Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

அவரது வளர்ச்சி பொறுக்காமல் சீமான் தான் போட்டுத் தள்ளினார் என்று அந் நேரம்  எல்லோரும் கதைத்தார்கள் 

எல்லோரும் என்று நீங்கள் கூறும் ஆட்களில் ஓரிருவர் பெயர்களாவது தருவீங்களா 🤔

ஆட்கள் யாரென்று பார்ப்பதற்குத்தான் 😀

  • Replies 777
  • Views 64.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

மருதர் இதை எழுதும் போது உங்களுக்கே சிரிப்பு வரலையா

Duty க்கு வந்துட்டாங்க... அக்கா :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, இசைக்கலைஞன் said:

ஒரு விடயத்தை ஊடறுத்து உண்மைத் தன்மையை உணர்வது என்பது கடினமானது. அந்த தன்மை இல்லாது போனால் அரசியல் பிழைத்து எதிர்கால தலைமுறையை சிக்கலில் கொண்டுபோய் விடும்.”

இப்படியாக ஒரு விளக்கத்தைச் சொல்லிக் கொண்டு தான் ட்ரம்ப்பின் தலைமையை மொடரேற் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆதரிக்கின்றனர். இது போன்ற அர்த்தமேயில்லாத "jury is still out on that" என்கிற தொனியிலான வாதங்கள் தான் மாயமான்கள் அதிகம் அரசியலில் உலவ ஒரு காரணம் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

எல்லோரும் என்று நீங்கள் கூறும் ஆட்களில் ஓரிருவர் பெயர்களாவது தருவீங்களா 🤔

ஆட்கள் யாரென்று பார்ப்பதற்குத்தான் 😀

அந்த‌க் கொலைக்கும் அண்ண‌ன் சீமானுக்கும் தொட‌ர்வில்லை அண்ணா , அண்ண‌ன் சீமான் அந்த‌க் கொலை ந‌ட‌ந்த‌ போது கோவ‌த்தின் உச்சிக்கே போன‌வ‌ர் , 

10வ‌ருட‌ம் ஆக‌ போகுது அந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து , அந்த‌க் கொலையை அண்ண‌ன் சீமான் செய்து இருக்க‌னும் திராவிட‌ம் இப்ப‌ அந்த‌ கொலை ச‌ம்ப‌வ‌த்த‌ கையில் எடுத்து பெரும் விம‌ர்ச‌ன‌த்த‌ உண்டு ப‌ண்ணி இருப்பின‌ம் / நான் நினைக்கிறேன் முத்துக் குமாரின் த‌னிப்ப‌ட்ட‌ பிர‌ச்ச‌னையில் ந‌ட‌ந்த‌ கொலை ச‌ம்ப‌வ‌ம் அது , 

10 hours ago, இசைக்கலைஞன் said:

வைகோ மட்டுமல்ல. அவரது மொத்த குடும்பமுமே உதவி செய்தது. ஆனால், வைகோ தனது ஆதரவை அரசியல் லாபம் ஆக்கி துரோகம் இழைத்த திமுகவின் காலடிகளில் சமர்ப்பித்துவிட்டார். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மாத்தையா, கருணா இவர்களை விமர்சனம் செய்யக்கூடாது. ஏனென்றால் அவர்களும் ஒருகாலத்தில் போராளிகளே?!

இசைக்கலைஞன், 

 கருணா, மாத்தாயா போன்றோரை வைகோவுடன் ஒப்பிடுவதே உங்களது அபத்தமான பார்வையை காட்டுகிறது. வைகோ எமது அயல் நாட்டின் அரசியல்வாதி. எம்மில் வைத்த அன்புக்காக எமது போராட்டத்திற்கு பல உதவிகளைச் செய்தவர்.  அவர் திமுக விற்கு ஆதரவளிக்க கூடாது என்று சொல்வதற்கான எந்த தார்மீக உரிமையும் உங்களுக்கு இல்லை என்பது உங்களிற்கு தெரியாதா?  அவர்கள் நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனைகளில் வெவ்வெறு அரசியல் கட்சிக்களுக்கு வெவ்வேறு பார்வை இருக்கும்.  அதற்காக வெவ்வேறு கட்சிகளை ஆதரிக்க வேண்டிய  நிலை என்பது சதாரணமானது. அவர்களது பிரச்சனைளை எல்லாம் விட்டு விட்டு எமது போராட்டத்தை மட்டும் வைத்து தீர்மானங்களை எடுக்குமாறு கூறுவது பச்சை சுயநலம் அல்லவா?  இறந்த மாவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கே ஒன்று படாமால் பிரிந்து நிற்கும் ஈழதமிழர் நாம் எப்படி அடுத்து நாட்டில் அரசியில் வெவ்வேறு கொள்கைகளுடன் வெவ்வேறு கட்சிகளை ஆதரிப்பதை துரோகம் என்று கூறு முடியும்.

இதற்காக தான் அவ்ரகளது நாட்டு அரசியலில்  நாம் மூக்கை நுளைக்க கூடாது என்று நான் கூறுகிறேன்.

அடுத்த‍து திமுக 1991 ம் ஆண்டின் பின்னர் எமது போராட்டதிற்க்கு ஆதரவு தெரிவிப்பதான என்றுமே சொல்லவில்லை. கருணாநிதையை நம்புமாறு யாரும் சொல்லவில்லை. 1989/1990 ஆட்சிக்காலத்தில் புலிகளுக்கு உதவி செய்த கருணாநிதியின் ஆட்சி புலிகளை காட்டியே கலைக்கபட்டது.  பத்மநாபா கொலையை புலிகள் சென்னையில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடத்தி அவரது அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர். அதன் பின்னர் ராஜிவ் கொலையின் பின்னர் நிலைமை இன்னும் மோசமானது. அதன் பின்னர் புலிகளுடன் தொடர்பு வைத்ததால் தனது ஆட்சிக்கு ஆபத்து என்ற ரீதியில் கருணாநிதி தனது சொந்த அரசியலை நடத்தி வந்தார். 

 எமது போராபோராட்டத்தை நடத்தியது புலிகளே தவிர திமுக அல்ல. யுத்தம், சமாதானம் ஆகிய சகல விடயங்கிலும் புலிகளே சுயமாக முடிவுகளை எடுத்தார்கள்.  ஒரு விடுதலை போராட்டத்தை நடத்தபவர்கள் சுற்றி வர இருக்கும் அரசியல் சூழ்நிலைகள் கட்சிகளின் நிலை என்பதை  கருத்தில் கொண்டு  நடக்கவேண்டும். அதற்கேற்ப தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதை விடுத்து தமது தோல்வி கண்டவுடன் தமது தவறுகளை மறைக்க அடுத்தவர் மீது துரோகி பட்டம் சுமத்தி தப்பிக்க நினைப்பது அயோக்கித்தனம்.

