Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதிரை மீதான பற்றே புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றது - சார்ள்ஸ் நிர்மலநாதன்

Featured Replies

கதிரைகள் மீதான பற்றே இன்று புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றதே தவிர வேறெதுவும் இல்லை என முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

DSC_0349_7.JPG

இன்று வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

மாற்றுத்தலைமை என இன்று பலர் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு வருவார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்காக கட்சிகளை உருவாக்கவில்லை. மக்கள் நலனுக்காகவும் கட்சிகளை உருவாக்கவில்லை. அவர்கள் கதிரைகள் மீது உள்ள பற்றின் காரணமாகவே கட்சிகளை உருவாக்கினார்கள்.

இன்று எம் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதேசவாரியாக மக்களுக்கு விளக்கத்தினை வழங்க தயாராகவே இருக்கின்றேன். யாரையும் பெயர் குறிப்பிட நான் விரும்பாவிட்டாலும். யாராவது இவ்வாறு தெரிவித்தனர் என்றால் அவர்களைப்பற்றி கூற நானும் தயாராக இருக்கின்றேன்.

அவர்களைப்பற்றி முழு விபரமும் என்னிடம் இருக்கின்றது. யார் யார் எவருடன் தொடர்பினை வைத்திருந்தனர் யாருடைய நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டார்கள் என்ற முழு ஆதாரமும் என்னிடம் உள்ளது.

இதேவேளை தமிழர்களின் நிரந்தரமான தீர்வுக்கு அரசியல் அமைப்பு மாற்றம் என்பது அவசியமானதாகும். அதன் மூலம்தான் தமிழர்கள் முன் உள்ள பிரச்சனைகளுக்கு 80 வீதமான தீர்வு கிடைக்கும். வடக்கு கிழக்கு தமிழர்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக இருந்தது.

ஆனால் இன்று தமிழர்களது இனவிகிதாசாரத்தினை குறைக்கும் அளவிற்கு சிங்கள குடியேற்றங்கள் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு அவர்கள் கையாளும் தந்திரம் மகாவலி திட்டமாகும்.

DSC_0313_5.JPG

இந்த நிலையில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு அல்லது தமிழரசுக்கட்சி 100 வீதம் சரியாக செயற்பட்டது என்று நான் கூறவில்லை. ஆனால் மக்களுக்கு உண்மையாக இருக்கின்றது.

தமிழ் இனத்தின் அடையாளத்திற்காக கொள்கை ரீதியாக தனித்துவமாக பயணிக்கின்றோம். மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை நாங்கள் சிந்தித்து கட்சியாக எடுத்திருக்கின்றோம். இதனால் விலைபேச முடியாத சக்தியாக இருக்கின்றோம் என்பதனை தெரிவிக்கின்றேன்.

கூட்டமைப்பின் வேட்பாளர்களை பலப்படுத்துவதனால் எமக்கு எதிராக உள்ள சர்வதேச விடயங்களானாலும் சரி சிங்கள குடியேற்றமானாலும் அபிவிருத்தி விடயங்களிலும் கையாளக்கூடிய நிலை ஏற்படும். எனவே எம்மில் பலரது கருத்துக்கள் மக்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அது அவர்களது தனிப்பட்ட கருத்துக்களேயாகும். அது கூட்டமைப்பின் கருத்துக்கள் இல்லை என்பதனை பகிரங்கமாக கூறுகின்றேன். அவர்களின் கருத்துக்களை வைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஒதுக்கிவிடகூடாது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/77432

Edited by ampanai
Source link added

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

கதிரைகள் மீதான பற்றே இன்று புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றதே தவிர வேறெதுவும் இல்லை

DF0-C7-CB6-85-DC-4-D32-A192-AD4220-ACC8-

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

கூட்டமைப்பின் வேட்பாளர்களை பலப்படுத்துவதனால் எமக்கு எதிராக உள்ள சர்வதேச விடயங்களானாலும் சரி சிங்கள குடியேற்றமானாலும் அபிவிருத்தி விடயங்களிலும் கையாளக்கூடிய நிலை ஏற்படும்.

இதுவரை நடந்த சிங்கள குடியேற்றங்களுக்கு யார் பொறுப்பு?

6 hours ago, ampanai said:

அவர்கள் கதிரைகள் மீது உள்ள பற்றின் காரணமாகவே கட்சிகளை உருவாக்கினார்கள்

கதிரை மீது பற்றில்லாத தாங்கள் பற்றுள்ளவர்களுக்கு விட்டுக்கொடுத்து பதவி விலகலாமே? கதிரையின் சொகுசு உங்களை விட யாரே அனுபவித்திருக்க முடியும்? உங்களால் மட்டுமே அதன் சுகத்தை விளக்கவும்முடியும்.

