Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி கோத்தாபய இராணுவ ஆட்சிக்கு வித்திட்டுள்ளார் - நிரோஷன் பெரேரா எச்சரிக்கை

Featured Replies

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் இராணுவ ஆட்சிக்கு வித்திட்டு வருகின்றது. இதன் எச்சரிக்கை கருத்திற் கொள்ளமல் வினோதமடைய முயற்சிக்காதீர்கள், இராணுவத்தினர் ஒருவர் உங்கள் வீட்டின் கதவையும் தட்டுவதற்காக வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரால் சுமேந்ர பெரேராவை விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி நியமித்துள்ளார். இராணுவத்தினரிடம் எவ்வகை ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவின்றி செயற்பட்டு வருகின்றது.

மருத்துவ சங்கத்தினர் வைரஸ் பரவலையும் யுத்தத்தையும் தொடர்பு படுத்தி குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தபோதும்,கொரோனா தொற்றுக் குள்ளானவர்களை அடையாளம் காணுவதற்காக கடற்படையினரை அனுப்பினர். அதனால் இன்று பெருமளவான கடற்படையின் கொரோனா தொற்றுக் குள்ளாகியுள்ளனர்.

நகரசபை, பிரதேசசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அனுபவம் கூட இல்லாத கோத்தாபயவுக்கு எவ்வாறு இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பது என்ற தெளிவில்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்தகால ஆட்சியில் இராணுவத்தினருடன் சிவில் பொறுப்புகனை கையளித்தமையினால் ஏற்பட்ட விபரீதங்களை அனைவரும் நன்கறிவீர்கள்.

தனது அடிப்படை உரிமையான குடி நீரை பெற்றுக் கொள்வதற்காக ரத்துபஸ்வல பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்களுக்கு நடத்த விளைவு தொடர்பில் அனைவருக்கும் நினைவிருக்கும். கோத்தாபயவின் செயற்பாடுகள் தொடர்பில் நம்மைவிட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெளிவுக் கொண்டிருக்கிறார்.

அதனால், இந்த இராணுவ ஆட்சியினால் எங்களுக்கு பாதிப்பில்லை, ஐக்கிய மக்கள் சக்திக்கே பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில், மூடத்தனமான குதூகளத்தில் இருக்காதீர்கள், இராணுவத்தினர் ஒருவர் நாளை உங்கள் வீட்டுக்கதவை தட்டி, வீட்டிலுள்ளவர்களை இழுத்துச் செல்வதற்கான வாய்ப்பும் இருக்கின்றது என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

காலகாலமாக அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகித்த அரச நிர்வாகத்துறையின் மீது நம்பிக்கை கொண்டிராத ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அவருடைய சகாக்களான ஓய்வுப் பெற்ற இராணுவத்தினர் மீது கொண்டுள்ளார். இதன் காரணமாகவே நிர்வாகத்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த பொறுப்புகளை தற்போது இராணுவத்திரை கொண்டு நிறைவேற்றி வருகின்றார்.

https://www.virakesari.lk/article/81985

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ampanai said:

அதனால், இந்த இராணுவ ஆட்சியினால் எங்களுக்கு பாதிப்பில்லை, ஐக்கிய மக்கள் சக்திக்கே பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில், மூடத்தனமான குதூகளத்தில் இருக்காதீர்கள், இராணுவத்தினர் ஒருவர் நாளை உங்கள் வீட்டுக்கதவை தட்டி, வீட்டிலுள்ளவர்களை இழுத்துச் செல்வதற்கான வாய்ப்பும் இருக்கின்றது என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

சிங்களவர்களே.. தங்களின் இராணுவத்தைப் பற்றி இப்படி சொல்லும் போது... எங்கட அரசியல்வாதிகள் சிலர் இராணுவம் இருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால்.. ஒரு மூலையில் இருக்க வேண்டும் என்றார்களே பாருங்கள். 

  • தொடங்கியவர்
2 hours ago, nedukkalapoovan said:

சிங்களவர்களே.. தங்களின் இராணுவத்தைப் பற்றி இப்படி சொல்லும் போது... எங்கட அரசியல்வாதிகள் சிலர் இராணுவம் இருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால்.. ஒரு மூலையில் இருக்க வேண்டும் என்றார்களே பாருங்கள். 

