Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் நினைவுகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

பிடிபட்டவர் பெண்ணாக இருக்கின்றார்...கையில் ஆயுதம் எதுவும் இல்லை... சுற்றிவர படையினர்... தங்கள் கைகளில் துப்பாக்கிகள் இருக்கின்றன...

இத்தனை இருந்தும் கூட பிடிபட்டவரின் கைகள் இறுக கட்டப்பட்டுத்தான் விசாரணைகள் நடந்தன... ஏனெனில் பிடிபட்டவர் தமிழீழ விடுதலை புலி !!!

98445879_1647623365389474_4513433186922921984_n.jpg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_ohc=KZjJ3uU0MPEAX_pGN-S&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=636370b926ad8a12e06e8c15ec1ccf2f&oe=5EE76560

# சிங்கள ராணுவத்திற்கு தனது பலமும் புலிகளின் பலமும் தெரிந்தபடியால்தான்... தமிழீழ விடுதலை படையணியை நேர்மையாக போரிட முடியாமல் துரோகத்தால் வீழ்த்தியது !!!

# முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழீழ கனவு புதைக்கப்படவில்லை... விதைக்கப்பட்டுள்ளது !!!

  • Replies 58
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உறங்குகிறார்

2009 இறுதிப்போர் காலகட்டம்...

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதவழங்கு வளங்கள் இந்திய அரசால் தடுத்து நிறுத்தப்பட்டு..,

இந்திய ராடார்கள் , எறிகணைகள் , தாக்குதல் திட்ட உதவிகள் , ஆளணி வழங்கல்கள் என இந்தியாவின் போரை இலங்கை இராணுவம் நடத்திக்கொண்டிருந்த நேரம்...

தம்பி பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட உடனே மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரசின் இளம் தலைவர் ராகுல்காந்திக்கு தகவல் பறக்கிறது...!!

"பிடிபட்டிருப்பது சாதாரணமானவனல்ல...ஆயிரம் பிரபாகரன்களுக்கு சமம்...ஆனால் பாலச்சந்திரனை கொல்வது சர்வதேச போரியல் விதிகளுக்கு முரணான ஒன்று...ஏற்கனவே இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கிற நிலையில் இவனையும் கொல்வதா"..?

என்கிற கேள்விகள் அந்த இளம்தலைவர் முன் இலங்கை அரசால் வைக்கப்படுகிறது...!!

"பிரபாகரன் குடும்பத்தில் எவருமே மிஞ்சக்கூடாது...கொன்றுவிடுங்கள்" -என்ற உத்தரவு இங்கிருந்து தான் அனுப்பப்பட்டது...

இப்படித்தான் தம்பி பாலச்சந்திரன் பாய்ன்ட் ரேஞ்சில் நிறுத்தப்பட்டு 5 குண்டுகள் உள்ளிறங்க கொல்லப்பட்டது...!!

#இனப்படுகாெலை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், 'NIRUPAMA RAO Murderer & Criminal N.Ram He HINDU M.K NARAYANAN VIJAY NAMBIAR' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

  • தொடங்கியவர்

வலிசுமந்த நினைவுகள் (2)

2009.05.15 மதியம் மணல் வீதியொன்றில் செல்கிறேன்.

மோட்டச்சைக்கிள் என்றால் நல்லா இருக்கும். என்று சுற்றும் முற்றும் தேடுகிறேன். ஒரு இடத்தில் மோட்டச்சைக்கிள் திறப்புடன் நின்றது. இராணுவத்திடம் சரணடைந்த யாரோ விட்டுச்சென்றிருக்க வேண்டும்.

அருகில் பெரிய பங்கர் அமைத்த குடில். மக்கள் யாருமில்லை. இறங்கி பார்த்தேன். ரீவி டெக் எல்லாம் செற்பண்ணின படி இருந்தது. சோளர் மூலம் இயங்கும் படி அமைக்கப்பட்டிருந்தது. சுவிச்சை போட்டதும் தானாக படம் ஓடியது. டெக் கினுள் கொப்பி இருந்திருக்க வேண்டும். நகுல் நடித்த "சக்கரக்கட்டி" படம். பங்கர் நல்ல பாதுகாப்பாக இருந்தது. பொருட்கள் எல்லாம் அப்பிடியே இருந்தது. ஆட்கள் யாருமில்லை.

