Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருவர் இன்று கொரோனாவுக்குப் பலி – ஒரே நாளில் 878 கொரோனா தொற்றாளர்கள்

 
corona-09-05-696x405.jpg
 23 Views

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு இன்று பலியாகியுள்ளனர்.

சிலாபத்தை சேர்ந்த, 66 அகவைக்கொண்ட பெண், கொழும்பு 13ஐ சேர்ந்த 67 அகவைக்கொண்ட ஆண் ஆகியோரே மரணமானதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளையில் இலங்கையில் இன்று மாத்திரம் 878 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இவர்கள் அனைவரும் தொற்றாளிகளுக்கு ஊடாக தொற்றுக்கு ஆட்பட்டவர்கள் என்று இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இந்தளவுக்கு அதிக கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

 

https://www.ilakku.org/இருவர்-இன்று-கொரோனாவுக்க/

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Colombo in Sri Lanka: Sehenswürdigkeiten & Highlights

கொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆரம்பமானது முதல் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் பதிவான மொத்த  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பில் 10 ஆயிரத்து 140 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேநேரம், நேற்று கம்பஹா மாவட்டத்தில் 188 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 98 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை கண்டியில் 27 தொற்றாளர்களும் குருநாகலையில் 24 தொற்றாளர்களும் இரத்தினபுரியில் 24 தொற்றாளர்களும் மற்றும் புத்தளத்தில் 29 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொழும்பில்-மாத்திரம்-10-ஆய/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இன்று 627 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 26,038 ஆக அதிகரிப்பு

 

இலங்கையில் இன்று மாத்திரம் 627 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 26ஆயிரத்து 38ஆக உயர்ந்துள்ளது.

6877பேர் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 19ஆயிரத்து 32பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

https://thinakkural.lk/article/95050

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா- நேற்றைய தினம் ஒருவர் மரணம்; 517 பேருக்கு கொரோனா தொற்றியது

 

corona-latest-update.jpgஇலங்கையில் நேற்றைய தினம் 517 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளையில், ஒருவர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 130ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார். இவர் பிலியந்தலையை சேர்ந்த 72 வயதான ஆண் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், நேற்று மாத்திரம் 517 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது.

 

https://thinakkural.lk/article/95334

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய 5 பேருக்கு கொரோனா

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணி யாற்றிய 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

coronavirus.COVID19.4.000.jpg

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூன்று பேர் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களை அனைவரும் தனிமைப்படுத்தல் நிலை யங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

 

https://thinakkural.lk/article/95413

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா இறப்பு 137 ஆக அதிகரிப்பு – இன்று ஏழு பேர் மரணம்

covid-update-05-1024x529.jpgஇலங்கைக்குள் கொரோனா இறப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுடன் தொடர்புடைய 7 பேர் மரணமானதை அரசாங்கம் இன்று உறுதிப்படுத்தியதை அடுத்தே இந்த எண்ணிக்கை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட மூன்று இடங்கள் இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படுகின்றன-அதிகாரிகள் அறிவிப்பு

 

வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட கொழும்பில் மூன்று இடங்களை இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

quarantinenews1-300x200.jpg

ஸ்வேல் ஐலன்ட் பகுதியில் உள்ள ஹ_னுப்பிட்டடிய கிராமசேவையாளர் பிரிவினை இன்று மாலை ஐநது மணி முதல் முடக்கவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கருவாத்தோட்டத்தின் 60வத்தை வெள்ளவத்தையின் கோகிலா வீதி ஆகியவற்றையும் இன்று மாலை முதல் தனிமைப்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

https://thinakkural.lk/article/95699

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுஇதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 648 – இராணுவதளபதி

இலங்கையில் இன்றுஇதுவரை 648 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களில் 451 பேர் பேலியகொடை மீன்சந்தையில் பாதிக்கப்பட்டவர்ளுடன் தொடர்பிலிருந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
197 பேர் சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் மகாவித்தியாலயம் மூடல்!