இராணுவ ஆட்சி ஏற்படின், தமிழ் தலைமைகள் சுயமாக, தமிழ் மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பார்களா? இல்லை புதுடெல்லி வழிகாட்டலில் பயணிப்பார்க்களா? என்றால், அது டெல்லி காட்டும் பாதையாகவே இருக்கும் 😞 

  • தொடங்கியவர்

சிவில் சேவைகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது ஜனாதிபதியின் தனித்தீர்மானம் - அரசாங்கம்

(ஆர்.யசி)

சிவில் சேவைகளில் இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் தீர்மானம் ஜனாதிபதியை சார்ந்ததாகும். மக்கள் அவருக்கு கொடுத்துள்ள ஆணையின் பிரகாரம் அவர் தீர்மானம் எடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

ஏனைய துறைகளில் இருக்கும் அதிகாரிகளை விடவும் அதிக திறமை கொண்ட, ஒழுக்கமான அதிகாரிகள் இராணுவத்தில் உள்ளனர் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

இராணுவ அதிகாரிகளை அரச துறைகளுக்கு நியமிக்கும் நடவடிக்கை குறித்து அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியார் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே அதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.
 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இராணுவ அதிகாரிகளை முழுமையாக சிவில் சேவைகளில் இணைத்துக்கொள்ள எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை.

எனினும் ஏனைய துறைகளில் இருக்கும் அதிகாரிகளை விடவும் அதிக திறமை கொண்ட, ஒழுக்கமான அதிகாரிகள் இராணுவத்தில் உள்ளனர்.

இலங்கை வரலாற்றில் யாருடைய ஆட்சி இருந்தாலும் நாட்டின் தேவை, அவசரகால நிலைகளிலும் இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தும் முறைமை இருந்தது. கடந்த ஆட்சியில் உயர்கல்வி அமைச்சின் சில பதவிகளுக்கும் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

சுகாதார அமைச்சிற்கு இப்போது மிகக் கடுமையான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், செயலாளர்கள் நியமனம் முழுமையாக ஜனாதிபதியின் அதிகாரபூர்வ பொறுப்பாகும்.

இதில் சவால் விடுக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. அவர் மக்கள் ஆணையின் பிரகாரம் செயற்பட்டு வருகின்ற காரணத்தினால் மக்களின் நன்மை கருதியே அவர் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார். இதில் நட்பு, உறவு என எதைனையும் அவர் பார்க்கப்போவதில்லை.

அனுபவசாலிகள், கல்விமான்கள், விடயத்திற்கு பொறுப்பான அறிவு இருக்கும் இராணுவ அதிகாரிகளை நியமிப்பதில் எந்த தவறும் இல்லை. யுத்த காலத்தில் சேவை செய்தவர்கள் ஏனைய நேரங்களிலும் சேவை செய்வார்கள் ஆனால் இதில் இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் தீர்மானம் முற்று முழுதாக ஜனாதிபதி சார்ந்ததாகும்.

https://www.virakesari.lk/article/82027

 

  • தொடங்கியவர்

எல்லாம் இராணுவமயம்

http://www.dailymirror.lk/cartoon_of_the_day/Cartoon-of-the-day/167-188318

அவசரகால சட்டத்தின் கீழ் நாட்டை ஆட்சிசெய்ய ஜனாதிபதிக்கு எந்த விருப்பமும் இல்லை - அரசாங்கம்

அரசியல் அமைப்பினை மீறி பழைய பாராளுமன்றத்தை கூட்ட எந்த தீர்மானமும் எமக்கு இல்லை, பாராளுமன்றம் கூட்டாது போனாலும் நிதி அதிகாரத்தை கையாள முடியும் என கூறும் அமைச்சர் பந்துல குணவர்தன அவசரகால சட்டத்தின் கீழ் நாட்டினை கொண்டு நடத்த ஜனாதிபதிக்கு எந்த விருப்பமும் இல்லை என்றார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.

