Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`அரசியலில் அதிரடி என்ட்ரி; முதல்வர் வேட்பாளர்!’- பீகார் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

Featured Replies

Image result for pushpam choudhary

லண்டனில் வசித்து வரும் புஷ்பம் பிரியா சௌத்ரி என்ற பெண், பீகாரின் புதிய முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவித்து பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் தற்போது ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் அக்டோபர் மாதம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல் அங்கு எதிர்க்கட்சியாக உள்ள தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. பீகார் என்றாலே நிதிஷ் குமாரும், தேஜஸ்வி யாதவும் தான் முதல்வர் வேட்பாளர்களாக அறியப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் இல்லாமல் மூன்றாவதாக ஒரு பெண் தன்னை பீகாரின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

புஷ்பம் பிரியா சௌத்ரி என்ற பெண்தான் தன்னை பீகாரின் முதல்வர் வேட்பாளராக அறிவித்து பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளார். பீகாரில் உள்ள சில இந்தி மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் நேற்று இவரின் முழுப் பக்க விளம்பரம் வெளியாகி மொத்த பீகார் அரசியல் கட்சியினரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. புஷ்பம் பிரியா சௌத்ரி, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வினோத் சௌத்ரியின் மகள்.

Image result for pushpam choudhary720 × 540

பீகாரின் தர்பங்கா பகுதியில் பிறந்த புஷ்பம் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸில் (London School of Economics and Political Science) பொது நிர்வாகத் துறையில் பட்ட மேற்படிப்பு மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளில் மேற்படிப்பு முடித்துள்ளார்.

ப்ளுரல்ஸ் (Plurels) என்ற தன் புதிய கட்சிப் பெயருடன் அவர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், ``பீகாருக்குச் சிறகுகள் தேவை, பீகாரில் மாற்றம் தேவை. ஏனெனில் பீகார் சிறந்த மாற்றத்துக்குத் தகுதியான மாநிலம். மதி கெட்ட அரசியலை நிராகரியுங்கள். ப்ளுரல்ஸில் இணைந்து பீகாரை ஓட மற்றும் பறக்கச் செய்யுங்கள்” எனத் தன் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் புஷ்பம்.

``உலகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால், பீகார் உலகின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலமாகவே உள்ளது. இந்திய அளவிலும் நாம் இன்னும் கீழேதான் உள்ளோம். இது நாம் வகிக்கும் தரத்தைப் பற்றியது அல்ல. வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, கல்வியறிவின்மை, வேலையின்மை போன்ற அனைத்து வளர்ச்சிப் பற்றாக்குறைகளும் இங்கு உள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் பீகாரில் பலர் இறப்புக்கு வழிவகுக்கும்” என புஷ்பம் பிரியா தன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பீகார் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் புஷ்பம் பிரியாவின் அதிரடி அரசியல் என்ட்ரி பிற கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“என் மகள் மேஜர், படித்தவள். இது முழுவதும் அவரது முடிவு. கட்சியின் உயர்மட்டத் தலைவருக்கு அவர் சவால் விட்டால் கட்சி நிச்சயமாக அதை ஆதரிக்காது’என புஷ்பம் சௌத்ரியின் தந்தை வினோத் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

புஷ்பம் சௌத்ரியின் விளம்பரங்கள் பத்திரிகைகள், சமூகவலைதளங்களையும் தாண்டி பீகாரின் வீதிகளில் பெரிய பெரிய பேனர்களாகவும் வைக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் பீகார் அரசியலின் மொத்தக் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் புஷ்பம்.

https://www.vikatan.com/news/india/uk-based-pushpam-choudhary-has-declared-herself-bihars-chief-ministerial-candidate

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால முதல்வர் வாழ்க

  • தொடங்கியவர்
27 minutes ago, ampanai said:

பீகாரின் தர்பங்கா பகுதியில் பிறந்த புஷ்பம் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸில் (London School of Economics and Political Science) பொது நிர்வாகத் துறையில் பட்ட மேற்படிப்பு மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளில் மேற்படிப்பு முடித்துள்ளார்.

