Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

70ப‌து பெண்க‌ளை காத‌ல் என்று சொல்லி ஏமாத்தி காசை ஆட்டைய‌ போட்ட‌ இளைஞ‌ன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ந‌க்கீர‌ன் கோபாலு இத‌ சொல்லி தான் விள‌ம்ப‌ர‌ம் தேட‌ வேண்டும் என்று இல்லை 😉

ந‌க்கீர‌ன் கோபாலு த‌ன‌து உயிரை கூட‌ யோசிக்காம‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல‌ உண்மைக‌ளை எடுத்து சொன்ன‌வ‌ர் போன‌ நூற்றாண்டில் கூட‌ , வீர‌ப்ப‌னை ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌வ‌ர் போல் எடுத்து சொன்ன‌தே இந்த‌ ந‌க்கீர‌ன் கோபாலு  தான் / ந‌க்கீர‌ன் கோபாலுவை அதிக‌ இந்திய‌ ம‌க்க‌ளுக்கு க‌ட‌ந்த‌ கால‌த்திலே தெரியும் /

பையா... சின்ன பையா...

பத்திரிகை உலகத்தின், தம்மை பிரபல்யமாக்கும் விடயமே ஒரு கலை.

பிரிட்டனின் பெரும் பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன். வெர்ஜின் பிராண்ட் சொந்தக்காரர்.

அவர் தீடீரென ஹாட் ஏர் பலூனில் பறக்கின்றார். கரணம் தப்பினால் மரணம். 

அந்த பலூனில் வெர்ஜின் பிராண்ட் பொறிக்கப்பட்டுள்ளது.

பிபிசி, itv மற்றும் உலகின் தலை சிறந்த டிவி களில் எல்லாம் அவரது இந்த 'துணிகர முயல்வு' தலைப்பு செய்தியாக ஐந்து நிமிடம் காட்டப்படுகின்றது.

ஒரு ஆய்வாளர் சொன்னார்.... இவர் இந்த செய்திகளின் இடையே வரும் 30 செகண்ட் விளம்பரத்துக்கு பல மில்லியன்கள் செலவளித்திருப்பார்.

ஆனால்... காசே கொடுக்காமல் ஐந்து, ஆறு நிமிடத்துக்கு உலகம் முழுவதும் தனது வெர்ஜின் பிராண்ட் டினை கொண்டு செல்லும் திறமையினை என்னென்பது...

வெர்ஜின் பிராண்ட் உலகின் புகழ் மிக்க 10 பிராண்டுகளில் ஒன்று.

இப்ப, நக்கீரன் ஏன் வீரப்பனை சந்திக்க காட்டுக்குள் போனார் என்று சொல்லுங்கோ பார்ப்பம்?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பையன்26 said:

என்ன‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , குசா தாத்தாவின் க‌ள்ளுக்கொட்டிலுக்கு போயிட்டு வ‌ந்த‌ மாதிரி தெரியுது லொல் 😁😍 /

த‌மிழ் சிறி அண்ணாவுக்கு ப‌தில் எழுதின‌து நான் , நீங்க‌ள் த‌டு மாற்ற‌த்தில் த‌வ‌றாக‌ புரிந்து விட்ட‌தா தெரியுது 😉

அந்த‌ பொம்பிளை பொருக்கிக்கு என்ன‌ த‌ண்ட‌ன‌ குடுக்க‌லாம் என்று த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் கேட்ட‌து நான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

எனக்கு தெரியும் பையா.சும்மா கிண்டலுக்கு எழுதினேன்.ரொம்பவும் குழம்பிவிட்டீர்கள் போல.

15 minutes ago, Nathamuni said:

இப்ப, நக்கீரன் ஏன் வீரப்பனை சந்திக்க காட்டுக்குள் போனார் என்று சொல்லுங்கோ பார்ப்பம்?

நக்கீரன் போனபடியால்த் தான் வீரப்பன் பிடிபட்டான்.உளவுப்படை தான் நக்கீரனை அனுப்பி வைத்தது என்று வேறு கதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

பையா... சின்ன பையா...

பத்திரிகை உலகத்தின், தம்மை பிரபல்யமாக்கும் விடயமே ஒரு கலை.

