Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள்

உண்மை வலியது; அதலபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும், உண்மை ஒருநாள் வௌிவந்தே தீரும்.   

உண்மைகள் வெளியாகிற போது, பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை, வெளிக்கொணரப்பட்ட உண்மை உருவாக்கிவிடும். இது, உண்மையின் வலிமையையும் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் எமக்குப் புரிய வைக்கின்றன.   

பெரும்பாலும், நீண்ட முயற்சியின் பின்னர் வெளிவரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ள, ‘பொதுப்புத்தி’ மனநிலை தயாராக இருப்பதில்லை. “இப்படி நடந்திருக்காது” என்ற ஆறுதலுடன், அப்பால் கடந்து போகிறோம். 

உண்மைகள் கொடியன; அவை, எமது நம்பிக்கைகளில் தீ வைப்பன; எதிர்பார்ப்புகளில் கல்லெறிவன.   

‘கீனி மீனி’ என்ற தலைப்பே, ஒரு மாதிரியாக இருக்கிறது என்று, நீங்கள் நினைக்கக்கூடும். இலங்கை, ஓமான், நிக்கரக்குவா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை இணைக்கும் ‘கண்ணி’, இந்தக் ‘கீனி மீனி’.

‘கீனி மீனி’ என்றால் என்ன, இது பற்றி இப்போது ஏன் பேச வேண்டும் என்று, நீங்கள் கேட்கலாம்?   
இது கொஞ்சம் பழைய கதை. பழைய கதை மட்டுந்தான் என்பதையும், கோடிட்டுச் சொல்ல விரும்புகிறேன். 

image_2ef6d8d6b4.jpgகடந்த வாரம், மிகவும் சுவாரஷ்யமான புத்தகமொன்று வெளிவந்தது. அதன் தலைப்பு ‘கீனி மீனி: போர்க் குற்றங்களில் இருந்து தப்பிய பிரித்தானிய கூலிப்படைகள்’ (Keenie Meenie: The British Mercenaries Who Got Away with War Crimes).   

பிரித்தானியாவில் முக்கியமான புலனாய்வு ஊடகவியலாளர்களில் ஒருவரான பில் மில்லர் (Phil Miller) எழுதிய இப்புத்தகம், இலங்கை வரலாற்றில், மறைக்கப்பட்ட சில பக்கங்களை வெளிக்கொணர்கிறது. 

எல்லாவற்றுக்கும் மேலாக, 1970-80களில் பிரித்தானியா, தனது முன்னாள் கொலனிகளில் எவ்வாறு இயங்கியது என்பதன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை, சில உதாரணங்களுடன் காட்ட முற்படுகிறது.   

சுருக்கமாகச் சொல்வதானால், ‘கீனி மீனி’ பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவுடனும் முழுமையாக ஆசிர்வாதத்துடனும் இயங்கிய ஒரு தனியார் நிறுவனம் ஆகும். சரியாகச் சொல்வதாயின், கூலிப்படை; ஏனெனில், அவர்கள் செய்த காரியங்கள், அந்த மாதிரி. அவை, எந்த மாதிரி என்று பார்ப்பதற்கு முன்னர் .....!  

‘கீனி மீனி’யின் கதைக்கான முன்கதை   

இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர், சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தில், சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கியது. 

ஆம், பிரித்தானியக் கொலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள், ஒவ்வொன்றாக விடுதலை பெற்றன. தனது முன்னாள் கொலனிகள் மீதான காதலால், (செல்வத்தின் மீதான) பொம்மை அரசாங்கங்களை நிறுவியோ, வேறு வழிகளிலோ கட்டுப்பாட்டை வைத்திருக்க பிரித்தானியா முயன்றது.  

 இதை நேரடியாகச் செய்வதற்குத் தடைகள் இருந்தன. விடுதலை அடைந்த சுதந்திர நாடுகளில் தலையிடுவது, நன்மதிப்புடைய செயலாக இருக்காது; தப்பித்தவறி, யாராவது நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினால், பதில் சொல்லியாக வேண்டும்; ஊடகங்களின் ஊடாகக் கெட்ட பெயருக்கு ஆளாகினால், ஆட்சியை இழக்க நேரிடும். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, அனைத்தையும் மறைமுகமாகச் செய்ய, பிரித்தானிய விரும்பியது.   

