Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அச்சுவேலியைச் சேர்ந்தவர் கொரோனாவால் பிரான்ஸில் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மற்றொரு இலங்கைத் தமிழர் பிரான்ஸில் கொரோனாவினால் பலி

 

978-11.jpgஉலகை உலுக்கிவரும் கொரோனா கோரத் தாண்டவத்தால் புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழ்ந்து வந்த மற்றுமொரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சங்கானையை பிறப்பிடமாகவும் பிரான்ஸின் வில்னெவ் சென் ஜோர்ஜ் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் நவரத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தெய்வேந்திரன் நவரத்தினம் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரான்ஸ், இத்தாலி, கனடா, பிரித்தானியா நாடுகளில் தமிழ் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் மட்டும் 30 க்கும் அதிகமான தமிழர்கள் கொரோனாவினால் மரணமடைந்தமடைந்திருக்கின்றார்கள்.

http://thinakkural.lk/article/38862

 

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் புலம்பெயர் தம்பதியர் கொரோனாவுக்கு பலி

 

புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவந்த கணவனும் மனைவியும் கொரோனாவுக்கு பலியான பரிதாபகரமான சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் தீவுகம் புங்குடுதீவைச் சேர்ந்த சோதி என்றழைக்கப்படும் நாகராஜா தேசிங்குராஜா என்பவரும் நெடுந்தீவைச் சேர்ந்த அவருடைய துணைவியார் புஸ்பராணி நாகராஜா கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர்.

இவர்களில் மனைவி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இன்று கணவர உயிரிழந்துள்ளார் என்று கனடாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image may contain: one or more people and people sitting

இப்படி பல எம்மவர்களின் இழப்புகள்  மிகுந்த மன வேதனை அளிக்கின்றது. எல்லோரின் ஆத்மாக்களும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • தொடங்கியவர்

அனலைதீவு ....ஐயனார் கோவிலடி ஆனந்தன் மற்றும் உலகன். கொரோனா கொடிய நோயால் எம் ஊரவர்களின் இழப்புகளும் தொடருகின்றன .ஆழ்ந்த வருத்தங்களுடன் உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம் .ஒரே குடும்பத்தில் (LONDON)அண்ணன் தம்பி இழப்பு மிக மிக கொடுமை😢

nirmala.ratnasabapathy?__tn__=,dC-R-R&ei

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2020 at 04:42, உடையார் said:

மற்றொரு இலங்கைத் தமிழர் பிரான்ஸில் கொரோனாவினால் பலி

 

978-11.jpgஉலகை உலுக்கிவரும் கொரோனா கோரத் தாண்டவத்தால் புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழ்ந்து வந்த மற்றுமொரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சங்கானையை பிறப்பிடமாகவும் பிரான்ஸின் வில்னெவ் சென் ஜோர்ஜ் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் நவரத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தெய்வேந்திரன் நவரத்தினம் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரான்ஸ், இத்தாலி, கனடா, பிரித்தானியா நாடுகளில் தமிழ் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் மட்டும் 30 க்கும் அதிகமான தமிழர்கள் கொரோனாவினால் மரணமடைந்தமடைந்திருக்கின்றார்கள்.

http://thinakkural.lk/article/38862

 

“அப்பா இனி வரமாட்டார்” 3 பெண் குழந்தைகளின் அழுகுரலால் நிரம்பியது பிரான்ஸ் மருத்துவமனை

"மருத்துவமனையில் அதிர்ச்சியான செய்தியை மருத்துவர்கள் கூறுகின்றார்கள், மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள், அப்பா இனி திரும்பி வரமாட்டார் "

ஜந்துபேர் அடங்கிய குடும்பத்தில் குடும்பத்தலைவனுக்கு திடீரென காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டது. அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு அறைக்குள் ஒருகிழமையாக மருந்து எடுத்துக் கொண்டு தனிமையில் இருக்கிறார்.


அவருக்கு கதவைத்திறந்து சாப்பாடு மனைவியினால் மூன்று வேளையும் வழங்கப்படும். அப்பொழுது பிள்ளைகள் கதவின் இடைவெளிஊடாக ஏக்கத்துடன் அப்பாவைப் பாப்பார்கள்.

