Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய கட்சி தொடர்பாக ரஜினி இன்று முக்கிய அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Rajinikanth.jpg

புதிய கட்சி தொடர்பாக ரஜினி இன்று முக்கிய அறிவிப்பு

அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளா்கள் கூட்டம் சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், புதிய அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து மாவட்டச் செயலாளா்களுடன் நடிகா் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் அரசியலுக்கு வருவது உறுதி என ஏற்கனவே நடிகா் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மன்றத்தின் மாவட்டச் செயலாளா்களை மூன்றாவது முறையாக நடிகா் ரஜினிகாந்த் தற்போது சந்திக்கவுள்ளாா்.

அரசியல் கட்சித் தொடங்குவது குறித்தும் இதில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக மன்ற நிா்வாகிகள் தெரிவித்தனா்.

http://athavannews.com/புதிய-கட்சி-தொடர்பாக-ரஜி/

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மன்றத்தின் மாவட்டச் செயலாளா்களை மூன்றாவது முறையாக நடிகா் ரஜினிகாந்த் தற்போது சந்திக்கவுள்ளாா்.

maxresdefault.jpg

108 க்கு கொல் பண்ணியாச்சா .? ☺️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

rajinikanth met his makkal mandram distric secretaries in chennai

எந்த "ஏமாற்றமா" இருக்கும்.. ஒருவேளை இதுவா இருக்குமோ.. இல்லாட்டி அதுவா இருக்குமோ.. "அது" இதுதானா!

"ஏமாற்றம், எதிர்பாக்கல.." என்று ரஜினிகாந்த் சொன்னாரே.. அது என்னவா இருக்கும் என்றுதான் நேற்று முதல் சிலர் மண்டையை போட்டு குழம்பி கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை இன்று ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.. எப்படியும் அரசியல் அறிவிப்பு குறித்த செய்தியை கண்டிப்பாக வெளியிடுவார் என்ற ஆவல் எழுந்தது.. குறைந்தபட்சம் கட்சியின் பெயரையாவது வெளியிடுவார் என்று கருதப்பட்டது.. ஆனால் வழக்கம்போல ஏமாற்றத்தையே தந்துவிட்டு போனார்.. போகும்போது மறக்காமல் மக்களையும் குழப்பிவிட்டு சென்றார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அடைந்துவிட்டேன் என்றார்.. உடனே செய்தியாளர்கள் அது என்ன விஷயம்? என்று கேட்டனர்.. அது தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்.. நேரம் வரும்போது சொல்றேன்.. என்றார்.

ஏமாற்றம் என்று ரஜினிகாந்த் சொல்லவும், ஆளாளுக்கு ஒவ்வொரு யூகங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.. ரஜினி, கமல் கூட்டணி விஷயமா? பாஜக சம்பந்தப்பட்டதா? சிஏஏ விவகாரமா? ரஜினிகாந்த் எந்த விஷயத்தில் ஏமாந்துவிட்டார் என்று பெரிய குழப்பத்தில் உள்ளனர்.

இப்போதும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.. அதாவது மக்களுக்காக இதுவரை எதுவும் குரல் கொடுக்கவில்லையே.. இனிமேலாவது தரவேண்டும் என்றார்களாம். மேலும் சிஏஏ விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாகவே ஒவ்வொரு பேட்டியும், கருத்தும் உள்ளதாக மக்கள் கருதுவதாக மாவட்ட செயலாளர்கள் விலாவரியாக எடுத்து கூறியுள்ளதாக தெரிகிறது.

சிஏஏவால் யாருக்கும் எதுவும் பாதிப்பு இல்லை என்று சொல்வதை ஏற்க முடியாது.. இதைதான் மக்களும் நினைக்கிறார்கள். இப்போதே நம் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பம் வந்துவிட்டது.. ஒருவேளை நாம் கட்சி தொடங்கிவிட்டால் அப்போது சிக்கல் வரவே செய்யும்.. அதனால் கட்சி ஆரம்பிக்கும்போதே சிறுபான்மையினர் அணி என்று ஒன்றை உருவாக்க வேண்டும்" என்று பெரும்பாலான மா.செ.க்கள் கூறினார்களாம்.