இக்காலத்தில், எகிப்தில் ஜனாதிபதியாகப் பதவிவகித்த கமல் அப்துல் நாசார், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்; பிரித்தானிய வர்த்தக நலன்களுக்குப் பிரச்சினை கொடுத்துக் கொண்டிருந்தார். 

இதையடுத்து, பிரித்தானிய சிறப்பு விமானச் சேவையில் கொமாண்டராகப் பணியாற்றிய கேர்ணல் ஜிம் ஜோன்ஸன் தலைமையிலான கூலிப்படை, 1960களில் ஜெமனில் நாசருக்கு எதிராகப் போரிட்டது. நாசருக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்திய பின்னர், இந்தக் கூலிப்படை நாடு திரும்பியது.   

இது, பிரித்தானிய இராணுவ, அரசியல் உயரடுக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறான செயற்பாடுகள், அரசாங்கத்தைப் பொறுப்பில் இருந்து அகற்றுவதால், இதற்கான கணிசமான ஆதரவு அரசாங்கத்தில் இருந்தது. இதன் தொடர்ச்சியாக, 1970களில் ஜோன்சனால் Keenie Meenie Services (KMS) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.    

இது, பிரித்தானியா விரும்புகின்ற வேலைகளை, பிரித்தானியாவுக்காகச் செய்து முடித்தது. 1980களில் இது, மிகப்பெரிய இலாபம் தருகிற வியாபாரமானது.  

1975ஆம் ஆண்டு, முன்னாள் இராணுவ வீரர்கள் நால்வரினால் ‘கீனி மீனி’ உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம், ஆர்ஜென்டீனாவின் தலைநகர் பொர்ன்ஸ் அய்ரிஸில் இருந்த, பிரித்தானிய இராஜதந்திரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கியது. இவ்வாறு தான், இந்த நிறுவனம் பிரித்தானியப் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை சார்ந்த வட்டாரங்களில் அறிமுகமானது.   

பிரித்தானியப் பிரதமர் மார்க்கிரட் தச்சரின் அளவு கடந்த தனியார் மயமாக்கல், சுதந்திர சந்தை ஆகிய கொள்கைகளும் அமெரிக்க ஜனாபதி ரொனால்ட் றீகனின் கொம்யூனிசத்துக்கு எதிரான நிலைப்பாடும் இணைந்து, இவ்வகையான நிறுவனங்களுக்குச் செங்கம்பளம் விரித்தன. 

இந்நிறுவனங்கள், பிரதானமாக இடதுசாரி ஆட்சிகளை அகற்றுவதற்கு வேலை செய்தன.  அந்நாடுகளில், நாசகார வேலைகளில் ஈடுபடுவது, வலதுசாரி சர்வாதிகார ஆட்சிகளை நிறுவுவதும் அவற்றை நிலைபெற உதவிகள் செய்வதும் போன்ற பணிகளில் ஈடுபட்டன.   

சரி, ‘கீனி மீனி’ என்ற பெயர், ஏன் வைக்கப்பட்டது என்பதற்குப் பல கதைகளும் கிளைக் கதைகளும் உண்டு. இவற்றை, இந்தப் புத்தகத்தில் பில் மில்லர் அழகாக எடுத்துரைக்கிறார்.   

ஓமான் - நிக்கரகுவா - இலங்கை  

ஓமானில் புரட்சிகர விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்று, 1960களில் வீரியத்துடன் இயங்கத் தொடங்கியது. எகிப்தின் நாசரின் ஆதரவு, ஜெமன் உள்ளிட்ட நாடுகளில், எழுச்சிபெற்ற இடதுசாரிச் சிந்தனைகளின் தொடர்ச்சியாக, ஓமானில் டொவார் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் புரட்சியில் ஈடுபட்டனர்.   

அவர்கள், ஓமானில் சுல்தான் செயிட் பின் தைமூரின் ஆட்சியில் இருந்து பிரிந்து, தனியானதும் சுதந்திரமானதுமான ஆட்சியைக் கோரினர். இது பிரித்தானியாவுக்கு உவப்புடையதாக இருக்கவில்லை. 

1962 முதல், ஆட்சிக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தப் போராளிகள், பிரித்தானியாவின் நலன்களில் ஆப்பு வைத்து விடுவார்கள் என்று, பிரித்தானியா அஞ்சியது.   

