Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்பொழுது பாடசாலைகள் திறக்கப்படும்? அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

Featured Replies

இரண்டாவது தவணைக்காக மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி வரை பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் அந்த தகவல்களில் உண்மையில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மே மாதம் 11ஆம் திகதி இரண்டாம் கல்வி தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவித்தது.

எனினும் நேற்றைய தினம் பாடசாலை ஆரம்பிக்க முடியாதென சிறுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சை தொடர்பில் சிறுவர்கள் பிரதமரிடம் வினவிய போது, அதற்கு இரண்டு மாற்று வழிகள் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர பரீட்சையின் திகதியை மாற்றுவது ஒரு வழியாகும். கற்பித்து நிறைவு செய்த பாடங்களில் இருந்து மாத்திரம் கேள்விகளை தயாரிப்பது இரண்டாவது மாற்று நடவடிக்கையாகும். எப்படியிருப்பினும் இது தொடர்பில் இறுதி தீர்மானத்திற்கு இன்னமும் வரவில்லை என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/142388?ref=imp-news

மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைதிட்டம்

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பிரிவெனாக்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரிய கலாசாலைகள் உள்ளிட்ட சகல கல்வி நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

கொரோனா தடுப்பில் எமது கவனம் திசை திரும்பி இருந்தாலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளையும் அவசியம் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு நுளம்பற்ற பாடசாலைக்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் பாடசாலை அதிபர்கள், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

டெங்கு நுளம்பற்ற பாடசாலை சுற்றாடல்களை முன்னெடுப்பதற்காக கொரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து 2 ஆம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை சுற்றாடல் பகுதிகளில் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைவாக, கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் டெங்கு ஒழிப்பு வேலைதிட்டத்தை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/142398

  • தொடங்கியவர்

மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் எடுக்கப்படவுள்ள முடிவு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறையைத் திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தெற்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாண கல்வி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்திருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாண அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த செயலாளர் அதன் பின்னர் பாடசாலைகளுக்கான விசேட நேர அட்டவணை தயாரிக்கப்படும் என்றார்.

முதல் கட்டத்தில் தரம் 10 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். இதனைத் தொடர்ந்து தரம் 13; வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/142452?ref=home-imp-flag

  • தொடங்கியவர்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை!

In இலங்கை     May 4, 2020 8:29 am GMT     0 Comments     2735     by : Benitlas

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவல் நிலைமை மற்றும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியன தொடர்பாக ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, எதிர்வரும் 11ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாட்டின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

எனினும், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பிலான இறுதி முடிவு கல்வி அமைச்சினால் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், எதிர்வரும் வாரங்களில் பாடசாலை சுற்றாடலில் கொரோனா பரவலை தடுக்கும் வகையிலான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/பாடசாலைகளை-மீண்டும்-ஆரம்/

  • தொடங்கியவர்

பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பம் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு

In இலங்கை     May 5, 2020 11:41 am GMT     0 Comments     1795     by : Jeyachandran Vithushan

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படும் என வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அவ்வாறு பாடசாலைகளை மீண்டும் திறக்க எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து பாடசாலை பிள்ளைகளை பாதுகாப்பதற்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் காலம் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பாடசாலை-இரண்டாம்-தவணை-ஆர/

  • தொடங்கியவர்

கிழக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் நாளை!

In இலங்கை     May 5, 2020 7:26 am GMT     0 Comments     1322     by : Benitlas

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன்  சந்திப்புகளை நடாத்தி வருகிறார்.

இதற்கமைய நாளை(புதன்கிழமை) கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரைச் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறப்பது பரீட்சைகள் ஏனைய சில முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதுவரை தெற்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களது கருத்துகளை அறிந்துள்ளார்.

நாளை கிழக்கு மாகாணத்திற்கு வரும் செயலாளர் சித்ரானந்த, தொடர்ந்து வடக்கு, ஊவா  மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

http://athavannews.com/கிழக்கில்-பாடசாலைகளை-மீள/

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க்கில் பாடசாலைகள் திறந்த பின் கொரோனா கூடியிருக்குதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

டென்மார்க்கில் பாடசாலைகள் திறந்த பின் கொரோனா கூடியிருக்குதாம்.