நான் மோட்டச்சைக்கிளை எடுத்து பெற்றோலை பார்த்தேன். பெற்றோல் இருக்கு. அதை ஸ்ராட் பண்ணி அதில் ஓடிக்கொண்டிருக்கிறேன். ரவைகள் செல்லும் சத்தமான "கினிச் கினிச்" கேட்டுக்கொண்டிருந்தன. வெள்ளா முள்ளிவாய்க்கால் என்று நினைக்கிறேன். த.போ.க பேருந்து ஒன்று வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்தது. மக்கள் நடமாடிக்கொண்டிருந்தனர்.

அழுகுரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. எறிகணைகள் விழுந்து கொண்டே இருந்தன. துப்பாக்கி ரவைகளும் சென்று கொண்டிருந்தன. இறந்தவர்களை அப்பிடியே விட்டுவிட்டு தான் மக்கள் ஓடினார்கள். காயப்பட்டவர்களைதூக்க கூட முடியாத தருணம் தான் அது.

வெடிச்சத்தம் கேட்டால் அங்கே அழுகுரலும் கேட்கும். நான் சென்று கொண்டிருந்த வேளை வீதியோரத்தில் ஆண் ஒருவரின் பிணம் ஒன்று அநாதராவாக இரத்தம் தோய்ந்தபடி கிடந்தது.

சற்று தள்ளி ஒரு அம்மா தனது பிள்ளை செத்திட்டான். பிள்ளையை அநாதை போல விட்டிற்று வந்திட்டன் என்று நிலத்தில் விழுந்து அழுதுகொண்டிருந்தார்..

நான் எனக்கு தெரிந்தவர்கள் யாரையாவது காணமுடியுமா என்று தேடுகிறேன். ஒரு ஐயா வந்தார். தம்பி நேற்று இதில நிண்டு சுப்பரொட்டை இழுத்துவிட்டு போக்கில ஒருத்தன் கதைச்சவன். கதைச்சிட்டு போன உடன செல்லடிச்சவங்கள். மனிசின்ர தம்பி குடும்பம் அதிலயே போய்ட்டினம். பிறகு தான் தெரிஞ்சது போக்கி கதைச்சவன் ஆமின்ர றெக்கி காரனாம். நீங்களும் போக்கி வைச்சிருக்கிறியள் கதைச்சு போடாதேங்கோ. என்றார்.

நான் சொன்னேன் விடுதலைப்புலிகளைப்போல மக்களுக்குள் ஒட்டுக்குழுக்கள் நிறைய ஊடுருவியிருக்கினம். மக்களை எல்லாம் அவங்கள் தான் சுடுறாங்கள். உள்ளுக்கு போற சனங்களை சுட்டு திருப்பி அனுப்பிறாங்கள் என்றேன். அவரும் ஓம் தம்பி என்றார். இனி உள்ளுக்கு போறது தான் சரி ஐயா என்றேன். எல்லாம் முடியயோகுது என்ன தம்பி என்று கவலையாக சொன்னார். என்ர இரண்டாவது பொடியனும் போராளிதானப்பு. அவன தேடிக்கொண்டிருக்கிறன். அவனை கூட்டி கொண்டுதான் போவன் என்றார்
சரி ஐயா கவனம் என்று விடை பெற்றேன்.

நினைவுகள் தொடரும்..

த.நிறஞ்சன்
மல்லாவி.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

மலாலா'காகவும், நிர்பயாவுகாகவும் போராடி விட்டு #இசைப்பிரியா யாரென்றே தெரியாதவர்கள் தான் இங்குள்ள 'பெமினிஸ்ட்கள்'...