பிரிட்டனின் பெரும் பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன். வெர்ஜின் பிராண்ட் சொந்தக்காரர்.

அவர் தீடீரென ஹாட் ஏர் பலூனில் பறக்கின்றார். கரணம் தப்பினால் மரணம். 

அந்த பலூனில் வெர்ஜின் பிராண்ட் பொறிக்கப்பட்டுள்ளது.

பிபிசி, itv மற்றும் உலகின் தலை சிறந்த டிவி களில் எல்லாம் அவரது இந்த 'துணிகர முயல்வு' தலைப்பு செய்தியாக ஐந்து நிமிடம் காட்டப்படுகின்றது.

ஒரு ஆய்வாளர் சொன்னார்.... இவர் இந்த செய்திகளின் இடையே வரும் 30 செகண்ட் விளம்பரத்துக்கு பல மில்லியன்கள் செலவளித்திருப்பார்.

ஆனால்... காசே கொடுக்காமல் ஐந்து, ஆறு நிமிடத்துக்கு உலகம் முழுவதும் தனது வெர்ஜின் பிராண்ட் டினை கொண்டு செல்லும் திறமையினை என்னென்பது...

வெர்ஜின் பிராண்ட் உலகின் புகழ் மிக்க 10 பிராண்டுகளில் ஒன்று.

இப்ப, நக்கீரன் ஏன் வீரப்பனை சந்திக்க காட்டுக்குள் போனார் என்று சொல்லுங்கோ பார்ப்பம்?

மூத்த‌வ‌ரே , என‌க்கு தெரிந்த‌த‌ நான் எழுதினேன் , ந‌க்கீர‌ன் கோபாலுவை ப‌ற்றி என‌க்கு தெரிந்த‌ ந‌ல்ல‌து ப‌ல‌ இருக்குது எழுத‌ / 

வீர‌ப்ப‌னை ந‌க்கீர‌ன் கோபாலு 1994 அந்த‌ கால‌ப் ப‌குதியில் ச‌ந்திச்ச‌ ஒரு ம‌ணித்தியால‌ காணொளிக‌ளை பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன் ,

ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தில் ப‌ணி புரிந்த‌ ஒருத‌ர் இப்போது ந‌க‌டக்கும் தொலைக் காட்சி விவாத‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்ளுவார் , ப‌ல‌ர் அண்ண‌ன் சீமானை க‌ழுவி ஊத்தினாலும் ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தில் ப‌ணி புரிந்த‌வ‌ர் அண்ண‌ன் சீமான் முன்னொடுக்கும் ந‌ல்ல‌த‌ அப்ப‌டியே துணிவோடு சொல்ல‌க் கூடிய‌வ‌ர் / ப‌ல‌ரின் க‌டின‌ உழைப்பால் தான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌க்கீர‌ன் ஊட‌க‌ம் வ‌ள‌ந்த‌து / 

6 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு தெரியும் பையா.சும்மா கிண்டலுக்கு எழுதினேன்.ரொம்பவும் குழம்பிவிட்டீர்கள் போல.

😁 paiyan eppavum cool ok / lol 😁

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

மூத்த‌வ‌ரே , என‌க்கு தெரிந்த‌த‌ நான் எழுதினேன் , ந‌க்கீர‌ன் கோபாலுவை ப‌ற்றி என‌க்கு தெரிந்த‌ ந‌ல்ல‌து ப‌ல‌ இருக்குது எழுத‌ / 

வீர‌ப்ப‌னை ந‌க்கீர‌ன் கோபாலு 1994 அந்த‌ கால‌ப் ப‌குதியில் ச‌ந்திச்ச‌ ஒரு ம‌ணித்தியால‌ காணொளிக‌ளை பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன் ,

ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தில் ப‌ணி புரிந்த‌ ஒருத‌ர் இப்போது ந‌க‌டக்கும் தொலைக் காட்சி விவாத‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்ளுவார் , ப‌ல‌ர் அண்ண‌ன் சீமானை க‌ழுவி ஊத்தினாலும் ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தில் ப‌ணி புரிந்த‌வ‌ர் அண்ண‌ன் சீமான் முன்னொடுக்கும் ந‌ல்ல‌த‌ அப்ப‌டியே துணிவோடு சொல்ல‌க் கூடிய‌வ‌ர் / ப‌ல‌ரின் க‌டின‌ உழைப்பால் தான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌க்கீர‌ன் ஊட‌க‌ம் வ‌ள‌ந்த‌து / 

ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தில் ப‌ணி புரிந்த‌ ஒருத‌ர் வேறு.... நக்கீரன் கோபால் வேறு...

