Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28 பேர் நேற்று கொரோனாவுக்கு பலி – மரணங்களின் எண்ணிக்கை 1,269 ஆக அதிகரிப்பு

 
Deaths-600.png
 24 Views

இலங்கையில் கொரோனாவினால் நேற்றைய தினம் 28 பேர் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவினால் இலங்கையில் மரணமடைந்தவர்களின் தொகை 1,269 ஆக அதிகரித்துள்ளது.

 

யாழ். நகரில் காப்புறுதி நிறுவன ஊழியர்கள் 23 பேருக்கு தொற்று

 

நாட்டின் பிரபலமான காப்புறுதி நிறுவனம் ஒன்றின் யாழ். நகர கிளை அலுவலகத்தின் ஊழியர்க்ள 23 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

யாழ். நகரில் வேம்படி சந்திக்கு அண்மையாக செயல்படும் குறித்த நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவருக்கு நோய் அறிகுறி காணப்பட்டமையால் அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது.

அவருக்கு தொற்று உறுதியானமையை தொடர்ந்து அந்த அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சோதனை முடிவில் நேற்றுவரை அவர்களில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வளவு பெருந்தொகையினர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டமையால், அந்நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அழைத்துவரப்பட்டு காப்புறுதி நிறுவனப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரியவந்தது.

 

https://www.ilakku.org/?p=50671

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் கடந்த 24 மணி நேரத்தில் 7 போ் கொரோனாவால் பலி

 
1-93.jpg
 13 Views

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் ஏழு மரணங்கள் பதிவாகியுள்ள  நிலையில் இன்று (26)வரை 69 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (26) காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும், தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், கந்தளாய், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் உயிரிழந்துள்ளதாகவும்,இன்றுவரை மொத்தமாக 69 பேர் திருகோணமலை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திருகோணமலை மாவட்டத்தில் 63 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்றுவரை 1403 பேரும், 2020 டிசம்பர் மாதம் முதல் இன்று வரை 2 ஆயிரத்து 844 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிக அளவில் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IMG_1622018870607.jpg

மேலும் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும், குச்சவெளியில் 9 பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேரும் கந்தளாயில் ஏழு பேரும்,கிண்ணியாவில் 6 பேரும், மூதூர் மற்றும் உப்புவெளியில் தலா  4 பேர் வீதமும், தம்பலகாமம் மற்றும் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா இருவர் வீதமும், சேறுவில பகுதியில் ஒருவரும் கோவிட்-19 தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

 

 

https://www.ilakku.org/?p=50718

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் குறையத் தொடங்கியுள்ளது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 325 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 72ஆயிரத்து 225ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 203 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 378 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 271ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 28ஆயிரத்து 578 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 14 இலட்சத்து 58 ஆயிரத்து 50 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை மூன்று இலட்சத்து 43ஆயிரத்து 277பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஒரே நாளில் கண்டறியப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியுள்ளது.

நாட்டில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் இறுக்கமான பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1218473

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸால் வீடுகளிலேயே மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

 
corona-09-05-696x405.jpg
 3 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளிலேயே மரணிக்கின்றவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கின்றது.

இம்மாதம் 20ஆம் திகதி முதல் நேற்றுமுன்தினம் (25) வரை பதிவான 221 கொரோனா மரணங்களில், 54 மரணங்கள் வீடுகளிலேயே இடம்பெற்றுள்ளன.

அவர்களில் 22 பேரின் மரணங்கள் கடந்த நாட்களில் (24,25) பதிவாகியுள்ளன.

இதேவேளை, மக்கள் சரியான முறையில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்பட்டால், அடுத்த சில வாரங்களுள் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. புத்தாண்டு காலப்பகுதியிலும் அதன் பின்னரும் சரியான முறையில் சுகாதார அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாமையே இதற்கான காரணமாகும். இந்தநிலையில், மக்கள் சரியாக நடந்து கொண்டால் சில வாரங்களில் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

 

https://www.ilakku.org/?p=50740

 

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பில் 128 பேருக்கு கொரோனா தொற்று

 
IMG_0007-1-696x427.jpg
 30 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் இனங்காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இதுவெனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி  காவல்துறை நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பொலிஸாருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து காவல்துறை நிலையம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் மேலும் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 128கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்களாகும். இவர்களில் வவுணதீவு பகுதியிலிருந்து 14பேரும், ஏறாவூர், செங்கலடி சுகாதார பிரிவிலிருந்து 13பேரும் வாழைச்சேனை சுகாதார பிரிவிலிருந்து 12பேரும் பட்டிப்பளை சுகாதார பிரவிலிருந்து 07பேரும் களுவாஞ்சிகுடி, கிரான் பகுதிகளிலிருந்து 6பேரும் கோறளைப்பற்று மத்தி, செங்கலடி, ஆரையம்பதி போன்ற பகுதிகளிலிருந்து தலா ஐந்து பேரும் அடங்குகின்றனர்.

