Jump to content

Recommended Posts

யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

“மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார்.

அவரது கையில் கல்லடிப்பட்டு படுகாயமடைந்துள்ளார். அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்தவேளை, குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இராணுவத்தினர் மறித்தனர். எனினும் அதனை மீறி சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.” என ஆரம்ப விசாரணைகளில் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதன் போது சூட்டுக்கு இலக்காகிய இளைஞன் வீட்டுக்குச் சென்று அவசர உதவி அம்பியூலன்ஸ் சேவையில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.

குருதிப் போக்கு உள்ளபோதும் இளைஞன் பாதுகாப்பாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/143259?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை, கஜேந்திர குமார் பார்வையிட்டார்…

May 15, 2020

Gagan-800x600.jpg

யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்கு சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பார்வையிட்டார் இன்று அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த 22 வயதுடைய  பசுபதி அனுசன் என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் காயமடைந்துள்ளார்.

“மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். அவரது கையில் கல்லடடிப்பட்டு காயமடைந்துள்ளார். அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்தவேளை, இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இராணுவத்தினர் மறித்தனர். எனினும் அதனை மீறி சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது” என இராணுவத்தினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

http://globaltamilnews.net/2020/142880/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மந்திகையில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய புத்தளம்வாசி சிக்கினார்

மந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் 3 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்தவரே இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“சாவகச்சேரியில் இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் புத்தளத்தைச் சேர்ந்த சந்தேக நபர் சாவகச்சேரியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் சங்கிலிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பருத்தித்துறையில் இரண்டு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்று அறியப்பட்டது.

அத்துடன், கடந்த 14ஆம் திகதி நள்ளிரவு மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு கல் ஒன்றால் தாக்கிய சம்பவத்துடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்” என்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.