இன்னும் திறக்கும் திகதி உறுதியாகவில்லை அப்படி ஆரம்பித்தாலும் உயர்தரமாணவர்களுக்கு        மாத்திரம் முதலில் ஆரம்பமாகுமாம்

  • தொடங்கியவர்

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய அறிவித்தல் வெளியானது!

In இலங்கை     May 8, 2020 6:48 am GMT     0 Comments     1067     by : Benitlas

அபாய வலயங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 11 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்காெள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்புவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனவே, குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 11ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்காெள்ளுமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் கடமைக்குத் திரும்புவது தொடர்பான அறிவித்தலையும் வழிகாட்டலையும் நிறுவனங்களின் தலைவர்கள் அறிவிப்பதாகவும், பல்கலைக்கழகங்களின் விரிவுரைகளை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் பின்னர் அறிவிக்கும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/பல்கலைக்கழகங்களை-மீள-ஆரம/

வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் மெதுவாக திறக்கப்பட்ட நாடுகளின் நிலவரத்தை மற்றையவர்கள் பார்த்து முடிவுகளை எடுக்கின்றார்கள். 

தென் கொரியா அவ்வாறான நாடு. அங்கு மீண்டும் இரவு களியாட்ட விடுதிகளில் மீண்டும் தொற்று பரவி உள்ளது.  

பல மேலை நாடுகளும் படாசாலைகளை காலை மற்றும் மாலை என பிரிக்க எண்ணுகிறார்கள். 
பல்கலைக்கழகங்கள் கூட தடுமாறிய வண்ணம் உள்ளன. 

ஸ்ரீலங்காவில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான செய்தி

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முடிவு அடுத்த வாரமளவில் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பை பெற்று பாடசாலைகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஆனால் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்க இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய கிருமி ஒழிப்பு நடவடிக்கையின் பின்னர் 4 நாட்கள் வரை பாடசாலைகளை மூட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலாம் கட்டமாக உயர்தர மாணவர்களையும், இரண்டாம் கட்டமாக சாதாரண தர மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாகவும்,

அதன் பின்னரே ஆரம்ப பிரிவு மாணவர்கள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/142850

  • தொடங்கியவர்

பாடசாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒருமாத காலமாகலாம் – கல்வி அமைச்சர்

In இலங்கை     May 11, 2020 10:48 am GMT     0 Comments     1903     by : Jeyachandran Vithushan

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒருமாத காலமாகலாம் என்றும் அதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ்  பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனக் கூறினார்.

மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நாளில் மீண்டும் திறக்கப்படும் என்றும், பாடசாலை நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகும் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த தினத்தை அறிவித்த பின்னர், நாடு பூராகவுமுள்ள பாடசாலைகள் தொற்றுநீக்கம் செய்யப்பட்டு இன்னும் 04 நாட்களுக்கு மூடப்படும் என்றும் முதலில் அதிபர், ஆசிரியர்கள் உட்பட கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

இதன் பின்னர் உயர்தரம், சாதாரண தரம் மற்றும் அதற்கு கீழுள்ள தரங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிப்படியாக பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/பாடசாலைகளை-மீண்டும்-திற-2/

பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் ?முக்கிய செய்திகள்

பாடசாலைகளை திறப்பது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாணவரினதும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வரையில் பாடசாலைகளை திறக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நீர் வசதிகள் துளியளவும் இல்லை எனவும் அவ்வாறான பாடசாலைகளில் மாணவர்கள் கை கழுவுவது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவ மாணவியரின் பாதுகாப்பே மிகவும் முதன்மையானது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.உடல் வெப்பநிலையை அளவீடு செய்யும் கருவிகள் கொள்வனவு செய்யபய்பட உள்ளதாகவும் சுமார் 20ஆயிரம் கருவிகள் இவ்வாறு பாடசாலைகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற மேலும் பல செய்திகளுடன் இன்றைய முக்கிய செய்திகள்

https://www.ibctamil.com/srilanka/80/143235

safe_image.php?d=AQDIf_nX9nt6nkiI&w=540&h=282&url=http%3A%2F%2Fstatic.dailymirror.lk%2Fassets%2Fuploads%2Fimage_10e3906385.jpg&cfs=1&upscale=1&fallback=news_d_placeholder_publisher&_nc_hash=AQBwBJqCCO1TnlKc