ப்ளுரல்ஸ் (Plurels) என்ற தன் புதிய கட்சிப் பெயருடன் அவர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், ``பீகாருக்குச் சிறகுகள் தேவை, பீகாரில் மாற்றம் தேவை. ஏனெனில் பீகார் சிறந்த மாற்றத்துக்குத் தகுதியான மாநிலம். மதி கெட்ட அரசியலை நிராகரியுங்கள். ப்ளுரல்ஸில் இணைந்து பீகாரை ஓட மற்றும் பறக்கச் செய்யுங்கள்” எனத் தன் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் புஷ்பம்.

``உலகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால், பீகார் உலகின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலமாகவே உள்ளது. இந்திய அளவிலும் நாம் இன்னும் கீழேதான் உள்ளோம். இது நாம் வகிக்கும் தரத்தைப் பற்றியது அல்ல. வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, கல்வியறிவின்மை, வேலையின்மை போன்ற அனைத்து வளர்ச்சிப் பற்றாக்குறைகளும் இங்கு உள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் பீகாரில் பலர் இறப்புக்கு வழிவகுக்கும்” என புஷ்பம் பிரியா தன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பீகார் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் புஷ்பம் பிரியாவின் அதிரடி அரசியல் என்ட்ரி பிற கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர்களை பார்த்து என்றாலும் ரஜனி, கமல் போன்றவர்கள் அரசியலில் இருந்து  ஓதுங்க வேண்டும்.

இவ்வாறான எம்மவர்களும் நாடு திரும்ப முடிந்தால் திரும்ப வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ampanai said:

இவர்களை பார்த்து என்றாலும் ரஜனி, கமல் போன்றவர்கள் அரசியலில் இருந்து  ஓதுங்க வேண்டும்.

இவ்வாறான எம்மவர்களும் நாடு திரும்ப முடிந்தால் திரும்ப வேண்டும்!

அங்கு யார் தமிழர் பகுதிகளில் அரசியலில் ஈடுபடுவது என்பதை தீர்மானிப்பது இலங்கைஇந்திய அரசுஅதிகார பிரிவுகளே . 

  • தொடங்கியவர்
1 minute ago, பெருமாள் said:

அங்கு யார் தமிழர் பகுதிகளில் அரசியலில் ஈடுபடுவது என்பதை தீர்மானிப்பது இலங்கைஇந்திய அரசுஅதிகார பிரிவுகளே . 

'யூ மீன்',  கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட உள்ள முன்னை நாள் ஆளுநர் சுரேன் இராகவன் போன்றவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பீகார் முதல்வர் இவர்தான்... போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

'யூ மீன்',  கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட உள்ள முன்னை நாள் ஆளுநர் சுரேன் இராகவன் போன்றவர்கள்?

ராகவன் என்ன சைக்கிள் கூட்டம்  கூட அங்குள்ள சனத்தை  ஏமாத்தும் விளையாட்டுதான் மே 18 க்கு பின் அவர்களின் நிகழ்ச்சி நிரலே  நடைபெறுகிறது .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அடுத்த பீகார் முதல்வர் இவர்தான்... போலுள்ளது.

தமிழ்நாடு முதல்வராக கூட சான்ஸ் உள்ளது.. தோழர் 👍.. வெள்ளையா அழகா வேறு இருக்கார்.. ஏதாவது சினிமாவில் நடித்தாலே நம்மட ஆட்களுக்கு போதுமானது.. 😢

போதாக்குறைக்கு பாதி பீகாரிகள் தமிழ்நாட்டில்தான் ரேசன் கார்டுடன் திரியினம். அவர் இன மக்கள் அவரை கைவிட மாட்டார்கள்..👌

  • தொடங்கியவர்

Image result for m k karunanidhi

அங்கும் புத்தகங்கள் படத்திற்கு பின்னால்

இங்கும் புத்தகங்கள் படத்திற்கு முன்னால்

Image result for pushpam choudhary

பீகாரின் தர்பங்கா பகுதியில் பிறந்த புஷ்பம் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸில் (London School of Economics and Political Science) பொது நிர்வாகத் துறையில் பட்ட மேற்படிப்பு மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளில் மேற்படிப்பு முடித்துள்ளார்.

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சிந்தனைகள் இப்போதைய உலகத்தில் ஆளுவதற்கு தகுதி 
அற்று இருப்பதுதான் கவலையானது 

இந்தியா பொதுவாக 60-70 வருடங்கள் ஊழலில் ஊறிய ஒரு நாடு 
அரசியல் வாதிகளுக்கு ஊழலை தவிர்த்து வேறு எதுவும் தெரியாது 

இவர் முதல்வர் ஆகலாம் பீகாரை மாற்ற முடியாது 
பீகார் இவரை மாற்றுவதுக்கான வாய்ப்புதான் அதிகம்.