அத்துடன் காத்தான்குடி  காவல்துறை  நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 காவல்துறை உத்தியோகத்தர்கள் கோவிட் தொற்றுள்ளவர்களாக அடையாள் காணப்பட்டனர். காத்தான்குடி காவல்துறை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வவுணதீவு பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் தனியார் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுபவர்களாவர். கடந்த 14 நாட்களில் இந்த தனியார் ஆடைத் தொழிற்சாலையில் 71 கோவிட் தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்தத் தொழிற்சாலை ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும்போது எமது அணியினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் அதனை திறப்பதா அல்லது மூடுவதா என்ற முடிவிற்கு எம்மால் வரமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அப்படி செயற்படும் பட்சத்தில் மட்டுமே கோவிட் 19 தொற்றினை கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதிக முக்கியமான தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்.

இது ஒன்றே நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான கடமையாகும். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள். முகக் கவசத்தை அணியுங்கள். கைகளை கழுவுங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்.

தற்போது அடையாளங்காணப்படும் கோவிட் தொற்றாளர்கள் அதிகமாக குணங்குறிகளுடன் அடையாளம் காணப்படுகின்றனர். குணங்குறிகளுடன் அடையாளம் காணப்படுபவர்கள் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மட்டுமே அனுமதித்து சிகிச்சை வழங்க முடியும். அங்கு காணப்படும் கட்டில்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதனால் தற்போது தொற்றாளர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய நோயாளர்களையும் குணங்குறிகளற்ற நோயாளர்களையும் வெளி மாவட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல் மற்றும் இருமல்,தும்மல் போன்ற சுவாச அறிகுறிகள் ஏற்படும்போது அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று உங்களை பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் உங்களுக்கு கொவிட் தொற்று உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்பொழுது குணங்குறிகளற்ற மற்றும் சிறு குணங்குறிகளுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கரடியனாறு, காத்தான்குடி, பெரியகல்லாறு போன்ற வைத்தியசாலைகள் செயற்பட்டு வருகின்றன. தற்போது அம்மூன்று வைத்தியசாலைகளும் நோயாளர்களால் நிரப்பப்பட்டுள்ளது.

அடுத்ததாக வாகரை பிரதேச வைத்தியசாலையும் நாவற்காடு பிரதேச வைத்தியசாலையும் தொற்றுநோயாளர்களுக்கான வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது.இன்னும் சில தினங்களில் அதுமாற்றப்படும்.அத்துடன் குணம்குறியுள்ள நோயாளர்களை பராமரிப்பதற்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையும் மாற்றப்பட்டுவருகின்றது”. என்றார்.

 

 

https://www.ilakku.org/?p=50766

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனாவால் அதிகரிக்கும் இளையவர் மரணங்கள்

 
1-93.jpg
 19 Views

இலங்கையில் கொரோனாவால் இளையவர்கள் அதிகமாக உயிரிழப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் இது வரையில் 10-30 வயதுக்கும் இடைப்பட்ட 16 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக கோவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதே போன்று 9 வயதுக்கு குறைவான குழந்தைகள் 2,31- 40 வயதுக்கு இடைப்பட்ட 35 நபர்களும், 41 -50 வயதுக்கு இடைப்பட்ட 92 நபர்களும், 51 -60 வயதுக்கு இடைப்பட்ட 184 நபர்களும், 61 -70 வயதுக்கு இடைப்பட்ட 339 நபர்களும், 71 வயதுக்கு மேற்பட்ட 617 நபர்களும் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக கோவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/?p=50837

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் – அரசடி முடக்கம் – 22 பேருக்கு கொரோனா தொற்றியதையடுத்து அதிரடி

 
09-3-696x329.jpg
 27 Views

யாழ்., நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்குவதற்கு சுகாதாரத்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியைத் தனிமைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்ட செயலாளர் ஊடாக கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியால் கோரிக்கை முன்வைக்கட்டுள்ளது.

நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனால் அரசடிப் பகுதியில் வசிக்கும் மக்களைச் சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 

https://www.ilakku.org/?p=50866

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

May 29, 2021

87878.jpg

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். 
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த , யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் , விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதியானது. 