நக்கீரன் கோபால் ... என்ன இருந்தாலும்... திமுக சொம்பு.... கலைஞரின் செல்லப்பிள்ளை.

அவர் பிரபல்யமானதே ஜெயை எதிர்த்து எழுதி தான்...

தமிழ் தேசிய உணர்வு, சீமானுடன் நட்பு இருந்தாலும், திமுகவின் அனுதாபியாகவே உள்ளார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தில் ப‌ணி புரிந்த‌ ஒருத‌ர் வேறு.... நக்கீரன் கோபால் வேறு...

நக்கீரன் கோபால் ... என்ன இருந்தாலும்... திமுக சொம்பு.... கலைஞரின் செல்லப்பிள்ளை.

அவர் பிரபல்யமானதே ஜெயை எதிர்த்து எழுதி தான்...

தமிழ் தேசிய உணர்வு, சீமானுடன் நட்பு இருந்தாலும், திமுகவின் அனுதாபியாகவே உள்ளார். 

ந‌க்கீர‌ன் ஆதிமுக்காவுக்கு எதிரான‌ ஊட‌க‌ம் தான் ம‌றுப்ப‌துக்கு இல்லை / ஆனால் கூட‌ உள்ள‌த‌ உள்ள‌ ப‌டியே துணிவோடு சொல்ல‌க் கூடிய‌ ஊட‌க‌ம் /

ந‌க்கீர‌ன் கோபாலுவே ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார் , ஜெய‌ல‌லிதா ஆட்சியில் சிறைக்குள் த‌ண்னை எவ‌ள‌வோ கொடுமை ப‌டுத்தினார்க‌ள் என்று /

எயிட்ஸ் நோயாளி ப‌டுத்த‌ க‌ட்டில்ல‌ த‌ன்னையும் ப‌டுக்க‌ சொல்லி தொந்த‌ர‌வு செய்தார்க‌ளாம் , அதை எல்லாம் வேண்டாம் என்று சிறைக்குள் த‌னிமையில் தூங்கி ப‌ல‌ துன்ப‌ங்க‌ளை அனுப‌வித்தார் என்று சொல்லி இருந்தார் /

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

 

ச‌கோத‌ரா இந்த‌ காணொளி , உடையார் ஜ‌யா இந்த‌ திரியில் இணைத்து இருந்தார் , இப்ப‌ இந்த‌ திரியில் ந‌ட‌க்கும் விவாத‌மே இந்த‌ காணொளியால் தான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

 

நக்கீரன் போனபடியால்த் தான் வீரப்பன் பிடிபட்டான்.உளவுப்படை தான் நக்கீரனை அனுப்பி வைத்தது என்று வேறு கதை.

வீர‌ப்ப‌ன் கொலையில் ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ்சுக்கும் தொட‌ர்வு இருக்கு , இத‌ அன்மையில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் நேர‌ம் அண்ண‌ன் வேல் முருக‌ன் வெளிப்ப‌டையாய் சொல்லி காட்டினார் /

ந‌க்கீர‌ன் கோபாலு வீர‌ப்ப‌னை ச‌ந்திச்சி கிட்ட‌ த‌ட்ட‌ 10வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு தான் வீர‌ப்ப‌ன் கொல்ல‌ப் ப‌ட்டார் , வீர‌ப்ப‌ன் உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாம‌ யாரையும் கிட்ட‌ அனுக‌ விட‌ மாட்டார் , ந‌க்கீர‌ன் கோபாலு ஊட‌க‌ ச‌ந்திப்புக்காக‌ தான் போய் இருந்தார் , அப்ப‌டி பார்த்தா ந‌க்கிர‌ன் போன‌ கையோட‌ வீர‌ப்ப‌ன் இருக்கும் இட‌த்தை பார்த்து இந்திய‌ இர‌ணுவ‌ சிற‌ப்பு ப‌டை வீர‌ப்ப‌னை அப்ப‌வே கொன்று இருப்பாங்க‌ள் , ந‌க்கீர‌ன் கோபாலு ச‌ந்திச்ச‌ பிற‌க்கும் க‌ய‌வ‌ர்க‌ளை வீர‌ப்ப‌ன் போட்டு த‌ள்ளின‌வ‌ர் 