இது ரஜினியே எதிர்பார்க்கவில்லையாம்.. இதைதான் ஏமாற்றம் என்று ரஜினியே வார்த்தை விட்டுவிட்டதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதேபோல இன்னொன்றும் சொல்லப்படுகிறது, அரசியல் கட்சிகள் தன்னை ஒரு பாஜக மனிதராக முத்திரை குத்துவதாகவும், அதற்கு ஏற்றாற்போல் நிர்வாகிகளின் கருத்துகளும், நடவடிக்கைகளும் இருப்பது ரஜினியை ஏமாற்றமடைய செய்திருக்கலாம், அல்லது தான் எதிர்பார்த்தது போன்று நிர்வாகிகள் செயல்படாமல் இருப்பது அவருக்கு ஏமாற்றத்தை தந்திருக்கலாம் என்கிறார்கள்.

இதைதவிர இன்னொன்றும் சொல்லப்படுகிறது.. பூத் கமிட்டி நிர்வாகிகள் யாருமே சரியாக வேலை செய்யவில்லையாம்.. பொறுப்பில் இருந்தும் நிறைவான பணியை செய்யவில்லை என்பதால், ரஜினி சற்று டென்ஷன் ஆனதாகவும் கூறப்படுகிறது!!

ஆனாலும் அவர்களுக்குள் என்னதான் பேசிக் கொண்டார்கள் என்பது வெளிப்படையாக தெரியவில்லை. இதை மன்றத்தினரும் & அவர்களின் தலைவரும் பகிரங்கமாக சொல்லும்வரை நித்தம் பல யூகங்கள் பல ரூபங்களில் பறந்து கொண்டுதான் இருக்கும் என தெரிகிறது!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-met-his-makkal-mandram-distric-secretaries-in-chennai-378930.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

ரஜனியின் மாவட்ட செயலர்கள் கூட்டம்.
ஒரே... பளபளப்பா.... இருக்கில்ல  :grin: 

Prashanthan Navaratnam

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

ரஜனியின் மாவட்ட செயலர்கள் கூட்டம்.
ஒரே... பளபளப்பா.... இருக்கில்ல  :grin: 

Prashanthan Navaratnam

தயவு செய்து மேலே தமிழ் சிறி ஒட்டி இருக்கும் படத்தை நீக்கி விடவும். செய்திகள் ஒட்ட வரும் போது கண்கள் கூசுகின்றதால் கனக்க செய்திகளை ஒட்ட முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

தயவு செய்து மேலே தமிழ் சிறி ஒட்டி இருக்கும் படத்தை நீக்கி விடவும். செய்திகள் ஒட்ட வரும் போது கண்கள் கூசுகின்றதால் கனக்க செய்திகளை ஒட்ட முடியவில்லை.

துக்ளக் படித்ததால் இப்படி?

11 hours ago, தமிழ் சிறி said:

ரஜனியின் மாவட்ட செயலர்கள் கூட்டம்.
ஒரே... பளபளப்பா.... இருக்கில்ல  :grin: 

 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

துக்ளக் படித்ததால் இப்படி?

 

🤣🤣 முடியல  அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

ரஜனியின் மாவட்ட செயலர்கள் கூட்டம்.
ஒரே... பளபளப்பா.... இருக்கில்ல  :grin: 

Prashanthan Navaratnam

HospitableClosedGermanpinscher-mobile.jpசர்க்கரை நோயாம் - இந்த நேரம் பார்த்து "வச்சு செய்ய" பகிடி தலைவர் இல்லையே தோழர்..! 😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

தயவு செய்து மேலே தமிழ் சிறி ஒட்டி இருக்கும் படத்தை நீக்கி விடவும். செய்திகள் ஒட்ட வரும் போது கண்கள் கூசுகின்றதால் கனக்க செய்திகளை ஒட்ட முடியவில்லை.

Bildergebnis für sonnen brille gif

நிழலி.... தயவு செய்து, நான் இணைத்த... படத்தை,  நீக்க வேண்டாம்.
பிழம்புக்கு... கண் கூசினால்,  "கூலிங் கிளாஸை"  போட்டுக் கொண்டு... 😎
செய்திகளை... இணைக்கலாம் தானே....  :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

துக்ளக் படித்ததால் இப்படி?

ஈழப்பிரியன்... மிக அழகான, "ரைமிங் கொமன்ற்".  :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

HospitableClosedGermanpinscher-mobile.jpசர்க்கரை நோயாம் - இந்த நேரம் பார்த்து "வச்சு செய்ய" பகிடி தலைவர் இல்லையே தோழர்..! 😢

உண்மைதான்... தோழர், 
கவுண்டமணி தனக்கே.... உரித்தான குரலில், வைத்து.... செய்திருப்பார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா.. முடியலடா..பூரா சுகர் பேஷண்டுடா. கொன்னுடாதைங்கடா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, possible text that says '1996 2020 24years challenge phtoy'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.