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முக்கிய தீர்மானங்களை எடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

உறுதியான திகதியொன்று தீர்மானிக்கப்படாவிட்டாலும் அதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது.

கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து வழிகாட்டல்களை வழங்கியுள்ளன.

இந்த வழிகாட்டல்களின் அடிப்படையில் மாகாண மட்ட கலந்துரையாடல்களை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. அத்துடன், நான்கு கட்டங்களில் பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்செயற்பாடு பின்வரும் 04 கட்டங்களில் இடம்பெறவுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டம்-01
மாகாண மட்ட நிறுவனங்களுடன் இணைந்து பெற்றோரின் பங்களிப்புடன் பாடசாலைகளில் தொற்றுநீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இதன் பின்னர் சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் படி நான்கு நாட்கள் பாடசாலை மூடி வைக்கப்படும்.

கட்டம்-02
கல்விசாரா ஊழியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலைக்கு வருகை தர வேண்டும்.

கட்டம்-03
உயர்தர மாணவர்கள் மற்றும் சாதாரண தர மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தர வேண்டும்.

கட்டம்-04
சிறுவர்கள் பாடசாலைக்கு வர வேண்டும்.

இருப்பினும் மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்த பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/143340

  • தொடங்கியவர்

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய தகவல்

பாடசாலைகள் மூலம் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளவர்கள் தமது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக்கழக அனுமதிகளை உறுதிப்படுத்தும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில் தற்போது இந்த உறுதிப்படுத்தல்களை பாடசாலைகளின் அதிபர்களும், உப அதிபர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்வர் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/143505?ref=rightsidebar

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள எல்லா செய்தி இணைப்புக்களையும் வாசிக்க தலை சுத்துகின்றது.

பாடசாலை இயல்பு நிலைக்கு தொடங்குதல், அரச, தனியார் அலுவலகங்கள் இயல்பு நிலைக்கு மீளுதல் ஆகியவை எப்படி போகும் என்பது சுகாதார அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் ஊகமே.

இனி உலகம் முழுதும் இது ஒரு சவாலாக போகின்றது.

கொரனா பாதிப்பில் சாவுகள் தொடர்வது உலக அளவில் குறைந்தபாடில்லை.

முன்பு ஊரில் ஆமி ஷெல் அடிக்க அடிக்க, விமானங்கள் குண்டுவீச, பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொண்டு நாங்கள் வாழ்க்கையை கொண்டு சென்றது போலத்தான் இனி கொரனாவுடன் வாழப்போகின்றோம்.

  • தொடங்கியவர்

அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு

In இலங்கை     May 20, 2020 5:42 am GMT     0 Comments     1205     by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொலைதூர கல்வி முறைமையினூடாக 60 வீதமான பாடசாலை மாணவர்களே சலுகைகளை பெற்றுக்கொள்வதாக கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் எவ்வித தொலைதூர கல்வி வசதிகளையும் பெற முடியாத 40 வீதமான மாணவர்களும் ஏதேனும் ஒரு முறைமையினூடாக கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.என்.சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், பாடசாலை மட்டத்தில் அச்சிடப்பட்ட கற்றல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய கையேடுகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பாக மாகாணக் கல்வி அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமான கற்றல் முறைமையினூடாக கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

http://athavannews.com/அனைத்து-மாணவர்களுக்கும்/

  • தொடங்கியவர்
17 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

மேலுள்ள எல்லா செய்தி இணைப்புக்களையும் வாசிக்க தலை சுத்துகின்றது.