ஏனோ தெரிய‌ல‌ வீர‌ப்ப‌ன் மேல் என‌க்கு பேர் அன்பும் பாச‌மும் இருக்கு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா  😉

 

  • கருத்துக்கள உறவுகள்

காசி வழக்கில் ஆஜராக மறுப்பு- நாகர்கோவில் வக்கீல் சங்கத்துக்கு விஜயகாந்த் பாராட்டு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெயிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்ப தாவது:-

பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர் கோவிலை சேர்ந்த சுஜி என்கின்ற காசி தொடர் பான வழக்கில் எந்த வழக் கறிஞர்களும் ஆஜராகக் கூடாது. என்று நாகர்கோயில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஷ் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

இதுபோன்று பெண்களை ஏமாற்றி அவர்கள் வாழ்க்கையில் விளையாடும் கயவர்கள் யாராக இருந் தாலும், அவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த வகையில் காசிக்கு கடும் தண்டனை வழங்கி, இனிவரும் காலங்களில் பெண்களுக்கு இதுபோன்ற ஒரு நிகழ்வுகள் நடக்காத வண்ணம் அந்த தண்டனை மிகக் கடுமையானதாக இருக்கவேண்டும்.

மேலும், ஒட்டு மொத்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த இந்த முடிவை தேமுதிக சார்பில் வரவேற்பதோடு, அனைவருக்கும் பாராட்டு களையும், வாழ்த்து களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நமது வழக்கறிஞர்கள் இதே உறுதியோடு இருந்தால் தமிழகம் எங்குமே இதுபோன்ற கொடிய செயல்கள் நடக்காத வண்ணம் தடுக்கமுடியும் என்று நம்புகிறேன்.

அதேநேரத்தில், பெண் களும் பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் அப், போன்ற சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாறக் கூடாது. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்று பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். “மின்னுவ தெல்லாம் பொன்னல்ல” என்ற பழமொழிக்கு ஏற்ப போலியானவர்களை கவனமாக கண்டறிந்தால் மட்டுமே பெண்கள் தங்கள் வாழ்க்கையை தற்காத்துக் கொள்ள முடியும். மேலும், போக்சோ சட்டத்தின்கீழ் பெண்கள் மோசடி மன்னன் காசியை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்

https://www.maalaimalar.com/news/topnews/2020/05/15154157/1511784/Refuse-to-appear-in-Kasi-case-Vijayakanth-praises.vpf

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எத்த‌ன‌ பெண் பிள்ளைக‌ளின் வாழ்க்கைய‌ அழித்த‌ கொடுங் கோல‌னின் ச‌கோத‌ரி க‌ண்ணீர் விட்டு அழுகிறா , 
இப்ப‌டி தான் இவ‌ளின் அண்ண‌னிட‌ம் ஏமாந்த‌ பெண் பிள்ளைக‌ளும் அழுது இருப்பார்க‌ள் 

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நாகர்கோவில் காசி வழக்கு: 800 பாலியல் காணொளிகளை பறிமுதல் செய்ததா போலீஸ்? அதிர வைக்கும் தகவல்கள்

  • பிரபுராவ் ஆனந்தன்
  • பிபிசி தமிழுக்காக
காசி
 
 

பாலியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நாகர்கோவில் காசி தமிழகத்தை தாண்டி பல மாநில பெண்களை ஏமாற்றியதாக சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பல இளம்பெண்களிடம் நெருங்கிப் பழகி அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக, அவர் மீது, சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், பொறியியல் பட்டதாரி, மாணவி உட்பட பல பெண்கள் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் காசி மீது போக்சோ, கந்து வட்டி, பாலியல் வல்லுறவு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி, தன்னை காசி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் கூறியதை தொடர்ந்து, அவர் மீது மேலும், ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர்.