இவர் தந்தையின் செல்வாக்கையும் 
தந்தையின் இறந்த சோக அலையும் வைத்தே வாக்குகளை வென்றார் 
ஆனால் மிக நல்ல விடயங்களை அறிவிக்கிறார் செய்கிறார் 
இவை அடிமட்டம் வரை செல்கிறதா பயன் பெறுகிறதா என்பதை 
எதிர்கால ஆந்திராதான் சாட்ச்சியாக சொல்லி நிற்கும். 

The_Chief_Minister_of_Andhra_Pradesh%2C_Shri_Y.S._Jagan_Mohan_Reddy.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மருதரை இங்கு எதிர்பாத்தேன்.ஆனால் எதிர்பாத்த பதிவு இல்லை.சோ சாட்;😘

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சுவைப்பிரியன் said:

மருதரை இங்கு எதிர்பாத்தேன்.ஆனால் எதிர்பாத்த பதிவு இல்லை.சோ சாட்;😘

எனது கருத்தை ஒருவேளை இவருக்கு ஆதரவு கொடுக்காதீர்கள் என்ற அர்த்தத்தில் நான் எழுதுவதாக 
எண்ணிநீர்களோ என்று நினைக்கிறேன்.
இவருக்கு எதிரான சக்தி பிகவும் பலமாக இருக்கும் அதை எவ்வாறு எதிர்கொள்வது?
என்ற அர்த்தத்தில்தான் நான் எழுதினேன். நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கும் ஈழத்தமிழரின் 
போக்கு எதிர்காலத்தில் அவர்கள் மாறுவார்கள் என்பதாகவே இருக்கிறது ... ஆதலால் இந்த சாக்கடையிலேயே 
கிடைக்கலாம்? என்பது அவர்கள் போக்காக இருக்கிறது. மாற்றம் எம்மில் இருந்துதான் வரவேண்டும் 
பீஹார் மக்களின் மனதை அறிவை திறப்பது என்பது தான் என்னுடைய கேள்வியாக இருந்தது. கல்வியறிவில் முன்னேறிய தமிழ்நாட்டில் கூட மக்கள் சிந்திக்கும் நிலையில் இல்லை. 

என்னுடைய போக்கு இந்த பழைய குப்பைகளை உலகம் பூராக கூட்டி குப்பைத்தொட்டியில் 
போடவேண்டும் என்பதுதான். புதியவர்களை  எமது எதிர் கட்சியில் இருந்தாலும் நாம் வரவேற்க்க வேண்டும் 
சிங்கள இளம் அரசியல் வாதிகளுக்கு கூட நாம் முட்டு கொடுக்க வேண்டும் அதோடு எமது பிரச்சனைகளை சம காலத்த்தில் நாம் பகிர்ந்துகொண்டு இருக்க வேண்டும். மகிந்த ராஜபக்சே வின் இளைய மகன் மகிந்த கோத்தா போல கொடியவனாக இல்லை ......ஊழலில் உறியதால் அந்த திமிர் கொஞ்சம் இருக்கும் அதை மக்கள்தான் போக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Maruthankerny said:

மருதர் , இந்த தலைப்போடு சம்மந்தப்பட்டவர் இளம் பெண் என்பதால் நீங்கள் அவரைப் பற்றி ஏதாவது எழுதுவீர்கள் என்று சுவைப்பிரியன் எதிர் பாத்திருக்கலாம் 😉

  • கருத்துக்கள உறவுகள்

Image

12 minutes ago, ரதி said:

மருதர் , இந்த தலைப்போடு சம்மந்தப்பட்டவர் இளம் பெண் என்பதால் நீங்கள் அவரைப் பற்றி ஏதாவது எழுதுவீர்கள் என்று சுவைப்பிரியன் எதிர் பாத்திருக்கலாம் 😉

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

மருதர் , இந்த தலைப்போடு சம்மந்தப்பட்டவர் இளம் பெண் என்பதால் நீங்கள் அவரைப் பற்றி ஏதாவது எழுதுவீர்கள் என்று சுவைப்பிரியன் எதிர் பாத்திருக்கலாம் 😉

ரதி கற்புரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.