7 hours ago, satan said:

இதுவரை நடந்த சிங்கள குடியேற்றங்களுக்கு யார் பொறுப்பு?

கதிரை மீது பற்றில்லாத தாங்கள் பற்றுள்ளவர்களுக்கு விட்டுக்கொடுத்து பதவி விலகலாமே? கதிரையின் சொகுசு உங்களை விட யாரே அனுபவித்திருக்க முடியும்? உங்களால் மட்டுமே அதன் சுகத்தை விளக்கவும்முடியும்.

போராடியவர்கள், தமிழர் உரிமைக்காக உடமைகளை இழந்தவர்கள், உயிர்களை இழந்தவர்கள் இந்த கதிரைக்காக போராடினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது। ஒரு கத்தோலிக்க / கிறிஸ்தவ பாதிரியார் உரிமை கோரினால் அதில் ஒரு நியாயாதிக்கம் இருக்கிறது।

ஆனால் இப்போது என்னடாவெண்டால் அப்பாவி  மக்களின் மண்டையில் போடடவன், காட்டிக்கொடுத்தவன், சுகபோகம் அனுபவித்தவன், போராட்டம் எண்டால் என்ன எண்டே தெரியாதவன் எல்லாம் இப்போது கதிரைக்கு நாயாய், பேயாய் அலையுறான்।

மக்கள் இதை எல்லாம் புரிந்து கொண்டு வருகிற தேர்தலில் வாக்களித்தால் சரி। இல்லாவிட்ட்தால் அவன் விடட வழி எண்டு இருக்க வேண்டியதுதான்।

On 3/9/2020 at 11:54 PM, ampanai said:

மாற்றுத்தலைமை என இன்று பலர் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு வருவார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்காக கட்சிகளை உருவாக்கவில்லை. மக்கள் நலனுக்காகவும் கட்சிகளை உருவாக்கவில்லை. அவர்கள் கதிரைகள் மீது உள்ள பற்றின் காரணமாகவே கட்சிகளை உருவாக்கினார்கள்.

தேர்தல் காலம் ஆரம்பிச்சிட்டு. உங்கட கண்டுபிடிப்புகளுக்கும் கதை அளப்புகளுக்கும் இனி கணக்கே இருக்காது.

அமைச்சர் கனவுல மிதக்கிற உங்கட சுமந்திரன் பற்றி ஒன்றுமே கண்டுபிடிக்கேலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Vankalayan said:

போராடியவர்கள், தமிழர் உரிமைக்காக உடமைகளை இழந்தவர்கள், உயிர்களை இழந்தவர்கள் இந்த கதிரைக்காக போராடினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது। ஒரு கத்தோலிக்க / கிறிஸ்தவ பாதிரியார் உரிமை கோரினால் அதில் ஒரு நியாயாதிக்கம் இருக்கிறது।

ஆனால் இப்போது என்னடாவெண்டால் அப்பாவி  மக்களின் மண்டையில் போடடவன், காட்டிக்கொடுத்தவன், சுகபோகம் அனுபவித்தவன், போராட்டம் எண்டால் என்ன எண்டே தெரியாதவன் எல்லாம் இப்போது கதிரைக்கு நாயாய், பேயாய் அலையுறான்।

மக்கள் இதை எல்லாம் புரிந்து கொண்டு வருகிற தேர்தலில் வாக்களித்தால் சரி। இல்லாவிட்ட்தால் அவன் விடட வழி எண்டு இருக்க வேண்டியதுதான்।

எப்படி????

2 hours ago, MEERA said:

எப்படி????

போராளிகளுக்கு புகலிடம் கொடுத்தார்கள்।அகதிகளான மக்களுக்கு தஞ்சமளித்தார்கள்। ஏன் சில பாதிரிமார்களின் உயிர்களும் பறிக்கப்படடன। தமிழ் மக்களுக்கு (இந்துவோ, கிறிஸ்தவர்களோ) அவர்களுக்காக யுத்த காலத்தில் தோள் கொடுத்தவர்கள் இந்த கத்தோலிக்க / கிறிஸ்தவ பாதிரிமார்கள்தான்। உலகுக்கு தமிழர்களின் பிரச்சினையை கொண்டு சென்றவர்களும், இன்றும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களும் அவர்கள்தான்। இதை யாரும் மறுக்கவும் முடியாயாது।  சவாலுக்குட்படுத்தவும் முடியாது।

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

இவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள்?