புலிகளை சர்வதேச பயங்கரவாதிகளாக காட்ட இலங்கை அரசு நடத்திய பரப்புரைக்கு புலிகளும் உதவி செய்தனர் என்பது புலிகளை முழுமையாக நம்பிய தமிழ் மக்களுக்கு  துரதிர்சவசமானது. 

  • கருத்துக்கள உறவுகள்

துல்ப‌ன் , வைக்கோ மீது அதிக‌ ந‌ம்பிக்கை வைக்க‌ வேண்டாம் , இப்ப‌ அவ‌ரின் க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் யார் என்று தெரியும் , வைக்கோ இன்னொரு க‌ருணாநிதி , நேர‌த்துக்கு நேர‌ம் கொள்கையை கைவிட்டு ஈன‌ செய‌ல்க‌ள் செய்ப‌வ‌ர் தான் வைக்கோ 

7 hours ago, பையன்26 said:

துல்ப‌ன் நீங்க‌ளும் அரைகுறை விள‌க்க‌ம் உடைய‌வ‌ரா , 

அந்த‌ மிம்ஸ்ச‌ நான் தான் செய்தேன் அந்த‌ ப‌திவையும் நான் தான் எழுதினேன் , அந்த‌ மிம்ஸ் செய்யும் அள‌வுக்கு வைக்கோவின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌மாக‌ இருந்த‌து , என‌து ப‌ழைய‌ ப‌திவுக‌ளை வாசித்து பாருங்கோ யாழில் யார் த‌ன்னும் எம் போராட்ட‌த்தை அல்ல‌து த‌ள‌ப‌திக‌ளை கொச்சை ப‌டுத்தி எழுதி இருந்தா   அவைக்கு என் ப‌தில் வேறு மாதிரி இருக்கும் ,

நீங்க‌ள் ஆயிர‌ம் ந‌ல்ல‌த‌ சொல்லி வைக்கோவை புக‌ழுங்கோ அதை ப‌ற்றி என‌க்கு க‌வ‌லை இல்லை , வைக்கோ அன்று தொட்டு இன்று வ‌ர‌ பிராடு கொள்கையை காற்றில் ப‌ற‌க்க‌ விடும் ஈன‌ பிற‌வியாய் தான் நான் வைக்கோவை பார்க்கிறேன் ,

இந்த‌ செய்தியை ப‌டியுங்கோ 

20200606-073536.png

வைக்கோ 2009ம் ஆண்டு என்ன‌  செய்தார் , இறுதி க‌ட்ட‌ போரில் த‌ன‌து கைபேசியை நிப்பாட்டி வைக்க‌ கார‌ண‌ம் என்ன‌ ,

வைக்கோ எந்த‌ பெரிய‌ அர‌சிய‌ல் வாதி அப்ப‌ , வைக்கோ.நினைத்து இருந்தா த‌ன‌து தொண்ட‌ர்க‌ளுட‌ன் பெரிய‌ ஒரு புர‌ட்சியை உண்டு ப‌ண்ணி பெரிய‌ ஆர்பாட்ட‌த்தை முன்னெடுத்து இருக்க‌லாம் , இதை எல்லாம்.செய்யாம‌ , சும்மா வேடிக்கை பார்த்தார் ,பின்னாளில்   எம் இன‌ அழிப்பை ப‌ற்றி ஊட‌க‌ங்க‌ள் முன்னாள் முட்ட‌ க‌ண்ணீர் வ‌டித்தார் /

இம்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் எழுதுங்கோ நான் ப‌தில் அளிக்க‌ த‌யார் துல்ப‌ன் 

இந்த பேட்டியை வைகோ எப்போது கொடுத்தார் என்பது தெளிவில்லை. இருந்தாலும் 1987 முதல் தனது அரசியல் வாழ்க்கையில் பெரும்பகுதியை ஈழதமிழர் போராட்டதிற்காக செலவிட்டு அதற்காக பல முறை சிறை சென்று நீதி மன்றத்திலேயே நீதிபதியிடன் நான் புலிகளை ஆதரித்தேன் என்று கூறிய  வைகோவையே  இப்படி பேட்டி கொடுக்க வைத்த‍  ராஜதந்திரம் மிக்க புலம்பெயரஸ் கும்பல்கள் நாட்டு விடுதலைக்காக எப்படி பல்வேறு நாட்டு ராஜதந்திரிகளை convince பண்ணுவார்ளோ. 

நிற்க மே 17 / 18 ம் திகதிகளில்  வைகோ ஐபிசி வானொலியுடன் தொடர்பில் இருந்தார். ஐபிசி வானொலி பல முறை வைகோவிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர் தனது தொலைபேசியை நிறுத்தி வைத்தார்  சீமான் அவிழ்த்து விட்ட பொய்யை நம்ப நாங்கள் ஒன்றும் நாம் தமிழர் கட்சி சொம்புகள் அல்ல. 

6 hours ago, பையன்26 said:

இந்த‌ப் ப‌ட‌ம் துல்ப‌னின் பார்வைக்கு 😓

20200606-084103.png 

ப‌ழைய‌ யாழ்க‌ள உற‌வுக‌ள் சொன்ன‌ ப‌ழ‌மொழி தான் நினைவுக்கு வ‌ருது ( ப‌டிக்கிற‌து தேவார‌ம்  இடிக்கிற‌து சிவ‌ன் கோயில் ) 😉

பையன், இந்த படத்தில் என்ன தவறு உள்ளது. இந்தியாவின் இரண்டு அரசியல் கட்சித்தலைவர்கள் சந்தித்து கொள்ளும் போது கட்டியணைப்பது ஒன்றும் தவறு இல்லையே. 

