Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோமாளிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோமாளிகள்! இலங்கைத்தமிழ் சினிமாவில் அதிக வசூலையீட்டிய திரைப்படம். இத்திரைப்படம் வெளியானபோது யாழ்ப்பாணம் , கொழும்பு நகர்களில் ஐம்பது நாள்களைக்கடந்து ஓடியது. ஏனைய இடங்களிலும் நன்கு ஓடியது நினைவிலுள்ளது. வி.பி.கணேசனின் 'புதிய காற்று' வெற்றியைத்தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகியபோது இதனை நான் பார்க்கவில்லை. யாழ் வின்சர் திரையரங்கில் ஓடியது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் 'கோமாளிகள் கும்மாளம்' என்னும் பெயரில் சுமார் இரண்டு வருடங்கள் வாராவாரம் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப்பெற்ற வானொலி நாடகமிது.

எஸ்.ராம்தாசின் கதை, திரைக்கதை வசனத்தில், எஸ். இராமநாதனின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்துக்கு இசையினை கண்ணன் - நேசம் இரட்டையர் அமைத்திருந்தனர். ஒளிப்பதிவு - ஜே. ஜே. யோகராஜா. இராம்நாதன், யோகராஜா இருவரும் சிங்களத்திரையுலகில் நன்கு பிரபலமானவர்களாக விளங்கினார்கள். படத்தைத்தயாரித்தவர் வர்த்தகரான எம். முகம்மது எஸ்.ராம்தாஸ், அப்துல் ஹமீட், ஆனந்தராணி இராஜரத்தினம் (இன்று ஆனந்தராணி பாலேந்திரா), சுப்புலட்சுமி காசிநாதன், சில்லையூர் செல்வராசன், கே.ஏ.ஜவாஹர், செல்வம் பெர்ணாண்டோ, கமலினி செல்வராசன், எஸ்.செல்வசேகரன், ரி.ராஜகோபால், ஜேசுரட்னம், கே.சந்திரசேகரன் என்று புகழ்பெற்ற வானொலிக் கலைஞர்கள் பலர் நடித்திருந்தார்கள்.

'பல்கலைவேந்தர்' சில்லையூர் செல்வராசனின் வானொலி, திரைப்படப்பங்களிப்பு முக்கியமானது. இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படுபவர். அது பற்றிக் கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரனும் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். நினைவுக்கு வருகின்றது. சில்லையூர் செல்வராசன் 'தணியாத தாகம்' (திரைப்படச் சுவடி), விவரணத்திரைப்படங்கள் ( ‘கமம்’, ‘தங்கமே தங்கம்’, ‘பாதைதெரியும் பார்’ என்பவை அவற்றுட் சில. ‘கமம்’ புதுடில்லி பேர்லின் திரைப்பட விழாக்களில் விருதுகளைப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது).

அண்மையில் யு டியூப்பில் 'கோமாளிகள்' திரைப்படத்தின் தெளிவான பிரதியைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. கே.பாலச்சந்தரின் 'எதிர்நீச்சல்'' நினைவுக்கு வந்தது. பல்லின ,மத & சாதிக் குடும்பங்கள் அனைவரும் மாளிகையொன்றைக் கட்டி வாழ்ந்து வருகின்றார்கள். அம்மாளிகை சந்தர்ப்ப சூழல் காரணமாக ஏலத்தில் விற்கப்படும் நிலை உருவாகின்றது. அதனை தணிகாசலம் என்பவர் வாங்குகின்றார். தொடர்ந்தும் அக்குடும்பங்களை அங்கு வாழ அனுமதிக்கின்றார். அவர் தான் மறைந்ததும் அங்குள்ள ஒருவருக்கே நன்னடத்தையின் அடிப்படையில் அம்மாளிகையினை வழங்கப்போவதாகத் தனது உயிலில் எழுதிவைக்கவுள்ளதாகத் தெரிவிக்கின்றார். தணிகாசலமாக நடித்திருக்கும் ஜவாஹர் தென்னிந்திய திரைப்பட நடிகர் செந்தாமரையை நினைவுபடுத்துகின்றார். அம்மாளிகையைத் தாமே பெற வேண்டுமென்று அங்குள்ளவர்கள் செய்யும் பல்வகை முயற்சிகள்தாம் கதை. அதில் அவர்கள் வெற்றியடைகின்றார்களா என்பதைப்படத்தைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

காதலர்களாக வரும் சில்லையூர் செல்வராசனும், கமலினி செல்வராசனும் ஆடிப்பாடி படத்துக்குச் சுவையூட்டுகின்றார்கள். சுப்புலட்சுமி காசிநாதன், செல்வசேகரன், எஸ். ராமதாஸ், கமலினி அப்துல் ஹமீட் ஆகியோரின் நடிப்பு நினைவில் தொடர்ந்தும் நிற்கிறது.

இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு, கலையுலகுக்கு வானொலிக் கலைஞர்கள் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானதொன்று. திறனாய்வாளர்கள் பலராலும் புறக்கணிக்கப்படும் அப்பங்களிப்பு பற்றி விரிவாக ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம். சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரையென பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அது ஆற்றிய பங்களிப்பு பற்றி விரிவான ஆய்வுகள் வெளிவருவது அவசியம். அங்கு எழுத்துலகின் ஆளுமைகள் பலரின் பங்களிப்புகளும் கவனத்திலெடுதுக்கொள்ளப்பட வேண்டியவை.

கோமாளிகள் திரைப்படத்தைப் பின்வரும் இணைய இணைப்புகளில் கண்டு களியுங்கள்:

பகுதி 1: https://www.youtube.com/watch?v=Q7oVk5x_IFU


பகுதி 2 : https://www.youtube.com/watch?v=nO_zcsJwniw

 


பகுதி 3: https://www.youtube.com/watch?v=vt6VYwq9Cuc

 

Image may contain: 1 person
Image may contain: 2 people, text
Image may contain: 1 person, closeup
Image may contain: 2 people, eyeglasses
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு... நன்றி கல்யாணி.
நேரம் கிடைக்கும் போது.... மீண்டும் ஒரு முறை ரசித்துப் பார்க்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்குஇ  கடைசிவரை நன்றாக எடுத்துள்ளார்கள் 


"1970களில் இலங்கை வானொலியில் இடம்பெற்ற புகழ் பெற்ற தொடர் நாடகமான "கோமாளிகள் கும்மாளம்" கோமாளிகள் என்ற பெயரில் 1976ஆம் ஆண்டு திரைப்படமாக்கப்பட்டது. அதில் இடம்பெற்ற பாடலொன்று. நாடகத்துக்கு வசனம் எழுதிய "மரைக்கார்" ராமதாஸ் பாடி நடித்த நகைச்சுவைப் பாடல்: "அடி என்னடி சித்தி பீ கிச்சு முச்சு கிச்சு சிரிப்பு எந்தன் நெஞ்சு குலுங்குதடி". "அடி என்னடி ராக்கம்மா" என்ற பாடலின் மெட்டில் இசை வழங்கியவர்கள் கண்ணன் - நேசன் இரட்டையர்கள். பாடலில் பாடி நடிக்கும் ளு.ராமதாஸுடன் வு.ராஜகோபால்இ ளு.செல்வசேகரன்இ பி.எச்.அப்துல் ஹமீட் மற்றும் ளு.சந்திரசேகரன். காணொளி உதவு: 70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை."

-facebook-

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கல்யாணி.......நேரம் இருக்கும்போது மீண்டும் பார்க்க வேண்டும்......!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.