Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெப்ரவரி 04 ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்ட கரிநாள்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரி 04 ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்ட கரிநாள்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

சிறிலங்காவின் 72வது சுதந்திர தினத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சிறீலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச அதிபராக கோத்தபாய ராஜபக்ச அநுராதபுரத்தில் பதவியேற்ற நிலையில் சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தினம் இன்னும் சில தினங்களில் சிங்களப் பேரினவாதம் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைத்துக் கொண்டாடத் தயாராகின்றது. ஈழத்தமிழ் மக்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை, ஏனெனில் இந்நாள் வடக்குக் கிழக்கு வாழ் ஈழத்தமிழருக்கு உரிய நாள் அல்ல.

ஏற்கனவே 146679 உறவுகளைத் தொலைத்துவிட்டு ஆறாத்துயரில் இருக்கும் தமிழருக்கு சிங்களத்தின் சனாதிபதி தன் வாயாலேயே 20000 காணாமல் ஆக்கப்பட்டோரை தாம் கொன்றுவிட்டோம் என்று மறைமுகமாகக் கூறியுள்ளார். 20000ற்கு மேற்பட்ட உறவுகளை நேரடியாகவே இராணுவத்திடம் ஒப்படைத்ததற்கான சாட்சியங்கள் உள்ள நிலையில் சர்வதேசமும் மனித உரிமை அமைப்புக்களும் ஏன் கைகட்டி வாய் பொத்தி மௌனமாக உள்ளன?

சிறிலங்கா அரச அதிபரால் 17.01.2020 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் இறந்துவிட்டனர், காணாமல் ஆக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளால் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டோர், முறையான விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கான மரணச் சான்றிதழ் வழங்கப்படும், அவர்களுக்கான உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்ட விடயங்கள் ஈழத்தமிழ் மக்களைக் கொதிப்படைய வைத்தள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என வேண்டுகின்றோம்.

தமிழர்கள் ஒற்றையாட்சிக்குள் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாது என்பதைக் காலத்துக்குக் காலம் சிங்கள அரசியல்வாதிகள் தங்கள் செயல்களின் மூலம் புலப்படுத்தி வருகின்றனர். தமிழ்த் தேசமாக சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து செல்வது தான் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பையும், இனப்பிரச்சினைக்கு உயரிய தீர்வையும் தரும் என்பதை சர்வதேசத்திற்கு தமிழர் தொடர்ச்சியாக இடித்துரைக்க வேண்டும்.

தமிழர்கள் தங்களுக்கே உரித்தானதும் தனித்துவமானதும் ஆன மொழி, கலை கலாசாரங்கள், பாரம்பரிய உணவுமுறை, உடைப் பாரம்பரியம், வழிபாட்டு முறைகள், பண்பான பழக்க வழக்கங்கள், அன்பான வாழ்க்கை முறைகள், பூர்வீக நிலங்கள், வர்த்தகங்கள், மரபுரிமைகள் என்று பலவற்றையும் கொண்ட இனமாகையால் அவர்கள் இலங்கைத்தீவின் 2500 வருடங்களுக்கு மேலான பழங்குடி மக்கள் ஆவர். எமது உரிமைகளை என்றுமே விட்டுக்கொடுக்க முடியாது. பாலஸ்தீனிய மண் யூதர்களிடம் கரைந்து போனதுபோல எமது மண்ணை சிங்களத்தின் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்த விடாமல் எதிர் நின்று பாதுகாக்க வேண்டும்.

இன்றை சூழலில் இந்தோ – பசுவிக் பிராந்தியம் வல்லரசுகளின் புவியியல் மற்றும் பொருளாதாரப் போட்டிக்குள் அகப்பட்டு அல்லாடிக்கொண்டிருக்கின்றது. இவர்களின் ஆதிக்க அதிகாரப் போட்டிக்குள் பழத்தமிழராகிய எமது விடுதலையும் பகடைக்காயக்கப்பட்டும் சூழல் அதிகரித்துக்கொண்டே போகின்றது. நாம் பட்ட வலிகள் இலகுவில் மறந்து போவதற்கு ஒன்றும் கற்பனைகள் அல்ல. அன்னியனின் முதலீட்டுக்கு நிலம் கொடுக்கும் சிங்களம் பூர்வீகக் குடிகளான எம்மை ஆயுதமுனையில் அடக்கியொடுக்குகிறது. ஆகவே ஒவ்வொரு உலகத்தமிழரும் எமது சுயநிர்ணய உரிமைக்காக உரத்துக்குரல் கொடுக்க வேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அழைப்பு விடுக்கின்றது. சிறிலங்காவின் 72வது சுதந்திர தினத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஈழத்தமிழ் மக்கள் தங்கள் நிரந்தர அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு பெருமெடுப்பில் தயாராக வேண்டும் என புலத்திலும் தாயகத்திலும் உள்ள தமிழ் அமைப்புக்களுக்கு அறைகூவல் விடுக்கின்றோம்
 

http://www.samakalam.com/செய்திகள்/பெப்ரவரி-04-ஈழத்தமிழரின்-ச/

  • கருத்துக்கள உறவுகள்

09-D9-D3-A1-F88-C-4-EA5-842-A-915-FEC76-

2 hours ago, Kavi arunasalam said:

09-D9-D3-A1-F88-C-4-EA5-842-A-915-FEC76-

அருமை!
அப்பிடியே பெப்ரவரி 4 என்றும் போட்டிருந்தா முழுமை பெற்றிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

அப்பிடியே பெப்ரவரி 4 என்றும் போட்டிருந்தா முழுமை பெற்றிருக்கும்.