அரசியல் அமைப்பினை மீறி எம்மால் பாராளுமன்றத்தை கூட்ட முடியாது, பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது, கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவசரகால சட்டம் இருக்கும் நேரங்களில் பாராளுமன்றத்தை கூட்ட முடியும். ஆனால் நாட்டினை அவசரகால சட்டத்தின் கீழ் கொண்டு நடத்த ஜனாதிபதிக்கு எந்த தேவையும் இல்லை. அவர் அதற்கு விரும்பவும் இல்லை.

உலக நாடுகளில் பல இலட்சம் மக்கள் இறந்த நேரத்திலும் ஒற்றை இலக்கத்தில் மரண எண்ணிக்கையை  கட்டுப்படுத்தி நாட்டினை மீட்டெடுக்கும் ஆட்சியை நாம் செய்து காட்டியுள்ளோம்.

இவ்வாறு எந்த வேலைத்திட்டங்களையும் முன்னைய ஆட்சியாளர்கள் செய்யவில்லை. பாராளுமன்றம் நடைமுறையில் இருந்த காலத்தில் குறித்த தினத்தில், குறித்த நபர்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்படுவதாக முழுத் தகவல்களும் கிடைத்தும் அதனை தடுக்கவோ குறைந்த பட்சம் வானத்தை பார்த்து துவக்குகளை சுடக்கூட பயன்படுத்த தெரியாத அரசாங்கமே இருந்தது. ஆகவே இப்போது எம்மை விமர்சிக்க வேண்டாம் என்றார்.

https://www.virakesari.lk/article/82031

நான் இங்கு பல தடவைகள் குறிப்பிடட ஒரு காரியம் இரணைமடு குள நீர் விநியோக திடடம்। ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் நீரின் கொள்ளளவை அதிகரித்து யாழ்ப்பாணத்துக்கு குடி நீர் கொண்டு செல்வது।

அதை எதிர்த்தவர்கள் முதலமைச்சர் விக்கி, ஸ்ரீதரன் MP , அங்குள்ள சில பொறியாளர்கள் , தூண்டிவிடப்படட அங்குள்ள மக்கள்। அதனால் அந்த திடடம் கைவிடப்பட்ட்து। ஆனால் மத்திய அரசு கைவிடவில்லை। நாங்கள் மகாவலி நீரை திசை திருப்பி இரணைமடு குளத்துக்கு கொண்டு வந்து அதன்மூலம் ஒரு திடத்தை , யாழுக்கு நீரை கொண்டுபோவோம் என்று திடடம் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றது।

இவ்வளவு நாளும் மாகாண அமைச்சின் கீழ் இருந்த இந்த இரணைமடு குளம் இனி மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்படும்। இனி அவர்கள் தங்கள் திடத்தை இலகுவாக நிறைவேற்றுவார்கள்। அதாவது இரணைமடு குளத்தின் கீழ் குடியேற்றம் தாராளமாக நடைபெறும்।

அதட்குரிய மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மாற்றப்பட்டு இப்போது ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்। இனிமேல் அதைப்பற்றி பேச முடியாது। எல்லாம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படும்।

எமது அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தூர நோக்கற்ற சிந்தனைகள்தான் , சுயநல எண்ணங்கள்தான் இத்தேட்கெல்லாம் கரணம்। 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் திட்டங்கள் அப்படிப்பட்டவை. எந்தப் பக்கம் போனாலும் அதை எமக்கு எதிராகவே திருப்புவான். எல்லாம் தமிழரிடம் கற்றவை, எம்மையே பதம் பாக்கிறது. சோரம் போன தலைமைகளும் ஒரு காரணம். இதுமட்டுமல்ல இன்னும் எத்தனையோ..... தமிழரை அடிமை ஆக்காமல் இந்தப் பிரச்னை தீராது. 

  • தொடங்கியவர்
14 minutes ago, Vankalayan said:

அதட்குரிய மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மாற்றப்பட்டு இப்போது ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்। இனிமேல் அதைப்பற்றி பேச முடியாது। எல்லாம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படும்।

யார் நிதி உதவி செய்வார்கள்? 