22 minutes ago, பையன்26 said:

துல்ப‌ன் , வைக்கோ மீது அதிக‌ ந‌ம்பிக்கை வைக்க‌ வேண்டாம் , இப்ப‌ அவ‌ரின் க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் யார் என்று தெரியும் , வைக்கோ இன்னொரு க‌ருணாநிதி , நேர‌த்துக்கு நேர‌ம் கொள்கையை கைவிட்டு ஈன‌ செய‌ல்க‌ள் செய்ப‌வ‌ர் தான் வைக்கோ 

பையன்,

வைகோவிலோ அல்லது சீமானிலோ மட்டுமல்ல எந்த தமிழக அரசியல்வாதிகளிலும் நான் என்றுமே நம்பிக்கை வைக்கவில்லை. அதற்காக எமக்கு உதவி செய்த தமிழக அரசியல் வாதிகளை மறக்கும் அளவுக்கு நான் நன்றி மறந்தவனும்  அல்ல.  அவர்களில் ஒருவரை ஆதரித்து அவரின் அரசியல் நலத்திற்காக மற்றவர் மீது வசை பாடும்அநாகரீத்தையும் செய்ய மாட்டேன். எம்மில் இருக்கும் குற்றங்களை மறந்து மற்றவர்களுக்கு துரோகி பட்டமும் கொடுக்க மாட்டேன். 

Edited by tulpen

13 hours ago, இசைக்கலைஞன் said:

இங்கு பல உரையாடல்களை காணும்போது ஆயாசமாக இருக்கிறது. மனிதன் நாளை இருப்பானா என்பதே கேள்வியாக இருக்கும்போது, தனிமனித வெறுப்புகள் தேவையில்லை என்பதே என் கருத்து.

சீமான் நாளை வெல்வாரா என்பது யாருக்குமே தெரியாது. நடந்தால் மகிழ்ச்சி. இல்லையேல் செய்தோம் ஒரு முயற்சி என்பதில் ஒரு திருப்தி. ஆனால் மாற்று சிந்தனை கொண்ட ஒரு இளைஞர் கூட்டம் வந்துவிட்டது என்பதே அங்குள்ள நிலைமை. இவரை விழுத்தாமல் ஓயப்போவதில்லை என்றும் கங்கணம் கட்டி சில வேலைகள் நடங்கின்றன. காலம்தான் பதில் சொல்லும்.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வெற்றி தோல்வி என்பது பெரிய விசயமாக கருதவில்லை. பல தளங்களில் அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வும் எழுச்சியும் தமிழ்நாட்டுக்கு மிக அவசியமானது. குறிப்பாக இளைய தலைமுறைக்கு நம்மாழ்வார் கருத்துக்களை விதைப்பதாகட்டும், இயற்கை நீர் நிலவளத்தின் பாதுகாப்பு, கார்பரேட்டுக்களின் அணுஉலை ஈதேன் மீத்தேன் கைரோகார்பன் திட்டங்களின் ஆபத்து. மணற்கொள்ளை, மத்தியரசின் தமிழ்நாட்டிற்கு எதிரான சதிகள், திராவிட அரசியல் கட்சிகளின் சாதிய ஓட்டு அரசியல் சாராய அரசியல் , குடிநீர் பிரச்சனை நிலத்தடி நீர் வற்றிப் போதலின் அவசியம்  என பல தளங்களில் இளைய தலை முறைக்கு ஒரு புதிய சிந்தனை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. குறிப்பக பல கல்லூரிகள் அவரை உரையாற்ற அழைத்தது எதிர்கால தலமுறைக்கு இந்த சிந்தனை அவசியமான என்பதை உணர்ந்துதான். தேர்தலின் வெற்றியை விட இந்த விழிப்புணர்வே அவசியமானது. அந்தவகையில் நாம்தமிழர் கட்சி தனது நோக்கில் கணிசமான வெற்றியை பெற்றுவிட்டது. 

கடந்த வராரம் வன்னியில் இருக்கும் நண்பர்கள் உறவினர்களோடு கதைக்கும் போது ஒரு அவர்கள் கூறியது, கத்தரி பயிரடவில்லை அதற்கு பதிலாக நிலக்கடலை பயிரிடுகின்றார்கள். ஏன் என்று கேட்டால் கொரோனாவால் இந்தியாவில் இருந்து கைபிரட் கத்தரி விதைகள் வரவில்லை. பெரும்பாலானவர்கள் நாட்டு கத்தரி விதைகளை தொலைத்து விட்டார்கள். தக்காளி முருங்கை பப்பாசி போன்றவற்றுக்கும் கைபிரட்டையே நாடுகின்றார்கள். போர் முடிந்த பத்தாண்டுகளில் விவசாயத்தின் நிலமை தலைகீழாக போய்கொண்டிருக்கின்றது.  பாரம்பரிய விதைகளை அழிப்பதின் ஆபத்து குறித்து சீமான் விழிப்பணர்வு ஏற்படுத்துவது போல் யாரும் ஏற்படுத்தியதாக நான் அறியவில்லை. 

மற்றும்படி ஈழ அரசியல் குறித்தும் இனப்படுகொலை போராட்டம் குறித்தும் கடந்த பன்னிரண்டு வருடமாக தொடர்ந்து ஞாபகப்படுத்தும் கட்சி நாமதமிழர் கட்சி மட்டுமே. அவர்களுக்கு நிகராக வேறு எவரும் அதை செய்ய வில்லை.  எப்படி புலிகளின் போராட்ட காலத்தில் புலிகளை ஒரு தரப்பு ஈழத்தமிழர்கள் தொடர்ந்து எதிர்த்தார்களோ  அதே நாம் தமிழர் விசயத்திலும் நடக்கின்றது. இது ஒன்றும் ஆச்சரியமான விசயம் கிடையாது.  நாம் தமிழர் கட்சிக்கு பதிலாக வேறு ஒரு கட்சி அதிகமாக ஈழ ஆதரவு போககை கடைப்பிடித்தாலும் அவர்களுக்கும் இந்த எதிர்ப்பு வருவது தவிர்க்க முடியாதது. இந்த இனத்தின் சிந்தனை முறை, புத்திஜீவித அளவுகோல்கள் அப்படிப் பட்டது. இதே திரியில் படித்தவர்கள் ஈழத்தமிழருக்கு தலமையாக வரவேண்டும் என்று எல்லாம் பினாத்துகின்றார்கள். ஏன் விக்கினேஸ்வரனின் படிப்புக்கு என்ன குறை ? படிப்பின் மேன்மை பதவி மேன்மை என பல காரணிகளை வைத்துதானனே முதலமைச்சராக்கினார்கள். 