அதனை அடுத்து யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

விரிவுரையாளரின் சடலம் கொரோனா சுகாதார விதிமுறைகளின் படி கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

 

https://globaltamilnews.net/2021/161500/

 

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 38 பேர் மரணம் – இலங்கையில் கொரோனா மரணங்கள் 1,363 ஆக அதிகரிப்பு

 
covid-deaths.800-696x350.png
 24 Views

இலங்கையில் மேலும் 38 பேர் கொரோனாவினால் மரணமடைந்ததாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 1,363 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/?p=50869

 

 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை உட்பட யாழில் இன்று 100 பேருக்கு கொரோனா தொற்று

 
800-696x433.jpeg
 8 Views

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் ஒன்றரைவயது பெண் குழந்தை உட்பட்ட தொற்றாளர்கள் 100 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 52 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் தொற்றாளர்கள் 48பேர் அடையாளம்காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூட முடிவுகளின் அடிப்படையில்,

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர் (10 வயது சிறுவன், 12 வயதுச் சிறுமியும் உள்ளடக்கம்)

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர் (5 வயதுச் சிறுவனும் உள்ளடக்கம்)

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், (ஒன்றரை வயதுப் பெண் குழந்தை, 9, 14 வயதுகளைஉடைய சிறுவர்களும் உள்ளடக்கம்)

மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 04 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர்,

அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆயவுகூட முடிவுகளின் அடிப்படையில்

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேரும்,

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும்,

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும்,

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில்,11 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=50904

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவு – 2,912 தொற்றாளர் நேற்று அடையாளங்காணப்பட்டனர்

 
death-covid-696x348.jpg
 14 Views

இலங்கையில் மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1484 ஆக உயர்ந்துள்ளது. மே 20ஆம் திகதி முதல் நேற்று வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று 4 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில், மே 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் 39 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 20ஆம் திகதி 06 பேரும், 21ஆம் திகதி ஒருவரும், 24ஆம் திகதி ஒருவரும், 25 மற்றும் 26ஆம் திகதிகளில் தலா இருவரும், 27ஆம் திகதி 06பேரும், 28ஆம் திகதி 09 பேரும், 29ஆம் திகதி 06 பேரும், 30ஆம் திகதி 06 பேரும், 31ஆம் திகதி 04 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளையில், இலங்கையில் மேலும் 2 ஆயிரத்து 912 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 354 ஆக எகிறியுள்ளது.

 

https://www.ilakku.org/?p=51101

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் ஒரே நாளில் கொரோனாவால் 68 பேர் பாதிப்பு

 
1-119.jpg
 19 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 68 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 04மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இன்று  மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 68 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 04மரணங்களும் ஏற்பட்டுள்ளது. இவர்களில் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 20பேரும் கோறளைப்பற்று மத்தி,செங்கலடி,ஏறாவூர் சுகாதார பிரிவுகளில் தலா ஏழு பேரும் ஓட்டமாவடி,வவுணதீவு பகுதிகளில் தலா நான்கு பேரும் கிரான்,பட்டிப்பளை சுகாதார பிரிவில் தலா மூன்று பேரும் வாழைச்சேனையில் இரண்டு பேரும் களுவாஞ்சிகுடி,ஆரையம்பதி சுகாதார பிரிவில் தலா ஒருவரும் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களும் ஆறு பேர் சிறைச்சாலையிலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று மரணமடைந்தவர்களில் மூன்று பேர் காத்தான்குடி சுகாதார பிரிவினையும் ஒருவர் ஆரையம்பதி சுகாதார பிரிவினையும் சேர்ந்தவர்களாவர். மூன்றாவது அலை காரணமாக 1807பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 23மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 2790 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 32பேர் மரணமடைந்துள்ளனர். 1808பேர் சுகமடைந்து வீடுசென்றுள்ளதுடன் 951பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். கடந்த ஏழு தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 786 கொரோனா  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஊறணி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதற்கான பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.

தனியார் ஆடைத்தொழிற்சாலையில் இதுவரையில் 218பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார்.

 

https://www.ilakku.org/?p=51312

 

 

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தொற்றாளர் தொகை அதிகரிப்பு – இணுவிலில் ஒரு பகுதியை முடக்குவதற்கு தீர்மானம்

 
%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%
 3 Views

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட இணுவில் கிராமத்தின் ஜே/190 கிராம சேவகர் பகுதியை முடக்குவதற்கு சுகாதார பிரிவு தீர்மானித்துள்ளது.