நுவரெலியா – ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தை நாளை (07) முதல் காலவரையறையின்றி பூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவருக்கும் அவரது குழந்தைகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/நோர்வூட்-மகாவித்தியாலயம/

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 28ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

 
1-41.jpg
 46 Views

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று இதுவரை மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது 7 ஆயிரத்து 259 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,தொற்றாளர்களின் எண்ணிக்கை தினசரி 700 முதல் 800 வரை அதிகரிக்கும் பட்சத்தில் சுகாதாரப் பொறிமுறைக்கு அது ஒரு சவாலாக இருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 300-400 கோவிட்-19 தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் குணமடைந்து வெளியேறும் நிலையில் 300-400 பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவ மனைகளுக்கு வருவது நெரிசல் பிரச்சினையோ திறன் பிரச்சினையோ அல்ல என்றும்  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  குறிப்பிட்டுள்ளது.

 

https://www.ilakku.org/இலங்கையில்-28ஆயிரத்தைக்-க/

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா  எண்ணிக்கை

 
1-11.jpg
 55 Views

கிழக்கு மாகாணத்தில் கொரோனா  தொற்றின் எண்ணிக்கை 400தாண்டியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை வரையில் கிடைக்கப் பெற்ற பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களாக அக்கரைப்பற்றில் 12பேரும் ஆலையடிவேம்பில் 03பேரும் இனங்காணப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பகுதியில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 419ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களில் இதுவரையில், 256பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையினை உணராமல் சிலர் செயற்படுவதாகவும் இதன் காரணமாக ஏனையவர்களும் பாதிக்கப்படும் நிலையேற்படுவதாகவும் மாகாண சுகாதார பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/கிழக்கு-மாகாணத்தில்-400க்-க/

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கடற்படையினர் தனிமைப்படுத்தலில்

 
1-52.jpg
 48 Views

கொரோனா அச்சம் காரணமாக யாழ்ப்பாணத்தில் மட்டும் ஆயிரம் கடற்படையினர் அவர்களது முகாம்களில் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் குடா நாட்டில் பணியாற்றும் கடற்படையினர் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று விடுமுறையைக் கழித்த பின்பு பணிக்குத் திரும்பும் சமயம் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனையின் பின்பே பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தல்களுக்கு உட்பட்டவர்கள் காலி, காங்கேசன்துறை, நெடுந்தீவு, மாதகல், வெற்றிலைக்கேணி எனப் பல இடங்களிலும் உள்ளனர்.

இவ்வாறு சகல இடங்களிலும் தனிமைப்படுத்தலில் உள்ள கடற்படையினர் ஆயிரம் பேர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/யாழில்-கடற்படையினர்-தனிம/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 30 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று, பலி எண்ணிக்கையும் அதிகரிப்பு

 
1-64.jpg
 32 Views

இலங்கையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 613ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் இதுவரை 144 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய கேகாலை வைத்தியர் தம்மிக பண்டார தான் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தினை நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார்.

ஆயுர்வேமருந்தினை சபாநாயகர் உட்பட பல ஆளும்கட்சி உறுப்பினர்கள் பருகிப்பார்த்துள்ளனர். சுகாதார அமைச்சர் உட்பட பல அமைச்சர்களும் அதனை பயன்படுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட மருந்தினை கொள்வனவு செய்வதற்காக பெருமளவான மக்கள் வைத்தியரின் கேகாலை வீட்டிற்கு படையெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/இலங்கையில்-30-ஆயிரத்தைக்-க/

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது

 

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 538 பேரில் 304 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது.

அதன் படி கொழும்பு மாவட்டத்தில் 304 பேர் , பொரளை பகுதியில் 254 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 28 பேர், கண்டி மாவட்டத்தில் 38 பேர், களுத்துறை மாவட்டத்தில் 27 பேர், இரத்தின புரி மாவட்டத்தில் 23 பேர் மற்றும் காலி மாவட்டத்தில் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

PCR-TEST-CORONA-COVID.jpg

அம்பாறை மாவட்டத்தில் 11 பேர், குருணாகல் மாவட்டத் தில் 10 பேர், மாத்தளை மாவட்டத்தில் 06 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 03 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

 

https://thinakkural.lk/article/97060

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்- அஜித் ரோஹண  

 
1-70-696x392.jpg
 48 Views

இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக சுமார் ஒரு இலட்சம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண  தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றைய தரவுகளின் அடிப்படையில் 95 ஆயிரத்து 825 பேர் வீடுகளின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் துணைக் கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதே நேரம் தம்மிக பண்டார அறிமுகப்படுத்திய மருந்தைக் கொண்டு கொவிட்-19க்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடியுமானால் அதற்கு தனது ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்(GMOA) தெரிவித்துள்ளது.

