Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் மேலும் மூன்று இடங்களில் சிகிச்சை நிலையங்கள் – இராணுவம் பொறுப்பேற்பு

 
02-4.png
 19 Views

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் நாவற்குழியில் அமைந்துள்ள அரசகளஞ்சிய கட்டடம் என்பவற்றை கொரோனா சிகிச்சை நிலையங்களாக அமைப்பதற்கு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள வயாவிளானில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலும் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகின்றது.

நாட்டில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது. சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் உயர் வடைகின்றது. இந்தநிலையில், யாழ்.மாவட்ட செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நாவற்குழி அரச களஞ்சியத்தில் 300 நோயாளர் படுக்கைகள் கொண்ட சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வசாவிளான் கட்டடத்தில் இடவசதிக்கு அமைவாக நோயாளர் படுக்கைகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், யாழ். மாவட்ட அரச களஞ்சியம் மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தொழில்நுட்ப நிறுவனம் என்பவற்றில் மலசலகூடங்கள் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

https://www.ilakku.org/?p=49168

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாகாணங்களிற்கு இடையில் போக்குவரத்து உடனடியாக தடை – 30 ஆம் திகதி வரை அமுல்

 
cHECK.png
 7 Views

இன்று நள்ளிரவிலிருந்து மாகாணங்களிற்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது.

கொரோனாவைரஸ் துரிதமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன.

30 திகதி வரை இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கும்

 

https://www.ilakku.org/?p=49236

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனாவால் மேலும் 23 உயிரிழப்புகள் பதிவு – பாதிப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனாவால் மேலும் 23 உயிரிழப்புகள் பதிவு – பாதிப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இரத்மலானை,பிலிமத்தலாவ, பத்தன,தலவாக்கலை, ஹால்கரன்ஓய, எல்கடுவ மெனிக்கின்ன, மாத்தறை, தல்கஸ்வல, மொரன்துடுவ, மஹரகம, ஹல்தொட, வஸ்கடுவ, களனி, மொரட்டுவ மற்றும் பாணந்துறை பகுதிகளிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அத்தோடு, மாத்தளையில் 3 மரணங்களும் மடுல்கல பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் தலா இரண்டு உயிரிழப்புகளும் பதிவாகியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 ஆண்களும் 8 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 850ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 568 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து கொரோன தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 98 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 641 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 23 ஆயிரத்து 607 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

https://athavannews.com/2021/1215218

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் நிலைமை மோசம்! – எகிறும் தொற்றாளர் எண்ணிக்கை!

 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை (மே 11) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 18 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும் வவுனியா மாவட்டத்தில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும் பூவரசம் குளம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 19 பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 14 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருவரும் என 35 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கும் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தெல்லிப்பழை வைத்திசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள். ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்.

வேலணை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நில அளவைகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் நெல்லியடி சந்தைத் தொகுதியைச் சேர்ந்தவர்.

நல்லூர் மற்றும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
 

https://newuthayan.com/வடக்கின்-நிலைமை-மோசம்-எக/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்சிசன் உருளைகள் வந்துகொண்டிருப்பதாக  செய்திகள் சொல்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண ஆளுநருக்கு கொரோனா தொற்று!

 
DSC_2397_new.jpg


கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

பி.சி. ஆர் பரிசோதனை செய்தபோது, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தன்னை சுயதனிமையில் ஈடுபடுத்திகொண்ட அவர், கடந்த சில நாள்களாக தன்னுடன் மிகநெருக்கமாக பழகியவர்கள், தங்களை தாங்கள் சுயதனிமைப்படுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

http://www.battinews.com/2021/05/blog-post_733.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா: நோர்வேயிடம் எதிர்க் கட்சித் தலைவர் உதவி கோரல்

 
1-48.jpg
 22 Views

இலங்கையில் தற்போது அதிகரித்துள்ள கொரோனா தொற்று நோயை சமாளிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் நோர்வேயிடம் உதவி கோரியுள்ளார்.

இலங்கையில் உள்ள நோர்வே துாதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பான கலந்துரையாடலில் நேற்று ஈடுபட்டிருந்தார்.

