னு மிருகங்களை வேட்டையாடி வந்து அதுங்க இறைச்சிகளை விற்பனை செய்வாங்க. நான் அப்பவே அந்த விலங்கு வேட்டைக்கு எதிர்ப்பு தெரிவிச்சவன்.

"எதுக்கிடா இந்த வாயில்லா ஜீவன்களை கொன்னு அது எறச்சியை வித்து வாழுறீங்க! பாவண்டா விலங்குகளை கொல்லாதீங்க!ன்னு அப்பவே சொல்லுவேன். இப்ப அரசாங்கமே பார்த்து அந்த மிருக வேட்டைக்கு தடைப் போட்டிறிச்சி. இல்லாட்டிப் போனா மானு, மரைன்னு கொன்னுக்கிட்டுத்தான் இருப்பானுங்க" என்றார் அவர்.

"அட இந்த காடுகள் சூழ்ந்த இடத்திலேயும் இப்படி ஒரு ஜீவகாருண்ணிய போதகரா?" என்று அந்த முதியவரைப் பார்த்து நான் வியந்தேன்.

மூன்று மணிக்குப் பிறகு...

நாங்கள் அங்கிருந்து காட்டுப் பங்களா பக்கம் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். அந்த முதியவரும் எங்களோடு வந்தார்.

"டீச்சர் ஒரு மான் மட்டுமா வரும்?"

"அதுக்கு கொம்பு இருக்குமா?"

"நீங்க வரைஞ்சி வைச்சிருக்கிற மாதிரி அது மேல புள்ளிகள் இருக்குமா?"

என்று பலவித கேள்விகளை அந்த நாலுக்கும் - ஆறுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சிறுவர்கள் என்னை நோக்கிக் கேட்டபடி வந்தனர். நாங்கள் தேயிலைச் செடிகளைக் கடந்து வனப்பகுதி தொடங்கும் காட்டுப் பங்களாவை அண்மித்தோம்.

கலர்...கலர் துணிகளில் கொடி எல்லாம் கட்டி இருந்தார்கள். காலையில் நான் இந்த வழியாக போன போது இந்தக் கொடிகளெல்லாம் இல்லை. ஆனால் இப்பொழுது...?

"ஏங்கய்யா இந்த போரஸ்ட் பங்களாவில் ஏதும் விசேஷம்மா?" என்று எங்களுடன் வந்த பெரியவரை நோக்கிக் கேட்டேன்.

"டீச்சரம்மா... ராவைக்கித்தான் விடிய விடிய விசேஷம் நடக்கப்போவுது. யாரோ ஒரு மந்திரியோட மகன் தன் கூட்டாளிமார்களோடு வந்து இங்க கும்மாளம் அடிக்கப் போறானாம். டான்ஸ் நிகழ்ச்சி எல்லாம் நடக்குமின்னு, இங்க பூஞ்செடி தோட்டத்தில வேலை செய்யும் என் சொந்தக்காரன் ஒருத்தன் நேத்து அந்திக்கே ஏங்கிட்ட சொல்லிட்டான். இந்தப் பங்களாவில அடிக்கடி ராவு நேரத்தில் ஏதாவது களியாட்டம் நடக்குமாம்.

ஏஞ் சொந்தக்காரனும் ஏம் மாதிரிதான். விலங்குகளை வதை செய்வதை தாங்கிக்க மாட்டான். ரொம்ப இரக்கக் குணம் உள்ளவன். இந்த பங்களாவில உள்ளவனுங்க காட்டு சேவலை அடிச்சி சமைச்சாலும்... ஏஞ் சொந்தக்காரன் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டான். விலங்குகளை வேட்டையாடுவது அவனுக்கும் பிடிக்காது..." என்ற முதியவர்,

"வாங்கம்மா... இன்னும் கொஞ்சந்தூரம் போய் பார்ப்போம். மான் எப்படியும் தென்படும். ரோட்டு ஓரமா வந்து மான் புல் மேயும்" என்றார்.

"மானை சிறுத்த கண்டா கொன்னுப்புடும்ன்னு சொல்லுறாங்களே.... சிறுத்த மானைக் கொல்லுமா?" மற்றொரு சிறுமி சிறிது பயத்தோடு கேட்டாள்.

"அட... எந்த சிறுத்தையும் இங்க வராது" என்ற பெரியவர் தன் வலது கையை காட்டுப் பக்கம் நீட்டி, "சிறுத்தையெல்லாம் அதோ தெரியுதே அந்த ஆனைமலைக் காட்டுலதான் திரியும். இங்க இந்த ரோட்டுப் பக்கமெல்லாம் சிறுத்த வராது. நீ தைரியமாக இரு. பயப்படக்கூடாது" என்றார்.

"அப்ப ஏன் மானை இன்னும் காணோம். அந்த மானை சிறுத்தை கொன்னிருக்குமோ?" என்று ஒரு சிறுவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேகமாக ஒரு கறுப்பு நிற வாகனம் எதிர் பக்கமிருந்து வந்துகொண்டிருந்தது. "எல்லாரும் ஒதுங்கியே நில்லுங்க. அங்க வருவது மந்திரி மகனோட வாகனமாகத்தான் இருக்கும்" என்றார் முதியவர்.

"ஐயா மந்திரியோட மகன் வர்றதால இன்னிக்கி மான் இந்தப் பக்கம் வராது" என்று நான் சிரித்தபடியே சொல்லிவிட்டு சிறுவர்களை நோக்கினேன். என் வார்த்தைக்குப் பின் அவர்களின் முகமெல்லாம் வாடியது.

இன்றைக்கு இவர்களுக்கு மானைக் காட்ட முடியாமல் ஏமாற்றத்தோடுதான் திரும்பிப் போக நேருமோ...? என்று ஒரு அவநம்பிக்கையும் எனக்குத் தோன்றியது. வாகனம் அருகில் வந்த போதுதான் தெரிந்தது அது பொலீஸ் வாகனமென்று.