இந்த மருந்து வெற்றிகரமாக இருந்தால் அது நாட்டுக்கு பெருமையையும் கௌரவத்தையும் தரும் என அச்சங்கத்தின் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.

வைரஸுக்கு எதிராக இந்த மருந்து வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால் அது ஒரு வெற்றியாகும் எனவும் இவ்வைரஸுக்கு சிகிச்சையளிக்க சுதேச மருந்தைப் பயன்படுத்துவதற்கு மேலைத்தேய மருத்துவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை எனவும் மருத்துவர் அளுத்கே மேலும் கூறினார்.

 

https://www.ilakku.org/இலங்கையில்-ஆயிரக்கணக்கா/

  • கருத்துக்கள உறவுகள்

நாவலப்பிட்டி கதிரேசன் உயர்தர மாணவனுக்கு கொவிட்-19; பாடசாலை மூடப்படும் சாத்தியம்

 

கம்பளை கல்வி வலயத்திலுள்ள நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியின் மாணவர் ஒருவர் இன்று கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கச் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.

coronavirus.COVID19.4.000-300x150.jpg
கதிரேசன் கல்லூரியில் 12ஆம் தரத்தில் கற்கும் குறித்த மாணவ னுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதையடுத்து நான்கு ஆசிரியர்கள், 14 மாணவர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புள்ள ஒன்பது பேர் பேராதெனியவிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர் என அவர் மேலும் கூறினார்.

மேலும் மாணவனின் இரண்டாவது தொடர்பாளர்களும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதேவேளை மறு அறிவித்தல் வரும் வரை பாடசாலை மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://thinakkural.lk/article/97204

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 536 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 536 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதில் 461 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொட ர்பு கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

ஏனைய 75 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியி ல் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 149 ஆக உயர்ந் துள்ளது.

அத்துடன்,  திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 521 ஆக உயர்ந்துள்ளது

 

https://thinakkural.lk/article/97238

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனைப் பிராந்திய தொற்றுக்களின் எண்ணிக்கை 379 ஆனது; சுகாதார சேவைப் பணிப்பாளர் சுகுணன்

 

(காரைதீவு நிருபர் சகா)

கல்முனைப் பிராந்திய தொற்றுக்களின் எண்ணிக்கை 379ஆக உயர்ந்துள்ளது என பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவர் குண.சுகுணன் தெரிவித்தார்.

FB_IMG_1605321492843.jpg
கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் இதுவரை ஒரு நோயாளிக்கும் இரு வைத்தியர்கள், இரு தாதிய உத்தியோகத் தர்கள் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த சம்மாந்துறை தொற்றாளர் ஒருவரே மரணமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 550ஐத் தாண்டியுள்ள அதேவேளை மாகாணத்துள் வருகின்ற கல்முனைப் பிராந்தியத்தில் தொற்றுக்கள் 379ஆகும். எனவே ஏனைய 150 தொற்றுக்களும் ஏனைய 3 பிராந்தியத்துள் வருகின்றன.
கல்முனைப் பிராந்தியத்துள் வருகின்ற அக்கரைப்பற்றுக் கொத்தணியில் 339பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீதி 40பேரும் பிராந்தியத்தின் ஏனைய சுகாதாரப் பிரிவுகளில் இனங்காணப்பட்டுள்ளனர். பிராந்தியத்தில் தனியொரு கிராமம் அதிகூடிய தொற்றுக்களைக் கொண்டது என்றால் அது 241தொற்றுக்களைக் கொண்ட அக்கரைப்பற்று எனலாம்.

அருகிலுள்ள அட்டாளைச்சேனையில் 49 தொற்றுக்களாக உயர்ந்துள்ளது. சாய்ந்தமருதில் 17 பேர் ஆலையடிவேம்பில் 16 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இன்னும் பெறப்பட்ட பிசிஆர் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைக்கப் பெறவில்லை. அவை வந்தால் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்தியத்திலுள்ள பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 87 பேரும் புதிதாக உருவாக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 92 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிராந்தியத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் 72பேரும் அட்டாளைச்சேனையில் 80பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நுரைச்சோலை நிலையம் தயாராகி வருகிறது.

இதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை ஒரேயொரு கொரோனா இறப்பும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://thinakkural.lk/article/97475

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கப்படும் உடுவில் பிரதேச செயலக பிரிவு’

யாழ். மாவட்ட உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் க. மகேசன் அறிவித்துள்ளார்.

உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ - சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடுவில் பிரதேச செயலக பிரிவில் 30 கிராம அலுவலகர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கொவிட்-19 தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று மகேசன் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/முடக்கப்படும்-உடுவில்-பிரதேச-செயலக-பிரிவு/71-260993

மருதனார்மடத்தில் மேலும் அறுவருக்கு கொவிட்-19

யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் அறுவருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர், த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் போதுமான கூறுகள் இல்லாமையால் அவர்களிடம் மீளவும் மாதிரிகள் பெறப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது.

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மருதனார்மடத்தில்-மேலும்-அறுவருக்கு-கொவிட்-19/71-260973

  • கருத்துக்கள உறவுகள்

மஹர கைதிகளில் 234 பேருக்கு தொற்று

மஹர சிறைச்சாலை கைதிகளுக்கு கடந்த 4 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம்,  234 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

மொத்தமாக 437 கைதிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென,  மஹர சிறைச்சாலை அதிகாரி ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டோரிடையே, 35 பேர் இன்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  மேலும் 75 கைதிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும்  சிறைச்சாலை அதிகாரி ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/மஹர-கைதிகளில்-234-பேருக்கு-தொற்று/175-261038

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை மயூரா பிளேஸ் உட்பட பல பகுதிகளில் நாளை முதல் காலவரையறையற்ற ஊரடங்கு

 
Curfew-696x377.jpg
 56 Views

மேல் மாகாணத்தில் பல பகுதிகள் நாளை முதல் முடக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை காலை விடுவிக்கப்படவுள்ளன.

வெள்ளவத்தை மயூரா பிளேஸ் உட்பட கமபஹா மாவட்டத்தின் ஐந்து கிராமசேவகர் பிரிவுள், களுத்துறை மாவட்டத்தில் 3 பிரிவுகள் நாளை காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/வெள்ளவத்தை-மயூரா-பிளேஸ்/

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வவுனியாவில் தொற்று உறுதியான மாணவி பாடசாலை சென்றுள்ளார்

Coronavirus-COVID19_2.jpg?189db0&189db0

 

வவுனியா – கற்குழி பகுதியில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் 10ல் கல்விபயிலும் மாணவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவி இன்றும் பாடசாலைக்கு சென்று திரும்பியதாகவும் எட்டு பாடவேளையும் அனைத்துப் பாடங்களும் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

https://newuthayan.com/இன்று-வவுனியாவில்-தொற்று/

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு ஆலயங்கள் உதவவேண்டும்-சைவ மகா சபை வேண்டுகோள்

 
1-119-696x367.jpg
 27 Views

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டனர் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அந்தந்த பிரதேச ஆலயங்களும் தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டவேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சைவ மகா சபை மேலும் தெரிவிக்கையில்,

உலகையே அச்சுறுத்திவரும் கொடிய தொற்று நோயான கொரோனா இன்று யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியை ஆக்கிரமித்து நிற்கின்றது. இக்கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இதேபோன்று தொற்றாளர்களுடன் தொடர்புடைய பல குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகின்றன.

இவ்வாறான நிலைமைகளின் போது அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிப்பொருட்கள் தாமதமாகவே கிடைக்கின்றன. அன்றாடம் உழைத்து சீவியம் நடத்தும் குடும்பங்கள் உணவுக்கு பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதன்போது பிரதேசத்தில் உள்ள ஆலயங்களும் தன்னார்வலர்களும் பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக உதவவேண்டும். இது இறைவனுக்கு செய்யும் தொண்டுக்கு நிகராகும்” என தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/?p=37525

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது கொரோனா மரணம்

December 19, 2020

sugunan.jpg

கொவிட் – 19 தொற்றுக் காரணமாக கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது மரணம் ஏற்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

63 வயதான ஒலுவில் பிரதேசத்தினைச் சேர்ந்த இவர், கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். #கிழக்குமாகாணத்தில் #கொரோனா #மரணம் #ஒலுவில்

 

https://globaltamilnews.net/2020/154564/

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலோனிலை வீட்டிலை ஒராளுக்கு கொரோனா வந்தால் நோட்டீஸ் அடிச்சே ஒட்டிவிடுவார்களாம்.

corona.jpg

இதையும் மீறி ஆள் வெளியிலை வந்தால் காணி பூமி வித்துத்தான் தண்டம் கட்டோணுமாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.