பிரித்தானிய இராணுவக் கல்லூரியில் பயின்ற இளவரசர் கபூஸ் பின் சைட்டின் உதவியுடன், சதிப்புரட்சி அரங்கேறியது. பிரித்தானிய இராணுவ வீரர்களின் உதவியுடன் மகன், தந்தையைப் பதவியை விட்டு அகற்றினார். இந்த மகன்தான், அண்மையில் காலமான ஓமானிய சுல்தான்.   

புதிய சுல்தான், தனக்கெனச் சிறப்புப் படைகளை உருவாக்க, ‘கீனி மீனி’யை நாடினார். அவர்களின்  உதவியுடன், கிளர்ச்சி அடக்கப்பட்டது. தனது தந்தைக்கு நேர்ந்தது, தனக்கும் நேரா வண்ணம், தனக்கெனப் பிரத்தியேகப் படைகளை, ‘கீனி மீனி’யின் உதவியுடன் உருவாக்கினார்.   

நிக்கரக்குவாவில் ஆட்சிக்கு வந்த சன்டனிஸ்டாக்களுக்கு எதிரான போரில், நேரடியாக ஈடுபட விரும்பாத பிரித்தானியா, ‘கீனி மீனி’யை உதவிக்கு நாடியது. அவர்கள், நிக்கரக்குவாவில் நேரடியாகப் போரில் ஈடுபட்டார்கள். வைத்தியசாலைகள் மீது குண்டு போடுவதில் தொடங்கி, அனைத்து அட்டூழியங்களையும் செய்தார்கள். நூலின் பல பக்கங்களில், இவை குறித்த சான்றுகள் விவரிக்கப்பட்டுள்ளன.  

இலங்கையில் ‘கீனி மீனி’   

இனி, இலங்கைக்கு வருவோம். 1980ஆம் ஆண்டு முதல், ஜெயவர்தனவின் அரசாங்கம், பிரித்தானியாவிடம் இராணுவப் பயிற்சி உதவிகளைப் பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், 1983ஆம் ஆண்டு, கலவரத்தைத் தொடர்ந்து, நேரடியான இராணுவ உதவிக்கு, பிரித்தானியா பின்னடித்தது.   

இதைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசாங்கத்தின் பரிந்துரையில், ‘கீனி மீனி’ நிறுவனம் இலங்கையின் பாதுகாப்பு உதவிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டது. ‘கீனி மீனி’யே இலங்கையில், விசேட அதிரடிப் படையினரை உருவாக்கிப் பயிற்சியளித்தது. 

இலங்கையில் பல விமர்சனங்களுக்கு உட்பட்ட பொலிஸ் பிரிவாக, விசேட அதிரடிப் படையினர் உருவாகினர். இதற்கான பெருமையை, ஜே. ஆர். ஜெயவர்தனவின் மகன், ரவி ஜெயவர்த்தன தனதாக்கிக் கொண்டார்.   

1985ஆம் ஆண்டு, இலங்கை விமானப் படை பெற்றிருந்த நவீன ரகத் தாக்குதல் ஹெலிகொப்டர்களைச் சரியாகப் பயன்படுத்தக்கூடிய விமானிகள் இன்மையால், ‘கீனி மீனி’ ஊழியர்கள், அப்பணியையும் செய்தார்கள். இவர்கள், அக்காலத்தில் இடம்பெற்ற பாதகச் செயல்களில், பங்காளிகளாக இருந்தார்கள். 

இவை அனைத்தும், பிரித்தானியாவின் ஆசிர்வாதத்துடன் நடந்தன. இந்த உதவிகள், இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கையில் இருந்த போதும் தொடர்ந்தன என்பதை, ஆராய்ந்து ஆதாரங்களுடன் இந்நூல் தருகிறது.  

கற்காத பாடங்களுக்குக் கொடுக்கும் விலை  

இப்போதும், பிரித்தானியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்; ‘டவுனிங் ஸ்ரீட்’ வாசலில், ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் இருக்கிறார்கள். மேற்குலகம் தான், தமிழ் மக்களுக்கான ஒரே போக்கிடம் என்பவர்கள், இவ்வாறான உண்மைகளின் பின்னரவாவது, திருந்துவார்களோ தெரியாது. 

மேற்குலகம், தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி இருக்கிறது. எம்மை மட்டுமல்ல, உலகில் உள்ள எத்தனையோ விடுதலைப் போராட்டங்களைத் தோற்கடித்து இருக்கிறது. இந்த உண்மைகளை ஏற்காத வரை, எமக்கு விடுதலை சாத்தியமில்லை. 