இந்தப் பகுதியில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையை தொடர்ந்தே அந்தப் பகுதியை முடக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சுகாதாரப் பகுதியினர் யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணிக்கு அறிவித்துள்ளனர். செயலணியின் அனுமதி கிடைத்ததும் இணுவிலின் ஜே/190 கிராம சேவகர் பகுதி முழுமையாக முடக்கப்படும் என்று தெரிய வருகின்றது.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் மூன்று கிராம சேவகர் பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=51345

  • கருத்துக்கள உறவுகள்

14 நாள்கள் நாடு முடங்கியும் வீரியம் தணியாத தொற்று! – அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இன்று!!

நாடு முடக்கப்பட்டு 14 நாள்கள் கடந்துள்ளபோதும், இன்றும் 3 ஆயிரத்து 410 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 254 பேர் கொரோனாத் தொற்றுக்குக்கு இலக்காகியுள்ளனர்.

அவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 281 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 33 ஆயிரத்து 317 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, கொரோனாத் தொற்றால் மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அரச தகவல் திணைக்களத்தால் ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட அதிகூடிய உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

இந்த உயிரிழப்புகளுடன் சேர்த்து இலங்கைளில் இதுவரை ஆயிரத்து 656 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

 

https://newuthayan.com/14-நாள்கள்-நாடு-முடங்கியும/

  • கருத்துக்கள உறவுகள்

நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

இலங்கையில் இதுவரையில் 19 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் இதுவரையில் 19 இலட்சத்து 43 ஆயிரத்து 708 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 22 ஆயிரத்து 907 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை 9 இலட்சத்து 53 ஆயிரத்து 480 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி முதலாவது செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் ஆயிரத்து 697 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரை 3 இலட்சத்து 53 ஆயிரத்து 156 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை 64 ஆயிரத்து 986 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ்செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Untitled-573x600.png

https://athavannews.com/2021/1220709

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாாில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 522 ஆக அதிகரிப்பு

June 6, 2021

மன்னார் மாவட்டத்தில் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 522 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் இன்று (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தினைத் தொிவித்துள்ளா்ா.

மேலும் இந்த மாதம் தற்போது வரை 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் 
கடந்த 3 ஆம் திகதி நானாட்டான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 383 பீ.சி. ஆர். பரிசோதனைகளின் போது மன்னார், அரிப்பு,சாந்திபுரம், வவுனியா,யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் மடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 132 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது  2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவும் தொிவித்த அவா் மேலும் 787 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது.எனவும் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2021/161976/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் அரசடிப் பகுதி முடக்கப்பட்டது!

நல்லூர்-அரசடிப் பகுதியில் 55 பேருக்குக் கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம், நல்லூர்-அரசடி பகுதியில் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 156 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதி கடந்த மாதம் முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் வசிக்கும் 156 பேருக்குப் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1220810

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் சுதத் சமரவீரவை தொற்றுநோய் தடுப்பு பிரிவில் இருந்து நீக்க தீர்மானம்!

June 7, 2021
 
doctor--720x375.jpg


தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீரவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி வேறொருவரை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தரவுகளை மறைக்கின்றார் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை காரணங்காட்டி வைத்தியர் சுதத் சமரவீரவை பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கொவிட் -19 வைரஸ் பரவல் குறித்த உண்மையான தரவுகள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை எனவும், தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர இந்த தரவுகளை மறைக்கின்றார் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரச மருத்துவ தொழில்நுட்ப நிபுணர்களின் சங்கம் உள்ளிட்ட பலர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக செயலணிக்கூட்டங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், கொவிட் செயலணிக் கூட்டத்தில் நேரடியான வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டில் வைரஸ் பரவல் அதிகரிக்க தீர்மானம் எடுக்கும் தரப்பினர் தமது கடமை பொறுப்பில் இருந்து தவறியமையே காரணமாகும் எனவும் மாறாக மக்களை குறை கூற முடியாது. குறிப்பாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர பொறுப்புக்கூறியாக வேண்டும் எனவும் இவர்கள் நேரடியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் கொவிட் செயலணிக் கூட்டத்தில் சகல வைத்திய நிபுணர்களும் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீரவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு தகுதியான வேறொருவரை அப்பதவிக்கு நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் மூலமாக அறிந்துகொள்ள முடிந்துள்ளது.

எனினும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீரவை முழுமையாக ஓரங்கட்டாது அவரை வேறொரு துறைக்கு மாற்றவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
 

http://www.battinews.com/2021/06/blog-post_619.html

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்கியது!