மேலும் அவருக்கு நிலமை மோசமடைய உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு எடுத்து நிலைமையை கூறினார்கள். உடனே அம்புலன்ஸ் அழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

(29 .03 2020) மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அப்பொழுது அவருக்கோ மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ தெரியாது இனி திரும்பி வீட்ட வரமாட்டார் என்று.

 

மருத்துவமனையில் நிலமைமோசமடைந்தது அதனைத் தொடர்ந்து அவரது மனைவிக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பெடுத்து அழைத்து உடனே வரச்சொன்னார்கள்.

நள்ளிரவு இரண்டு மணிக்கு மருத்துவமனைக்கு சென்ற பொழுது கணவரைக் காட்டினார்கள். நிலைமை மோசமாக இருந்தது. உங்கள் உறவினர்களை அழைத்து வருமாறு கூறினார்கள். மதியம் உறவினர்கள் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டுபோனார்கள்.

"நீங்கள் அப்பாவுக்கு ( ஒவ்வா )சொல்ல வந்திருக்கிறீர்கள். அப்பாவை வழியனுப்ப வந்திருக்கிறீர்கள். அப்பாவுக்கு நீங்கள் என்ன கொடுத்துவிட போகின்றீர்கள்" பிள்ளைகளை தனியாக அறை ஒன்றினுள் அழைத்து பிள்ளைகளோடு மூன்று மனோதத்துவ வைத்தியரகள் அவர்களுக்கு தந்தையின் நிலமையை விளக்கினாரகள்.

"உங்கள்அப்பா திரும்பி வரமாட்டார் என்றும், நீங்கள் நல்லபடியாக வாழவேண்டும் என்றும் அப்பாவுக்கு ஏதும் கொடுத்து விடப்போறீங்களா என்று கேட்டாரகள்"

மூன்று பிள்ளைகளும் தங்கள் கைப்பட ஓவியம் வரைந்து கொடுத்தார்கள். அந்த ஓவியம் அப்பா, அம்மா தங்களுடன் நிற்பது போன்றும் மற்றும் அரண்மனை போன்றும், தங்கள் வீடுபோன்றும் வரைந்து கொடுத்தார்கள். பிள்ளைகள் தங்கள் அப்பாவரமாட்டார் என்று தெரிந்து கொள்ளமுடியாத வயதினர்கள் ஆவர்.

அப்பாவைப் பார்ப்பதற்காக மருத்துவர்கள் அழைத்துச் செல்கின்றார்கள். முழுமையாக மூடப்பட்ட சீருடை அணிந்துகொண்டு கண்ணால் மட்டும் பார்க்க முடியும் உள்ளே செல்கிறார்கள். படுக்கையில் ஒரு நபர் முகங்குப்புற படுத்திருந்தார். இதுதான் உங்கள் அப்பா பாருங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். குழந்தைகள் பார்த்துவிட்டு, இது எங்கள் அப்பா இல்லை, இது எங்கள் அப்பா இல்லை என்று சத்தமாக கத்தினார்கள் குழந்தைகள். மருத்துவமனையே அதிர்ந்தது.

மருத்துவமனையில் இருந்து அப்பா கோலமே மாறிவிட்டார். குழந்தைகளின் நினைவெல்லாம் அப்பா வீட்டில் இருந்து போகும் போதும் புன்னகை முகத்தோடு நடந்து போயிருந்த அப்பா அங்கே தங்களை கண்டவுடன் கட்டி அணைப்பார் என்ற எதிர்பார்ப்போடு குழந்தைகள் நுழைந்தார்கள்.

அங்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. அவர்கள் எதிர்பார்த்து போன அப்பா அங்கு இல்லை. அய்யோ அப்பா எங்கள் அப்பா எங்கே இவர் எங்கள் அப்பா இல்லை.
ஒருபக்கம் உறவினர்கள் கண்ணீரோடு. எதிர்முனையில் மனைவி கண்ணீரோடு கணவர் திரும்பி வரமாட்டார். மூன்று குழந்தைகளோடும் நான் என்ன செய்வேன் எப்படி என்னால் வழியனுப்பி வைக்க முடியும் ஐயோ. மூச்சுத்திணறி அழுது கொண்டே இருக்கின்றார்.