விவாதங்களின் நோக்கம் பொது நன்மை நோக்கியாதனது அல்ல.  தாம் கொண்ட கருத்தின் வெற்றி நோக்கியதாகவே அமைவது எப்போதும் இங்கு வழமையான ஒன்று. இப்போதைக்கு ஈழத் தமிழர் பிரச்சனை இனப்படுகொலை குறித்து அதிகம் பேசும் சீமானை அதிலிருந்து அந்நியப்படுத்த வேண்டும்.  பின்பு அடுத்து எவர் போசுவாரோ அவரை பிடித்து இழுத்து விழுத்திவிட காத்திருப்பது. இந்த இழவை செய்வதுக்கு தி மு க வுக்கோ அல்லது பிற கட்சிகளுக்கோ தமிழகத்தில் ஒரு கராணம் இருக்கின்றது ஆனால் ஈழத்தமிழருக்கு என்ன அவசியம் ? இதுதான் இந்த இனத்தின் சாபக்கேடு. 

  • கருத்துக்கள உறவுகள்

துல்ப‌ன் வைக்கோவுக்கு த‌மிழீழத்தை விட‌ திராவிட‌ம் அதிக‌ முக்கிய‌ம் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு இவ‌ர்க‌ளின் உண்மை முக‌ம் தெரிந்து விட்ட‌து ,

த‌மிழ‌க‌ அர‌சியல் வாதிக‌ளில் த‌மிழீழ‌த்துக்காக‌ உண்மையும் நேர்மையுமா த‌மிழீழ‌த்தை ஆத‌ரித்த‌து அது எம்ஜி ஆர் ம‌ட்டும் தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஈழ‌த்தை வைத்து அர‌சிய‌ல் செய்தார்க‌ள்   ,

ஆதிமுக்கா க‌ட்சியில் இருக்கும் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு இது ந‌ல்லாவே தெரியும் , அதுங்க‌ள் சொல்லுங்க‌ள் த‌ம்பி உங்க‌ளுக்கு த‌னி நாடு வேண்டி ர‌த்த‌ க‌ண்ணிர் விட்ட‌து எம்ஜி ஆர் தான் ,

3 minutes ago, பையன்26 said:

பையன்  வைகோ தமிழகத்தில் அரசியல் வாதி. தமிழீழத்தை விட அவர்க்கு திராவிடம் முக்கியம் என்றால் அந்த சமூக நீதி கொள்கையில் அவருக்கு பற்று இருந்தால் அது தவறானதல்ல.  அது அவரது கொள்கை. அதை அங்கீகரிப்பதே மனித நாகரீகம். அவரிடம்  நீங்கள் எந்த கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல எமக்கு என்ன உரிமை உள்ளது?  அதற்காக‍ அவர் துரோகி என்று கூறும் தகுதி எவருக்கும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சண்டமாருதன் said:

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வெற்றி தோல்வி என்பது பெரிய விசயமாக கருதவில்லை. பல தளங்களில் அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வும் எழுச்சியும் தமிழ்நாட்டுக்கு மிக அவசியமானது. குறிப்பாக இளைய தலைமுறைக்கு நம்மாழ்வார் கருத்துக்களை விதைப்பதாகட்டும், இயற்கை நீர் நிலவளத்தின் பாதுகாப்பு, கார்பரேட்டுக்களின் அணுஉலை ஈதேன் மீத்தேன் கைரோகார்பன் திட்டங்களின் ஆபத்து. மணற்கொள்ளை, மத்தியரசின் தமிழ்நாட்டிற்கு எதிரான சதிகள், திராவிட அரசியல் கட்சிகளின் சாதிய ஓட்டு அரசியல் சாராய அரசியல் , குடிநீர் பிரச்சனை நிலத்தடி நீர் வற்றிப் போதலின் அவசியம்  என பல தளங்களில் இளைய தலை முறைக்கு ஒரு புதிய சிந்தனை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. குறிப்பக பல கல்லூரிகள் அவரை உரையாற்ற அழைத்தது எதிர்கால தலமுறைக்கு இந்த சிந்தனை அவசியமான என்பதை உணர்ந்துதான். தேர்தலின் வெற்றியை விட இந்த விழிப்புணர்வே அவசியமானது. அந்தவகையில் நாம்தமிழர் கட்சி தனது நோக்கில் கணிசமான வெற்றியை பெற்றுவிட்டது. 

கடந்த வராரம் வன்னியில் இருக்கும் நண்பர்கள் உறவினர்களோடு கதைக்கும் போது ஒரு அவர்கள் கூறியது, கத்தரி பயிரடவில்லை அதற்கு பதிலாக நிலக்கடலை பயிரிடுகின்றார்கள். ஏன் என்று கேட்டால் கொரோனாவால் இந்தியாவில் இருந்து கைபிரட் கத்தரி விதைகள் வரவில்லை. பெரும்பாலானவர்கள் நாட்டு கத்தரி விதைகளை தொலைத்து விட்டார்கள். தக்காளி முருங்கை பப்பாசி போன்றவற்றுக்கும் கைபிரட்டையே நாடுகின்றார்கள். போர் முடிந்த பத்தாண்டுகளில் விவசாயத்தின் நிலமை தலைகீழாக போய்கொண்டிருக்கின்றது.  பாரம்பரிய விதைகளை அழிப்பதின் ஆபத்து குறித்து சீமான் விழிப்பணர்வு ஏற்படுத்துவது போல் யாரும் ஏற்படுத்தியதாக நான் அறியவில்லை. 

மற்றும்படி ஈழ அரசியல் குறித்தும் இனப்படுகொலை போராட்டம் குறித்தும் கடந்த பன்னிரண்டு வருடமாக தொடர்ந்து ஞாபகப்படுத்தும் கட்சி நாமதமிழர் கட்சி மட்டுமே. அவர்களுக்கு நிகராக வேறு எவரும் அதை செய்ய வில்லை.  எப்படி புலிகளின் போராட்ட காலத்தில் புலிகளை ஒரு தரப்பு ஈழத்தமிழர்கள் தொடர்ந்து எதிர்த்தார்களோ  அதே நாம் தமிழர் விசயத்திலும் நடக்கின்றது. இது ஒன்றும் ஆச்சரியமான விசயம் கிடையாது.  நாம் தமிழர் கட்சிக்கு பதிலாக வேறு ஒரு கட்சி அதிகமாக ஈழ ஆதரவு போககை கடைப்பிடித்தாலும் அவர்களுக்கும் இந்த எதிர்ப்பு வருவது தவிர்க்க முடியாதது. இந்த இனத்தின் சிந்தனை முறை, புத்திஜீவித அளவுகோல்கள் அப்படிப் பட்டது. இதே திரியில் படித்தவர்கள் ஈழத்தமிழருக்கு தலமையாக வரவேண்டும் என்று எல்லாம் பினாத்துகின்றார்கள். ஏன் விக்கினேஸ்வரனின் படிப்புக்கு என்ன குறை ? படிப்பின் மேன்மை பதவி மேன்மை என பல காரணிகளை வைத்துதானனே முதலமைச்சராக்கினார்கள். 