கோவிட் 19 இனை கட்டுப்படுத்துவது போன்று ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படும் 🙂 

  • தொடங்கியவர்
  • தொற்று நோய் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகும் இராணுவத்தின் ஊடுருவல் வழமையானதாக்கப்பட்டு நீண்டகாலத்துக்கு தொடரக்கூடிய ஆபத்து இருக்கிறது

 

  • சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு இலக்கானமை கண்டுப்பிடிக்கப்பட்டதற்கு பின்னர், சட்டமா அதிபர் திணைக்களம் தமது பணிகளை மீண்டும் ஆரம்பிக்க முடியுமா என்று சுகாதார அதிகாரிகளிடமல்லாது, அரச புலனாய்வுச் சேவைகளிடமே, சட்ட மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக மன்றாடியார் நாயகம் (நிர்வாகம்) விசாரித்தமை இராணுவ மயமாதல் இயல்பாக்கப்படுகின்றமைக்கான ஒரு எடுத்துக்காட்டாகும்
  • தொடங்கியவர்

அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள ராணுவ அதிகாரிகளின் பெயர் பட்டில் ::

01. லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா

02. மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே

03. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

04. பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க

05. பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ

06. மேஜர் ஜெனரல் கருணாரத்ன பண்டா எகொடவல

07. எட்மிரல் ஜயநாத் கொலம்பகே

08. மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க

09. மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராட்ச்சி

10. மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா

11. மேஜர் ஜெனரல் விஜித்த ரவிபிரிய

12. மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராட்ச்சி

13. யாப்பா சேனாதிபதி

14. மேஜர் ஜெனரல் கே.ஜகத் அல்விஸ்

15. பிரிகேடியர் துவான் சுரேஷ் சலே

16. உதவி போலிஸ் அத்தியட்சகர் பிரியந்த டி அல்விஸ்

இவர்களை தவிர மேலும் பலர் அரச நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவர்களுக்கு மேலதிகமாகவே ஜனாதிபதியினால் சமீபத்தில் இரண்டு ராணுவ அதிகாரிகள் புதிதாக அமைச்சுக்களின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • தொடங்கியவர்
59 minutes ago, ampanai said:

இவர்களை தவிர மேலும் பலர் அரச நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவர்களுக்கு மேலதிகமாகவே ஜனாதிபதியினால் சமீபத்தில் இரண்டு ராணுவ அதிகாரிகள் புதிதாக அமைச்சுக்களின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

IMG_20200515_122901.jpg?189db0&189db0

  • தொடங்கியவர்
  • கொவிட் 19 நெருக்கடியை கையாளுவதற்கென்று நியமிக்கப்பட்ட பொருளாதார மீட்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி போன்ற பொறிமுறைகளில் இராணுவம் அங்கம் வகிப்பது முற்றிலும் சிவிலியன் நோக்கு எல்லைக்குள் வரவேண்டிய தீர்மானம் மேற்கொள்ளும் செயல்முறைகளில் இராணுவம் சம்பந்தப்படுவதற்கு வழிவகுக்கிறது.
  • சிவிலியன் விவகாரங்களில் இராணுவத்தின் ஈடுபாடு அதிகரித்திருக்கின்ற நிலையில், கொவிட் 19 நெருக்கடியை கையாளுவதற்கான முயற்சிகளுடன் போர் நடவடிக்கைகளை ஒப்பிடும் தொனியிலான சொற்பிரயோகங்கள் பெருமளவில் வழக்கத்துக்கு வந்துவிட்டன. இது முற்றிலும் வேறுப்பட்ட ஒரு யுத்தமாகும்.
  • பெரும் அவலங்களை ஏற்படுத்துகின்ற கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கு இராணுவம் இறங்கியிருக்கின்றது. உகந்த முறையில் சண்டையை முன்னெடுக்காவிட்டால், முழு நாட்டையுமே நிர்மூலம் செய்யக்கூடிய எதிரிக்கே இராணுவம் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன நேர்காணலொன்றில் கூறினார்.
  • போர் நடவடிக்கை தொனியிலான சொற்பிரயோகங்கள், மக்கள் மத்தியில் ஒரு எதிரி குறித்த அச்சத்தை உருவாக்கவே பயன்படுத்தப்படுகின்றன. கொவிட் 19 நெருக்கடியை பொறுத்தவரை அத்தகைய சொற்பிரயோகம் அந்த எதிரியிடம் இருந்து நாட்டு மக்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்று உறுதியளித்து, அவர்களை அமைதிப்படுத்தும் நோக்கிலானதாகும். இதற்கு கைமாறாக பொது மக்கள் அரசாங்கத்தின் தீர்மானங்களில் மறு கேள்விக்கு இடமில்லாத நம்பிக்கை வைக்குமாறு எதிர்பார்கப்படுகிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளை அல்லது செயலின்மைகளை கேள்விக்குள்ளாக்கும் அல்லது விமர்சிக்கும் எந்த ஒருவரும் விசுவாசமற்றவர் என்று கருதப்படுவர்; தேச விரோதி நாட்டுப்பற்றட்டவர் அல்லது துரோகி என்று கூட அவர் நாமகரணம் சூட்டப்படக்கூடிய சாத்தியமும் இருக்கிறது.