மருத்துவர்கள் வாயடைத்துப்போய் நிற்கின்றார்கள், ஐயோ நான் எப்படி உங்களை வழியனுப்பி வைப்பேன், கண்ணீரோடு மனைவி மயக்கம் போட்டு விழுந்தார். அம்மா, அம்மா என்று குழந்தைகள், இக்கட்டான சூழ்நிலையில் உறவினர்கள், வைத்தியர்களினதும் இதயத்தை நொருக்கியது.

இலங்கையில் நடந்த யுத்தத்தில் தப்பித்துக் கொள்வதற்காக புலம்பெயா்ந்து பிரான்ஸ் நாட்டில் குடிபுகுந்த அந்த ஜீவன், கொரோனா எனும் கோரப் பிடிக்குள் சிக்கி உயிரிழந்தது.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் நவரத்தினம் (வயது 52) கடந்த (15.04.2020) புதன்கிழமை மாலை உயிரிழந்தார் .

இவா் மட்டுமல்ல கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் உயிரிழந்த இலட்சக் கணக்கானவா்களின் பின்னால் இவா்களைப் போன்றதொரு பாசப் போராட்டம் நிறைந்த கதை நிச்சயம் இருக்கும்.

No photo description available.

FB

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றால் பிரித்தானியாவில் சாவடைந்த அமரர். திரு. சுந்தரலிங்கம் மெய்யழகன் (மெய்க்குட்டி) அவரது இறுதி வணக்க நிகழ்வு பிரித்தானியவில்நடைபெற்றது.

 

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியன் வாசிக்கவே மனம் கனக்கின்றது,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, உடையார் said:

அகஸ்தியன் வாசிக்கவே மனம் கனக்கின்றது,

இப்படி தினம் தினம் வரும் இளம் இழப்புகள் சொல்லோணா துயரத்தை தருகிறது உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Ahasthiyan said:

இப்படி தினம் தினம் வரும் இளம் இழப்புகள் சொல்லோணா துயரத்தை தருகிறது உடையார்

 அகஸ்தியன் இந்த செய்தி தினக்குரலிலும் வந்துள்ளது,  உறவுகள் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் 

 

அப்பா இனி திரும்பி வரமாட்டார்

கொரானா வைரசுக்கு பிரான்ஸில் பலியான யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்த தெய்வேந்திரன் நவரட்ணத்தின் மனதை உருக்கும் இறுதித் தருணங்கள்

மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் அப்பா இனி திரும்பி வரமாட்டார் …

மருத்துவமனையில் இதனைச் சொன்ன போது மூன்று குழந்தைகளுக்கும் அதனை நம்ப முடியவில்லை.

ஜந்து பேர் அடங்கிய குடும்பத்தில் குடும்பத் தலைவனுக்கு திடீரென காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டது. அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு ஒரு அறைக்குள் ஒரு கிழமையாக மருந்து எடுத்துக் கொண்டு தனிமையில் இருந்தார்.

அவருக்கு கதவைத் திறந்து சாப்பாடு மனைவியினால் மூன்று வேளையும் வழங்கப்படும். அப்பொழுது பிள்ளைகள் கதவின் இடைவெளி ஊடாக ஏக்கத்துடன் அப்பாவைப் பாப்பார்கள்.

மேலும் அவருக்கு நிலமை மோசமடைய உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு எடுத்து நிலைமையை கூறினார் மனைவி. உடனே அம்புலன்ஸ் அழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். இது நடந்தது மார்ச் 29.

மருத்துவமனையில் அப்பாவை அனுமதித்தார்கள்.  அப்பொழுது அவருக்கோ மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ தெரியாது இனி அவர் திரும்பி வீட்டுக்கு வரமாட்டார் என்று. மருத்துவமனையில் அவரது நிலமை மேலும் மோசமடைந்தது.

அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் அவரது மனைவிக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பெடுத்து உடனே வரச்சொன்னார்கள். நள்ளிரவு இரண்டு மணிக்கு மருத்துவமனைக்கு சென்ற பொழுது கணவரைக் காட்டினார்கள் நிலைமை மோசமாக இருந்தது.

உறவினர்களை அழைத்து வருமாறு மருத்துவமனையில் கூறினார்கள். மறுநாள் மதியம் உறவினர்கள் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டுபோனார்கள்.

“நீங்கள் அப்பாவுக்கு விடை கொடுக்க வந்திருக்கிறீர்கள். அப்பாவை வழியனுப்ப வந்திருக்கிறீர்கள் அப்பாவுக்கு நீங்கள் என்ன கொடுத்துவிட போகின்றீர்கள்?”