இலங்கைக்கு அவசர சிகிச்சை படுக்கைகள், ஓக்ஸிஜன், உயிர் காக்கும் உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவை எனவும் சஜித் பிரேமதாச நோர்வே துாதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைக்கு அமைய  வெளிநாட்டு பங்காளர்களிடம் இருந்து இலங்கைக்குத் தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ளுவதனை ஊக்குவிக்கும் வகையில் இந்த தாழ்மையான கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உலகளாவிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என இரு கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/?p=49443

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- நல்லூரில் ஏழு பேர்!

வடக்கில் மேலும் 62 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 62 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம் ஆகியவற்றில் 858 பேரின் மாதிரிகள் இன்று (சனிக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேருக்கும் முல்லைத்தீவில் ஆறு பேருக்கும் கிளிநொச்சியில் ஆறு பேருக்கும் வவுனியாவில் 12 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 18 பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 16 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருவருக்கும் என 36 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களில், இருவர் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் சேர்க்கப்பட்ட மூவருக்கும் மல்லாவி சுகாதார அதிகாரி பிரிவில் மூவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சி சுகாதார அதிகாரி பிரிவில் ஏற்கனவே தொற்றுக் கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடைய இருவருக்கும் பூநகரி சுகாதார அதிகாரி பிரிவில் மூவருக்கும் தரும்புரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1215978

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை, மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

 
IMG_7370-696x464.jpg
 22 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலகத்தில் 25கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப் பட்டுள்ளதுடன் மூன்று மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 15பேரும் மட்டக்களப்பு சுகாதார பிரிவினை சேர்ந்த 06பேரும் ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்தி அதிகாரி பிரிவுகளில் தலா இருவருமாக 25பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒன்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இரண்டுமாக மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 1426 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 19கொரோனா மரணங்களும் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 171 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த மாதம் 165பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். கடந்த வருடத்தில் 200 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்” என்றார்.

இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள் கோவிட்19 காரணமாக பதிவாகியுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

https://www.ilakku.org/?p=49690

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சி பிரிவிலுள்ள நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணகி அம்மன் ஆலயவீதியும், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள லேக்றோட் வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதிகள் முதலான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.அதேபோன்று குருநாகல், கிரிவுள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்கொட வடக்கு, ஹமன்கல்ல, நாரங்கொட தெற்கு, மல்கமுவ, பட்டபொதெல்ல, நாரங்கமுவ மற்றும் தொடங்பொத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் மாத்தளை யட்டவத்தை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட அலவத்தை கிராமம் மற்றும் வல்பொல தெற்கு கிராம சேவகர் பிரிவின் வெடிகந்த கிராமம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு- கிரான்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேலாப்பொடி வீதி, நெசவு நிலைய வீதி. கண்ணகி அம்மன் ஆலயவீதி மற்றும் கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள விதானையார் வீதி, லேக்றோட் வீதி, அப்புகாமி வீதிகள் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இதேவேளை பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொகவானை, கெர்கசோல்ட், கொட்டியாக்கலை,லொய்னொன், பொகவந்தலாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று இரத்தினப்புரி- கஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுகவெல மேற்கு, உடஹவுபே, நுகவெல கிழக்கு, எந்தன,மடலகம ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இறக்குவாணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனாப்பிட்ட வடக்கு, பனாப்பிட்ட தெற்கு, கெப்பெல, மியனவிட மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே களுத்துறை- இங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட றைகம் தோட்டம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட றைகம் தோட்டம் கீழ் பிரிவு மற்றும் மஹா இங்கிரிய கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட றைகம்புர, றைகம் ஜனபதய ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.அம்பாறை – பதியதலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேஹேல்வுல்ல கிராம சேவகர் பிரிவின் கடுபஹர கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.அதேபோன்று காலி- எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படுவத்ஹேன, வல்லம்பகல கிராம சேவர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நுவரெலியா- நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இன்ஜஸ்றீ, வென்ஜர், டில்லரி ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.அகலவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கித்துல்கொட கிராம சேவகர் பிரிவு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பியகம வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட என்பீல்ட் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)

http://www.samakalam.com/இலங்கையில்-0-கிராம-சேவகர்/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு முடக்கம் – ஆடைத் தொழிற்சாலையில் 261 பேருக்கு கொரோனா

 
corona-update-2-1-696x348.png
 8 Views

புதுக்குடியிருப்பில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடமையாற்றும் பணியாளர்களில் 261 பேர் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகின்றது.