5-E969-B35-4-DB3-434-D-AC77-AE349609-ED7

  • கருத்துக்கள உறவுகள்

என் தாயார் அடிக்கடி ஒன்று சொல்வார். எம்மை அவமானப் படுத்திய ஒருவரிடம் உதவி வேண்டிப்போனால் அவர் நம்மை இன்னும் அவமானப்படுத்தி ஆனந்தப் படுவாரே தவிர உதவி செய்யார். நாம் அவமானப் படுத்திய ஒருவரிடம் அவ்வாறே உதவி தேடினால் பழி வாங்கப்படுவோமே தவிர உதவி ஏதும் கிடையாது.  சிங்களம் எமது உடமைகளை, உறவுகளை, உயிர்களை, உணர்வுகளை எங்களிடம் இருந்து பலவந்தமாக பறித்தது.  திருப்பி தரப்போவதில்லை. தேர்தலில் கூட அடக்கி, அச்சத்தை ஏற்படுத்தி வாக்கு எடுக்க முயற்சிக்கிறதே தவிர எம்மை ஏற்று மாற்றத்தை கொண்டுவர விரும்பேலை. கருணா, டக்கி, இன்னோரன்னதுகள் எவ்வளவு வாலை ஆட்டினாலும் தமிழர் வாக்கு பெற்றால்த்தான் அவர்களுக்கு ஏதாவது எலும்பு விழும். தட்டிக் கேக்க முடியுமா? சிங்களம், தான் இறுக வேண்டி வந்தால்புலிகளும்  மனித உரிமை மீறல் செய்தார்கள் என்று கூறி தண்டனை கருணாவுக்கு கிடைக்கலாம். தானே புலிகளின் தளபதியாக இருந்தவன், முக்கிய போராளி நானே. என்று பீத்துவதன் பலனை அனுபவிக்கலாம். அதே சமயம் தான் மனித உரிமை மீறலில் சிக்கிக் கொண்டால், ஒட்டுக்குழுக்களை மாட்டி தான் தப்பி விடலாம். அதற்காகவே இவர்களை வேள்வி கடாவாக வளர்க்கப்படுகிறார்களே தவிர, இவர்களுக்கு அமைச்சுப் பதவி அளித்து அழகு பார்ப்பதற்கல்ல. தமிழர் அடிமைகளாக இருக்க வேண்டும், அவர்களின் இரத்தத்தில் வாழ நினைப்பவன். தனக்கு எதிராக கிளம்பிய, ஆயுதம் தூக்கிய, தமிழன், தன் இனத்தை, போராட்டத்தை, சுயநலத்துக்காக காட்டிக்குடுத்து, அனிஞாயத்துக்கு தனக்கு வாலாட்டுகிறவனை நம்பி அமைச்சு குடுத்து மதிப்பளிப்பான் என்று நம்பும் கூட்டம் தன்னைத் தான் அறியாத, ஏற்றுக்கொள்ளாத, மறுக்கிற கூட்டமே. இன்னும் சிங்களவன் உரிமைகளை தருவான். பெற்றுவிடுவோம் என்று கனவு நாம் கண்டால் அதுவும் கற்பனையே. சும்மா பாடுகிறோமோ இல்லையோ அதுவே தமிழில் இருக்க கூடாது என்று கூறும் திறனற்ற இந்தக் கூட்டத்தை நம்பி நாட்களை கடப்பதை விட, இதிலிருந்து எப்படி விடுபடலாம் என்று யோசிக்கிற தலைமை வேண்டும். சுப்பன்ர கொல்லைக்கேயெ சுத்த வேணும்  என்று நினைக்கிற தலைவர்களால் முடியாது. இதையும் தலைவர் என்று சொல்கிறவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.   

On 2/2/2020 at 2:54 PM, கிருபன் said:

பெப்ரவரி 04

போர்க்குற்றவாளிகளின் சுதந்திர தினம்.
நாளை கொலைகாரர்கள் வீதியிலும், வானத்திலும் கூத்தடிக்க போறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kavi arunasalam said:

5-E969-B35-4-DB3-434-D-AC77-AE349609-ED7

எங்கள்தோள்களில்ஏறிஇருந்துகொண்டு 

அவர்கள்சுதந்திரத்தை 

அவர்கள்கொண்டாடிக்கொண்டுஇருக்கிறார்கள்.

On 2/2/2020 at 11:33 PM, Kavi arunasalam said:

5-E969-B35-4-DB3-434-D-AC77-AE349609-ED7

மிகமிக அருமை!
நன்றி.

12 hours ago, Gowin said:

போர்க்குற்றவாளிகளின் சுதந்திர தினம்.

இந்த முறை சொறிலங்கா அரசாங்கம் சகல வியாபார நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் கொடி ஏத்தி கொலைகாரர்களின் சுதத்திரத்தை கொண்டாட வேண்டும் என்டு உத்தரவிட்டும், வழமையை விட மிகக் குறைவான அளவிலையே கொடிகள் பறப்பதாக கொழும்புச் செய்திகள் சொல்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.