நல்லவேளை, இந்த ஏற்கக் கடினமான உண்மைகளை, ஒரு பிரித்தானியப் பத்திரிகையாளர் வெளிக்கொணர்ந்தார். அல்லாவிடின், இதற்கும் கதைகளையும் காரணங்களையும் கட்ட, நாம் தயாராக இருப்போம்.   

இந்த நூலின் சிறப்பு, இது தேக்கி வைத்துள்ள தகவல்களும் சான்றாதாரங்களும் ஆகும். பில் மில்லர், கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள், இந்த நூலுக்காக உழைத்திருக்கிறார். ஆவணக் காப்பகங்கள் அனைத்திலும் பல நூறு மணித்தியாலங்களைச் செலவிட்டிருக்கிறார். 

மேலும், பிரித்தானிய அரச ஆவணங்கள், 30 ஆண்டுகளின் பின்னரே, பொதுவெளிக்கு அனுமதிக்கப்படுவதால் அதுவரை பொறுமை காத்திருக்கிறார். ஒரு புலனாய்வு ஊடகவியலாளனாக மிகச் சிறப்பான பணியை அவர் செய்திருக்கிறார்.   

எம் வாழ்வில், எத்தனையோ விடயங்களைக் கடந்து போகிறோம்; எத்தனையோ புத்தகங்களைக் கடந்து போகிறோம்; பலவும் எமது கண்களுக்குத் தென்படாமலே போய்விடுகின்றன. அது, எவ்வளவு அபத்தமானது. 

எமது சமூகத்தால், இந்தப் புத்தகமும் அவ்வாறே கடக்கப்படும். ஏனெனில், இன்றைக்கு 18 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தக் ‘கீனி மீனி’ நிறுவனத்தில் விமானியான இருந்த ஒருவர், இலங்கையில் தனது அனுபங்களைப் புத்தகமாக வெளியிட்டார்.   

அதன் பெயர் ‘தயங்கிய கூலிப்படையாள்: இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் ஒரு பிரித்தானிய முன்னாள் இராணுவ வானூர்தி ஓட்டியின் நினைவுகள்’ (The reluctant mercenary : the recollections of a British ex-Army helicopter pilot in the anti-terrorist war in Sri Lanka). 

இந்தப் புத்தகம் வந்தபோது, இலங்கையில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது; சமாதானம் குறித்து, அதிகம் பேசப்பட்டது. இந்தப் புத்தகம், யார் கவனத்தையும் ஈர்க்காமல் போய்விட்டது.   

‘கீனி மீனி’ நூலில் பேசப்பட்ட விடயங்களில், இலங்கை ஒருபகுதி மட்டுமே. ஆனால், இன்று இலங்கையை முன்னிறுத்தியே இப்புத்தகம் பிரபல்யமாகிறது. 

உண்மைதான், இப்போது ‘சன்டனிஸ்டாக்கள்’ பற்றியோ, ஓமானின் புரட்சிகர இடதுசாரிகள் பற்றியோ, ‘முஜாகிதீன்கள்’ பற்றியோ அறியும் ஆவல் குறைவுதானே!   
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கீனி-மீனி-இலங்கையில்-பிரித்தானிய-கூலிப்படைகள்/91-245456

பகிர்வுக்கு நன்றி கிருபன். வழக்கம் போல எமக்கு தேவையான விடயங்களை பற்றிய காத்திரமான நல்ல திரிகள் கவனிப்பாரற்று போவது போல இதுகும் போய் விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தியாவின் சூழ்ச்சி அம்பலமானது.

eelam.jpg

இலங்கையில் 1980களில் நடந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கூலிக்காகப் பணிபுரியும் பிரித்தானிய விமான பைலட்களை இந்தியா பயன்படுத்தியதாக முதன்முதலாக பிரிட்டனில் வெளிவந்துள்ள ஒரு நூல் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் பிரிட்டிஷ் கூலிப் படையினர் இருப்பதைப் பொதுவெளியில் இந்திய உயர் அலுவலர்கள் கண்டித்து வந்தபோதிலும், புலிகளுக்கு எதிரான தங்களுடைய தாக்குதலில் உதவுவதற்காகப் பணம் கொடுத்து இவர்களின் உதவியை இந்திய அமைதிக் காப்புப் படையினர் பெற்றனர் என்று அந்த நூல் தெரிவித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த புலனாய்வுப் பத்திரிகையாளர் பில் மில்லர் எழுதியுள்ள ‘கீனி மீனி: தி பிரிட்டிஷ் மெர்சினரீஸ் ஹூ காட் அவே வித் வோர் கிரைம்ஸ்’ என்ற இந்த நூலில் இலங்கைப் போர் பற்றிய மேலும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