பாலஸ்தீன விடுதலையை ஆதரித்துவிட்டு, காஸ்மீர் விடுதலைகாக கதறி விட்டு, #தமிழீழ_விடுதலைக்காக தப்பித்தவறியும் வாய் திறக்காதவர்கள் தான் இங்குள்ள இடதுசாரி அறிவுசீவிகள்...

மத்தியகிழக்கு நாடுகளின் மீதான அமெரிக்க ஏகாதிபத்யத்தையும் அங்குள்ள எதிர்ப்பு கூறுகளையும் எதிர்த்து விட்டு, இது ரெண்டுமே நிகழ்ந்த #ஈழத்தை பற்றி பேச மறுப்பவர்கள் தான் இங்குள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்...

இந்திய இந்துத்துவவினர், தலித் மக்களின் மீது நிகழ்த்தும் அநீதிகளுக்காக குரல் கொடுத்துவிட்டு #விடுதலைப்_புலிகளின் மீது நிகழ்ந்த ஒடுக்குமுறைகளை கண்டும் காணாமல் சென்றவர்கள் தான் இங்குள்ள தலீத்திய பாதுகாவலர்கள்...

உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சியை புகழ்ந்து பாடிவிட்டு, (சிறு)கடல் கடந்து வாழும் எம் #தமிழீழ சொந்தகளின் வெற்றியை கொண்டாட தவிர்த்த உத்தமர்கள் தான் இங்குள்ள ஒடுக்குமுறை எதிர்ப்பாளர்கள்...

_ஆகவே என் அன்பான #உலகமகா #நடிகர்களே நீங்கள் எதைப்பற்றி பேசுகிறீர்கள் என்பது அல்ல அரசியல், நீங்கள் எதை பேச மறுக்கிறீர்கள் என்பது தான் உங்கள் அரசியல்...

=== முகநூல் ==== 

On 18/5/2020 at 15:01, ampanai said:

2009 இறுதிப்போர் காலகட்டம்...

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதவழங்கு வளங்கள் இந்திய அரசால் தடுத்து நிறுத்தப்பட்டு..,

இந்திய ராடார்கள் , எறிகணைகள் , தாக்குதல் திட்ட உதவிகள் , ஆளணி வழங்கல்கள் என இந்தியாவின் போரை இலங்கை இராணுவம் நடத்திக்கொண்டிருந்த நேரம்...

தம்பி பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட உடனே மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரசின் இளம் தலைவர் ராகுல்காந்திக்கு தகவல் பறக்கிறது...!!

"பிடிபட்டிருப்பது சாதாரணமானவனல்ல...ஆயிரம் பிரபாகரன்களுக்கு சமம்...ஆனால் பாலச்சந்திரனை கொல்வது சர்வதேச போரியல் விதிகளுக்கு முரணான ஒன்று...ஏற்கனவே இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கிற நிலையில் இவனையும் கொல்வதா"..?

என்கிற கேள்விகள் அந்த இளம்தலைவர் முன் இலங்கை அரசால் வைக்கப்படுகிறது...!!

"பிரபாகரன் குடும்பத்தில் எவருமே மிஞ்சக்கூடாது...கொன்றுவிடுங்கள்" -என்ற உத்தரவு இங்கிருந்து தான் அனுப்பப்பட்டது...

இப்படித்தான் தம்பி பாலச்சந்திரன் பாய்ன்ட் ரேஞ்சில் நிறுத்தப்பட்டு 5 குண்டுகள் உள்ளிறங்க கொல்லப்பட்டது...!!

#இனப்படுகாெலை

அம்பனை இனப்படுகொலையை நினைவு கூரும் போது இப்படி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைப்பது ஏன்? ராகுல் காந்தியிடம் இருந்து அப்படி ஒரு தகவல் பறந்த‍தாக ஒருவரின் கற்பனையில் உதித்த‍த்தை வரலாறாக மாற்றுவதால் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு என்ன லாபம்?  நினைவு கூரல் என்பது இப்படி பொய்களை கூறுவதா?  

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, tulpen said:

உங்களால் அது பொய் என ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா?

3 minutes ago, குமாரசாமி said:

உங்களால் அது பொய் என ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா?