 

பிள்ளைகளை தனியாக அறை ஒன்றினுள் அழைத்து பிள்ளைகளோடு மூன்று மனோதத்துவ வைத்தியரகள் அவர்களுக்கு தகப்பனின் நிலமையை விளக்கிய போது இவ்வாறு கேட்டார்கள். “உங்கள்அப்பா திரும்பி வரமாட்டார்” என்றும், நீங்கள் நல்லபடியாக வாழவேண்டும் என்றும் அப்பாவுக்கு ஏதும் கொடுத்து விடப்போறீங்களா? என்று கேட்டாரகள்.

990-1-5.jpgமூன்று பிள்ளைகளும் தங்கள் கைப்பட ஓவியம் வரைந்து கொடுத்தார்கள். அந்த ஓவியம் அப்பா அம்மா தங்களுடன் நிற்பது போன்றும் மற்றும் அரண்மனை போன்றும் தங்கள் வீடு போன்றும் வரைந்து கொடுத்தார்கள் பிள்ளைகள். தங்கள் அப்பா இனிமேல் வரமாட்டார் என்று தெரிந்து கொள்ளமுடியாத வயதினர்கள் அவர்கள்.

அப்பாவைப் பார்ப்பதற்காக அவர்களை மருத்துவர்கள் அழைத்துச் செல்கின்றார்கள். முழுமையாக மூடப்பட்ட சீருடை கவசங்களை அணிந்துகொண்டு கண்ணால் மட்டும் பார்க்க முடியும். உள்ளே செல்கிறார்கள்.

 

படுக்கையில் ஒரு நபர் முகங்குப்புற படுத்திருந்தார். இதுதான் உங்கள் அப்பா பாருங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். குழந்தைகள் பார்த்துவிட்டு, “இது எங்கள் அப்பா இல்லை இது எங்கள் அப்பா இல்லை” என்று சத்தமாக கத்தினார்கள்.

மருத்துவமனையே அதிர்ந்தது. மருத்துவமனையில் இருந்த அப்பா கோலமே மாறிவிட்டார். குழந்தைகளின் நினைவுகளில் வீட்டில் இருந்து போகும் போதும் புன்னகை முகத்தோடு நடந்து போன அப்பாதான் இருந்தது. அங்கே தங்களை கண்டவுடன் கட்டி அணைப்பார் என்ற எதிர்பார்ப்போடு குழந்தைகள் நுழைந்தார்கள். அங்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. அவர்கள் எதிர்பார்த்து போன அப்பா அங்கு இல்லை.

“ஐயோ அப்பா எங்கள் அப்பா எங்கே? இவர் எங்கள் அப்பா இல்லை” என்பது அவர்களுடைய கூக்குரலாக இருந்தது.

ஒருபக்கம் உறவினர்கள் கண்ணீரோடு. எதிர்முனையில் மனைவி கண்ணீரோடு. கணவர் திரும்பி வரமாட்டார் என்ற ஆதங்கத்துடன் மூன்று குழந்தைகளோடும் கேள்விக்குறியோடு தாய். “நான் என்ன செய்வேன் எப்படி என்னால் வழியனுப்பி வைக்க முடியும் ஐயோ” என அழுகுரல் மனைவியிடம்.

மூச்சுத்திணறி அழுது கொண்டே இருக்கின்றார். மருத்துவர்கள் வாயடைத்துப்போய் நிற்கின்றார்கள்.

ஐயோ நான் எப்படி உங்களை வழியனுப்பி வைப்பேன் கண்ணீரோடு மனைவி மயக்கம் போட்டு விழுந்தார்.

“அம்மா! அம்மா!” என்று குழந்தைகள். இக்கட்டான சூழ்நிலையில் உறவினர்கள் என்ன செய்வது என்று தெரியாத திண்டாட்டம்.

வைத்தியர்களினதும் இதயத்தை நொருக்கியது.

இலங்கையிலிருந்து போருக்குத் தப்பி பிரான்ஸ் வந்து கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி ஏப்ரல் 15 ஆம் திகதி உயிரிழந்தார் தெய்வேந்திரன் நவரட்ணம்

http://thinakkural.lk/article/39029

 

 

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.