விவாதங்களின் நோக்கம் பொது நன்மை நோக்கியாதனது அல்ல.  தாம் கொண்ட கருத்தின் வெற்றி நோக்கியதாகவே அமைவது எப்போதும் இங்கு வழமையான ஒன்று. இப்போதைக்கு ஈழத் தமிழர் பிரச்சனை இனப்படுகொலை குறித்து அதிகம் பேசும் சீமானை அதிலிருந்து அந்நியப்படுத்த வேண்டும்.  பின்பு அடுத்து எவர் போசுவாரோ அவரை பிடித்து இழுத்து விழுத்திவிட காத்திருப்பது. இந்த இழவை செய்வதுக்கு தி மு க வுக்கோ அல்லது பிற கட்சிகளுக்கோ தமிழகத்தில் ஒரு கராணம் இருக்கின்றது ஆனால் ஈழத்தமிழருக்கு என்ன அவசியம் ? இதுதான் இந்த இனத்தின் சாபக்கேடு. 

இதுதான் ஆணித்தரமான கருத்து. இதைவிட சொல்வதுக்கு ஒன்றுமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சண்டமாருதன் said:

அருமையான‌ ப‌திவு ஜ‌யா , வாழ்த்துக்க‌ள் , இன்னும் உங்க‌ளிட‌ம் இருந்து ந‌ல்ல‌ க‌ருத்த‌ எதிர் பார்க்கிறேன் / நீங்க‌ள் எழுதின‌ எல்லாம் நித‌ர்ச‌ன‌ உண்மை 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

பையன்  வைகோ தமிழகத்தில் அரசியல் வாதி. தமிழீழத்தை விட அவர்க்கு திராவிடம் முக்கியம் என்றால் அந்த சமூக நீதி கொள்கையில் அவருக்கு பற்று இருந்தால் அது தவறானதல்ல.  அது அவரது கொள்கை. அதை அங்கீகரிப்பதே மனித நாகரீகம். அவரிடம்  நீங்கள் எந்த கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல எமக்கு என்ன உரிமை உள்ளது?  அதற்காக‍ அவர் துரோகி என்று கூறும் தகுதி எவருக்கும் இல்லை. 

திராவிடம் என்பது சமூக நீதி கொள்கை அல்ல. திராவிடர் என்றாலே தென்னகத்து பிராமணர் என்று பொருள். பொருந்தாத ஒரு வார்த்தையை கொண்டு தமிழரல்லாதவர்கள் தமிழகத்தை ஆளும் பொருட்டு எடுத்துவைத்த கொள்கைதான் திராவிடம் என்பது. 

தமிழரை அடிமைப்படுத்துவதில் யார் முன்னணி?! ஆரியமா திராவிடமா என்று ஒரு பட்டிமன்றம்  வேண்டுமானால் நடத்தலாம்.

தமிழகத்தை திராவிடம் ஆண்டால் என்ன தவறு என்று கேட்பதும், தமிழ் ஈழத்தை சிங்களம் ஆண்டால் என்ன என்பதும் ஒன்றுதான். அடிமை சிந்தனையில் இருந்து முதலில் வெளியேறுங்கள்.

திராவிட கருணாநிதி, வைகோ இல்லங்களில் தெலுங்குதான் மொழி என்பது சிறப்பு தகவல். வீட்டில் தமது தாய்மொழி தெலுங்கில் பேசும் நபர்கள் தமிழ் தேசியத்துக்கு எப்படி ஆதரவாக இருப்பார்கள்?! Probability சரியாக இருக்காதே?!

இந்த சகடையில் இருந்து வெளியே வந்து ஆரம்பிக்கப்பட்டதுதான் “நாம் தமிழர்”. 

2 hours ago, Nathamuni said:

போட்டு தள்ளியது புலிகள் இல்லை.

பிரதமர் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று, மகிந்தா செய்த வேலை.

காமினி, லலித் கொலைகள், பிரேமதாச செய்தது.

புலிகளை எதனையுமே ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ இல்லை. ராஜிவ் கொலை உள்பட.

நீங்கள் இப்ப சீமான் மாதிரி கதைக்கிறியள்

எல்லாரும் குழம்பிபோனம் வேற திரிய திறவுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Knowthyself said:

நீங்கள் இப்ப சீமான் மாதிரி கதைக்கிறியள்

எல்லாரும் குழம்பிபோனம் வேற திரிய திறவுங்கோ

என்னத்தைக் குழம்புறது...

பிரேமருக்கு வெடி போட்டது புலி எண்டுவியல். 

இல்லை, இந்தியன் ஆமியை ஓடுங்கோ நாட்டினை விட்டு என்று அனுப்பியதால், அவமானப்பட்ட இந்திய ரா எண்டுவேன்.... நம்பவா போறியள்? 😎

கதிர்காமர் இருந்தது கொழும்பு 7.... சந்திரிகா, ரணில் என்று பெரும் அரசியல் வாதிகள் வாழ்ந்த high security zone.

கதிர்காமர் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த வயதான தமிழ் தம்பதிகளின் வீட்டின் மேல்மாடியில், ஒரு அறையில், அவையளுக்கே தெரியாமல் உங்கடை வன்னி ஆக்கள், ஒளிஞ்சு ஒரு கிழமையா இருந்து, ஆயுதம் (சினிப்பர்), சாப்பாடு கொண்டு போய், வெடி வச்சுப்போட்டு, பத்திரமா வெளியில ஓடி வந்திட்டினம் எண்டால் நம்பிறன், பிடி பந்தயம் எண்டுவியல்.

போலீஸ்காரரும் அந்த தமிழ் தம்பதிகளுக்கு ஒன்றுமே தெரியாது எண்டது உண்மைதான் எண்டு வழக்கு பதியாமல் இருந்த அதிசயமும் நடந்ததே.