சொறிலங்கா அரசு மக்களை இப்பிடியெல்லாம் ஏமாத்துகிறாங்கள் என்றதை உணர இந்த திரியிலுள்ள செய்திகள் உதவும்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

உயர்தர, சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

தற்போதைய சூழ்நிலையில், இவ்வாண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பரீட்சைகள் நடத்தப்படுமென அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார்.

கண்டி குருதெனிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

கால அட்டவணைகளுக்கு அமைய பாடத்திட்டங்களில் பூர்த்தி செய்யப்பட்ட பகுதிகளுக்கு அமைய பரீட்சைகள் நடத்தப்படும். அத்துடன் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமையவே பாடசாலைகளும் மீளத் திறக்கப்பட உள்ளதாக என்.எச்.எம். சித்ரானந்த கூறினார்.

https://www.ibctamil.com/srilanka/80/143707

  • தொடங்கியவர்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

In இலங்கை     May 22, 2020 10:44 am GMT     0 Comments     4024     by : Dhackshala

நாட்டில் கொரோனா அச்சம் முழுமையாக குறைவடைந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்தார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக சிலர் தவறான கருத்துக்களை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் நிலையில் பாடசாலை மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் சங்கடத்திற்குள்ளாகும் வகையில் எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/பாடசாலைகளை-மீண்டும்-ஆரம-2/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பாடசாலைகளில் விசேட வசதிகளை ஏற்படுத்த அமைச்சிடம் போதுமான நிதி இல்லை..!

In இலங்கை     May 31, 2020 6:53 am GMT     0 Comments     1340     by : Jeyachandran Vithushan

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள் மற்றும் முதலுதவியை வழங்குவதற்கான அறை வசதிகள் உள்ளிட்ட விடயங்களை செய்வதற்க்கு போதுமான நிதி அமைச்சிடம் இல்லை என அறிய முடிகின்றது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர், “பாடசாலைகளில் கை கழுவுவதற்கு தேவையான வசதிகளை செய்வதற்கு 418 மில்லியன் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில், கல்வி அமைச்சுக்கு 100 மில்லியன் மட்டுமே இருப்பு உள்ளது” என கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த வசதிகளுக்காக நிதி ஒதுக்கும்போது, இத்தகைய வசதிகளை உருவாக்க அனுசரணையாளர்கள் / நலம் விரும்பிகள் / பழைய மாணவர்களை ஈர்க்க வழி இல்லாத கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வசதிகளை மேற்கொள்ள பெற்றோரிடம் இருந்து நிதி பங்களிப்பு தேவையில்லை என்று அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தாலும், பாடசாலைகளின் நலன் விரும்பிகள் அல்லது பழைய மாணவர்களிடம் கோரிக்கை விடுக்க அனுமதிக்கப்படும் என கல்வி அமைச்சின் செய்ரலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலைகளுக்கு தேவையான நீர் வழங்கல் வசதிகளை எளிதாக்க அந்தந்த உள்ளூராட்சி நிறுவனங்களான பிரதேச செயலகங்கள், நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றை பங்களிப்பையும் அமைச்சு கோரியுள்ளது.

உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள்,மற்றும் திடீரென மாணவர்களுக்கு சுகவீனம் அல்லது உடல் உஷ்னம் அதிகரித்தல் போன்றன ஏற்பட்டால் அந்த மாணவர்களுக்கான முதலுதவியை வழங்குவதற்கான கட்டிலுடன் கூடிய அறை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை செய்ய 680 மில்லியன் ரூபாய் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பாடசாலைகளில்-விசேட-வசதிக/

1 hour ago, Rajesh said:

மாணவர்களுக்கான முதலுதவியை வழங்குவதற்கான கட்டிலுடன் கூடிய அறை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை செய்ய 680 மில்லியன் ரூபாய் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களின் அதிசொகுசு மகிழூந்துகள் 15 இனை விற்றால் இந்தப் பணம் கிடைத்துவிடும்.

Edited by போல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.