https://www.virakesari.lk/article/82164

23 hours ago, ampanai said:

யார் நிதி உதவி செய்வார்கள்? 

கோவிட் 19 இனை கட்டுப்படுத்துவது போன்று ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படும் 🙂 

நிதி உதவி ஒரு பிரச்சினை இல்லை. இப்போது மகாவலி அபிவிருத்தி திட்ட்துக்கு யார் உதவி வழங்குகிறார்கள்? இப்போதும் குடியேற்றம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே இங்கும் அதேபோல நடைமுறைப்படுத்துவார்கள்.

இங்கு மாகாண சபையே அப்போது அந்த திடடத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் மகாவலி நீர் திசை திருப்பப்பட்டிருக்காது. இரணைமடு குளமும் மாகாண சபையின் கீழே இருந்திருக்கும். ஊகத்தின் அடிப்படையில் இவர்கள் செயல்படுவதினால்தான் இங்கு பிரச்சினைகளே உருவாகின்றன.

  • தொடங்கியவர்

 

Image

  • தொடங்கியவர்
15 minutes ago, ampanai said:

 

Image

 

இந்த கருத்துப்படம் வீரகேசரியில் வந்துள்ளது. ஓரளவிற்கு நாட்டில் உள்ள மக்களின் உணர்வை ஓரளவிற்கு புரிந்துகொள்ளலாம். 

ஆக, சிங்கள பெரும்பான்மை மக்களின் பலத்துடன் கடந்த சனாதிபதி தேர்தலில் வென்றார் - கோத்தா 

நாளை, அதே சிங்கள மக்கள் அவருக்கு எதிராக திரும்பினால், அது மீண்டும் ஒரு உள்நாட்டு சண்டையை உருவாக்கும், நாடு தொடந்து ஒரு பெரிய அழிவை சந்திக்கும். 
 

  • தொடங்கியவர்

14,617 other ranks of Sri Lanka Army to be promoted

A record of 14,617 other ranks of Sri Lanka Army would be promoted in view of the National War Heroes’ Day which falls on May 19, the Army said.

The National War Heroes’ Day (19 May), the pinnacle of the day’s state commemoration, is scheduled to be held at National War Heroes' Monument at Battaramulla, Sri Jayawardenepura, headed by HE the President, Commander-in-Chief of the Armed Forces on Tuesday (19).

The driving-force behind the project, Lieutenant General Shavendra Silva, Chief of Defence Staff and Commander of the Army who was keen on turning those long overdue and stagnant promotions of a five-digit number of Army Other Ranks, finally to a reality, maintains that granting of long-awaited but inspiring promotions, would inevitably serve a motivating fillip to their untiring, dedicated and life-threatening ongoing national services, and amounts to recognition of their selfless and numerous commitments in times of natural disasters, terrorist threats, global epidemics, and also whenever Sri Lanka’s territorial integrity and unitary state is under threat.

Accordingly, Lieutenant General Shavindra Silva who initiated the move on the guidelines of the Army Directorate of Personnel Administration (DPA), led by Brigadier Sisira Pilapitiya, Director, DPA on the guidelines given by the Adjutant General of the Army has elevated those Other Ranks in all Army Regiments to their next rank, effective from 18th May 2020 to coincide with the National War Heroes’ Day, a project that would also go into this Directorate’s history as the biggest ever share of promotions, hitherto granted at one given point on a single day.

http://www.dailymirror.lk/top_story/14-617-other-ranks-of-Sri-Lanka-Army-to-be-promoted/155-188441

  • தொடங்கியவர்

அண்ணா-துரையும் தம்பி-துரையும் கோவிட்19 இனை முப்படைகளையும் கொண்டு, அந்த தொற்றை வென்றாலும் இல்லை தோற்றாலும், தமக்கு வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற கணிப்புடன் நகருகின்றனர். 

தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தால் - எமது முப்படைகளுமே உலகிற்கு எடுத்துக்காட்டு 
தொற்று கட்டுப்பாட்டிற்குள் வராவிட்டால் - மக்களின் அதிருப்தியை முப்படைக்களை கொண்டு அடக்கலாம்.

அண்ணா-துரை +தம்பி-துரை கணக்கிற்கு ஆபத்தாக ஆப்பாக உள்ளது நாட்டின் பொருளாதரம்.   

சரி, கணக்கு கூட்டி கழிக்க சரியாய் வருமா ?? 

நடப்பு மாதம் - வைகாசி, கீழே உள்ள தரவுகள் - மாசி மாதத்தான் 

http://www.ft.lk/top-story/Trade-deficit-shrinks-in-Feb-as-COVID-19-bites/26-700373

ஆக, பொருளாதார சரிவு  வரும் மாதங்களில் மிகவும் பாரிய தாக்கத்தை தரலாம். 

  • தொடங்கியவர்

அண்மையில் கோத்தபாய என்ற போர்க்குற்றவாளி தனது சம்பளத்தை 'தானம்' செய்தார். அரச ஊழியர்களையும் நாள் ஊதியத்தை  கொடுத்து உதவ வேண்டும் என்கிற வற்புறுத்தல். 

ஆனால், சம்பள குறைப்பு முப்படைகளுக்கும் காவல் துறைக்கும் இல்லையாம் 😡

http://www.ft.lk/news/Donating-day-s-salary-to-Govt-not-applicable-to-Tri-Forces-and-Police-Defence-Secy/56-700359

முப்படைகளை தம் வசம் வைத்திருக்க வேண்டும் என்பதில்  கோத்தா கவனமாக உள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ampanai said:

அண்மையில் கோத்தபாய என்ற போர்க்குற்றவாளி தனது சம்பளத்தை 'தானம்' செய்தார். அரச ஊழியர்களையும் நாள் ஊதியத்தை  கொடுத்து உதவ வேண்டும் என்கிற வற்புறுத்தல். 

ஆனால், சம்பள குறைப்பு முப்படைகளுக்கும் காவல் துறைக்கும் இல்லையாம் 😡

http://www.ft.lk/news/Donating-day-s-salary-to-Govt-not-applicable-to-Tri-Forces-and-Police-Defence-Secy/56-700359

முப்படைகளை தம் வசம் வைத்திருக்க வேண்டும் என்பதில்  கோத்தா கவனமாக உள்ளார். 

முப்படைகளிலும் கை வைத்தால் நிலைமை தலைகீழாக மாறும், அத்துடன் 14,000 படையினருக்கு பதவி உயவு வேறு

 

14 ஆயிரம் படையினருக்கு பதவி உயர்வு

யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு இராணுவத்தினர் 14,617 பேருக்கு நாளை மறு தினம் 19ம் திகதி பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் இப்பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

 

https://newuthayan.com/14-ஆயிரம்-படையினருக்கு-பத/

  • கருத்துக்கள உறவுகள்

14,617 படையினருக்கு இன்று பதவி உயர்வு

army-300x171.jpgயுத்தம் நிறைவடைந்து 11 வருட பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தை சேர்ந்த 14 ஆயிரத்து 617 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த பதவி உயர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இராணுவ வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் பத்தரமுல்லையிலுள்ள இராணுவ நினைவு தூபிக்கு அருகில் நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வின் போது 14,617 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது. நாட்டின் பௌதீக தேவைகள், ஒருமைப்பாட்டை பாதுகாத்தல் மற்றும் மக்களுக்கு அச்சுறுத்தலான இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள், சர்வதேச தொற்று நோய் ஆகியவற்றிற்காக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள சேவைகளை பாராட்டும் வகையில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

2020ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி 7210 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

 

http://thinakkural.lk/article/42173

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.