காமினியும், லலித்தும், பிரேமரின் அரசியலுக்கு எதிராளிகளாய் இருந்த மேல்தட்டு வர்க்கத்தினர். அவர்களை இல்லாமல் செய்ய வேண்டிய தேவை அவருக்கு, மிக அவசரமாக இருந்ததோ இல்லையா? 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இப்படியாக ஒரு விளக்கத்தைச் சொல்லிக் கொண்டு தான் ட்ரம்ப்பின் தலைமையை மொடரேற் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆதரிக்கின்றனர். இது போன்ற அர்த்தமேயில்லாத "jury is still out on that" என்கிற தொனியிலான வாதங்கள் தான் மாயமான்கள் அதிகம் அரசியலில் உலவ ஒரு காரணம் என நினைக்கிறேன்!

வேறு வழியில்லை. அவரவர் உய்த்துணரும் தன்மையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊடக செய்திகள், ஆராய்ச்சி கட்டுரைகள் கூட உள்நோக்கம் கொண்டவையாக இருக்கலாம்.

தனிப்பட நான் ஒபாமாவையும் நம்பியதில்லை. ட்ரம்பையும் நம்பியதில்லை. ஹிலரியையும் நம்பியதில்லை. அவர்கள் ஏற்கனவே வரைந்த வேலைத்திட்டத்தில்தான் இயங்குவார்கள், வெளியுறவை பொறுத்தவரையில்.

மற்றும் அமெரிக்க மக்களில் ஒரு தொகுதியினர் பெரும் முட்டாள்கள் என்பது எனது கருத்து. ஆனால், ஆகச்சிறந்த மதிநுட்பம் கொண்ட ஒரு சிறு தொகையினர் அதிகாரத்தை கைப்பற்றி நாட்டை வார்த்தெடுத்துள்ளார்கள்.

ட்ரம்ப் வெற்றி பெற்றார் என்பதே அமெரிக்க வாக்காளரின் தன்மையை உணர்த்துகிறது. 2020 இல் வெற்றி பெற்றாலும் ஆச்சரியம் இல்லை.

1 minute ago, இசைக்கலைஞன் said:

திராவிடம் என்பது சமூக நீதி கொள்கை அல்ல. திராவிடர் என்றாலே தென்னகத்து பிராமணர் என்று பொருள். பொருந்தாத ஒரு வார்த்தையை கொண்டு தமிழரல்லாதவர்கள் தமிழகத்தை ஆளும் பொருட்டு எடுத்துவைத்த கொள்கைதான் திராவிடம் என்பது. 

தமிழரை அடிமைப்படுத்துவதில் யார் முன்னணி?! ஆரியமா திராவிடமா என்று ஒரு பட்டிமன்றம்  வேண்டுமானால் நடத்தலாம்.

தமிழகத்தை திராவிடம் ஆண்டால் என்ன தவறு என்று கேட்பதும், தமிழ் ஈழத்தை சிங்களம் ஆண்டால் என்ன என்பதும் ஒன்றுதான். அடிமை சிந்தனையில் இருந்து முதலில் வெளியேறுங்கள்.

திராவிட கருணாநிதி, வைகோ இல்லங்களில் தெலுங்குதான் மொழி என்பது சிறப்பு தகவல். வீட்டில் தமது தாய்மொழி தெலுங்கில் பேசும் நபர்கள் தமிழ் தேசியத்துக்கு எப்படி ஆதரவாக இருப்பார்கள்?! Probability சரியாக இருக்காதே?!

இந்த சகடையில் இருந்து வெளியே வந்து ஆரம்பிக்கப்பட்டதுதான் “நாம் தமிழர்”. 

நீங்கள் கூறுவது தமிழக  மக்களின் பிரச்சனை. அவர்கள் அதைப் பார்ததுக் கொள்வார்கள். அது எமது பிரச்சனை அல்ல. எமக்கு  போராட்டம் தொடங்கிய  காலத்தில் இருந்து  தன்னலம் கருதது உதவியவர்களை   துரோகிகள் என்று  செய்நன்றி  மறந்து ஏன்  திட்டுகின்றீர்கள்  என்று கேட்டால் அது பற்றி பதில்  இல்லை. எமது தோல்விக்கு புலிகளின் அரசியல் துறையின்  பல தவறுகள் முக்கிய காரணம். அது பற்றி பேசுங்கள்.

எமது தோல்விக்கான எமது பக்க பாரிய தவறுகளை மறைக்க முழுப்பழியையும்  திராவிடத்தின் மீது போடும் அயோக்கியத்தனத்தைக்  கைவிட்டு எமது தவறுகளைப் பற்றிப் பேசுங்கள். அதுவே எமக்குள்  தெளிவைக் கொண்டுவரும். அது பற்றி பேசுவதைத்  தவிர்ககவே நீங்கள் திராவிடம், தமிழ் தேசியம் என்ற பூச்சாண்டியை காட்டுகிறீர்கள். 

அடுத்த  நாட்டில்  சீமானின் அரசியலுக்காக தூண்டி விடப்பட்ட  அந்த இனவெறி அரசியலை தமிழக மக்கள் பார்ததுக் கொள்வார்கள். அது அவர்கள் பிரச்சனை. இந்தியாவிலேயே  முதன்மை மிக்க முன்னேறிய  மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தை மேலும் முன்னேற்ற சீமான்  தனது பங்களிப்பை செய்யட்டும். அதற்கான தார்மீக உரிமை அவருக்கு உள்ளது.

திராவிடம் என்றால் என்ன சமூகநீதி என்றால் என்ன என்ற நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை படிக்க பல ஆயிரம் அறிவார்ந்த  புத்தகங்கள் இருக்க நாம்  தமிழர் கட்சியின் இன வெறிப்  பிரச்சார காணொளிகளில் தங்கி இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில்  நான் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, சண்டமாருதன் said:

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வெற்றி தோல்வி என்பது பெரிய விசயமாக கருதவில்லை. பல தளங்களில் அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வும் எழுச்சியும் தமிழ்நாட்டுக்கு மிக அவசியமானது. குறிப்பாக இளைய தலைமுறைக்கு நம்மாழ்வார் கருத்துக்களை விதைப்பதாகட்டும், இயற்கை நீர் நிலவளத்தின் பாதுகாப்பு, கார்பரேட்டுக்களின் அணுஉலை ஈதேன் மீத்தேன் கைரோகார்பன் திட்டங்களின் ஆபத்து. மணற்கொள்ளை, மத்தியரசின் தமிழ்நாட்டிற்கு எதிரான சதிகள், திராவிட அரசியல் கட்சிகளின் சாதிய ஓட்டு அரசியல் சாராய அரசியல் , குடிநீர் பிரச்சனை நிலத்தடி நீர் வற்றிப் போதலின் அவசியம்  என பல தளங்களில் இளைய தலை முறைக்கு ஒரு புதிய சிந்தனை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. குறிப்பக பல கல்லூரிகள் அவரை உரையாற்ற அழைத்தது எதிர்கால தலமுறைக்கு இந்த சிந்தனை அவசியமான என்பதை உணர்ந்துதான். தேர்தலின் வெற்றியை விட இந்த விழிப்புணர்வே அவசியமானது. அந்தவகையில் நாம்தமிழர் கட்சி தனது நோக்கில் கணிசமான வெற்றியை பெற்றுவிட்டது. 