16 hours ago, MEERA said:

இவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள்?

பாதிக்கப்படட மக்களுக்காக குரல் கொடுத்த, உதவி செய்த மனிதாபமுள்ள மனித இனங்கள்।

1 hour ago, Vankalayan said:

பாதிக்கப்படட மக்களுக்காக குரல் கொடுத்த, உதவி செய்த மனிதாபமுள்ள மனித இனங்கள்।

சைவ தமிழ் மக்களுக்கும் கிறிஸ்த்தவ தமிழ் மக்களுக்கும் எப்பொழுதும் வேறுபாடுகள் வரப்போவதில்லை;ஆனால் தற்சமயத்தில் சைவர்களுக்கும் கத்தோலிக்கர்க்ளுக்கும் இடையில் பிளவை உண்டாக்க ஒரு சில சக்திகள் முனைகின்றன, ஆனால் நீங்கள் சராசரி சைவ தமிழரிடம் கேட்டு பாருங்கள் எத்தனை பேர் கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக உள்ளார்கள் என்று 5 வீதத்தை கூட தொடுமா தெரியவில்லை ....!!!  அவர்கள் கூட வீணை,மொட்டு மற்றும் வடக்கின் அடாவடி அமைச்சரின் பின்னனியில் இயங்குபவர்களாக இருப்பார்கள் .

2 hours ago, Vankalayan said:

பாதிக்கப்படட மக்களுக்காக குரல் கொடுத்த, உதவி செய்த மனிதாபமுள்ள மனித இன

Edited by Dash

23 hours ago, Dash said:

சைவ தமிழ் மக்களுக்கும் கிறிஸ்த்தவ தமிழ் மக்களுக்கும் எப்பொழுதும் வேறுபாடுகள் வரப்போவதில்லை;ஆனால் தற்சமயத்தில் சைவர்களுக்கும் கத்தோலிக்கர்க்ளுக்கும் இடையில் பிளவை உண்டாக்க ஒரு சில சக்திகள் முனைகின்றன, ஆனால் நீங்கள் சராசரி சைவ தமிழரிடம் கேட்டு பாருங்கள் எத்தனை பேர் கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக உள்ளார்கள் என்று 5 வீதத்தை கூட தொடுமா தெரியவில்லை ....!!!  அவர்கள் கூட வீணை,மொட்டு மற்றும் வடக்கின் அடாவடி அமைச்சரின் பின்னனியில் இயங்குபவர்களாக இருப்பார்கள் .

நீங்கள் சொல்வதில்  உண்மை இருந்தாலும் இங்கு ஒரு முக்கியமான காரணியை தெரிந்திருக்க  வேண்டும்। வீணை, மொட்டு என்று சொல்பவர்கள் எமது உள்ளூர் அரசியலுக்காக இதை செய்யலாம்।

ஆனால் இந்தியக்காரனால் இறக்குமதி செய்யப்படட விஷ்வா இந்து பரிஷத் , சங்பரிவார் போன்றவர்கள் மிகவும் தீவிரமான ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள்। இவர்கள் இந்தியாவில் ரத்த வெள்ளம் ஓட முக்கியமான பங்கு வகித்தவர்கள்।

இப்போது அங்கு சங்கபரிவாரின் ஆட்சி நடப்பதால் அவர்களை ஒன்றுமே செய்யமாட்ட்டார்கள்। அந்த அரசியல்வாதிகள் பகிரங்கமாகவே இந வெறுப்பை பேசுகிறார்கள்। அதை வழக்காக பதியும்படி ஒரு உயர் நீதிமன்ற தமிழ் நீதியரசர் கடடளையிடடதட்காக இரவோடிரவாக அந்த சங்கபரிவார் கூடடம் அவரை வேறிடத்துக்கு மாற்றிவிட்ட்து।

எனவே வடக்கு கிழக்கில் இவர்கள் கால் பாதிப்பதை , இந விரோத செயட்பாடுகளை முன்னெடுப்பதை நாங்கள் நிச்சயம் எதிர்த்தே தீருவோம்।

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Vankalayan said:

இந்த திரிக்கு மதச்சாயம் பூசியது நீங்கள். இந்த செய்தியில் எங்கேயாவது மதம் தொடர்பாக இருக்கிறதா?