குற்றச்சாட்டை கூறுபவர்தான் அதை நீருபிக்க வேண்டும். இவ்வாறு  வாய்க்கு வந்தபடி எமது ஆத்திரத்தை யும் வெறுப்பையும் காட்டுவன் மூலம் எமக்கு நீதி கிடைக்காது என்பதை உணர வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, tulpen said:

குற்றச்சாட்டை கூறுபவர்தான் அதை நீருபிக்க வேண்டும். இவ்வாறு  வாய்க்கு வந்தபடி எமது ஆத்திரத்தை யும் வெறுப்பையும் காட்டுவன் மூலம் எமக்கு நீதி கிடைக்காது என்பதை உணர வேண்டும். 

கண்டன் கிண்டவன் குருவி சுட்டவனேல்லாம் விடுதலைப்புலிகள் மீது எல்லா பழிகளையும் சுமத்தியதை பற்றியெல்லாம் பேசமாட்டீர்கள். 

  • தொடங்கியவர்
19 minutes ago, tulpen said:

அம்பனை இனப்படுகொலையை நினைவு கூரும் போது இப்படி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைப்பது ஏன்? ராகுல் காந்தியிடம் இருந்து அப்படி ஒரு தகவல் பறந்த‍தாக ஒருவரின் கற்பனையில் உதித்த‍த்தை வரலாறாக மாற்றுவதால் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு என்ன லாபம்?  நினைவு கூரல் என்பது இப்படி பொய்களை கூறுவதா?  

எமக்கு நடந்த படுகொலையில், தமிழக உறவுகள் மத்தியில் கடந்த 11 வருடங்களாக அதிகமாக பேசப்படுவது தலைவரின் மகனின் படுகொலை. திருத்தம், ஒரு சிறுவனின் படுகொலை. அவ்வகையில், இதுவும் ஒரு தமிழக உறவின் குறிப்பு/கணிப்பு. 

பல சிறுவர்கள் சித்திரவதை முகாம்கள் சென்று திரும்பிய நிலையில், இவர் மீண்டும் வாழக்கூடாது என பெரிய இடத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

அந்த முடிவிற்கு நிச்சயம் சொந்தக்காரர்கள் சிங்களவர்களே. ஆனால், சோனியா குடும்பமும் நிச்சயம் பங்காளிகளே. அவர்கள், தலைவரின் குடும்பம் அழிக்கப்பட வேண்டும் என்பதற்கு "என்ன விலையை கொடுத்தேனும்" என்றே செயல்பட்டார்கள். அதனால், இணைத்தேன். 

யார் இந்த சிறுவனை படுகொலை செய்ய உத்தவிட்டார்கள் என விசாரணை செய்து, நீதியை நிலைநாட்டுங்கள், உண்மை வரட்டும். 

Edited by ampanai

3 minutes ago, குமாரசாமி said:

கண்டன் கிண்டவன் குருவி சுட்டவனேல்லாம் விடுதலைப்புலிகள் மீது எல்லா பழிகளையும் சுமத்தியதை பற்றியெல்லாம் பேசமாட்டீர்கள். 

விடுதலை புலிகள் மீது அபாண்டமான பழிகளை சுமத்துவதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அதற்காக நாமும் உணர்ச்சி வசப்பட்டு இப்படி அபாண்டமாக பழி சுமத்த வேண்டும் என்று கூறுவதும் சரியான அணுகுமுறை அல்ல. அதனால் எமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.

3 minutes ago, ampanai said:

எமக்கு நடந்த படுகொலையில், தமிழக உறவுகள் மத்தியில் கடந்த 11 வருடங்களாக அதிகமாக பேசப்படுவது தலைவரின் மகனின் படுகொலை. திருத்தம், ஒரு சிறுவனின் படுகொலை. அவ்வகையில், இதுவும் ஒரு தமிழக உறவின் குறிப்பு/கணிப்பு. 