கடந்த வராரம் வன்னியில் இருக்கும் நண்பர்கள் உறவினர்களோடு கதைக்கும் போது ஒரு அவர்கள் கூறியது, கத்தரி பயிரடவில்லை அதற்கு பதிலாக நிலக்கடலை பயிரிடுகின்றார்கள். ஏன் என்று கேட்டால் கொரோனாவால் இந்தியாவில் இருந்து கைபிரட் கத்தரி விதைகள் வரவில்லை. பெரும்பாலானவர்கள் நாட்டு கத்தரி விதைகளை தொலைத்து விட்டார்கள். தக்காளி முருங்கை பப்பாசி போன்றவற்றுக்கும் கைபிரட்டையே நாடுகின்றார்கள். போர் முடிந்த பத்தாண்டுகளில் விவசாயத்தின் நிலமை தலைகீழாக போய்கொண்டிருக்கின்றது.  பாரம்பரிய விதைகளை அழிப்பதின் ஆபத்து குறித்து சீமான் விழிப்பணர்வு ஏற்படுத்துவது போல் யாரும் ஏற்படுத்தியதாக நான் அறியவில்லை. 

மற்றும்படி ஈழ அரசியல் குறித்தும் இனப்படுகொலை போராட்டம் குறித்தும் கடந்த பன்னிரண்டு வருடமாக தொடர்ந்து ஞாபகப்படுத்தும் கட்சி நாமதமிழர் கட்சி மட்டுமே. அவர்களுக்கு நிகராக வேறு எவரும் அதை செய்ய வில்லை.  எப்படி புலிகளின் போராட்ட காலத்தில் புலிகளை ஒரு தரப்பு ஈழத்தமிழர்கள் தொடர்ந்து எதிர்த்தார்களோ  அதே நாம் தமிழர் விசயத்திலும் நடக்கின்றது. இது ஒன்றும் ஆச்சரியமான விசயம் கிடையாது.  நாம் தமிழர் கட்சிக்கு பதிலாக வேறு ஒரு கட்சி அதிகமாக ஈழ ஆதரவு போககை கடைப்பிடித்தாலும் அவர்களுக்கும் இந்த எதிர்ப்பு வருவது தவிர்க்க முடியாதது. இந்த இனத்தின் சிந்தனை முறை, புத்திஜீவித அளவுகோல்கள் அப்படிப் பட்டது. இதே திரியில் படித்தவர்கள் ஈழத்தமிழருக்கு தலமையாக வரவேண்டும் என்று எல்லாம் பினாத்துகின்றார்கள். ஏன் விக்கினேஸ்வரனின் படிப்புக்கு என்ன குறை ? படிப்பின் மேன்மை பதவி மேன்மை என பல காரணிகளை வைத்துதானனே முதலமைச்சராக்கினார்கள். 

விவாதங்களின் நோக்கம் பொது நன்மை நோக்கியாதனது அல்ல.  தாம் கொண்ட கருத்தின் வெற்றி நோக்கியதாகவே அமைவது எப்போதும் இங்கு வழமையான ஒன்று. இப்போதைக்கு ஈழத் தமிழர் பிரச்சனை இனப்படுகொலை குறித்து அதிகம் பேசும் சீமானை அதிலிருந்து அந்நியப்படுத்த வேண்டும்.  பின்பு அடுத்து எவர் போசுவாரோ அவரை பிடித்து இழுத்து விழுத்திவிட காத்திருப்பது. இந்த இழவை செய்வதுக்கு தி மு க வுக்கோ அல்லது பிற கட்சிகளுக்கோ தமிழகத்தில் ஒரு கராணம் இருக்கின்றது ஆனால் ஈழத்தமிழருக்கு என்ன அவசியம் ? இதுதான் இந்த இனத்தின் சாபக்கேடு. 

நல்ல கருத்து.

ஆரம்பத்தில் இருந்து, முக்கியமான கருத்து ஒன்றினை நானும் வைக்கிறேன். தமிழகத்தின் சாதிய அவலம் காரணமாகவே தமிழரல்லாத வெளி ஆட்கள் தலைவராக வர வேண்டிய நிலை.

இதனால், வெளியராயினும், தமிழராகிய பிரபாகரனை தலைவராக கொண்டு செல்ல வேண்டிய நிலையில் நாம் தமிழர் உள்ளனர். அது கணிசமான வெற்றியினை பெறுகையில், அதனால் பாதிப்பு உண்டாகலாம் என்பதால், இப்போது பிரபாகரன், சீமான் அளவுக்கு எதிர்க்கப்படுகின்றார்.
 
9 hours ago, பையன்26 said:

சீமானை  சாமான் என்று எழுதின‌து நீங்க‌ள் தான் ந‌ந்த‌ன் அண்ணா 

அது கிருபன் எழுதியது
எல்லாரும் குழம்பிபோனம் வேற திரிய திறவுங்கோ

எனது கருத்து, சீமான் ஒரு எழிமையான தலைவன் அல்ல, முற்று முழுதாக நம்ப ஏலாது, சீமானால், விசர் கதைகள் கதைக்காமல் அரசியல் செய்தாலும் இலங்கையில் ஒரு ஆணியையும் புடுங்க ஏலாது, தமிழ் நாட்டில் கொஞ்ச மாற்றத்தை கொண்டு வருவார் என நம்பிகிறேன். பெரிய தலைவனாவதற்குரிய தகுதியை இழந்துகொண்டு வருகிறார் அல்லது இழந்துவிட்டார், இது அவரின் நீண்ட கால தந்திரமாகக்கூட இருக்கலாம், கிடைச்சதோடமெல்லமா மறலாம், அத்துடன் துனிந்தாள் மாதிரித்தெரியவில்லை. இப்போதைக்கு சீமானும் எங்களுக்கு தேவை. 

****

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இனவெறி பிரசாரம் செய்கிறார் என்று பினாத்துபவர்களில் சிலரிடம், ஒரே ஒரு கேள்வி கேட்டேன்.