இனையடுத்து புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதிகள் இன்றிரவு 11.00 மணி முதல் முடக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பலருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு பணியாற்றும் 926 பேருக்கும் இன்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு இடம்பெற்ற பரிசோதனையில் கொரோனா கண்டறியப்பட்ட பணியாளர்களுக்கு முதல் கட்டமாக பி.சி.ஆர். பரிசோதனையும், ஏனைய பணியாளர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் பி.சி.ஆர். பரிசோதனை இடம்பெறவுள்ளது.

கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குழுவினரே இன்று இந்த விசேட பரிசோதனையை மேற்கொண்டனர். இதேநேரம் இவ்வாறு கொரோனா கண்டறியப்பட்டவர்களின் வீடுகள், அவர்கள் பழகியவர்களின் வீடுகள் என ஆயிரத்தைத் தாண்டிய குடும்பங்கள் தனிமைப் படுத்தலுக்கு உட்பட வேண்டிய அவலமும் காணப்படுகின்றது.

குறித்த ஆடைத்தொழிற்சாலை அடிப்படை சுகாதாரநடைமுறையைப் பின்பற்றாத காரணத்தால் மூடப்படவேண்டும் எனப் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பல தடவைகள் சுட்டிக்காட்டியும் அதன் உரிமையாளர் தென் பகுதியைச் சேர்ந்தவர் என்பதன் அடிப்படையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் விளைவே இந்த நிலைமைக்குக் காரணம் எனத் தற்போது சுட்டிக்காட்டப்படுகின்றது.

https://www.ilakku.org/?p=49823

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே கொரோனா பரவுவது மிகக் குறைவு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே கொரோனா பரவுவது மிகக் குறைவு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே கொரோனா வைரஸ் பரவுவது மிகக் குறைவு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் தற்காலிக தங்குமிடங்களில் இருந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு  தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் கொடிபிலி இந்த திடீர் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களில் ஒரு கொரோனா நோயாளிகூட அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

48,000 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 121,177 பேர் மே 16 வரை தற்காலிக தங்குமிடங்களில் இருந்தனர் என்றும் ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் நேற்றைய நிலைவரப்படி அவர்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட தரவுகளின்படி மூன்று வீடுகள் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளன என்றும் 868 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், அனைத்து முக்கிய நதிகளின் நீர்மட்டமும் குறைந்து வருவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1216483

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு – மட்டக்களப்பு சிவப்பு வலயமாக பிரகடனம்

மட்டக்களப்பில் கடந்த 24மணி நேரத்தில், 66 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இரண்டு மரணங்களும் இடம்பெற்றுள்ளது.அதாவது, மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக 3 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.அதாவது, கல்லடி வேலூர், சின்ன ஊறணி, திருச்செந்தூர் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்நிலையிர் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள், சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 3 கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில், இன்று முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் மேலும் தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/கொரோனா-அச்சுறுத்தல்-அதி-2/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கடந்த 17 நாளில் 37,000 பேர் கொரோனாவால் பாதிப்பு

 
IMG-20210516-WA0008-696x392.jpg
 1 Views

இலங்கையில் மே மாதத்தில் நேற்று(17) வரை 37,056 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 1 ஆம் திகதி முதல் இன்று(18) காலை 6 மணி வரை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 7,819 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் 6,230 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=49975

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்கியது!

இலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது!!

நாட்டில் இன்று ஒரேநாளில் 34 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவே, நாட்டில் பதிவான ஒரேநாளில் அதிக உயிரிழப்பாகும்.

இந்நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் ஆயிரத்து 15ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு அதிகம் பதிவாகிய நாடுகள் பட்டியலில் இலங்கை 99ஆவது இடத்தில் உள்ளது.