1987ல் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தன ஆகியோர் இடையே இந்திய – இலங்கை உடன்பாடு கையெழுத்தானதைத் தொடர்ந்து, நான்கு மாதங்கள் பிரிட்டிஷ் கூலி பைலட்களின் சேவையை இரகசியமாக இந்தியா பயன்படுத்திக் கொண்டதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் மண்ணுக்கு இந்திய அமைதிக் காப்புப் படை வருவதற்கு முன்னர் தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்களிலும் பிரிட்டிஷ் கூலிப் படையினர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீனி மீனி என்பது ரகசிய நடவடிக்கைகளைக் குறிக்கும் அரபுச் சொல். கீனி மீனி சேவைகள் (கேஎம்எஸ்) என்ற இந்த பிரிட்டிஷ் நிறுவனத்தை பிரிட்டிஷ் சிறப்பு விமானப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேணல் ஜிம் ஜோன்சன் என்பவர் நடத்தி வந்தார். யேமன், ஓமன் போன்ற நாடுகளில் பல்வேறு ரகசிய நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டுவந்துள்ளார்.

பிரிட்டனின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஜெயவர்தன, தீவிரவாதத்துக்கு எதிரான இவருடைய நடவடிக்கைகள் பற்றி அறிய வந்ததும் இலங்கைக்கு அழைத்துள்ளார்.

அதிகாரப்பூர்வமாகவோ, வெளிப்படையாகவோ இலங்கைக்கு உதவ முன்வராத நிலையில், கீனி மீனி சேவைகள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு எதிரான போரில் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் பணியாற்றுவதை பிரிட்டன் அனுமதித்துள்ளது.

கடைசி பைலட் விலக்கிக் கொள்ளப்பட்ட (1987) நவம்பர் 27 வரையிலும் இலங்கை விமானப் படை விமானங்களில் கேஎம்எஸ் பைலட்கள் பறந்து கொண்டிருந்தார்கள் என்று கேணல் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ளார் என்று தந்தியொன்றில் கொழும்பிலிருந்த பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் டேவிட் கிளாட்ஸ்டோன் குறிப்பிட்டுள்ளதையும் மில்லர் எடுத்துக்காட்டியுள்ளார்.

அண்மையில் வெளிவந்த இந்த நூலில் மேலும் எண்ணற்ற விவரங்களை பத்திரிகையாளர் பில் மில்லர் வெளிப்படுத்தியுள்ளார்.

http://www.vanakkamlondon.com/விடுதலைப்-புலிகளுக்கு-எத/

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து  வெள்ளைக்காரனின்... 
குட்டுக்களை... உடைத்த, கட்டுரையை பார்க்க.. அதிர்ச்சியாக  இருந்தது. 
செய்தி  இணைப்பிற்கு... நன்றி கிருபன் ஜீ. 

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி உப்ப தான் கேள்விப் படுகிறேன்...இந்த புத்தகம் லைப்ரரியில் இருக்குமோ தெரியாது...தேடிப் பார்க்க வேண்டும் 
 

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமைகளை செய்தவன் எல்லாம் இப்ப தான் செய்த கொடுமைகளை புத்தமாக வெளியிட்டு பிழைப்பு நடத்தும் அளவுக்கு உலகில் மனித உயிர்கள் மீதான கொடுமைகளைச் செய்வோர் சாதாரணமாக தப்பி விடும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு கொலைஞனே தண்டனையில் இருந்து தப்புவது மட்டுமன்றி.. தன் சுயசரிதையை எழுதி காசு பார்ப்பது போன்றது. 

இது நீண்ட காலப் போக்கில் மனித இனத்துக்கு ஆபத்தாக அமையும். 

எதுஎப்படியோ.. கொலைஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ.. ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதும் நடக்கிறது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் தயாரிப்பு ஏவுகணையைப்பயன்படுத்தும் இலங்கை படையினர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.