 

தற்போது கல்லூரி மாணவி அளித்த புகாரை தொடர்ந்து, காசி மீது ஆறு பெண்கள் பாலியல் மற்றும் ஒரு பண மோசடி புகார் என மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சென்னை பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான போலீசார் காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
 

காசி

சிபிசிஐடி காவல் விசாரணை புதன்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து நாகர்கோவில் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டியான் முன்னிலையில் காசியை சிபிசிஐடி போலீசார் நேரில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

மேலும் சிபிசிஐடி நடத்திய விசாரணையில் காசியின் பாலியல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களின் விவரங்களையும் சிபிசிஐடி போலீசார் சேகரித்துள்ளனர். அதன் அடிப்படையில் மேலும் சிலரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் நாகர்கோவிலில் முகாமிட்டு காசியிடம் இருந்து பறிமுதல் செய்த ஏராளமான ஆபாச காணொளிகளை ஆய்வு மேற்கொண்டதாகவும் அதன் பிறகு காசியிடம் அதில் இருக்கும் பெண்கள் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டதாகவும் கூறி அதன் விவரத்தை நீதிமன்றத்தில் போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

காசி

இந்த புலனாய்வின்போது காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து 800க்கும் அதிகமான காணொளிகள் மற்றும் படங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காசியிடம் நடத்தப்பட்ட 5 நாள் விசாரணை குறித்து பெயர் வெளியிட விரும்பாத சிபிசிஐடி அதிகாரி கூறுகையில், இந்த வழக்கில் தமிழகத்தை தாண்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளது காசியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறினார்.

ஆனால், இதுவரை 6 பெண்கள் மட்டுமே துணிச்சலுடன் காசி மீது புகார் அளித்துள்ளனர். காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன் வந்து புகார் அளிக்க வேண்டும். அப்படி புகார் அளிக்கும் பெண்களின் விவரங்கள் முழுமையாக ரகசியம் காக்கப்படும் என்று சிபிசிஐடி அதிகாரி தெரிவித்தார்.

 

காசி

மேலும் அவர் கூறுகையில் காசியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தானாக எந்த பெண்ணையும் தேடி சென்று தான் ஏமாற்றவில்லை, என் உடல் அழகை பார்த்து என் மீது ஆசைப்பட்டு வந்த பெண்களை நான் ஏமாற்றியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார் என்று சிபிசிஐடி அதிகாரிகள் கூறினர்.

காசியை பொறுத்தவரை அவர் மீது ஆசைப்படும் பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் ஆபாசமாக உரையாடுவது (SEX CHAT), அவ்வாறு உரையாடும் போது அவர்களின் அந்தரங்க போட்டோ வீடியோக்களை எடுத்து வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புமாறு கேட்பது அவரது பாணியாக இருந்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

காசியின் பேச்சில் மயங்கிய பெண்கள் அவர்களுடைய புகைப்படங்கள், காணொளிகளை அனுப்பி வைக்கும்போது அதை பதிவு செய்து கொண்டு அந்த பெண்களை மிரட்டி பணம், நகை பறிப்பது அவரது வழக்கமாக இருந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

காசி

அதில் சில பெண்களுடன் பாலுறவில் ஈடுபடும் போது அதனை காணொளியாக பதிவு செய்து அதை வைத்தும் அந்த பெண்ணின் தோழிகளிடம் தன்னை அறிமுகப்படுத்தி வைக்குமாறு மிரட்டி சம்மதிக்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

காசி எவ்வளவு கொடூரமானவர் என்பது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணொளி மூலம் தெரியவந்துள்ளதாகவும் இயற்கைக்கு மாறாக பல பெண்களிடம் மிக கொடூரமாக காசி பாலுறவு கொண்டுள்ளது தெரிய வந்திருப்பதால் அவர் ஒரு செக்ஸ் சைக்கோவா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். 