அத்துடன், அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் இதுவரை ஆறு இலட்சம் பேர் மரணித்துள்ளதுடன் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அந்நாடு வரிசையில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கடுத்து, பிரெசிலில் நான்கு இலட்சத்து 35 ஆயிரம் பேரும் இந்தியாவில் இரண்டு இலட்சத்து 77 ஆயிரம் பேரும் மெக்சிகோவில் இரண்டு இலட்சத்து 20 பேரும் உயிரிழந்துள்ள நிலையில் அந்நாடுகள், முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1216807

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லியடி வெதுப்பக பணியாளர்கள் 33பேர் உள்ளிட்ட 95பேருக்கு யாழில் கொரோனா

May 18, 2021

Ketheeswaran-DR.jpg

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை (மே 18)  கண்டறியப்பட்டுள்ளது என்று  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 937 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 
அவர்களில் 137 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 31 பேரும் வவுனியா மாவட்டத்தில் 7 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேரும்  என 137 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 2 பேரும் ஒட்டுச்சுட்டான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேரும்  , கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 31 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. (அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர். சிலர் வீதி சீரமைப்பு பணியில் ஈடுபடுபவர்கள். ஏனையோர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்) வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேரும் மாவட்ட பொது வைத்தியசாலையில் 2 பேருக்கும்  தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 8 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும் கோப்பாய் வைத்தியசாலையில் இருவருக்கும்  தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 36 பேருக்கும் (நெல்லியடி வெதுப்பகம் ஒன்றில் 33 பேரும் நெல்லியடி வர்த்தகர்கள் மூவரும் அடங்குகின்றனர்) தெல்லிப்பழை அந்தோனிபுரம் கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்ட 17 பேருக்கும்  , யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 15 பேருக்கும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

 

https://globaltamilnews.net/2021/161152/

 

  • கருத்துக்கள உறவுகள்

உச்ச கட்ட ஆபத்தில் இலங்கை – ஒரே நாளில் 36 பேர் மரணம்! 3,623 பேருக்கு கொரோனா தொற்று

 
covid-death-696x348.png
 28 Views

இலங்கையில் ஒரு நாளில் 3623 கொரோனா தொற்றாளர்களும், சுமார் 36 கொரோனா மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இதுவரை ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். அத்துடன், நாட்டில் நேற்று 36 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய மரண எண்ணிக்கை இதுவாகும்.

மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 343 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 367 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். 27 ஆயிரத்து 339 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரத்து 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

https://www.ilakku.org/?p=50151

  • கருத்துக்கள உறவுகள்

அசுர வேகத்தில் பரவும் கொரோனா தொற்று – நேற்று மட்டும் 44 பேரை காவு கொண்டது

death-covid-696x348.jpg
 2 Views

கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் நேற்று மட்டும் 44 பேர் மரணமடைந்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இலங்கையில் ஒரே நாளில் பலியானவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் பலியானவர்களின் தொகை 1132 ஆக அதிகரித்துள்ளது.

 

https://www.ilakku.org/?p=50380

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திருகோணமலையில் 215 பேருக்கு கொரோனா தொற்று

 
corona-update-2-1-696x348.png
 26 Views

திருகோணமலை பிரதேச செயலக ஊழியர்கள் 26 பேர் உட்பட 215 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 215 தொற்றாளர்களும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் மூன்று மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இன்று  வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 272 பேருக்கு கடந்த 17, 18ஆம் திகதிகளில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 26 பேர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருபவர்கள் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பூம்புகார் பகுதியில் 65 பேருக்கு பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 65 பேருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மூதூர் பிரதேசத்தில் 23 பேருக்கும் குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய பிரிவில் 16 பேருக்கும், கிண்ணியாவில் ஆறு பேருக்கும், குச்சவெளி பிரதேசத்தில் பத்து பேருக்கும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ரொட்டவெவ கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும், பதவிசிறிபுர பிரதேசத்தில் 6 பேரும் தம்பலகாமத்தில் இருவரும் இனங் காணப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் குறிப்பிட்டார்.

https://www.ilakku.org/?p=50359

 

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 46 பேர் நேற்று மரணம்; கொரோனாவுக்குப் பலியானோர் தொகை 1,178 ஆக அதிகரிப்பு

 
covid-death-696x348.png
 2 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுவே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகூடிய கொரோனா மரண எண்ணிக்கையாகும்.

