கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் பதியப்பட்டது April 14, 2020 கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது April 14, 2020 (edited) இன்று தமிழ் புத்தாண்டு தினம்..! 'நம்ம யாழ் உறவுகளுக்கு ஏதாவது தெரிஞ்ச விசயத்தை பகிர்ந்தால் நல்லது' என தோன்றியது.. பெரும்பாலும் எல்லா திரிகளிலும் பங்களிப்பு செய்தாகிவிட்டது..மிச்சம் இருப்பது இரண்டே வகைதான்.. சமையல் கவிதை சமையலில் பல விற்பன்னர்கள் இங்கே இருந்தாலும், யாரும் ரத்தின சுருக்கமாக 'வெந்நீர் வைப்பது எப்படி..?' ன்னு பதிவு செய்யவில்லை..! 'அந்த குறையை ஏன் விட்டு வைப்பானேன்..?' என நான் முன்வந்துள்ளேன்.. கிழேயுள்ள காணொளியில் உள்ளது போல, ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பில் மிதமான சூட்டில் சூடேற்றவும்.. சிறு சிறு குமிழ்கள் வந்து தண்ணீர் கொதிக்க துவக்கும்.. நன்றாக ஆவி பறக்கும்வரை காத்திருந்துவிட்டு கரண்டியால் தண்ணீரை கிளறிவிடவும்.. பின் அடுப்பின் நெருப்பை நிறுத்தி மூடிவிட்டு பாத்திரத்தை தட்டால் மூடி வைக்கவும். ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால் குடிக்க வெதுவெதுப்பான சுவையான வெந்நீர் ரெடி..! Edited April 14, 2020 by ராசவன்னியன் 3 1
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted April 14, 2020 கருத்துக்கள உறவுகள் Posted April 14, 2020 2 hours ago, ராசவன்னியன் said: வெந்நீர் ரெடி..! சார்! இதை எங்கை பழகினனீங்கள்? ஆராள் இதுக்கு குருவானவர்? செய்முறைக்கு நன்றி சார்.😎 1
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted April 14, 2020 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Posted April 14, 2020 1 hour ago, குமாரசாமி said: சார்! இதை எங்கை பழகினனீங்கள்? ஆராள் இதுக்கு குருவானவர்..? இது பரம்பரை பரம்பரையாய் தலைமுறைகள் கடந்து வந்த பாட்டி சமையல் முறை. கிராமத்தில் என் பக்கத்து வீட்டு பாட்டி எனக்கு கற்று கொடுத்த ரகசியம். இந்த சமையல் முறையை செய்து பார்த்துவிட்டு நீங்களும் படம் போடுங்கள் ஐயா..! 😎 1 hour ago, குமாரசாமி said: செய்முறைக்கு நன்றி சார்.😎 You are welcome, Mr. Ku.Sa..!
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted April 14, 2020 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Posted April 14, 2020 அடுத்து வருவது.. கவிதை..!
கருத்துக்கள உறவுகள் Paanch Posted April 15, 2020 கருத்துக்கள உறவுகள் Posted April 15, 2020 23 hours ago, ராசவன்னியன் said: பாட்டியின் காலமல்ல, அம்மாவின் காலத்திலும் அடுப்புமூட்டிக் குடிப்பதற்கு கேற்றல் (kettel) பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைப்பார்கள், குளிப்பதற்கு சற்றுப் பெரிய பாத்திரத்தில் வைப்பார்கள்.
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted April 15, 2020 கருத்துக்கள உறவுகள் Posted April 15, 2020 23 hours ago, ராசவன்னியன் said: ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால் குடிக்க வெதுவெதுப்பான சுவையான வெந்நீர் ரெடி..! அப்பாடா ஒரு மாதிரி வெந்நீர் வைக்கப் பழகிவிட்டார் வன்னியர்.
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted April 15, 2020 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Posted April 15, 2020 3 hours ago, ஈழப்பிரியன் said: அப்பாடா ஒரு மாதிரி வெந்நீர் வைக்கப் பழகிவிட்டார் வன்னியர். அடுத்தது அரிசியை கழுவிப் போட்டு சோறு பொங்க வேண்டியதுதான்.. நீளமான பாசுமதி அரிசியா..? இல்லை, தஞ்சாவூர் பொன்னி அரிசியா..? எது நல்லது..?? என குழப்பத்தில் உள்ளேன்.😎 இந்த வெள்ளிக்கிழமை விடுமுறையில் செய்து பழகணும்.
Recommended Posts