கொரோனா தொற்றினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இந்த மரணங்கள் கடந்த மே 17ஆம் திகதி முதல் ஜூன் ஆறாம் திகதிவரை நிகழ்ந்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில், 26 ஆண்களும் 21 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 789ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Sri-Lanka-Coronavirus-Pandemic-Update-June-2nd-2021-1-3.jpg

Sri-Lanka-Coronavirus-Pandemic-Update-June-2nd-2021-2-4.jpg

https://athavannews.com/2021/1221105

  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் மாதம் முழுதும் இலங்கை முடக்கப்படுமா? 11 ஆம் திகதி இறுதி முடிவு

 
Curfew-696x377.jpg
 10 Views

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடையை நீடிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதி இறுதி முடிவு எடுக் கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் செயலணிக் கூட்டத்தின்போதே இது குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூன் மாதம் முழுவதும் பயணத் தடையை அமுல்படுத்துமாறும், குறைந்தபட்சம் ஜூன் 21 ஆம் திகதி வரையாவது கடும் கட்டுப்பாடுகள் அவசியம் என சுகாதார தரப்புகள் கோரிக்கை விடுத் துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பயணத்தடை நீடிப்பு குறித்து அரச தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 11 ஆம் திகதியன்றே அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 

https://www.ilakku.org/?p=51799

  • கருத்துக்கள உறவுகள்

சமூக ஊடகங்களை சி.ஐ.டி. கண்காணிக்கும்! விஷேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது

social-media-696x348.png
 15 Views

இலங்கையில் சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான போலியான செய்திகளைப் பரப்புபவர்கள் தொடர்பில் கண்காணிக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது எனப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலியான செய்திகளால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று, தடுப்பூசித் திட்டம் மற்றும் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் இவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள் பாதித்துள்ளன எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

“போலிச் செய்திகளும் தவறான தகவல்களும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழு இது போன்ற செய்திகளைக் கண்டுபிடித்து அதனைப் பதிவிடுபவர்கள் மற்றும் பகிர்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்” எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/?p=51804

 
  • கருத்துக்கள உறவுகள்

முதன்முறையாக 50-ஐத் தாண்டிய கொரோனா மரணங்கள்

கொரோனாவால் மேலும் 54 பேர் உயிரிழந்ததை இலங்கை இன்று பதிவு செய்துள்ளது. அந்தவகையில், ஒரேநாளில் பதிவான அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் இதுவாகும்.

அந்தவகையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,843ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/மதனமறயக-50-ஐத-தணடய-கரன-மரணஙகள/175-273696

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒரே நாளில் வெளியிடப்பட்ட அதிகளவிலான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் வெளியிடப்பட்ட அதிகளவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் இதுவாகும்.

மே 17 ஆம் திகதி முதல் ஜுன் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,910 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை மேலும் 2,716 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 213,396 ஆக உயர்வடைந்துள்ளது.
-(3)

 

http://www.samakalam.com/இலங்கையில்-ஒரே-நாளில்-வெ/

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில்10,842க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

 
IMG-20210610-WA0014-1.jpg
 27 Views

கோவிட் – 19  3வது அலையின் பின்னராக இது வரை கிழக்கு மாகாணத்தில் 10,842க்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளங் காணப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார்  ஏ.ஆர்.எம்.தௌபீக் இன்று (10) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது  இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் அதிக அளாவிலான தொற்றாளார்களாக 166, திருகோணமலை மாவட்டத்தில் 52 நோய்த்தொற்றாளார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளாதோடு அம்பாறை சுகாதார அதிகாரி பிரிவில் 03, கல்முனையில் 17 தொற்றாளார்களும் அடங்கலாக 238 நோய் தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுள்ளனர்.

கடந்த 7 நாட்களில் 1228 நோயளர்கள் பதிவாகியுள்ளனர். ஆகவே இந்த வாரம் நோயாளர்களது அதிகரிப்பை அவதானிக்க கூடியதாக இருப்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்

மேலும் கிழக்கில் இதுவரை 200 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் கனிசமான அளவு 46 மரணங்களும் இவ்வாரத்தில் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.ilakku.org/?p=52003

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட் தொற்றால் இலங்கையில் ஒரே நாளில் 101 உயிரிழப்புகள் உறுதி

கொவிட்-19 தொற்று காரணமாக நாட்டில் மேலும் 101 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளமை நேற்யை தினம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொவிட்-19 தொற்று உயிரிழப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

இதனால் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த தொகையும் இலங்கையில் 2,011 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை நேற்று 2,738 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 216,134 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த 1,811 நபர்கள் வைத்தியசாலையிலிருந்து நேற்றைய தினம் வெளியேற்றப்பட்டுள்ளமையினால் குணமடைந்தோரின் மொத்த தொக‍ை 182,238 ஆக அதிகரித்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 31,885 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேகத்தில் 1,300 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.
 

 

https://www.virakesari.lk/article/107333

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.