வேகமாக வந்த வாகனம் காட்டுப் பங்களாவின் முகப்பில் போய் நின்றது. வாகனத்திலிருந்து அவசரம் அவசரமாக குதித்த பொலீஸ்காரர்கள் பங்களாவின் உள்ளும் புறமுமாக ஓடினார்கள்.

"என்னா பெரியவரே.... மந்திரியோட மகன் வரப்போறான்னு இப்பவே அவனுக்கு பொலீசு பாதுகாப்பெல்லாம் தடப்புடலா வந்திருச்சே" என்றேன்.

"அது இல்லம்மா வேற ஏதோ விபரீதம் நடந்திருச்சிப் போல..." என்று சொல்லிக் கொண்டே முதியவர் பங்களாப் பக்கம் நெருங்கிப் போக நானும் சற்று பங்களாப் பக்கம் முன்னேறிப் போய் நின்றேன். சிறிது நேரத்திற்கெல்லாம்... பங்களாவின் பின்பக்க காம்பிராவிலிருந்து ரத்தம் கொட்ட கொட்ட உடம்பில் பாதி வரைக்கும் தோல் உரிக்கப்பட்ட பரிதாப நிலையில் ஒரு மானின் உடலை சுமந்து வந்த இரு பொலிஸார் அதை வண்டிக்குள் போட்டதைப் பார்த்த எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது. உடம்பே நடுங்கியது. இதைத் தொடர்ந்து ரத்தக்கறை படிந்த உடுப்போடுள்ள ரெண்டு மூன்று ஆசாமிகளை அடித்து தர.... தர... வென்று இழுத்துக்கொண்டு வந்த சில பொலிஸார் அந்த ஆசாமிகளையும் வண்டிக்குள் தள்ள இன்னும் ரெண்டு பொலிஸ்காரர்கள் இரத்தக்கறைபட்ட ஆயுதங்களோடு வந்தனர்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முதியவர் என் பக்கம் திரும்பி...

"டீச்சரம்மா இந்தக் கொலக்காரப் பாதகணுங்க ரவ்வு நடக்கப்போகும் களியாட்டத்துக்காக வாயில்லாத புள்ளிமான கொன்னு விருந்துப்போட எத்தணிச்சானுங்க.. ஆனா... இப்ப கையும் களவுமா பொலிஸ்காரங்க கையில மாட்டிக்கிட்டானுங்க. இந்த மான் எறைச்சிக்கு ஆசப்பட்ட அந்த மந்திரியோட மகனையும் உள்ளுக்குத் தள்ளணும். அவன்தான் அம்ப எய்து விட்டவனா இருக்கணும்" என்றவர்,

"இந்தக் கொலகார பாதக செயல அவசரமா டவுன்ல உள்ள பொலிசுக்கு தெரியப்படுத்தியது நிச்சயமா என் சொந்தக்காரனாதான் இருக்கணும். அவனால இந்த மாதிரி கொடூரத்தை எல்லாம் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது. எப்பவும் அவன் கிட்ட செல்போனும் இருகு;கும். அவனால இந்த கொலைகாரன்களை தட்டித்தடுக்க முடியாவிட்டாலும் பொலிசுக்கு தகவல் சொல்லும் அளவுக்கு அவன் கிட்ட தைரியம் இருக்கு" என்றார் முதியவர்.

"டீச்சர் இன்னிக்கி மான் வராதா...?" சற்று தூரத்தில் நிற்கும் சிறுவர்களில் ஒருவன் காட்டுப்பகுதியை பார்த்தபடி கேட்க...

"மான் இனிமே இங்க வராதுடா தம்பி. ரெண்டு கால் உள்ள கொடூர மனித சிறுத்தைங்க அந்த இளமான இறைச்சிக்காக கொன்னு கொதறிப்புடுச்சிங்க..." வேதனையோடு சொன்னார் பெரியவர்.

"அப்ப மானு செத்துப் பொயிருச்சா?" கண் கலங்க கேட்டாள் ஒரு சிறுமி... "செத்துப் போவுல... அதை சாவடிச்சிட்டானுங்க" என்ற பெரியவரின் குரல் சோகமாக ஒலித்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த மானின் உடலையும் சுமந்து கொண்டு அந்தக் காட்டுப் பங்களாவிலிருந்து கிளம்பியது காவல்துறை வண்டி.

(கற்பனையும் உண்டு) //////

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கீழே....  மல்லிகை சி.குமார்  என்ற  பதிவை, இளையத்தில் கண்டேன். இருவரும் ஒருவரா? என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. தெரிந்தவர்கள் கூறினால் நல்லது.

சிறுகதை அவருடையதுதான் தமிழ் சிறி

1 hour ago, தமிழ் சிறி said:

கீழே....  மல்லிகை சி.குமார்  என்ற  பதிவை, இளையத்தில் கண்டேன். இருவரும் ஒருவரா? என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. தெரிந்தவர்கள் கூறினால் நல்லது.

சிறுகதை அவருடையதுதான் தமிழ் சிறி

மல்லிகை  சி.குமாரின் முகநூலில் காணக் கிடைத்தது,

4610-C055-7-DC7-4888-9-D29-908-D4-AB4-A3

F1-D8673-E-31-AB-4-ECA-B46-C-8-E590-D94-

 

19-EC458-D-7698-4819-B26-D-A49-B88945-DF

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, கவி ருணாசலம் இருவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும். எனது கை பேசியில் பல செயலிகள் இயங்கவில்லை. ஆதலினால் என்னால் அவற்றை பயன்படுத்த முடியவில்லை. மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.