பல சிறுவர்கள் சித்திரவதை முகாம்கள் சென்று திரும்பிய நிலையில், இவர் மீண்டும் வாழக்கூடாது என பெரிய இடத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

அந்த முடிவிற்கு நிச்சயம் சொந்தக்காரர்கள் சிங்களவர்களே. ஆனால், சோனியா குடும்பமும் நிச்சயம் பங்காளிகளே. அவர்கள், தலைவரின் குடும்பம் அழிக்கப்பட வேண்டும் என்பதற்கு "என்ன விலையை கொடுத்தேனும்" என்றே செயல்பட்டார்கள். அதனால், இணைத்தேன். 

யார் இந்த சிறுவனை படுகொலை செய்ய உத்தவிட்டார்கள் என விசாரணை செய்து, நீதியை நிலைநாட்டுங்கள், உண்மை வரட்டும். 

பாலச்சந்திரனின் படுகொலைக்கு கோத்தாபாய பொறுப்பு என்றால் அது சரியாக இருக்கும். அதை எம்மாலும் விளங்கி கொள்ள முடிகிறது. ராகுல் காந்தி உத்தரவிட்டார் என்றால் அது எப்படி உண்மையாகும். யாரோ ஒரு பெயர் முகவரி தெரியாதவரின் கணிப்பை எல்லாம் உண்மை என்று நம்பமுடியாது. 

  • தொடங்கியவர்
4 minutes ago, tulpen said:

பாலச்சந்திரனின் படுகொலைக்கு கோத்தாபாய பொறுப்பு என்றால் அது சரியாக இருக்கும். அதை எம்மாலும் விளங்கி கொள்ள முடிகிறது. ராகுல் காந்தி உத்தரவிட்டார் என்றால் அது எப்படி உண்மையாகும். யாரோ ஒரு பெயர் முகவரி தெரியாதவரின் கணிப்பை எல்லாம் உண்மை என்று நம்பமுடியாது.

அப்படியானால், சிங்களம் ஒரு சர்வதேச நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிக்க உதவுங்கள். 

4 minutes ago, ampanai said:

அப்படியானால், சிங்களம் ஒரு சர்வதேச நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிக்க உதவுங்கள். 

சரி உதவ நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள். இப்படியாக இணைத்தில் சகட்டு மேனிக்கு எழுதப்படும் பொய் குற்ற சாட்டுகளுக்கு ஜால்ரா அடிக்க வேண்டும். அல்லது நானும் எனது கற்பனையில் யார் மீதாவது வெறுப்பு பொய்குற்றசாட்டுகளை சாட்டவேண்டும் . அப்படி தானே.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎18‎-‎05‎-‎2020 at 14:01, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உறங்குகிறார்

2009 இறுதிப்போர் காலகட்டம்...

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதவழங்கு வளங்கள் இந்திய அரசால் தடுத்து நிறுத்தப்பட்டு..,

இந்திய ராடார்கள் , எறிகணைகள் , தாக்குதல் திட்ட உதவிகள் , ஆளணி வழங்கல்கள் என இந்தியாவின் போரை இலங்கை இராணுவம் நடத்திக்கொண்டிருந்த நேரம்...

தம்பி பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட உடனே மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரசின் இளம் தலைவர் ராகுல்காந்திக்கு தகவல் பறக்கிறது...!!

"பிடிபட்டிருப்பது சாதாரணமானவனல்ல...ஆயிரம் பிரபாகரன்களுக்கு சமம்...ஆனால் பாலச்சந்திரனை கொல்வது சர்வதேச போரியல் விதிகளுக்கு முரணான ஒன்று...ஏற்கனவே இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கிற நிலையில் இவனையும் கொல்வதா"..?

என்கிற கேள்விகள் அந்த இளம்தலைவர் முன் இலங்கை அரசால் வைக்கப்படுகிறது...!!

"பிரபாகரன் குடும்பத்தில் எவருமே மிஞ்சக்கூடாது...கொன்றுவிடுங்கள்" -என்ற உத்தரவு இங்கிருந்து தான் அனுப்பப்பட்டது...

இப்படித்தான் தம்பி பாலச்சந்திரன் பாய்ன்ட் ரேஞ்சில் நிறுத்தப்பட்டு 5 குண்டுகள் உள்ளிறங்க கொல்லப்பட்டது...!!