நேற்று இடமம்பெற்ற 46 மரணங்களுடன் நாட்டில் இதுவரை 1,178பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=50438

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வேகமாக பரவும் கொரோனா- 24 மணி நேரத்தில் 156 பேருக்கு தொற்று! இருவர் பலி

 
corona-update-2-1-696x348.png
 2 Views

வடக்கு மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தொற்றாளர்களில் இருவர் மரணத்தின் பின்னர் பி.சி.ஆர். பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் இரவு நடத்தப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளில் 12 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 69 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை, நேற்றிரவு வெளியாகிய யாழ்.போதனா வைத்தியசாலையின் பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 75 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்கமைய யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 பேருக்கும், சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் 02 பேருக்கும், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேருக்கும் கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, மல்லாவி சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும்,புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 03 பேருக்கும், மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும், பளை சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் 03 பேருக்கும், பூநகரி சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் இருவருக்கும், பூவசரங்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும்கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=50445

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு அம்மன் பிரதம குருக்கள் கொரோனா தொற்றாலே உயிரிழப்பு

 
%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-21.
 2 Views

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு பிரபலமான இந்துமதக் குருக்கள் உயிரிழந்துள்ளார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருக்களும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஸ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் நேற்று அதிகாலை உயிரிழந்திருந்தார்.

அவரின் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றுப் பகல் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர் இணுவில் கந்தசுவாமி கோயிலின் பிரதம குருக்களும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்திருந்தமை தெரிந்ததே.

 

https://www.ilakku.org/?p=50607

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இரு பெண்கள் உயிரிழப்பு!

 

20210523_171704-1-300x197.jpg?6bfec1&6bf

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இரு பெண்கள் நேற்று திங்கட்கிழமை (24) உயிரிழந்துள்ளதுடன் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

வாழைச்சேனையைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரும் மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் உட்பட இரு பெண்கள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளான காத்தான்குடியில் 7 பேரும், மட்டக்களப்பில் 12 பேரும், களுவாஞ்சிக்குடியில் 2 பேரும், வாழைச்சேனையில் ஒருவரும், ஓட்டுமாவடியில் 3 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 10 பேரும், செங்கலடி 2 பேரும், ஏறாவூரில் 2 பேரும், பட்டிருப்பில் 2 பேரும், ஆரையம்பதியில் 5 பேரும் கிரானில் 2 பேர் உட்பட 48 பேருக்கு நேற்று மேற்கொண்ட அன்டிஜன் மற்றும் பி சிஆர் பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை தவித்த ஏனைய மாவட்டங்கள் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் முகக் கவசங்களை ஒழுங்கான முறையில் அணிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.


https://www.meenagam.com/மட்டக்களப்பு-மாவட்டத்த-26/

 

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

இலங்கை எயார்லைன்ஸுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் தடுப்பூசிகள் இன்று (புதன்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இந்த தடுப்பூசிகள் பெய்ஜிங்கிலிருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு தரையிறங்கின.

இந்த தடுப்பூசிகளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இது சீன அரசு நன்கொடையளித்த இரண்டாவது தொகுதி தடுப்பூசிகள் ஆகும்.

அதன்படி, இந்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளைக் கொண்ட தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vaccine-china-3-600x450.jpg

https://athavannews.com/2021/1218258

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் 11 தொற்றாளர்- பிரபலமான ஓடக்கரை வீதி முடக்கம்!

 
quarantine-696x392.jpg
 9 Views

பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வீதியின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

ஓடக்கரை வீதியில் முடக்கப்பட்ட பகுதியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 11 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான தொற்று மூலம் எது என்பதை அடையாளம் காணமுடியாத நிலை நீடிப்பதாக பருத்தித்துறை சுகாதார பிரிவு தெரிவித்தது.

மேலும், இவர்களுடன் தொடர்புடையவர்களை இனம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அப்பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மரணச் சடங்கு நிகழ்வுக்கு பலர் வந்து சென்றுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

 

https://www.ilakku.org/?p=50673

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.