எதுக்காக, தீவில் சேர்ந்து வாழும் சிங்களவர்களை அவர்களது ஆடசியினை எதிர்த்து போராடினீர்கள், அது இனவெறி இல்லையோ என்று.

பதில் அவர்களிடம் இல்லை. ஆனால், இடைவெளி விட்டு, மீண்டும், மீண்டும் வந்து அதே அரைத்த, புளித்த மாவில், அதே தோசை போட்டு விட்டு கிளம்புவார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இசைக்கலைஞன் said:

திராவிடம் என்பது சமூக நீதி கொள்கை அல்ல. திராவிடர் என்றாலே தென்னகத்து பிராமணர் என்று பொருள். பொருந்தாத ஒரு வார்த்தையை கொண்டு தமிழரல்லாதவர்கள் தமிழகத்தை ஆளும் பொருட்டு எடுத்துவைத்த கொள்கைதான் திராவிடம் என்பது. 

தமிழரை அடிமைப்படுத்துவதில் யார் முன்னணி?! ஆரியமா திராவிடமா என்று ஒரு பட்டிமன்றம்  வேண்டுமானால் நடத்தலாம்.

தமிழகத்தை திராவிடம் ஆண்டால் என்ன தவறு என்று கேட்பதும், தமிழ் ஈழத்தை சிங்களம் ஆண்டால் என்ன என்பதும் ஒன்றுதான். அடிமை சிந்தனையில் இருந்து முதலில் வெளியேறுங்கள்.

திராவிட கருணாநிதி, வைகோ இல்லங்களில் தெலுங்குதான் மொழி என்பது சிறப்பு தகவல். வீட்டில் தமது தாய்மொழி தெலுங்கில் பேசும் நபர்கள் தமிழ் தேசியத்துக்கு எப்படி ஆதரவாக இருப்பார்கள்?! Probability சரியாக இருக்காதே?!

இந்த சகடையில் இருந்து வெளியே வந்து ஆரம்பிக்கப்பட்டதுதான் “நாம் தமிழர்”. 

ட‌ங்கு , துல்ப‌ன் உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாம‌ , திராவிட‌ம் ஈழ‌ த‌மிழ‌ருக்கு  அவ‌ர்க‌ளின் சில்ல‌ரை அர‌சிய‌லுக்காக‌ செய்த‌‌ சில உத‌விக‌ளை தியாக‌ங்க‌ளை ‌ பெருமையா நினைக்கிறார் , வைக்கோ விஜ‌ய‌காந் இவ‌ர்க‌ள் வீட்டுல் என்ன‌ மொழியில் க‌தைதப்பார்க‌ள் என்ப‌த‌  த‌‌மிழ‌க‌த்தில் ப‌ல‌ருக்கு தெரியும் , துல்ப‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் இன்னும் ப‌ல‌ உண்மையை அறிய‌ வில்லை என்ப‌த‌ அவ‌ர் எழுதும் ப‌திவில் இருந்து க‌வ‌னிக்க‌ முடியுது ட‌ங்கு , 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Knowthyself said:

.

நந்தன் எழுதினத்தை கிருபன் எழுதினது என்று வேறு குழப்புகிறீர்கள். உங்கள் பதிவுகள் தவறாகவே உள்ளனவே.

சீமான் தமிழகத்தில் புடுங்கினால் போதும். இலங்கையில் ஒரு ஆணியும் புடுங்க தேவையில்லை எண்டது தானே எல்லோரும் சொல்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

நீங்கள் கூறுவது தமிழக  மக்களின் பிரச்சனை. அவர்கள் அதைப் பார்ததுக் கொள்வார்கள். அது எமது பிரச்சனை அல்ல. எமக்கு  போராட்டம் தொடங்கிய  காலத்தில் இருந்து  தன்னலம் கருதது உதவியவர்களை   துரோகிகள் என்று  செய்நன்றி  மறந்து ஏன்  திட்டுகின்றீர்கள்  என்று கேட்டால் அது பற்றி பதில்  இல்லை. எமது தோல்விக்கு புலிகளின் அரசியல் துறையின்  பல தவறுகள் முக்கிய காரணம். அது பற்றி பேசுங்கள்.

எமது தோல்விக்கான எமது பக்க பாரிய தவறுகளை மறைக்க முழுப்பழியையும்  திராவிடத்தின் மீது போடும் அயோக்கியத்தனத்தைக்  கைவிட்டு எமது தவறுகளைப் பற்றிப் பேசுங்கள். அதுவே எமக்குள்  தெளிவைக் கொண்டுவரும். அது பற்றி பேசுவதைத்  தவிர்ககவே நீங்கள் திராவிடம், தமிழ் தேசியம் என்ற பூச்சாண்டியை காட்டுகிறீர்கள். 

அடுத்த  நாட்டில்  சீமானின் அரசியலுக்காக தூண்டி விடப்பட்ட  அந்த இனவெறி அரசியலை தமிழக மக்கள் பார்ததுக் கொள்வார்கள். அது அவர்கள் பிரச்சனை. இந்தியாவிலேயே  முதன்மை மிக்க முன்னேறிய  மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தை மேலும் முன்னேற்ற சீமான்  தனது பங்களிப்பை செய்யட்டும். அதற்கான தார்மீக உரிமை அவருக்கு உள்ளது.

திராவிடம் என்றால் என்ன சமூகநீதி என்றால் என்ன என்ற நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை படிக்க பல ஆயிரம் அறிவார்ந்த  புத்தகங்கள் இருக்க நாம்  தமிழர் கட்சியின் இன வெறிப்  பிரச்சார காணொளிகளில் தங்கி இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில்  நான் இல்லை. 

எனக்கு ஒன்று விளங்கேல்ல. தமிழகத்தில் கட்சி நடத்தும் சீமானை நாம் விமர்சிக்கலாம். ஆனால் வைகோவை கூடாது?! 🤔

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, இசைக்கலைஞன் said:

எனக்கு ஒன்று விளங்கேல்ல. தமிழகத்தில் கட்சி நடத்தும் சீமானை நாம் விமர்சிக்கலாம். ஆனால் வைகோவை கூடாது?! 🤔

அவர் எழுதுவது யாருக்கும் புரியாது. எனது அனுபவம். ஆகவே கடந்து செல்வது நல்லது. 🥺

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Knowthyself said:

அது கிருபன் எழுதியது

நல்ல கண்பார்வை உங்களுக்கு “நீ உன்னை அறி” ஐயா😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.