#இனப்படுகாெலை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், 'NIRUPAMA RAO Murderer & Criminal N.Ram He HINDU M.K NARAYANAN VIJAY NAMBIAR' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

இப்படி எழுதுவதன் மூலம் அந்த பிள்ளை கொலை செய்யப்பட்டதிற்கு நீங்களே சரியான  நியாயம் கற்பிக்கிறீர்கள்😟 
 
  • தொடங்கியவர்
1 minute ago, tulpen said:

சரி உதவ நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள். இப்படியாக இணைத்தில் சகட்டு மேனிக்கு எழுதப்படும் பொய் குற்ற சாட்டுகளுக்கு ஜால்ரா அடிக்க வேண்டும். அல்லது நானும் எனது கற்பனையில் யார் மீதாவது வெறுப்பு பொய்குற்றசாட்டுகளை சாட்டவேண்டும் . அப்படி தானே.

உண்மைகளை திட்டமிட்டு ஒளிக்கும்வரை, இதுவும் உண்மையே.  

நம்புவதும் மறுப்பதும் உங்கள் உரிமை, சுதந்திரம். 

4 minutes ago, ampanai said:

உண்மைகளை திட்டமிட்டு ஒளிக்கும்வரை, இதுவும் உண்மையே.  

நம்புவதும் மறுப்பதும் உங்கள் உரிமை, சுதந்திரம். 

இதில் நம்புவது மறுப்பது என்று எதுவும் இல்லை அம்பனை.  வெறுப்பிற்காக குற்ற சாட்டுகளை சுமத்த கூடாது. அதுவும் ஏவரோ ஒர தெருவிலை போகும் ஒருவரின் அனுமானம் எல்லாம் உண்மை ஆகிவிடாது.  இப்படி கண்டவர் மீது எல்லாம் குற்றம் சாட்டுவதும் ஒரு தந்திரமாக கூட இருக்கலாம். 

Edited by tulpen

  • தொடங்கியவர்
1 minute ago, tulpen said:

இதில் நம்புவது மறுப்பது என்று எதுவும் இல்லை அம்பனை.  வெறுப்பிற்காக குற்ற சாட்டுகளை சுமத்த கூடாது. அதுவும் ஏவரோ ஒர தெருவிலை போகும் ஒருவரின் அனுமானம் எல்லாம் உண்மை ஆகிவிடாது. 

துல்பன்,

"இதில் நம்புவது மறுப்பது என்று எதுவும் இல்லை" - என்பதை கண்டிக்கின்றேன். 

இது குற்றச்சாட்டு மட்டும் அல்ல. ஆதாரங்களை நிலைமைகளை நடந்தவற்றவைகளை கேட்டதுகளை வைத்து எடுக்கப்பட்ட அனுமானம். 

ஒன்றும் இல்லாமல் எழுந்தமானமாக வந்தது அல்ல. 

இந்தியா, குறிப்பாக அன்றைய காங்கிரஸ்,  தமிழின போராட்டத்தையும் தலைமையையும் என்ன விலை கொடுத்தேனும் அழிக்க வேண்டும் என்றதில் போர்க்குற்றம் புரிந்தவர்கள். 

நன்றி. 

  • தொடங்கியவர்

மாவிலாற்றில் நகரத் தொடங்கி.....
முள்ளிவாய்க்காலில் உயிர் துறந்து.....
தமிழினம் முழுவதற்கும் முகவரி தந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்குமான
என் படையல் ........

ஆதிலட்சுமி சிவகுமார்

UzpfSTEwMDAwOTM5MTQ5MTc0MjoyNjY5NTQ2Nzc2

35 minutes ago, ampanai said:

துல்பன்,

"இதில் நம்புவது மறுப்பது என்று எதுவும் இல்லை" - என்பதை கண்டிக்கின்றேன். 

இது குற்றச்சாட்டு மட்டும் அல்ல. ஆதாரங்களை நிலைமைகளை நடந்தவற்றவைகளை கேட்டதுகளை வைத்து எடுக்கப்பட்ட அனுமானம். 

