Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனா பீதி; அநுராதபுர சிறைச்சாலை கைதிகளால் உடைப்பு! துப்பாக்கி பிரயோகம்

Featured Replies

அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் முரண்பட்டுக்கொண்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சிறைச்சாலையில் கொரனா காய்ச்சல் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதிகள் சிறை உடைப்பு முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அநுராதபுர சிறைச்சாலையில், சற்றுப் பதற்றமான நிலை நிலவுவதாகவும். அரசியல் கைதிகளின் சிறையையும் ஆயுள் கைதிகள் உடைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் துப்பாக்கி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/139497

  • தொடங்கியவர்

அனுராதபுரம் சிறைச்சாலையில் மோதல் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

அனுராதபுரம்-சிறைச்சாலை.jpg

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கைதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

இதன் பின்னர் சிறையில் உள்ள கைதிகள் தம்மை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி அதிகாரிகளுடன் முரண்பட்டநிலையில் முரண்பாடு உச்சம் பெற்றுள்ளது.

ஆயுள் கைதிகள் அரசியல் கைதிகளுடன் சிறை வைத்திருந்த நிலையில் ஆயுள் கைதிகள் அவர்களை அடைத்து வைத்த சிறையை உடைத்து சிறைச்சாலை உள் வளாகப்பகுதிக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து கைதிகள் சிறையின் முன் வாயிலை உடைக்க முயற்சித்த நிலையில் அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் நிலைமை கட்டுக்கடங்காமையால் கைதிகளை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மூவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை அனுராதபுரம் சிறையில் 11 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அனுராதபுரம்-சிறைச்சாலைய/

இந்த சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் உட்பட பல தமிழர்களும் சிங்கள அரசால் சிறை வைக்கப்பட்டு உள்ளார்கள் என எண்ணுகின்றேன்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் களேபரம்- துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

In அனுராதபுரம்     March 21, 2020 2:13 pm GMT     0 Comments     1857     by : Benitlas

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அங்கு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் 3 கைதிகள் காயமடைந்துள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் என சந்தேகிக்கும் கைதி ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறைச்சாலையில் இனங்காணப்பட்டு அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து சிறைக் கைதிகள் இன்று அமைதியற்ற விதத்தில் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

http://athavannews.com/அனுராதபுரம்-சிறைச்சாலைய/

அநுராதபுரம் சிறை மோதல்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த கோரிக்கை!

In அனுராதபுரம்     March 21, 2020 3:04 pm GMT     0 Comments     1015     by : Litharsan

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பாதுகாப்புக் கோரி ஏற்பட்டுத்தப்பட்ட முரண்பாட்டை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளைப் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவிக்கையில், “இன்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சில கைதிகள் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏனைய கைதிகள் தமக்கான மருத்துவப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தம்மை விடுவிக்குமாறு கோரி சிறைக்காவலர்களுடன் முரண்பட்டதாக அறியமுடிகின்றது.

இதன் காரணத்தினால் கைதிகள் சிறைக் கூடங்களின் கதவுகளை உடைத்து பிரதான கதவினை உடைக்க முற்பட்டபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்காரணமாக மூன்று கைதிகள் படுகாயமடைந்த நிலையில் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சூழலில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உடனடியாக உறுதிப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பை வழங்க ஆவன செய்யவேண்டும்.

அத்துடன் சிறைச்சாலைக்குள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்படுவதால் அங்குள்ள கைதிகள் அனைவரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள கைதிகள் அனைவரையும் மனிதர்களாக எண்ணி மனிதாபிமானமாக இந்த அரசாங்கம் நடத்த வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/அநுராதபுரம்-சிறை-மோதல்-த/

அனுராதபுர சிறைச்சாலை கலவரம்: 3 கைதிகள் கொலை! 11 தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சி?

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கைதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

இதன் பின்னர் சிறையில் உள்ள கைதிகள் தம்மை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி அதிகாரிகளுடன் முரண்பட்டநிலையில் முரண்பாடு உச்சம் பெற்றுள்ளது.

ஆயுள் கைதிகள் அரசியல் கைதிகளுடன் சிறை வைத்திருந்த நிலையில் ஆயுள் கைதிகள் அவர்களை அடைத்து வைத்த சிறையை உடைத்து சிறைச்சாலை உள் வளாகப்பகுதிக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து கைதிகள் சிறையின் முன் வாயிலை உடைக்க முயற்சித்த நிலையில் அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் நிலைமை கட்டுக்கடங்காமையால் கைதிகளை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மூன்று சிங்கள கைதிகள் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அனுராதபுரம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகளையும் வெளியே ஓடுமாறு கேட்டுக்கொண்டதாகவும்அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தெரியவருகின்றது.

அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக தகவல்கள் விரைவில்..

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

https://www.ibctamil.com/srilanka/80/139497?ref=imp-news

Edited by Rajesh

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது -அமைச்சர் டக்ளஸ்

In அனுராதபுரம்     March 21, 2020 3:58 pm GMT     0 Comments     1028     by : Jeyachandran Vithushan

Anuradhapura-Prison.jpg

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள 4 பேர் இன்றையதினம் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, குறித்த கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக போராட்டம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிலைமை தொடர்பாகவும் அவர்களது பாதுகாப்பு தொடர்பாகவும் உறுதிசெய்து தருமாறு அவர்களது உறவுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த சிறைச்சாலை உயரதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி நிலைமைகள் தொடர்பாக அவர் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டதுடன் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/தமிழ்-அரசியல்-கைதிகளின்-3/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது -அமைச்சர் டக்ளஸ்

In அனுராதபுரம்     March 21, 2020 3:58 pm GMT     0 Comments     1028     by : Jeyachandran Vithushan

Anuradhapura-Prison.jpg

ஈழத்து MGR வாழ்க ....

அமைச்சர் :ஹலோ அனுராதபுர பிரிசிசன்
சிறைச்சாலை அதிகாரி: ஒவ் ஹவ்த கத்தாகரனே.
அமைச்சர் : மினிஸ்டர்  டக்கிளஸ்  கத்தாகரன்னே
சிறைச்சாலை அதிகாரி: ஓயா ...ஒயா ஒயா...
அமைச்சர்:(கோபமடைந்து தமிழில்)ஐக்கிய தேசிய கட்சியின் காலத்தில் கூனிகுறுகி ஒதுங்கி நின்ற டக்கிளஸ் இல்ல இது மகிந்தா வின் காலத்தில் எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்திருக்கும் மினிஸ்டர் தக்கிளஸ்.....ஓங்கி அடிச்சேன் என்றால் ஒன்டர் தொன் வெயிட்......

டக்ளஸ் தமிழ் கைதிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லை விடுதலை செய்ய வேண்டும். 

அது  சரி,கூட்டமைப்பினரின் ' தயார் படுத்தப்பட்ட அறிக்கையை' காணவில்லை?? 

7 minutes ago, ampanai said:

அது  சரி,கூட்டமைப்பினரின் ' தயார் படுத்தப்பட்ட அறிக்கையை' காணவில்லை?? 

சுமந்திரனுக்கு நியூஸ் போகலை போல.
அல்லது அவர் அம்பிகாவா நளினியா என்ட குழப்பத்தில இருந்து இன்னும் விடுபடேல்ல போல.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட சார்ள்ஸ் நிர்மலநாதன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்றைய தினம் நேரடியாக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்றைய தினம் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக சிறைச்சாலையில் இருக்கும் 11 அரசியல் கைதிகளின் பெற்றோர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன், குறித்த சிறைச்சாலையில் இருக்கும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக சிறைச்சாலை அத்தியட்சகருடன் கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் 11 அரசியல் கைதிகளும் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

என்ற போதும் சிறைச்சாலையில் பாதுகாப்பு இல்லையெனின் உடனடியாக மகசின் சிறைச்சாலைக்கோ அல்லது யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கோ மாற்றும்படி சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரியுள்ளார்.

இதற்கு சிறைச்சாலை அத்தியட்சகர் பதிலளிக்கையில், இங்கு அவர்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவும், பாரதூரமான நிலைகள் ஏற்படுமாயின் அது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகம் பூராகவும் கொரோனா தொற்றின் காரணமாக சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் அச்சம் அடைந்துள்ளனர். அரசாங்கம் சிறைக்கைதிகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.

கைதிகள் எவருக்கேனும் கொரோனா தொற்று எற்படும் என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என சாள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டார்.