காசி மீது மற்றொரு பெண் அளித்த பாலியல் புகார் மற்றும் சென்னை சைபர் கிரைம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பாலியல் காணொளி குறித்து காசியின் வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்க தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டோம் ஆனால் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. மேற்கொண்டு இந்த செய்தி குறித்து வழக்கறிஞர் விளக்கம் கொடுக்கும்பட்சத்தில் அவருடைய கருத்துகளபிரசுரிக்கப்படும்.
 

https://www.bbc.com/tamil/india-54919580

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் காசிக்கு போவதை பார்த்துவந்த இந்தியா 
இப்போ பெண்கள் காசிக்கு போவதை பார்க்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

காசியின் தந்தை மீது மேலும் 4 வழக்குகள் பதிவு

காசியின் தந்தை மீது மேலும் 4 வழக்குகள் பதிவு

நாகர்கோவில்:

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் சமூக வலைத்தளம் மூலம் ஏராளமான பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றி நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். அதனை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். மேலும், பல பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த வகையில் காசி பல பெண்களை சீரழித்தார். இதுதொடர்பாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் காசி மீது கந்து வட்டி வழக்கு, போக்சோ மற்றும் பாலியல் என மொத்தம் 7 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பெண்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசி, அவருடைய நண்பர்கள் தினேஷ், டேசன் ஜினோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கந்து வட்டி வழக்கில் காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தினேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.

நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட காசி, அவரது தந்தை தங்கபாண்டியன், நண்பர் டேசன் ஜினோ ஆகியோர் சமீபத்தில் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் பெண்களை மிரட்டிய வழக்கில் காசியின் நண்பரான நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வாலிபர் தற்போது வெளிநாட்டில் உள்ளதால், அவரை இந்தியா வரவழைத்து விசாரணையை துரிதப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே காசியின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட ஆதாரங்களை உயர் தொழில்நுட்பம் மூலம் போலீசார் மீட்டனர். இதனை தொடர்ந்து, காசியின் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களான ஆடியோ, வீடியோ போன்றவற்றை அழித்தது தொடர்பாக மேலும் 4 வழக்குகள் தங்கபாண்டியன் மீது பதிவாகி உள்ளது. மகனை காப்பாற்ற அவர் தான் ஆவணங்களை அழித்ததாகவும், இதனால் அவர் மீது வழக்குபதியப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/21081943/2093055/Tamil-News-Kasi-father-against-four-more-cases-registered.vpf

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2020 at 04:01, Maruthankerny said:

ஆண்கள் காசிக்கு போவதை பார்த்துவந்த இந்தியா 
இப்போ பெண்கள் காசிக்கு போவதை பார்க்கிறது 

அண்ண‌ இவ‌னிட்டை மாட்டின‌து கூட‌ சின்ன‌ பிள்ளைக‌ள் 16 , 17 வ‌ய‌து உடைய‌வ‌ர்க‌ள் , அதுங்க‌ளுக்கு சிந்திக்கும் திற‌மை இல்லை ,  ப‌டிச்ச‌ சிந்திக்க‌ கூடிய‌ பிள்ளைக‌ள் இந்த‌ சாக்க‌டையிட‌ம் மாட்டு ப‌ட்டு இருக்க‌ மாட்டின‌ம் , 

இவ‌ரின் வாழ்க்கை கிட்ட‌ த‌ட்ட‌ முடிஞ்சு போச்சு , அப்ப‌டி இவ‌ர் பெளியில் வ‌ந்தாலும் ஏமாத்த‌ ப‌ட்ட‌ பெண் பிள்ளைக‌ளின் அண்ணா மார்க‌ளிட‌ம் இவ‌ர் அடி வேண்டி சாவார் , 

எப்படி இருந்த‌ இன‌ம் இந்த‌ விஞ்ஞான‌ வ‌ள‌ர்சியை த‌வ‌றான‌ வ‌ழிக்கு ப‌ய‌ன் ப‌டுத்தி எம் கலாச்சார‌த்தை முற்றிலும் சீர் குலைத்து இந்த‌ நிலையில் இருக்கு எம் க‌லாச்சார‌ம் 😏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.