ஒன்றும் இல்லாமல் எழுந்தமானமாக வந்தது அல்ல. 

இந்தியா, குறிப்பாக அன்றைய காங்கிரஸ்,  தமிழின போராட்டத்தையும் தலைமையையும் என்ன விலை கொடுத்தேனும் அழிக்க வேண்டும் என்றதில் போர்க்குற்றம் புரிந்தவர்கள். 

நன்றி. 

அம்பனை இந்திய அரசு தமிழீழ விடுதலை போராட்ட‍த்திற்கு எதிரான நடவடிக்கைகளை 1985  ம் ஆண்டே ஆரம்பித்து விட்டது. அது இந்திய அரசின் கொள்கை. அது தெரிந்து  தான் பிரபாகரன் இந்தியாவில் இருந்த தனது தளங்களை மூடி விட்டு  ஈழம் திரும்பி  போராட்டத்தை ஆரம்பித்தார்.  இந்தியா இலங்கைக்கு உதவி செய்த‍த்து ஒன்றும் இரகசியம் அல்ல. அதற்காக ராகுல் காந்தி தனிப்பட்ட ரீதியில்  குறிவைத்தை பாலச்சந்திரனை கொலை செய்ய தகவல் அனுப்பினார் என்று  ஒவராக சீன் போடுவது  தேவையற்ற விடயம்.  இப்படி தான் இறுதி யுத்த காலத்தில்  ஆர்வ கோளாற்றால் எங்கோ ஆபிரிக்காவில் நடந்த படுகொலை படத்தை இலங்கையில் நடந்த‍தாக கூற புறப்பட்டு இலங்கை அரசால் அந்த படத்தின் உண்மைத்தன்மை  நிரூபிக்க பட உண்மை இழப்புகளை சந்தித்த நாம் பொய் சொன்னவர்கள் ஆகினோம். 

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

And Genocides do not just happen. The Tamil Genocide of May 2009 was the culmination of a 60 year effort at ethnic cleansing by successive Sinhala Sri Lanka Governments. The record speaks…. @

https://tamilnation.org/indictment/index.htm

  • தொடங்கியவர்

“முள்ளிவாய்க்கால் கஞ்சி”

?__tn__=,dCH-R-R&eid=ARB6eCsrgaYfyimejvo

  • தொடங்கியவர்

தமிழின இன அழிப்பு நாளான நேற்று மட்டும் Australia, USA, Canada, பிரித்தானியா வில் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் தலைவர்களின் சமூக வலைத்தளங்களின் செய்திகளுக்கு சிறிலங்கன் தமிழின எதிர்ப்பாளர்கள் கீழ்த்தரமாக தமது வக்கிரத்தை பின்னூட்டம் மூலம் காட்டியுள்ளனர்.. 

புலம் பெயர் தமிழர்களில் எத்தனையோ படித்தவர்கள் இருந்தும் தமது கருத்தை சொல்ல பின்னின்றனர். 

ஆனால் ஊர் சண்டை, பழைய மாணவர் சண்டை, பிரதேச சண்டை, மத விவாதங்கள் ... இப்படி தமக்குள் பக்கம் பக்கமாக புலம்புவார்கள். அந்த நிலை மாறட்டும்.  

  • தொடங்கியவர்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவுநாள் மே 18, 2020
எனது தந்தையின் தலைமுறை முதல், என் தலைமுறை ஊடாக ..எங்கள் பிள்ளைகளின் தலைமுறை..அவர்கள் பிள்ளைகளின் தலைமுறையென எம்மினத்தின் ஆறாத ரணத்தையும் சங்கிலித் தொடராக நிகழ்ந்த, நிகழும் இனப்படுகொலையின் வலிகளைப் பாடிக்கொண்டே இருப்பார்கள்..
 
எமக்கான தேசம் மீண்டும் எழும்வரை!
 
எங்கள் குடும்பத்தில் இருந்து ஒளிவிளக்கேற்றி இப்படிப் பாடுகிறாள் லக்சனியா நிதிகரன்.
 