மேலும், உடனடியாக சிறைச்சாலை ஆணையாளருடன் தொலைபேசியில் உரையாடி 11 அரசியல் கைதிகளின் பாதுகாப்பின்மை தொடர்பாக விளங்கப்படுத்தி அவர்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து உடனடியாக 11 தமிழ் அரசியல் கைதிகளையும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/241599?ref=home-feed

On 3/22/2020 at 3:38 AM, ampanai said:

டக்ளஸ் தமிழ் கைதிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லை விடுதலை செய்ய வேண்டும். 

அது  சரி,கூட்டமைப்பினரின் ' தயார் படுத்தப்பட்ட அறிக்கையை' காணவில்லை?? 

அடைக்கலம் ஐயா டக்ளசுக்கு முதல் அறிக்கை விட்டிட்டார்।தேர்தல் காலம் இல்லையா?

கடந்த தேர்தலுக்கு பிறகு அடைக்கலம் செல்வநாதன், டக்ளசுக்கு இரண்டு பேரையும் மக்கள் பக்கம் பெரிசா காணகிடைக்கேல்லை.

ஒருத்தர் அமைச்சு பதவியை வைச்சுக்கொண்டு மட்டும் அடாவடி அரசியல் செய்ய தெரிஞ்சவர்.
மற்றவர் தன்ர மகனைத் தவிர வாக்களிச்ச மக்களை மறந்து அரசு கொடுத்த சுகபோகங்களை அனுபவிச்சவர்.

இதுல இன்னொருவர், சார்ள்ஸ் சத்தமில்லாம ஊரடங்கு வேளையிலும் நேரடியா அனுராதபுரம் போய் கைதிகளை பாக்க முயற்சித்திருக்கார்.

இதுல சார்ள்ஸ் நிர்மலநாதன் கடந்த தேர்தலுக்கு பிறகு அடிக்கடி மக்களை சந்திச்சதும் மட்டுமல்ல கொஞ்சம் ஆக்கபூர்வமான காரியங்களிலும் ஈடுபட்டவர். அடக்குமுறைகளுக்கு எதிரா குரல் கொடுத்து வந்தவர். அதால, உண்மைல சம்பந்தன்-சுமந்திரன் கோஷ்டிக்கு கொஞ்சமும் பிடிக்காத ஆள் சார்ள்ஸ் நிர்மலநாதன். ஆனா கடந்த முறை தமிழ் எம்பிகளில அதிக வாக்கு பெற்றவர் சார்ள்ஸ் நிர்மலநாதன் என்கிறதால, சம்பந்தன்-சுமந்திரன் கோஷ்டிக்கு அவரை விலக்க முடியாம இருக்கு.

நான் அறிஞ்ச வரையில கூட்டமைப்புக்குள்ள இப்ப இருக்கிற ஒரேயொரு நல்ல மனுஷன் சார்ள்ஸ் நிர்மலநாதன் தான்.

  • தொடங்கியவர்

அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கொழும்பிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் மாற்றப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்?

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளின் அடிப்படையில் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து சில தமிழ் அரசியல் கைதிகள் வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் பத்து தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மூவர் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக சிறைச்சாலையில் இருக்கும் 11 அரசியல் கைதிகளின் பெற்றோர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்றைய தினம் நேரடியாக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன், குறித்த சிறைச்சாலையில் இருக்கும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக சிறைச்சாலை அத்தியட்சகருடன் கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் 11 அரசியல் கைதிகளும் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

என்ற போதும் சிறைச்சாலையில் பாதுகாப்பு இல்லையெனின் உடனடியாக மகசின் சிறைச்சாலைக்கோ அல்லது யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கோ மாற்றும்படி சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரியுள்ளார்.

இதற்கு சிறைச்சாலை அத்தியட்சகர் பதிலளிக்கையில், இங்கு அவர்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவும், பாரதூரமான நிலைகள் ஏற்படுமாயின் அது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகம் பூராகவும் கொரோனா தொற்றின் காரணமாக சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் அச்சம் அடைந்துள்ளனர். அரசாங்கம் சிறைக்கைதிகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.

கைதிகள் எவருக்கேனும் கொரோனா தொற்று எற்படும் என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என சாள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டார்.

மேலும், உடனடியாக சிறைச்சாலை ஆணையாளருடன் தொலைபேசியில் உரையாடி 11 அரசியல் கைதிகளின் பாதுகாப்பின்மை தொடர்பாக விளங்கப்படுத்தி அவர்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து உடனடியாக 11 தமிழ் அரசியல் கைதிகளையும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/community/01/241679?ref=home-feed

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.