27 minutes ago, MEERA said:

இந்த திரிக்கு மதச்சாயம் பூசியது நீங்கள். இந்த செய்தியில் எங்கேயாவது மதம் தொடர்பாக இருக்கிறதா?

மத சாயம் பூச தேவையில்லை। மதம்தான் இப்போது இந்த கதிரைக்கே அடிப்படை காரணம்। சிறு பிள்ளைக்கும் இது விளங்கும்।

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Vankalayan said:

மத சாயம் பூச தேவையில்லை। மதம்தான் இப்போது இந்த கதிரைக்கே அடிப்படை காரணம்। சிறு பிள்ளைக்கும் இது விளங்கும்।

ஒவ்வொரு தேர்தலிலும் காலம் காலமாக கதிரைக்கு சண்டை வருவது வழமை. 

Just now, MEERA said:

ஒவ்வொரு தேர்தலிலும் காலம் காலமாக கதிரைக்கு சண்டை வருவது வழமை. 

ஆனால் இப்போது இந்துக்கள் மன்னாரில் கதிரை வேணுமென்று சண்டைபோடுகிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

கதிரைக்கு ஆசைப்படுவதில் தப்பேதும் இல்லை. 

உங்கு வைத்தியர், வக்கீல் தொடக்கம், ஊடகவியலாளர்வரை  சேவை மனப்பான்மை, மனிதாபிமானத்துடன் செய்யப்பட வேண்டிய அத்தனை துறைகளும் காசுக்காகவும், புகழுக்காகவும், தனிப்பட்ட நலன்களுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றது, பயன்படுத்தப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் உள்ள முதலைகள் தமக்கு உகந்த குடும்பிகள் தாயகத்தில் பதவியை பிடிக்கவேண்டும் என்று விரும்புகின்றார்கள். தமது கிடுக்கு பிடியினுள்வைத்து குடும்பிகளை ஆட்டுவிப்பதை  இவர்கள் தமது தாயக கடமையாக கருதுகின்றார்கள். வேறு காரணங்களும் இருக்கலாம். இதன் சூத்திரம் முதலைகளுக்கு மட்டும் தெரிந்த உண்மை.   

On 3/13/2020 at 8:23 AM, Vankalayan said:

நீங்கள் சொல்வதில்  உண்மை இருந்தாலும் இங்கு ஒரு முக்கியமான காரணியை தெரிந்திருக்க  வேண்டும்। வீணை, மொட்டு என்று சொல்பவர்கள் எமது உள்ளூர் அரசியலுக்காக இதை செய்யலாம்।

ஆனால் இந்தியக்காரனால் இறக்குமதி செய்யப்படட விஷ்வா இந்து பரிஷத் , சங்பரிவார் போன்றவர்கள் மிகவும் தீவிரமான ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள்। இவர்கள் இந்தியாவில் ரத்த வெள்ளம் ஓட முக்கியமான பங்கு வகித்தவர்கள்।

இப்போது அங்கு சங்கபரிவாரின் ஆட்சி நடப்பதால் அவர்களை ஒன்றுமே செய்யமாட்ட்டார்கள்। அந்த அரசியல்வாதிகள் பகிரங்கமாகவே இந வெறுப்பை பேசுகிறார்கள்। அதை வழக்காக பதியும்படி ஒரு உயர் நீதிமன்ற தமிழ் நீதியரசர் கடடளையிடடதட்காக இரவோடிரவாக அந்த சங்கபரிவார் கூடடம் அவரை வேறிடத்துக்கு மாற்றிவிட்ட்து।

எனவே வடக்கு கிழக்கில் இவர்கள் கால் பாதிப்பதை , இந விரோத செயட்பாடுகளை முன்னெடுப்பதை நாங்கள் நிச்சயம் எதிர்த்தே தீருவோம்।

நீங்கள் கூறுவது மிகவும் உண்மை, இவர்களை கால் ஊன்ற விடாது தடுப்பது மக்களின் கடமை; என்ன தான் இந்த அமைப்புக்கள் இங்கு வந்தாலும் மக்கள் அக்கறை காட்டதவிடத்து இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. 

நிச்சயமாக இந்து வாக்கு என்று கேட்டு வருபவர்களுக்கு வாக்களிக்க கூடாது.

ஒரு விடயத்தை அவதானிக்க வேண்டும் இவர்கள் ஒரு நாளும் சைவம் என்ற சொல்லை பாவிக்க மாட்டார்கள் எப்பொழுதும் “இந்து” என்ற சொல்லையே பாவிப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.