  • தொடங்கியவர்

#Tamil #WeRemember2009 #Mullivaikal2009 #Tamileelam #May18thTamilGenocideRemembranceDay.

தமிழினப் படுகொலைகளுக்கான நீதி தாமதமாகலாம்! ஆனால் நிச்சயம் கிடைக்கும்; - ஜஸ்மின் சூக்கா!ஈழத்தமிழர்கள் போற்ற வேண்டிய தேவதைகளில் ஜஸ்மின் சூக்கா அம்மையாரும் ஒருவர்!
 
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான்கீமூனால் அமைக்கப்பட்ட குழுவின் இலங்கை தொடர்பான விவகாரத்திற்கு பொறுப்பாக இருந்த உறுப்பினரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் (ITJP) நிறைவேற்றுப் பணிப்பாளருமாகஇருந்தவர்தான் இந்த ஜஸ்மின் சூக்கா.ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக சர்வதேச அரங்கில் குரல் கொடுத்து வருபவர்.ஈழத்தமிழர்கள் போற்ற வேண்டிய தேவதைகளில் ஜஸ்மின் சூக்கா அம்மையாரும் ஒருவர்!
 
முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட தமிழினப் படுகொலைகளுக்கான நீதி தாமதமாகலாம் . ஆனால் நிச்சம் கிடைக்கும் . அதுவரை நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
 
முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியொன்றில் அவா் இவ்வாறு கூறியுள்ளார்.
 
98472023_1184481021899379_7438191549109764096_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=Xy4OeRzoPDwAX920b_z&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=9223fca93e3a838206e192fe511c139e&oe=5EEC0B03
 
பாதிக்கப்பட்டவா்களிடம் நான் கோருவது இதுதான். நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதீா்கள். கொல்லப்பட்ட மக்கள் குறித்க கதைகளை தொடா்ந்தும் பேசிக்கொண்டிருங்கள்.
 
இதன்மூலம் அந்த மரணங்கள் அா்த்தமற்றதாக மாறுவதைத் தடுக்க முடியும் எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளா்.
 
யுத்தத்தின் இறுதியில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரை நினைவுகூரும் மே-18 இந்த நாளில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தைச் சோ்ந்த நானும் எங்கள் சகாக்களும் அஞ்சலியை செலுத்துகின்றோம்.
 
காணாமல்போனவர்களின் உறவினர்கள் குடும்பத்தவர்களிற்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
மோதல் முடிவிற்கு வந்து பல வருடங்களின் பின்னரும் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இறுதியான உறுதியான ஒரு எண்ணிக்கையை முன்வைக்க முடியாமலுள்ளதை கொடுமையான ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம்.
 
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெறுமனே உயிர்தப்பியவர்களின் ஆவணங்களை பதிவு செய்வதை மாத்திரம் மேற்கொள்ளவில்லை. மாறாக யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கான ஆதாரங்கள், தடயங்களை சேகரித்து ஆவணப்படுத்திவருகிறது. 
 
இதன் காரணமாக ஒரு நாள் அவற்றிற்கு காரணமானவர்களை நாங்கள் பொறுப்புக்கூறச் செய்யலாம்.
 
கடந்த ஐந்து வருடங்களாக நாங்கள் எங்களிடமுள்ள ஆவணங்களை பயன்படுத்தி கொலைகளிற்கு காரணமானவர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தி வருகின்றோம்.
மேலும் நாங்கள் சாத்தியமான சூழ்நிலைகளில் அவர்களிற்கு எதிராக சர்வதேச நியாயாதிக்க எல்லைக்குள் நீதிமன்ற நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.
 
சிலர் வெளிநாடுகளிற்கு பயணம் செல்லமுடியாத நிலையையும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணியாற்ற முடியாத நிலையையும் உருவாக்குவதில் நாங்கள் வெற்றியடைந்துள்ளோம்.
 
இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அவர் முக்கிய பதவிகளிற்கு யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளார் என்பதையும் நாங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.